< அப்போஸ்தலர் 28 >

1 நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம்.
わたしたちが逃れたとき,人々はこの島がマルタと呼ばれていることを知った。
2 அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
現地人たちは,わたしたちに並々ならない親切を示してくれた。雨が降り出して寒かったので,たき火をして,わたしたち全員を迎えてくれたのである。
3 பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.
さて,パウロが一束の木切れを集めて火にくべていると,熱気のために一匹のマムシが出て来て,彼の手に絡みついた。
4 விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
現地人たちは,彼の手からぶら下がっているこの生き物を見ると,互いに言い合った,「きっとこの男は人殺しだ。海からは逃れたが,正義が彼を生かしておかないのだ」。
5 அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.
ところが,彼はその生き物を火の中に振り落として,何の害も受けなかった。
6 அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
それでも彼らは,彼がはれ上がるか,急に倒れて死ぬだろうと思っていた。しかし,長いあいだ様子をうかがっても,彼に何も起こらないので,彼らは考えを変え,彼のことを神だと言った。
7 தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.
この場所の近くに,島の長官でプブリウスという人の所有地があった。彼はわたしたちを迎えて,三日のあいだ手厚くもてなしてくれた。
8 புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான்.
その時,プブリウスの父が熱病と赤痢で床についていた。パウロは彼のところに入って行って祈り,両手を彼の上に置いていやした。
9 இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.
このことがあってから,その島でほかに疾患のある人たちもやって来て,治してもらった。
10 ௧0 அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
彼らはまた,わたしたちに数々の敬意を示し,出航の時には,必要な物をいろいろと積み込んでくれた。
11 ௧௧ மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
三か月後,わたしたちはこの島で冬を越したアレクサンドリアの船に乗って出航した。この船は「双子の兄弟」を船印としていた。
12 ௧௨ சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
わたしたちはシュラクサに寄港し,そこで三日間滞在した。
13 ௧௩ அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,
そこからずっと回って,レギウムに着いた。一日たつと,南風が起こったので,二日でポテオリにやって来た。
14 ௧௪ அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
ここで兄弟たちを見つけ,請われるままに七日間滞在した。こうして,わたしたちはローマに着いた。
15 ௧௫ அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.
兄弟たちがわたしたちのことを聞いて,ローマから「アピウスの市場」と「三軒宿」まで迎えに来てくれた。パウロは彼らを見て,神に感謝し,勇気づけられた。
16 ௧௬ நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
わたしたちがローマに入った時,百人隊長は囚人たちを守備隊長に引き渡したが,パウロは一人の番兵をつけられ,自分だけで住むことを許された。
17 ௧௭ மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
三日後,パウロはユダヤ人の指導者たちを招いた。彼らが集まった時,彼は彼らに言った,「兄弟たち,わたしは,民に対しても,わたしたちの父祖たちの慣習に対しても,何一つ背くことはしていないのに,エルサレムから囚人としてローマ人たちの手に引き渡されてしまいました。
18 ௧௮ அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
彼らはわたしを取り調べたのち,死刑にする理由が何もなかったので,わたしを釈放しようと思いました。
19 ௧௯ யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
しかし,ユダヤ人たちが反対したので,わたしはやむを得ずカエサルに上訴したのです。何か自分の民族を訴えようとしたのではありません。
20 ௨0 இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
このようなわけで,わたしはあなた方に会って話し合いたいとお願いしたのです。わたしは,イスラエルの希望のために,この鎖につながれているからです」。
21 ௨௧ அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.
彼らは彼に言った,「わたしたちはあなたについて,ユダヤから何の手紙も受け取っていないし,ここに来た兄弟たちのだれかが,あなたについて悪いことを報告したり話したりしているわけでもない。
22 ௨௨ எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
それでも,あなたが考えていることをあなたから聞きたいと思う。この分派については,至る所で反対されていることが,わたしたちに知れているのだから」。
23 ௨௩ அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான்.
彼らは彼と日を取り決めて,大勢で彼の宿舎にやって来た。彼は朝から晩まで彼らに説明を続けて,神の王国について証言し,モーセの律法と預言者たちとの中から,イエスについて彼らを説得した。
24 ௨௪ அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள்.
ある者は話された事柄を信じたが,ある者は信じようとしなかった。
25 ௨௫ இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது:
彼らが互いに意見の一致を見ないままに立ち去ろうとした時,パウロは一言こう言った。「聖霊は預言者イザヤを通して,わたしたちの父祖たちに正確に語って
26 ௨௬ நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள்.
こう言われました。 『この民のところに行って告げよ,あなた方は聞くには聞くが,決して理解しないだろう。見るには見るが,決して分からないだろう。
27 ௨௭ இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.
この民の心は無感覚になり,耳は聞くことに鈍くなり,目は閉じてしまった。それは,彼らが目で見,耳で聞き,心で理解し,こうして立ち返って,わたしが彼らをいやす,ということのないためだ』。
28 ௨௮ ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
ですから,あなた方は知っておいてください。神のこの救いは異邦人たちに送られたのです。彼らも聞き従うでしょう」。
29 ௨௯ இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.
彼がこれらの言葉を語ると,ユダヤ人たちは大いに論じ合いながら立ち去った。
30 ௩0 பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு,
パウロは,自分の借りた家にまる二年間住んで,自分のもとに来る人たちをみな迎え入れ,
31 ௩௧ மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.
神の王国を宣教し,あらん限りの大胆さをもって,妨げられることなく,主イエス・キリストに関する事柄を教え続けた。

< அப்போஸ்தலர் 28 >