< உபாகமம் 24 >

1 “ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டபின்பு, அவளிடத்தில் வெட்கக்கேடான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.
Gdyby pojął kto żonę, a stałby się jej małżonkiem, a przydałoby się, żeby nie znalazła łaski w oczach jego, przeto, że znalazł przy niej co sprośnego, tedy jej napisze list rozwodny i da w rękę jej, a puści ją z domu swego.
2 அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.
A gdyby wyszła z domu jego, a odszedłszy szłaby za drugiego męża;
3 அந்த இரண்டாம் கணவனும் அவளை வெறுத்து, விவாகரத்தின் கடிதத்தை எழுதி, அவளுடைய கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளைத் திருமணம்செய்த அந்த இரண்டாம் கணவன் இறந்துபோனாலும்,
A mając ją w nienawiści on mąż drugi, napisałby jej list rozwodny, i dałby w rękę jej i puściłby ją z domu swego; albo jeźliby też umarł on mąż drugi, który ją był pojął sobie za żonę:
4 அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளை விவாகரத்து செய்த அவளுடைய முந்தின கணவன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது யெகோவாவுக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய யெகோவா உனக்குச் சொந்தமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவத்தை வரச்செய்யாதே.
Nie będzie mógł mąż jej pierwszy, który ją był opuścił, znowu jej pojąć, aby mu była żoną, gdyż jest splugawiona; albowiem obrzydliwością to jest przed obliczem Pańskiem. Przetoż nie dopuszczaj grzeszyć ziemi, którą Pan, Bóg twój, dawa tobie w dziedzictwo.
5 “ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாகத் திருமணம்செய்திருந்தால், அவன் போருக்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் எந்தவொரு வேலையையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருடம்வரை தன் வீட்டில் தன் விருப்பப்படி இருந்து, தான் திருமணம்செய்த பெண்ணைச் சந்தோஷப்படுத்துவானாக.
Gdyby się kto świeżo ożenił, nie wynijdzie na wojnę, ani nań włożona będzie jaka praca; wolen będzie w domu swym przez cały rok weseląc się z żoną swoją, którą pojął.
6 “மாவரைக்கும் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடைமானமாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும்.
Nikt nie weźmie w zastawie zwierzchniego i spodniego kamienia młyńskiego; bo takowy jakoby duszę brał w zastawie.
7 “தன் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயத்துக்காக அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
Jeźliby kto był znalezion, coby ukradł człowieka z braci swej, synów Izraelskich, a handlowałby nim, i sprzedał go, tedy umrze on złodziej, i odejmiesz złe z pośrodku siebie.
8 “தொழுநோயைக்குறித்து லேவியர்களாகிய ஆசாரியர்கள் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக.
Strzeż się zarazy trądu, a przestrzegaj pilnie, żebyś czynił wszystko, czego was nauczą kapłani Lewitowie; jakom im rozkazał, przestrzegać tego, i czynić to będziecie.
9 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய யெகோவா மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்.
Pamiętaj co uczynił Pan, Bóg twój, Maryi w drodze, gdyście wyszli z Egiptu.
10 ௧0 “பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் நுழையவேண்டாம்.
Gdy pożyczysz czego bliźniemu twemu, nie wchodźże do domu jego, abyś wziął co w zastawie od niego.
11 ௧௧ வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.
Ale na dworze zostaniesz, a człowiek, któremuś pożyczył, wyniesie do ciebie zastaw przed dom.
12 ௧௨ அவன் ஏழையாயிருந்தால், நீ அவனுடைய அடகை வைத்துக்கொண்டு தூங்காமல்,
A jeźliby on człowiek był ubogi, nie układziesz się z zastawem jego.
13 ௧௩ அவன் தன் ஆடையைப் போட்டுப் படுத்துக்கொண்டு, உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.
Bez omieszkania wrócisz mu on zastaw, gdy słońce zajdzie, żeby leżał na odzieniu swem, i błogosławił ci; a będzieć to sprawiedliwością przed Panem, Bogiem twoim.
14 ௧௪ “உன் சகோதரர்களிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காதே.
Nie uczynisz krzywdy najemnikowi ubogiemu, i potrzebnemu z braci twojej, albo z cudzoziemców twoich, którzy są w ziemi twej, w bramach twoich.
15 ௧௫ அவன் வேலைசெய்த நாளிலேயே, பொழுதுபோகுமுன்னே, அவனுடைய கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடுக்காவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் யெகோவாவை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
Tegoż dnia dasz mu zapłatę jego przed zajściem słońca, albowiem ubogi jest, a z tego żywi duszę swoję; żeby nie wołał przeciwko tobie do Pana, a zostałby na tobie grzech.
16 ௧௬ “பிள்ளைகளுக்காகப் பெற்றோர்களும், பெற்றோர்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்திற்காக அவனவன் கொலைசெய்யப்படவேண்டும்.
Nie umrą ojcowie za syny, a synowie nie umrą za ojce; każdy za grzech swój umrze.
17 ௧௭ “நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் உடையை அடகாக வாங்காமலும் இருந்து,
Nie wywrócisz sądu przychodniowi, ani sierocie, ani weźmiesz w zastawie szaty wdowy;
18 ௧௮ நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய யெகோவா உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
Ale pamiętaj, żeś niewolnikiem był w Egipcie, a iż cię wybawił Pan, Bóg twój, stamtąd; dla tegoż ja przykazuję tobie, abyś to czynił.
19 ௧௯ “நீ உன் பயிரை அறுக்கும்போது உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாக வைத்து வந்தாயானால், அதை எடுத்துவர திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பதற்காக, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
Gdybyś żął zboże twoje na roli twojej, a zapamiętałbyś snopa na polu, nie wracaj się, abyś go wziął; przychodniowi, sieroci, i wdowie to będzie, abyć błogosławił Pan, Bóg twój, w każdej sprawie rąk twoich.
20 ௨0 நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்ட பின்பு, கொம்பிலே விடுபட்டதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக;
Gdy będziesz obierał oliwki twoje, nie oglądajże się na każdą gałązkę za sobą; przychodniowi, sierocie, i wdowie to będzie.
21 ௨௧ நீ உன் திராட்சைப்பழங்களை அறுத்த பின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதை அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
Gdy będziesz obierał winnicę twoję, nie zbierajże gron pozostałych za tobą; przychodniowi, sierocie, i wdowie to będzie.
22 ௨௨ நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.
A pamiętaj, iżeś był niewolnikiem w ziemi Egipskiej; przetoż ja tobie przykazuję, abyś to czynił.

< உபாகமம் 24 >