< எசேக்கியேல் 25 >

1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
上主的話傳給我說:「
2 மனிதகுமாரனே, நீ அம்மோனியர்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி,
人子,你面向阿孟子民,講預言攻擊他們,
3 அம்மோனியர்களுக்கு சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என்னுடைய பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோதும், யூதமக்கள் சிறையிருப்பிற்கு போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால்,
向阿孟子民說:你們聽吾主上主的話! 吾主上主這樣說:因為你譏笑我的聖殿說:『哈哈! 聖殿可受了褻瀆! 』對以色列地域說:『它可荒蕪了! 』對猶大家族說:『他們可被擄去了! 』
4 இதோ, நான் உன்னைக் கிழக்குத்தேசத்தாருக்குச் சொந்தமாக ஒப்புக்கொடுப்பேன், அவர்கள் உன்னில் தங்களுடைய கோட்டைகளைக் கட்டி, உன்னில் தங்களுடைய கூடாரங்களை உண்டாக்குவார்கள்; அவர்கள் உன்னுடைய பழங்களைச் சாப்பிட்டு, உன்னுடைய பாலைக் குடிப்பார்கள்.
為此,看,我要將你交給東方的子民作為產業,他們要在你那裏設立自己的帳幕,在那裏定居,吃你的果實,喝你的奶。
5 நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையும், அம்மோனியர்களின் தேசத்தை ஆட்டுதொழுவமுமாக்குவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்து கொள்வீர்கள்.
我要使辣巴成為牧放駱駝之地,使阿孟人的地方成為羊棧;如此你們必承認我是上主。
6 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்திற்கு விரோதமாக நீ கை தட்டி, உன்னுடைய காலால் தட்டி, வஞ்சம் வைத்து, தீங்கு செய்ததினால்,
因為吾主上主這樣說:因為你們對以色列地方所遭受的一切,曾手舞足蹈,滿心喜歡;
7 இதோ, உனக்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, உன்னை தேசங்களுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை மக்களுக்குள்ளே நிலையற்றவளாக்கி, உன்னை தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை அழிப்பேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய்.
因此,看,我要伸手打擊你,將你交給異族作為掠物;我要從人民中剷除你,由各國中消滅你;我要使你滅絕;如此,你必承認我是上主。」
8 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, யூதமக்கள் எல்லா தேசங்களுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால்,
吾主上主這樣說:「因為摩阿布【和色依爾】說:看猶大家族與所有異民並無不同!
9 இதோ, அம்மோனியர்கள் பெயர் தேசங்களுக்குள் இல்லாதபடி நான் அம்மோனியர்களின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சொந்தமாக ஒப்புக்கொடுக்கிறவிதமாக,
為此,看,我要暴露摩阿布的山區,以及她邊垂的城池,暴露她全國的精華,如貝特耶史摩特,巴耳默紅和克黎雅塔殷。
10 ௧0 நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடைசி ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும், பாகால்மெயோனையும், கீரியாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து,
我要將他們同阿孟子民一起交給東方的子民作為產業,使他們在異民中再不被人提及。
11 ௧௧ மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
我要向摩阿布施行懲罰:如此,他們必承認我是上主。」
12 ௧௨ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: ஏதோம் யூதா மக்களிடத்தில் கோபத்தைத்தணிக்க, பழிவாங்கி, பெரிய குற்றம்செய்ததால்,
吾主上主這樣說:「因為厄東曾對猶大家族復仇雪恥,因對他們復仇而犯了重罪;
13 ௧௩ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்திற்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி அதில் மனிதர்களையும், மிருகங்களையும் இல்லாதபடி அழித்து, அதைத் தேமான் துவங்கித் தேதான்வரை வனாந்திரமாக்குவேன்; வாளினால் விழுவார்கள்.
為此,吾主上主這樣說:我要伸手打擊厄東,將人與走獸由境內剷除,使她成為曠野,從特曼到德丹的人都要死於刀下。
14 ௧௪ நான் இஸ்ரவேலாகிய என்னுடைய மக்களின் கையினால் ஏதோமியர்களிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என்னுடைய கோபத்தையும், கடுங்கோபத்தையும் ஏதோமுக்கு காட்டுவார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
我要藉我的百姓以色列的手替我報復厄東,他們要按我的怒氣和憤恨對待厄東,如此他們便知道這是我的報復──吾主上主的斷語。」
15 ௧௫ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பெலிஸ்தியர்கள் பழிவாங்கிறவர்களாக இருந்து, பழைய விரோதத்தால் கெடுதல்செய்யவேண்டுமென்று, மனதில் வைத்துப் பழிவாங்கினதால்,
吾主上主這樣說:「因為培肋舍特人以極殘忍的報復心來施行報復,為了他們的世仇,企圖消滅以色列;
16 ௧௬ இதோ, நான் பெலிஸ்தியர்களுக்கு விரோதமாக என்னுடைய கையை நீட்டி, கிரேத்தியர்களை அழித்து, மத்திய தரைக் கடற்கரையில் மீதியானவர்களை அழித்து,
為此吾主上主這樣說:我要伸手打擊培肋舍特人,剷除革勒提人,毀滅殘留在海濱的人。
17 ௧௭ கடுங்கோபமான தண்டனைகளினால் அவர்களைக் கொடூரமாகப் பழிவாங்குவேன்; நான் அவர்களைப் பழிவாங்கும்போது நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
我要在他們身上以盛怒的懲罰施行嚴厲的報復;當我在他們身上施行報復時,他們便承認我是上主。」

< எசேக்கியேல் 25 >