< தானியேல் 6 >

1 ராஜ்ஜியம் முழுவதையும் ஆளுவதற்காகத் தன் ராஜ்ஜியத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,
दारा को पसन्द आया कि ममलुकत पर एक सौ बीस नाज़िम मुक़र्रर करे, जो सारी ममलुकत पर हुकूमत करें।
2 ராஜாவிற்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று அதிகாரிகளையும் ஏற்படுத்துவது தரியுவிற்கு நலமென்று காணப்பட்டது; இவர்களில் தானியேலும் ஒருவனாயிருந்தான்.
और उन पर तीन वज़ीर हों जिनमें से एक दानीएल था, ताकि नाज़िम उनको हिसाब दें और बादशाह नुक़सान न उठाए।
3 இப்படியிருக்கும்போது தானியேல் அதிகாரிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேலானவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்ததால் அவனை ராஜ்ஜியம் முழுவதற்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.
और चूँकि दानीएल में फ़ाज़िल रूह थी, इसलिए वह उन वज़ीरों और नाज़िमों पर सबक़त ले गया और बादशाह ने चाहा कि उसे सारे मुल्क पर मुख़्तार ठहराए।
4 அப்பொழுது அதிகாரிகளும் தேசாதிபதிகளும் ராஜ்ஜியத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி காரணத்தைத் தேடினார்கள்; ஆனாலும் ஒரு காரணத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் முடியாமலிருந்தது; அவன் உண்மையுள்ளவனாக இருந்ததால் அவன்மேல் சுமத்த எந்தவொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.
तब उन वज़ीरों और नाज़िमों ने चाहा कि हाकिमदारी में दानीएल पर कु़सूर साबित करें, लेकिन वह कोई मौक़ा' या कु़सूर न पा सके, क्यूँकि वह ईमानदार था और उसमें कोई ख़ता या बुराई न थी।
5 அப்பொழுது அந்த மனிதர்கள்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் காரணத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் காரணத்தைக் கண்டுபிடிக்கமுடியாது என்றார்கள்.
तब उन्होंने कहा, कि “हम इस दानीएल को उसके ख़ुदा की शरी'अत के अलावा किसी और बात में कु़सूरवार न पाएँगे।”
6 பின்பு அந்தப் அதிகாரிகளும் தேசாதிபதிகளும் ஒன்றுகூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
इसलिए यह वज़ीर और नाज़िम बादशाह के सामने जमा' हुए और उससे इस तरह कहने लगे, कि “ऐ दारा बादशाह, हमेशा तक जीता रह!
7 எவனாகிலும் முப்பது நாட்கள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனிதனையானாலும் நோக்கி, எந்தவொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்செய்தால், அவன் சிங்கங்களின் குகையிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான உத்திரவிடவேண்டுமென்று ராஜ்ஜியத்தினுடைய எல்லா அதிகாரிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
ममलुकत के तमाम वज़ीरों और हाकिमों और नाज़िमों और सलाहकारों और सरदारों ने एक साथ मशवरा किया है कि एक ख़ुस्रवाना तरीक़ा मुक़र्रर करें, और एक इम्तिनाई फ़रमान जारी करें, ताकि ऐ बादशाह, तीस रोज़ तक जो कोई तेरे अलावा किसी मा'बूद या आदमी से कोई दरख़्वास्त करे, शेरों की माँद में डाल दिया जाए।
8 ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே அந்த உத்திரவு மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து இடவேண்டும் என்றார்கள்.
अब ऐ बादशाह, इस फ़रमान को क़ायम कर और लिखे हुए पर दस्तख़त कर, ताकि तब्दील न हो जैसे मादियों और फ़ारसियों के तौर तरीक़े जो तब्दील नहीं होते।”
9 அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்து போட்டான்.
तब दारा बदशाह ने उस लिखे हुए और फ़रमान पर दस्तख़त कर दिए।
10 ௧0 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்தில் கையெழுத்து போடப்பட்டதென்று அறிந்திருந்தாலும், தன் வீட்டிற்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமிற்கு நேராக ஜன்னல்கள் திறந்திருக்க, அங்கே தான் முன்பு செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்செய்து, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
और जब दानीएल ने मा'लूम किया कि उस लिखे हुए पर दस्तख़त हो गए, तो अपने घर में आया और उसकी कोठरी का दरीचा येरूशलेम की तरफ़ खुला था, वह दिन में तीन मरतबा हमेशा की तरह घुटने टेक कर ख़ुदा के सामने दुआ और उसकी शुक्रगुज़ारी करता रहा।
11 ௧௧ அப்பொழுது அந்த மனிதர்கள் ஒன்றுகூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபித்து விண்ணப்பம் செய்கிறதைக் கண்டார்கள்.
तब यह लोग जमा' हुए और देखा कि दानीएल अपने ख़ुदा के सामने दुआ और इल्तिमास कर रहा है।
12 ௧௨ பின்பு அவர்கள் ராஜாவிற்கு முன்பாக வந்து, ராஜாவின் உத்திரவைக்குறித்து: எந்த மனிதனாகிலும் முப்பது நாட்கள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையோ மனிதனையோ நோக்கி எந்தவொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்செய்தால், அவன் சிங்கங்களின் குகையிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்திட்டீர் அல்லவா என்றார்கள். அதற்கு ராஜா: அந்தக் காரியம் மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான்.
तब उन्होंने बादशाह के पास आकर उसके सामने उसके फ़रमान का यूँ ज़िक्र किया, कि “ऐ बादशाह, क्या तूने इस फ़रमान पर दस्तख़त नहीं किए, कि तीस रोज़ तक जो कोई तेरे अलावा किसी मा'बूद या आदमी से कोई दरख़्वास्त करे, शेरों की मान्द में डाल दिया जाएगा? बादशाह ने जवाब दिया, मादियों और फ़ारसियों के ना बदलने वाले तौर तरीक़े के मुताबिक़ यह बात सच है।”
13 ௧௩ அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி: சிறைபிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் மக்களில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்திட்டுக்கொடுத்த கட்டளையையும் மதிக்காமல், தினம் மூன்று வேளையும் தான்செய்யும் விண்ணப்பத்தைச் செய்கிறான் என்றார்கள்.
तब उन्होंने बादशाह के सामने 'अर्ज़ किया, कि “ऐ बादशाह, यह दानीएल जो यहूदाह के ग़ुलामों में से है, न तेरी परवा करता है और न उस इम्तिनाई फ़रमान को जिस पर तूने दस्तख़त किए हैं काम में लाता है, बल्कि हर रोज़ तीन बार दुआ करता है।”
14 ௧௪ ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் கலக்கமடைந்து, தானியேலைக் காப்பாற்றுவதற்கு அவன்மேல் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிப்பதற்காக சூரியன் மறையும்வரை முயற்சிசெய்துகொண்டிருந்தான்.
जब बादशाह ने यह बातें सुनीं, तो निहायत रन्जीदा हुआ और उसने दिल में चाहा कि दानीएल को छुड़ाए, और सूरज डूबने तक उसके छुड़ाने में कोशिश करता रहा।
15 ௧௫ அப்பொழுது அந்த மனிதர்கள் ராஜாவினிடத்தில் கூட்டமாக வந்து: ராஜா கட்டளையிட்ட எந்த உத்திரவும் கட்டளையும் மாற்றப்படமுடியாது என்பது மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.
फिर यह लोग बादशाह के सामने जमा' हुए और बादशाह से कहने लगे, कि “ऐ बादशाह, तू समझ ले कि मादियों और फ़ारसियों के तौर तरीक़े यूँ हैं कि जो फ़रमान और क़ानून बादशाह मुक़र्रर करे कभी नहीं बदलता।”
16 ௧௬ அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.
तब बादशाह ने हुक्म दिया, और वह दानीएल को लाए और शेरों की माँद में डाल दिया, पर बादशाह ने दानीएल से कहा, 'तेरा खुदा, जिसकी तू हमेशा इबादत करता है तुझे छुड़ाएगा।
17 ௧௭ ஒரு கல் குகையினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான்.
और एक पत्थर लाकर उस माँद के मुँह पर रख दिया, और बादशाह ने अपनी और अपने अमीरों की मुहर उस पर कर दी, ताकि वह बात जो दानीएल के हक़ में ठहराई गई थी न बदले।
18 ௧௮ பின்பு ராஜா தன் அரண்மனைக்குப் போய், இரவுமுழுவதும் சாப்பிடாமலும், இசைக்கருவி முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவிடாமலும் இருந்தான்; அவனுக்கு தூக்கமும் வராமற்போனது.
तब बादशाह अपने महल में गया और उसने सारी रात फ़ाक़ा किया, और मूसीक़ी के साज़ उसके सामने न लाए और उसकी नींद जाती रही।
19 ௧௯ காலையில் சூரியன் உதிக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் குகைக்கு வேகமாகப் போனான்.
और बादशाह सुबह बहुत सवेरे उठा, और जल्दी से शेरों की माँद की तरफ़ चला।
20 ௨0 ராஜா குகையின் அருகில் வந்தபோது, துயரசத்தமாகத் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
और जब माँद पर पहुँचा, तो ग़मनाक आवाज़ से दानीएल को पुकारा। बादशाह ने दानीएल को ख़िताब करके कहा, ऐ दानीएल, ज़िन्दा ख़ुदा के बन्दे, क्या तेरा ख़ुदा जिसकी तू हमेशा इबादत करता है, क़ादिर हुआ कि तुझे शेरों से छुड़ाए?
21 ௨௧ அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க.
तब दानीएल ने बादशाह से कहा, ऐ बादशाह, हमेशा तक जीता रह!
22 ௨௨ சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாகக் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் அநீதி செய்ததில்லை என்றான்.
मेरे ख़ुदा ने अपने फ़रिश्ते को भेजा और शेरों के मुँह बन्द कर दिए, और उन्होंने मुझे नुक़सान नहीं पहुँचाया क्यूँकि मैं उसके सामने बे — गुनाह साबित हुआ, और तेरे सामने भी ऐ बादशाह, मैने ख़ता नहीं की।
23 ௨௩ அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் குகையிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் குகையிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவனை நம்பியிருந்ததினால், அவனுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை.
इसलिए बादशाह निहायत ख़ुश हुआ और हुक्म दिया कि दानीएल को उस माँद से निकालें। तब दानीएल उस माँद से निकाला गया, और मा'लूम हुआ कि उसे कुछ नुक़सान नहीं पहुँचा, क्यूँकि उसने अपने ख़ुदा पर भरोसा किया था।
24 ௨௪ தானியேலின்மேல் குற்றம்சுமத்தின மனிதர்களையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்களுடைய மகன்களையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் குகையிலே போட்டார்கள்; அவர்கள் குகையின் அடியிலே சேருவதற்குமுன்பே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்களுடைய எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.
और बादशाह ने हुक्म दिया और वह उन शख़्सों को जिन्होंने दानीएल की शिकायत की थी लाए, और उनके बच्चों और बीवियों के साथ उनको शेरों की मान्द में डाल दिया; और शेर उन पर ग़ालिब आए और इससे पहले कि मान्द की तह तक पहुँचें, शेरों ने उनकी सब हड्डियाँ तोड़ डालीं।
25 ௨௫ பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா மக்களுக்கும் தேசத்தார்களுக்கும் பல மொழி பேசுபவர்களுக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகுவதாக.
तब दारा बादशाह ने सब लोगों और क़ौमों और अहल — ए — ज़ुबान को जो इस ज़मीन पर बसते थे, ख़त लिखा: “तुम्हारी सलामती बढ़ती जाये!
26 ௨௬ என் ராஜ்ஜியத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்செய்யப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்ஜியம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுவரைக்கும் நிற்கும்.
मैं यह फ़रमान जारी करता हूँ कि मेरी ममलुकत के हर एक सूबे के लोग, दानीएल के ख़ुदा के सामने डरते और काँपते हों क्यूँकि वही ज़िन्दा ख़ुदा है और हमेशा क़ायम है; और उसकी सल्तनत लाज़वाल है और उसकी ममलुकत हमेशा तक रहेगी।
27 ௨௭ தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.
वही छुड़ाता और बचाता है, और आसमान और ज़मीन में वही निशान और 'अजायब दिखाता है, उसीने दानीएल को शेरों के पंजों से छुड़ाया है।”
28 ௨௮ தரியுவின் ஆட்சிக்காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ஆட்சிக்காலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாக இருந்தது.
इसलिए यह दानीएल दारा की सल्तनत और ख़ोरस फ़ारसी की सल्तनत में कामयाब रहा।

< தானியேல் 6 >