< ஆதியாகமம் 11 >

1 பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
На всей земле был один язык и одно наречие.
2 மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
Двинувшись с востока, они нашли в земле Сеннаар равнину и поселились там.
3 அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
И сказали друг другу: наделаем кирпичей и обожжем огнем. И стали у них кирпичи вместо камней, а земляная смола вместо извести.
4 பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
И сказали они: построим себе город и башню, высотою до небес, и сделаем себе имя, прежде нежели рассеемся по лицу всей земли.
5 மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார்.
И сошел Господь посмотреть город и башню, которые строили сыны человеческие.
6 அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள்.
И сказал Господь: вот, один народ, и один у всех язык; и вот что начали они делать, и не отстанут они от того, что задумали делать;
7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார்.
сойдем же и смешаем там язык их, так чтобы один не понимал речи другого.
8 அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.
И рассеял их Господь оттуда по всей земле; и они перестали строить город и башню.
9 பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல் எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.
Посему дано ему имя: Вавилон, ибо там смешал Господь язык всей земли, и оттуда рассеял их Господь по всей земле.
10 ௧0 சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான்.
Вот родословие Сима: Сим был ста лет и родил Арфаксада, чрез два года после потопа;
11 ௧௧ சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
по рождении Арфаксада Сим жил пятьсот лет и родил сынов и дочерей и умер.
12 ௧௨ அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான்.
Арфаксад жил тридцать пять лет и родил Каинана. По рождении Каинана Арфаксад жил триста тридцать лет и родил сынов и дочерей и умер. Каинан жил сто тридцать лет, и родил Салу.
13 ௧௩ சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Салы Арфаксад Каинан жил четыреста три года и родил сынов и дочерей и умер.
14 ௧௪ சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான்.
Сала жил тридцать лет и родил Евера.
15 ௧௫ ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Евера Сала жил четыреста три года и родил сынов и дочерей и умер.
16 ௧௬ ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான்.
Евер жил тридцать четыре года и родил Фалека.
17 ௧௭ பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Фалека Евер жил четыреста тридцать лет и родил сынов и дочерей и умер.
18 ௧௮ பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.
Фалек жил тридцать лет и родил Рагава.
19 ௧௯ ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Рагава Фалек жил двести девять лет и родил сынов и дочерей и умер.
20 ௨0 ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான்.
Рагав жил тридцать два года и родил Серуха.
21 ௨௧ செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Серуха Рагав жил двести семь лет и родил сынов и дочерей и умер.
22 ௨௨ செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான்.
Серух жил тридцать лет и родил Нахора.
23 ௨௩ நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Нахора Серух жил двести лет и родил сынов и дочерей и умер.
24 ௨௪ நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான்.
Нахор жил двадцать девять лет и родил Фарру.
25 ௨௫ தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Фарры Нахор жил сто девятнадцать лет и родил сынов и дочерей и умер.
26 ௨௬ 70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
Фарра жил семьдесят лет и родил Аврама, Нахора и Арана.
27 ௨௭ தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான்.
Вот родословие Фарры: Фарра родил Аврама, Нахора и Арана. Аран родил Лота.
28 ௨௮ ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான்.
И умер Аран при Фарре, отце своем, в земле рождения своего, в Уре Халдейском.
29 ௨௯ ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள்; ஆபிராமுடைய மனைவிக்கு சாராய் என்று பெயர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பெயர்; இவள் ஆரானுடைய மகள்; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
Аврам и Нахор взяли себе жен; имя жены Аврамовой: Сара; имя жены Нахоровой: Милка, дочь Арана, отца Милки и отца Иски.
30 ௩0 சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள்.
И Сара была неплодна и бездетна.
31 ௩௧ தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள்.
И взял Фарра Аврама, сына своего, и Лота, сына Аранова, внука своего, и Сару, невестку свою, жену Аврама, сына своего, и вышел с ними из Ура Халдейского, чтобы идти в землю Ханаанскую; но, дойдя до Харрана, они остановились там.
32 ௩௨ தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.
И было дней жизни Фарры в Харранской земле двести пять лет, и умер Фарра в Харране.

< ஆதியாகமம் 11 >