< கொலோசெயர் 1 >

1 தேவனுடைய விருப்பத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும்,
PAULUJ wanporon en Krijtuj Iejuj amen pan kupur en Kot o ri atail Timoteuj,
2 கொலோசே பட்டணத்தில் கிறிஸ்துவிற்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாக இருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
Oni ri at jaraui o lelapok ren Krijuj akan, me mi Koloje; mak o popol jan ren Kot Jam atail o Kaun Iejuj Krijtuj!
3 கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்களுடைய விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மேலுமுள்ள உங்களுடைய அன்பையும்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு,
Kit kin danke Kot o Jam en atail Kaun Iejuj Krijtuj o kapakapa kin komail kaukaule.
4 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம்,
Kit lao ronadar duen omail pojon Krijtuj Iejuj, o omail limpok on jaraui kan karoj,
5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு நன்றிசெலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம்.
Pweki kaporopor eu, me nekineki on komail nanlan, duen me komail ronadar maj o ni padak melel en ronamau,
6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய நற்செய்தியினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்த நற்செய்தி உலகமெங்கும்பரவிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக்கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன் தருகிறதாக இருக்கிறது;
Me lei won komail o pil jap akan karoj, o a kin wada o kakairida dueta re omail jan ni ran o, me komail ronadar o dedekier melel mak en Kot;
7 அதை எங்களுக்குப் பிரியமான உடன் வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாக இருக்கிற எப்பாப்பிராவினிடம் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்;
Duen omail padakki jan ren Epapraj at warok kompok amen, me papa lelapok en Krijtuj on komail amen,
8 ஆவியானவருக்குள்ளான உங்களுடைய அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.
Me pil kaireki don kit duen omail limpok pena ni Nen.
9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் செய்கிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவியானவருக்குரிய விவேகத்தோடும் அவருடைய விருப்பத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும்,
I me je jota kin dukedi jan at kapakapa kin komail o poekipoeki jan ni ran en at ronadar, pwe komail en direki erpit en kupur a, o komail en lolekon o koiok nenin,
10 ௧0 எல்லாவித நல்ல செயல்களாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ச்சியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக வாழவும் அவருக்குத் தகுதியாக நடந்துகொள்ளவும்,
O kekeid wei duen me kon on Kaun o, o kapareda wan wiawia mau karoj, o kakairida ki aja Kot,
11 ௧௧ சந்தோஷத்தோடுகூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாவதற்கு மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக ஜெபம் செய்கிறோம்.
O keleki kel karoj duen manaman en a linan pwen dadaurata o kanonamalu peren,
12 ௧௨ ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்திரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்,
Danke Jam o, me kotin kamau kitail lar, en ian pwaijaneki iojo en me jaraui kan nan marain.
13 ௧௩ இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாக இருக்கிற பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம்.
Me kotin kapiti jan kitail manaman en rotorot, ap kotin kajau kitail don nan wein Na kompokepa,
14 ௧௪ குமாரனாகிய இயேசுகிறிஸ்துவிற்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
Me kotin dore kitail la iei lapwan dip atail,
15 ௧௫ அவர் கண்ணுக்குத் தெரியாத தேவனுடைய ரூபமும், எல்லாப் படைப்புக்கும் முதற்பேறுமானவர்.
I me kajale pan Kot, me jo janjal, me mejeni en audepa karoj.
16 ௧௬ ஏனென்றால், அவருக்குள் எல்லாம் படைக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான எல்லாப் பொருட்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அரசாங்க ஆட்சி புரிவோர்களானாலும், அதிகாரங்களானாலும், எல்லாமும் அவரைக் கொண்டும் அவருக்கென்றும் படைக்கப்பட்டது.
Pwe karoj wiauiki i, karoj me mi nanlan o jappa, me janjal o me jo janjal, ma me poe kan, de jaumaj akan, de wei kan, de manaman akan, meakaroj wiauiki i o on i.
17 ௧௭ அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
O i me kotikot mon meakaroj o meakaroj memaureki i.
18 ௧௮ அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராக இருக்கும்படி, அவரே துவக்கமும் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த முதற்பேறுமானவர்.
O i tapwin war a, iei momodijou, o i me tapi o mejeni en me iajadar jan ren me melar akan, pwe i en mon meakaorj.
19 ௧௯ எல்லாப் பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாக இருக்கவும்,
Pwe Kot kotin kileledier me mau kan karoj en mi re a.
20 ௨0 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாகத் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் தேவனுக்கு விருப்பமானது.
I ari kalolamau penan pein I meakan karoj, ma ni jappa de nanlan, ni a kotin wiada muei mau ki ntan a lopu.
21 ௨௧ முன்னே தேவனுக்கு அந்நியர்களாகவும் தீய செயல்களினால் மனதிலே விரோதிகளாகவும் இருந்த உங்களையும் பரிசுத்தர்களாகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்குமுன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்சசரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.
O komail, me doo wei jan o imwintiti maj o ni omail lamelame o wiawia jued akan,
22 ௨௨ நீங்கள் கேட்ட நற்செய்தியினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், நிலையாகவும் உறுதியாகவும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்.
A kotin kalolamau komail lar ki war a uduk ni a matala, pwen kapware kin komail da jaraui o pun o jo kadeik pa omail mo a.
23 ௨௩ அந்த நற்செய்தி வானத்தின்கீழே இருக்கிற எல்லாப் படைப்புகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
Ma komail dadaurata pojon o teneten o jo mokid wei jan ni kaporopor ki ronamau, me komail ronadar, o me lolok on audepa karoj me mi pan lan, me nai Pauluj wialar papa men.
24 ௨௪ இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.
I ap perenki ai kalokolok ki komail o men kaimwijok kila uduk ai me luedi ni kamekam en Krijtuj, pweki war a, iei momodijou,
25 ௨௫ ஆரம்ப காலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாக இருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தை நிறைவாகத் தெரியப்படுத்துகிறதற்கு, (aiōn g165)
Me i wialar papa men duen koa dodok en Kot, me i aleer pweki komail pwen ujela maj an en Kot.
26 ௨௬ உங்கள்நிமித்தம் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட வேலையின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
Iei me rir kot, me rir jan nin tapin kaua o men kaua, a met a kadiarok on japwilim a jaraui kan, (aiōn g165)
27 ௨௭ யூதரல்லாதவர்களுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தப் பிரியமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
Me Kot men kajanjaleda kapwapwa en linan en rir wet on men liki kan, iei Krijtuj me kotikot lol omail, i kaporopor en linan.
28 ௨௮ எந்த மனிதனையும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனிதனுக்கும் புத்திசொல்லி, எந்த மனிதனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் செய்கிறோம்.
I me kit kin padaki o pane panaui aramaj karoj, o padapadaki aramaj karoj ni lolekon karoj, pwe kit en kapwareda aramaj karoj ni unjoki on Krijtuj.
29 ௨௯ அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையான செய்கையை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.
I me i pil dodok kelail, duen wiawia en i me kin dodok kelail lol i.

< கொலோசெயர் 1 >