< எசேக்கியேல் 1 >

1 என்னுடைய வயது முப்பதாம் வருடம் நான்காம் மாதம் ஐந்தாம் நாளாய் இருக்கும்போது, நான் கேபார் நதியின் அருகிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, நடந்தது என்னவென்றால், வானங்கள் திறந்திருக்க, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
І сталося тридцятого року, четвертого місяця, п'ятого дня місяця, коли я був серед полоне́них над річкою Кева́р, відкри́лося небо, і побачив я Божі виді́ння.
2 அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருடமாக இருந்தது.
П'ятого дня місяця, — це п'ятий рік поло́ну царя Єгояки́ма, —
3 அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர்கள் தேசத்திலுள்ள கேபார் நதியின் அருகிலே பூசி என்னும் ஆசாரியனுடைய மகனாகிய எசேக்கியேலுக்குக் யெகோவாவுடைய வார்த்தை உண்டாகி, அங்கே யெகோவாவுடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
сталося Господнє слово до Єзекіїля, сина Бузі́, священика, у халдейському кра́ї над річкою Кева́р, і була там над ним Господня рука.
4 இதோ, வடக்கேயிருந்து புயல்காற்றும் பெரிய மேகமும், அதோடு கலந்த நெருப்பும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் நெருப்புக்குள்ளிருந்து வெளிப்பட்ட உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமும் உண்டாயிருந்தது.
І побачив я, аж ось бурхли́вий вітер насува́в із пі́вночі, велика хмара та палю́чий огонь; а навколо неї — ся́йво, а з сере́дини його — ніби блискуча мідь, з-посеред огню.
5 அதின் நடுவிலிருந்து நான்கு உயிரினங்கள் தோன்றின; அவைகளின் தோற்றம் மனிதனைப்போல் இருந்தது.
А з сере́дини його — подоба чотирьох живих істо́т, а оце їхній вид: вони мали подобу люди́ни.
6 அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும், நான்கு இறக்கைகளும் இருந்தன.
І кожна мала чотири обли́ччі, і кожна з них мала чотири крилі́.
7 அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாக இருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாக இருந்தன; அவைகள் தேய்க்கப்பட்ட வெண்கலத்தின் நிறமாக மின்னிக்கொண்டிருந்தன.
А їхня нога — нога про́ста, а стопа́ їхньої ноги — як стопа телячої ноги, і вони ся́яли, як ніби блискуча мідь.
8 அவைகளுடைய இறக்கைகளின்கீழ் அவைகளின் நான்கு பக்கங்களிலும் மனிதனுடைய கைகள் இருந்தன; அந்த நான்கிற்கும் அதினதின் முகங்களும், இறக்கைகளும் உண்டாயிருந்தன.
А під їхніми кри́лами були лю́дські руки на чотирьох сторона́х їхніх, і вони четверо мали свої обличчя та свої кри́ла.
9 அவைகள் ஒவ்வொன்றின் இறக்கைகளும் மற்றதின் இறக்கைகளுடன் சேர்ந்திருந்தன; அவைகள் செல்லும்போது திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றன.
Їхні кри́ла приляга́ли одне до о́дного, не оберта́лися в ході своїй, — кожне ходило просто наперед себе.
10 ௧0 அவைகளுடைய முகங்களின் தோற்றமாவது, வலதுபக்கத்தில் நான்கும் மனிதனுடைய முகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நான்கும் எருதுமுகமும் கழுகு முகமுமாக இருந்தன.
А подо́ба їхнього обличчя — обличчя люди́ни та обличчя лева мали вони четверо з прави́ці, а обличчя вола мали вони четверо з ліви́ці, і обличчя орла мали вони четверо.
11 ௧௧ அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய இறக்கைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு இறக்கைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு இறக்கைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
А їхні обличчя та їхні кри́ла були розді́лені вгорі́; у кожного двоє крил злучувалнся одне з о́дним, і двоє закривали їхнє тіло.
12 ௧௨ அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாகச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; போகும்போது அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
І кожна ходила просто перед себе. Туди, куди бажа́в дух ходити, вони йшли, не оберта́лися в ході своїй.
13 ௧௩ உயிரினங்களுடைய தோற்றம் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற நெருப்புத்தழலின் தோற்றமும் தீவட்டிகளின் தோற்றமுமாக இருந்தது; அந்த நெருப்பு உயிரினங்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாக இருந்தது; நெருப்பிலிருந்து மின்னல் புறப்பட்டது.
А подоба тих істо́т була на вид вугі́лля з огню, вони палали на вигляд смолоски́пів; той огонь прохо́джувався поміж істо́тами. І огонь мав сяйво, і з огню вихо́дила бли́скавка.
14 ௧௪ அந்த உயிரினங்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
І ті живі істо́ти бігали й верталися, немов бли́скавка.
15 ௧௫ நான் அந்த உயிரினங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, இதோ, பூமியில் உயிரினங்களின் அருகில் நான்கு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
І придивився я до тих істот, аж ось по одно́му колесі на землі при тих живих істотах, при чотирьох їхніх обличчях.
16 ௧௬ சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை நிறமாக இருந்தது; அவைகள் நான்கிற்கும் ஒரேவித தோற்றம் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்திற்குள் சக்கரம் இருகிறதுபோல் இருந்தது.
Вид тих коле́с та їхній ви́ріб — як вигляд хризолі́ту, й одна подоба їм чотирьом, а їхній вид та їхній виріб — ніби ко́лесо в колесі.
17 ௧௭ அவைகள் ஓடும்போது தங்களின் நான்கு பக்கங்களிலும் ஓடும், ஓடும்போது அவைகள் திரும்புகிறதில்லை.
Вони ходили в ході своїй на чотири бо́ки, не оберта́лися в ході́ своїй.
18 ௧௮ அவைகளின் வட்டங்கள் பயங்கர உயரமாக இருந்தன; அந்த நான்கு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
А їхні обі́ддя були високі та страшні́; і їхнє обі́ддя довко́ла в чотирьох їх було повне оче́й.
19 ௧௯ அந்த உயிரினங்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த உயிரினங்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
І коли ходили ті живі істоти, ходили й ті коле́са при них; а коли ті істоти підіймалися з-над землі, підіймалися й ті коле́са.
20 ௨0 உயிரினங்களின் ஆவி போகவேண்டுமென்றிருந்த எந்த இடத்திற்கும் அவைகள் போயின; அவ்விடத்திற்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
Куди бажав дух ходити, ішли, куди мав той дух іти; і ті коле́са підіймалися з ними, бо в коле́сах був дух істот.
21 ௨௧ அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; உயிரினங்களுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
Коли ті йшли, ходили й вони; а коли ті стояли — стояли й вони; а коли ті підійма́лися з-над землі, підіймалися з ними й ті коле́са, бо був дух істот у тих коле́сах.
22 ௨௨ உயிரினங்களுடைய தலைகளின்மேல் ஆச்சரியப்படத்தக்க சுடர் வீசி மின்னும் பளிங்குபோல் ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
А на головах тих живих істот була подоба небозво́ду, ніби грізний кришта́ль, розтя́гнений над їхніми голова́ми згори.
23 ௨௩ மண்டலத்தின்கீழ் அவைகளுடைய இறக்கைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராக விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு இறக்கைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
А під цим небозво́дом були їхні про́сті кри́ла, зве́рнені одне до о́дного. У кожної було по двоє крил, що закривали їм їхні тіла́.
24 ௨௪ அவைகள் செல்லும்போது அவைகளுடைய இறக்கைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வ வல்ல தேவனுடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலைப் போன்ற ஆரவாரத்தின் சத்தம் போலவும் இருந்தது; அவைகள் நிற்கும்போது தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருந்தன.
А коли вони йшли, чув я шум їхніх крил, як шум великої води, як голос Всемогу́тнього, звук га́мору, як табо́ру. А коли вони ставали, опадали їхні крила.
25 ௨௫ அவைகள் நின்று தங்களுடைய இறக்கைகளைத் தளரவிட்டிருக்கும்போது, அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
І розлягався голос з-над небозво́ду, що над їхньою головою. І коли вони ставали, опадали їхні кри́ла.
26 ௨௬ அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல காட்சியளிக்கும் ஒரு சிங்காசனத்தின் தோற்றமும், அந்தச் சிங்காசனத்தின் தோற்றத்தின்மேல் மனிததோற்றத்தை போல ஒரு தோற்றமும் இருந்தது.
А згори небозво́ду, що над їхньою головою, була подоба трону на вигляд каменя сапфі́ру; а на подобі трону була подоба на вигляд люди́ни, на ньому згори.
27 ௨௭ அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான உருகிப்பிரகாசிக்கிற உலோகத்தின் நிறமாக இருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
І бачив я ніби блискучу мідь, на вид огню в сере́дині його навколо, від виду сте́гон його й вище, а від виду сте́гон його й до долу бачив я ніби огонь та ся́йво навко́ло нього.
28 ௨௮ மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே யெகோவாவுடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாக இருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.
Як ви́гляд весе́лки, що буває в хмарі в дощови́й день, такий був ви́гляд сяйва навко́ло. Це був ви́гляд подоби Господньої слави! І коли я це побачив, я впав на обличчя своє, і почув голос, що говорив.

< எசேக்கியேல் 1 >