< ஆமோஸ் 2 >

1 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே.
上主這樣說:「為了摩阿布再三再四犯罪,我不收回成命,因為他們曾將厄東的骨骸焚化成灰。
2 மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள்.
我必將火投於摩阿布,燒盡克黎約特的王宮;摩阿布必在騷嚷、吶喊和號角聲中滅亡。
3 நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
我必由其中消滅民長,將她的一切長官同她一起殺死」──上主說。
4 மேலும்: யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்களுடைய முற்பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.
上主這樣說:「為了猶大再三再四犯罪,我不收回成命,因為他們離背了上主的法律,沒有遵守衪的誡命;他們祖先所追隨的邪神,使他們走入了岐途。
5 யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார்.
我必把火投於,燒盡耶路撒冷的王官」
6 மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்திற்கும், எளியவனை ஒரு ஜோடி காலணிகளுக்கும் விற்றுப்போட்டார்களே.
上主這樣說:「為了以色列再三再四犯罪,我不收回成命,因為他們為了銀錢出賣人;為一雙鞋,出賣無辜的人。
7 அவர்கள் தரித்திரர்களுடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என்னுடைய பரிசுத்த நாமத்தைக் கெடுக்கும்படி மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் உறவுகொள்ளுகிறார்கள்.
他們把窮人的頭踏在塵土裏,侵奪卑微人的權利;兒子與父親走近同一少女,以致褻瀆我的聖名;
8 அவர்கள் எல்லா பீடங்களின் அருகிலும் அடைமானமாக வாங்கின ஆடைகளின்மேல் படுத்துக்கொண்டு, பிணையமாக பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
他們靠近每個祭壇,躺在抵押者的衣服上,在他們的神廟內喝剝削來的酒。
9 நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாக இருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,
是我由你們面前消滅了阿摩黎人,他們雖高大似香柏,堅固如橡樹,但我仍從樹上摘去了果實,由樹下拔出了根子。
10 ௧0 நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கைப்பற்றும்படி உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரவழைத்து, உங்களை நாற்பது வருடங்களாக வனாந்திரத்திலே வழிநடத்தி,
是我由埃及國領你們上來,四十年之久引你們經過曠野,使你們佔領了阿摩黎人的國土。
11 ௧௧ உங்களுடைய மகன்களில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்களுடைய வாலிபர்களில் சிலரை நசரேயர்களாகவும் எழும்பச்செய்தேன்; இஸ்ரவேல் மக்களே, இப்படி நான் செய்யவில்லையா என்று யெகோவா கேட்கிறார்.
是我從你們的子孫中立了一些人為先知,由你們少年中選拔了一些人作獻身者。以色列子民,是不是這樣呢﹖──上主的斷語。
12 ௧௨ நீங்களோ நசரேயர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
但是,你們竟叫獻身者喝酒,又吩咐先知說:「別傳神言! 」
13 ௧௩ இதோ, கோதுமைக்கட்டுகள் பாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் நெருக்குகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற இடத்தில் நெருக்குவேன்.
看,我要使你們腳下的地搖蕩,好像車搖蕩一樣,
14 ௧௪ அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பலசாலி தன் உயிரை காப்பாற்றுவதுமில்லை.
以致疾行者無法逃遁,強有力者無法施展,武士救不了自己,
15 ௧௫ வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன்னுடைய கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்வதுமில்லை.
弓手不能屹立,捷足者不能逃脫,騎馬者不能自救。
16 ௧௬ பலசாலிகளுக்குள்ளே தைரியமானவன் அந்த நாளிலே நிர்வாணியாக ஓடிப்போவான் என்று யெகோவா சொல்லுகிறார்.
在那一天,武士中最勇敢的,也僅能赤身逃走」──上主的斷語。

< ஆமோஸ் 2 >