< அப்போஸ்தலர் 22 >

1 சகோதரர்களே, பெரியோர்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களை கவனித்துக் கேளுங்கள் என்றான்.
ⲁ̅ϫⲉ ⲛ̅ⲣⲱⲙⲉ ⲛⲁⲥⲛⲏⲩ ⲁⲩⲱ ⲛⲁⲉⲓⲟⲧⲉ ⲥⲱⲧⲙ̅ ⲉⲧⲁⲁⲡⲟⲗⲟⲅⲓⲁ ⲉⲧϣⲟⲟⲡ ⲧⲉⲛⲟⲩ ϣⲁⲣⲱⲧⲛ̅.
2 அவன் எபிரெய மொழியிலே தங்களோடு பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, மிகவும் அமைதியாக இருந்தார்கள். அப்பொழுது அவன்:
ⲃ̅ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲥⲱⲧⲙ̅ ⲇⲉ ϫⲉ ⲉϥⲛⲁϣⲁϫⲉ ⲛⲙ̅ⲙⲁⲩ ⲙ̅ⲙⲛ̅ⲧϩⲉⲃⲣⲁⲓⲟⲥ ⲁⲩⲕⲁⲣⲱⲟⲩ ⲛ̅ϩⲟⲩⲟ. ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ
3 நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சு பட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதபிரமாணத்தின்படியே திட்டமாக போதிக்கப்பட்டு, இன்றையதினம் நீங்களெல்லோரும் தேவனைக்குறித்து வைராக்கியம் உள்ளவர்களாக இருக்கிறதுபோல நானும் வைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
ⲅ̅ϫⲉ ⲁⲛⲅ̅ⲟⲩⲣⲱⲙⲉ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈. ⲉⲁⲩϫⲡⲟⲓ̈ ϩⲛ̅ⲧⲁⲣⲥⲟⲥ ⲛ̅ⲧⲕⲓⲗⲓⲕⲓⲁ ⲉⲁⲩⲥⲁⲛⲟⲩϣⲧ̅ ⲇⲉ ϩⲛ̅ⲧⲉⲓ̈ⲡⲟⲗⲓⲥ ⲉⲁⲩⲡⲁⲓⲇⲉⲩⲉ ⲙ̅ⲙⲟⲓ̈ ϩⲛ̅ⲟⲩⲱⲣϫ̅ ϩⲁⲣⲁⲧϥ̅ ⲛ̅ⲅⲁⲙⲁⲗⲓⲏⲗ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲛⲟⲙⲟⲥ ⲛ̅ⲛⲁⲉⲓⲟⲧⲉ. ⲉⲓ̈ⲟ ⲛ̅ⲣⲉϥⲕⲱϩ ⲉⲡⲛⲟⲩⲧⲉ ⲕⲁⲧⲁⲑⲉ ⲉⲧⲉⲧⲛ̅ⲟ ⲙ̅ⲙⲟⲥ ⲙ̅ⲡⲟⲟⲩ ⲛ̅ⲧⲱⲧⲛ̅ ⲧⲏⲣⲧⲛ̅.
4 நான் இந்த மார்க்கத்தைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் பிடித்து, சிறைச்சாலைகளில் ஒப்படைத்து, மரணம் ஏற்படும்வரை துன்பப்படுத்தினேன்.
ⲇ̅ⲁⲓ̈ⲇⲓⲱⲕⲉ ⲛ̅ⲥⲁⲧⲉⲓ̈ϩⲓⲏ ϣⲁϩⲣⲁⲓ̈ ⲉⲡⲙⲟⲩ. ⲉⲓ̈ⲙⲟⲩⲣ ⲛ̅ⲛ̅ⲣⲱⲙⲉ ⲁⲩⲱ ⲛⲉϩⲓⲟⲙⲉ ⲉⲓ̈ⲛⲟⲩϫⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲉⲛⲉϣⲧⲉⲕⲱⲟⲩ.
5 அதற்கு பிரதான ஆசாரியர்களும் மூப்பர்கள் அனைவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையினாலே நான் சகோதரர்களுக்கு கடிதங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவில் இருக்கிறவர்களைத் தண்டிப்பதற்கு, அவர்களைக் கைதுசெய்து, எருசலேமுக்குக் கொண்டு வருவதற்காக அங்குப்போனேன்.
ⲉ̅ⲛ̅ⲑⲉ ⲟⲛ ⲉⲣⲉⲡⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲛⲁⲓ̈ ⲙⲛ̅ⲛⲉⲡⲣⲉⲥⲃⲩⲧⲉⲣⲟⲥ. ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲁⲓ̈ϫⲓ ⲛ̅ϩⲉⲛⲉⲡⲓⲥⲧⲟⲗⲏ ⲛ̅ⲧⲟⲟⲧⲟⲩ. ⲁⲓ̈ⲃⲱⲕ ⲉⲇⲁⲙⲁⲥⲕⲟⲥ ⲉⲧⲣⲁⲉⲓⲛⲉ ⲟⲛ ⲛ̅ⲛⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲉⲑⲓ̅ⲗ̅ⲏ̅ⲙ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉⲧⲓⲙⲱⲣⲓ ⲙ̅ⲙⲟⲟⲩ.
6 அப்படி நான் புறப்பட்டுப் போகும் வழியில் தமஸ்குவிற்கு அருகில், மத்தியான நேரத்திலே, திடீரென்று வானத்திலிருந்து பெரிய வெளிச்சம் உண்டாகி, என்னைச் சுற்றிப் பிரகாசித்தது.
ⲋ̅ⲁⲥϣⲱⲡⲉ ⲇⲉ ⲙ̅ⲙⲟⲓ̈ ⲉⲓ̈ⲙⲟⲟϣⲉ. ⲛ̅ⲧⲉⲣⲉⲓϩⲱⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲇⲁⲙⲁⲥⲕⲟⲥ ⲙ̅ⲡⲛⲟⲩ ⲙ̅ⲙⲉⲉⲣⲉ. ⲁⲩⲛⲟϭ ⲛ̅ⲟⲩⲟⲉⲓⲛ ϣⲁ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱⲓ̈ ϩⲛ̅ⲟⲩϣⲥⲛⲉ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲉ.
7 நான் தரையிலே விழுந்தேன். அந்தநேரத்தில்: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
ⲍ̅ⲁⲓ̈ϩⲉ ⲇⲉ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲙ̅ⲡⲕⲁϩ. ⲁⲩⲱ ⲁⲓ̈ⲥⲱⲧⲙ̅ ⲉⲩⲥⲙⲏ ⲉⲥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁⲓ̈ ϫⲉ ⲥⲁⲩⲗⲉ ⲥⲁⲩⲗⲉ ⲁϩⲣⲟⲕ ⲕⲡⲏⲧ ⲛ̅ⲥⲱⲓ̈.
8 அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார்.
ⲏ̅ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲁⲓ̈ⲟⲩⲱϣⲃ̅ ϫⲉ ⲛ̅ⲧⲕ̅ⲛⲓⲙ ⲡϫⲟⲉⲓⲥ. ⲡⲉϫⲁϥ ⲛⲁⲓ̈ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲓ̅ⲥ̅ ⲡⲛⲁⲍⲱⲣⲁⲓⲟⲥ ⲡⲉⲧⲕⲡⲏⲧ ⲛ̅ⲥⲱϥ.
9 அச்சமயம் என்னுடனேகூட இருந்தவர்கள் அந்த வெளிச்சத்தைக் கண்டு, பயந்துவிட்டார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை.
ⲑ̅ⲛⲉⲧⲙⲟⲟϣⲉ ⲇⲉ ⲛⲙ̅ⲙⲁⲓ ⲁⲩⲛⲁⲩ ⲉⲡⲟⲩⲟⲉⲓⲛ ⲁⲩⲱ ⲁⲩϣⲱⲡⲉ ϩⲛⲟⲩϩⲟⲧⲉ. ⲙ̅ⲡⲟⲩⲥⲱⲧⲙ̅ ⲇⲉ ⲉⲧⲉⲥⲙⲏ ⲙ̅ⲡⲉⲧϣⲁϫⲉ ⲛⲙ̅ⲙⲁⲓ̈.
10 ௧0 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவிற்குப் போ; அங்கே நீ செய்யவேண்டியதெல்லாம் உனக்குச் சொல்லப்படும் என்றார்.
ⲓ̅ⲡⲉϫⲁⲓ̈ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲟⲩ ⲡⲉϯⲛⲁⲁⲁϥ. ⲡⲉϫⲁϥ ⲛⲁⲓ̈ ϫⲉ ⲧⲱⲟⲩⲛ ⲛⲅ̅ⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲇⲁⲙⲁⲥⲕⲟⲥ. ⲁⲩⲱ ⲥⲉⲛⲁϣⲁϫⲉ ⲛⲙ̅ⲙⲁⲕ ϩⲙ̅ⲡⲙⲁ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲉⲧⲃⲉϩⲱⲃ ⲛⲓⲙ ⲛ̅ⲧⲁⲓ̈ⲧⲟϣⲟⲩ ⲛⲁⲕ ⲉⲁⲁⲩ.
11 ௧௧ அந்த ஒளியின் மிகுதியினாலே நான் பார்வையை இழந்துபோனதினால், என்னோடிருந்தவர்களின் உதவியால் வழிநடத்தப்பட்டு தமஸ்குவிற்கு வந்தேன்.
ⲓ̅ⲁ̅ⲛ̅ⲧⲉⲣⲓⲧⲱⲟⲩⲛ ⲇⲉ ⲁⲓ̈ⲗⲟ ⲉⲓ̈ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ϩⲁⲡⲉⲟⲟⲩ ⲙ̅ⲡⲟⲩⲟⲉⲓⲛ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ. ⲁⲩϫⲓⲙⲟⲉⲓⲧ ⲇⲉ ϩⲏⲧ ⲛ̅ϭⲓⲛⲉⲧⲛⲙ̅ⲙⲁⲓ̈ ⲁⲓ̈ⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲇⲁⲙⲁⲥⲕⲟⲥ.
12 ௧௨ அப்பொழுது வேதபிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற எல்லா யூதர்களாலும் நல்லவனென்று பெயர்பெற்றவனுமாகிய அனனியா என்பவன்,
ⲓ̅ⲃ̅ⲟⲩⲣⲱⲙⲉ ⲇⲉ ϫⲉ ⲁⲛⲁⲛⲓⲁⲥ ⲟⲩⲣⲉϥⲣ̅ϩⲟⲧⲉ ⲕⲁⲧⲁⲡⲛⲟⲙⲟⲥ. ⲉⲩⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ϩⲁⲣⲟϥ ⲛ̅ϭⲓⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈ ⲧⲏⲣⲟⲩ ⲉⲧⲟⲩⲏϩ ϩⲛ̅ⲇⲁⲙⲁⲥⲕⲟⲥ.
13 ௧௩ என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; உடனே நான் பார்வையடைந்து, அவனைப் பார்த்தேன்.
ⲓ̅ⲅ̅ⲁϥⲉⲓ ϣⲁⲣⲟⲓ̈ ⲁϥⲁϩⲉⲣⲁⲧϥ̅ ϩⲓϫⲱⲓ̈ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲓ̈. ϫⲉ ⲥⲁⲩⲗⲉ ⲡⲁⲥⲟⲛ ⲁⲛⲁⲩ ⲉⲃⲟⲗ. ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲩⲛⲟⲩ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ ⲁⲓ̈ⲛⲁⲩ ⲉⲃⲟⲗ.
14 ௧௪ அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனின் சித்தத்தை நீ தெரிந்துகொள்ளவும், நீதியுள்ளவரை தரிசிக்கவும், அவருடைய உயர்வான வாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார்.
ⲓ̅ⲇ̅ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲓ̈ ϫⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛ̅ⲛⲉⲛⲉⲓⲟⲧⲉ ⲁϥⲛⲉϩⲕ̅ ⲉⲃⲟⲗ ⲉⲥⲟⲩⲛ̅ⲡⲉϥⲟⲩⲱϣ. ⲁⲩⲱ ⲉⲛⲁⲩ ⲉⲡⲇⲓⲕⲁⲓⲟⲥ. ⲁⲩⲱ ⲉⲥⲱⲧⲙ̅ ⲉⲩⲥⲙⲏ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲣⲱϥ.
15 ௧௫ நீ பார்த்தவைகளையும் கேட்டவைகளையும்குறித்துச் எல்லா மனிதர்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சியாக இருப்பாய்.
ⲓ̅ⲉ̅ϫⲉ ⲕⲛⲁϣⲱⲡⲉ ⲛⲁϥ ⲙ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲛ̅ⲛⲁϩⲣⲛ̅ⲣⲱⲙⲉ ⲛⲓⲙ ⲛ̅ⲛⲉⲛⲧⲁⲕⲛⲁⲩ ⲉⲣⲟⲟⲩ ⲁⲩⲱ ⲁⲕⲥⲟⲧⲙⲟⲩ.
16 ௧௬ இப்பொழுது நீ தாமதிக்கிறது என்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் பணிந்துகொண்டு, ஞானஸ்நானம் பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.
ⲓ̅ⲋ̅ⲧⲉⲛⲟⲩ ϭⲉ ⲟⲩ ⲡⲉⲧⲕ̅ⲛⲁⲁⲁϥ ⲧⲱⲟⲩⲛ ⲛⲅ̅ϫⲓⲃⲁⲡⲧⲓⲥⲙⲁ ⲛⲅ̅ⲉⲓⲱ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛⲉⲕⲛⲟⲃⲉ ⲁⲩⲱ ⲛⲅ̅ⲉⲡⲓⲕⲁⲗⲉⲓ ⲙ̅ⲡⲉϥⲣⲁⲛ.
17 ௧௭ பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம் செய்துகொண்டிருக்கும்போது, நான் தரிசனத்திலே அவரைப் பார்த்தேன்.
ⲓ̅ⲍ̅ⲁⲥϣⲱⲡⲉ ⲛ̅ⲧⲉⲣⲓⲕⲧⲟⲓ̈ ⲉⲑⲓ̅ⲗ̅ⲏ̅ⲙ. ⲁⲩⲱ ⲉⲓ̈ϣⲗⲏⲗ ϩⲙ̅ⲡⲉⲣⲡⲉ. ⲁⲓ̈ϣⲱⲡⲉ ϩⲛ̅ⲟⲩⲉⲕⲥⲧⲁⲥⲓⲥ.
18 ௧௮ அவர் என்னைப் பார்த்து: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆகவே, நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாக எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார்.
ⲓ̅ⲏ̅ⲁⲓ̈ⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲁⲓ̈ ϫⲉ ϭⲉⲡⲏ ⲁⲙⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲑⲓ̅ⲗ̅ⲏ̅ⲙ. ϫⲉ ⲥⲉⲛⲁϫⲓⲙⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲣⲉ ⲁⲛ ⲛ̅ⲧⲟⲟⲧⲕ̅ ⲉⲧⲃⲏⲏⲧ.
19 ௧௯ அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாக இருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெப ஆலயங்களிலே அடித்ததையும்,
ⲓ̅ⲑ̅ⲁⲛⲟⲕ ϩⲱ ⲡⲉϫⲁⲓ̈ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲛ̅ⲧⲟⲟⲩ ⲥⲉⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲛⲉⲓ̈ⲱⲧⲡ̅ ⲉϩⲟⲩⲛ ⲁⲩⲱ ⲉⲧϩⲓⲟⲩⲉ ϩⲛ̅ⲛ̅ⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲛ̅ⲛⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟⲕ.
20 ௨0 உம்முடைய சாட்சியாக வாழ்ந்த ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலை செய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் உடைகளை பாதுகாத்துக் கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன்.
ⲕ̅ⲁⲩⲱ ⲟⲛ ⲉⲩⲛⲁⲡⲱϩⲧ̅ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲥⲛⲟϥ ⲛ̅ⲥⲧⲉⲫⲁⲛⲟⲥ ⲡⲉⲕⲙⲛ̅ⲧⲣⲉ. ⲁⲛⲟⲕ ϩⲱ ⲛⲉⲓ̈ⲁϩⲉⲣⲁⲧ ⲉⲓ̈ⲥⲩⲛⲉⲩⲇⲟⲕⲓ ⲁⲩⲱ ⲉⲓ̈ϩⲁⲣⲉϩ ⲉⲛϩⲟⲓ̈ⲧⲉ ⲛ̅ⲛⲉⲧⲛⲁϩⲱⲧⲃ̅ ⲙ̅ⲙⲟϥ.
21 ௨௧ அதற்கு அவர்: நீ போ, நான் உன்னை தொலைவில் உள்ள யூதரல்லாதவர்களிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.
ⲕ̅ⲁ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲓ̈ ϫⲉ ⲃⲱⲕ ϫⲉ ⲉⲓ̈ⲛⲁϫⲟⲟⲩⲕ ⲁⲛⲟⲕ ⲉϩⲉⲛϩⲉⲑⲛⲟⲥ ⲉⲩⲟⲩⲏⲩ.
22 ௨௨ இந்த வார்த்தைவரைக்கும் அவன் சொல்லுவதை கேட்டார்கள். பின்பு: இப்படிப்பட்டவனை பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்ல என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள்.
ⲕ̅ⲃ̅ⲁⲩⲥⲱⲧⲙ̅ ⲇⲉ ⲉⲣⲟϥ ⲛ̅ϭⲓⲙ̅ⲙⲏⲏϣⲉ ϣⲁⲡⲉⲓ̈ϣⲁϫⲉ. ⲁⲩⲱ ⲁⲩϥⲓϩⲣⲁⲩ ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ϥⲓⲡⲁⲓ̈ ⲛ̅ⲧⲉⲓ̈ⲙⲓⲛⲉ ⲉⲃⲟⲗ ϩⲓϫⲙ̅ⲡⲕⲁϩ. ⲛ̅ϣϣⲉ ⲅⲁⲣ ⲁⲛ ⲉⲣⲟϥ ⲉⲱⲛϩ̅.
23 ௨௩ இவ்விதமாக அவர்கள் கூக்குரலிட்டுத் தங்களுடைய மேலாடைகளை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கும்போது,
ⲕ̅ⲅ̅ⲉⲩⲁϣⲕⲁⲕ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲉⲩϥⲓ ⲉϩⲣⲁⲓ̈ ⲛ̅ⲛⲉⲩϩⲟⲓ̈ⲧⲉ. ⲁⲩⲱ ⲉⲩⲛⲉϫϣⲟⲉⲓϣ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲡⲁⲏⲣ.
24 ௨௪ ரோம அதிபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி ஆணையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாக இப்படிக் கூக்குரலிடுகிறக் காரணத்தை தெரிந்துகொள்ளும்படிக்கு அவனை சாட்டையினால் அடித்து விசாரிக்கச் சொன்னான்.
ⲕ̅ⲇ̅ⲁⲡⲭⲓⲗⲓⲁⲣⲭⲟⲥ ⲇⲉ ⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲉϫⲓⲧϥ̅ ⲉϩⲟⲩⲛ ⲉⲧⲡⲁⲣⲉⲙⲃⲟⲗⲏ. ⲉⲁϥϫⲟⲟⲥ ⲉϩⲓⲟⲩⲉ ⲉⲣⲟϥ ⲛ̅ϩⲉⲛⲙⲁⲥⲧⲓⲅⲝ. ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉⲉⲓⲙⲉ ϫⲉ ⲉⲧⲃⲉⲁϣ ⲛ̅ⲗⲟⲓ̈ϭⲉ ⲉⲛⲉⲩⲁϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉⲣⲟϥ ⲛ̅ⲧⲉⲓ̈ϩⲉ.
25 ௨௫ அதன்படி அவர்கள் அவனைக் கயிற்றால் இருகக் கட்டும்போது, பவுல் அருகில் நின்ற நூற்றுக்கு அதிபதியைப் பார்த்து: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாக இருக்கிற மனிதனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா? என்றான்.
ⲕ̅ⲉ̅ⲛ̅ⲧⲉⲣⲟⲩⲥⲟⲙⲛ̅ⲧϥ̅ ⲇⲉ ⲛⲙ̅ⲙⲟⲩⲥ. ⲡⲉϫⲁϥ ⲛ̅ϭⲓⲡⲁⲩⲗⲟⲥ ⲙ̅ⲡϩⲉⲕⲁⲧⲟⲛⲧⲁⲣⲭⲟⲥ ⲉⲧⲁϩⲉⲣⲁⲧϥ̅ ϫⲉ ⲉⲛⲉⲥⲧⲟ ⲛⲏⲧⲛ̅ ⲉϩⲓⲟⲩⲉ ⲉⲩⲣⲱⲙⲉ ⲛ̅ϩⲣⲱⲙⲁⲓⲟⲥ ⲉⲙⲛ̅ⲛⲟⲃⲉ ⲉⲣⲟϥ.
26 ௨௬ நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, ரோம அதிபதியிடத்தில்போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இரும்; இந்த மனிதன் ரோமன் என்றான்.
ⲕ̅ⲋ̅ⲛ̅ⲧⲉⲣⲉϥⲥⲱⲧⲙ̅ ⲇⲉ ⲛ̅ϭⲓⲡϩⲉⲕⲁⲧⲟⲛⲧⲁⲣⲭⲟⲥ. ⲁϥϯⲡⲉϥⲟⲩⲟⲓ̈ ⲉⲡⲭⲓⲗⲓⲁⲣⲭⲟⲥ ⲁϥⲧⲁⲙⲟϥ ϫⲉ ⲁⲛⲁⲩ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲕ̅ⲛⲁⲁⲁϥ. ⲡⲉⲓ̈ⲣⲱⲙⲉ ⲅⲁⲣ ⲟⲩϩⲣⲱⲙⲁⲓⲟⲥ ⲡⲉ.
27 ௨௭ இதை அறிந்த சேனாதிபதி பவுலிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான்.
ⲕ̅ⲍ̅ⲁϥϯⲡⲉϥⲟⲩⲟⲓ̈ ⲇⲉ ⲛ̅ϭⲓⲡⲭⲓⲗⲓⲁⲣⲭⲟⲥ ⲁϥϫⲛⲟⲩϥ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲛ̅ⲧⲟⲕ ⲛ̅ⲧⲕ̅ⲟⲩϩⲣⲱⲙⲁⲓⲟⲥ. ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲉϩⲉ.
28 ௨௮ ரோம அதிபதி அவனைப் பார்த்து: நான் அதிக பணம் கொடுத்து இந்த ரோம உரிமையை சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ ரோமக் குடிமகனாகப் பிறந்தேன் என்றான்.
ⲕ̅ⲏ̅ⲁⲡⲭⲓⲗⲓⲁⲣⲭⲟⲥ ⲇⲉ ⲟⲩⲱϣⲃ̅ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲁⲓ̈ϯⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲭⲣⲏⲙⲁ ϩⲁⲧⲉⲓ̈ⲡⲟⲗⲓⲧⲓⲁ. ⲡⲉϫⲉⲡⲁⲩⲗⲟⲥ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲛ̅ⲧⲁⲩϫⲡⲟⲓ̈ ⲛ̅ϩⲏⲧⲥ̅.
29 ௨௯ அவனை அடித்து விசாரிக்கும்படி ஆயத்தமாக இருந்தவர்கள் உடனே அவனைவிட்டுவிட்டார்கள். ரோம அதிபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டியதற்காகப் பயந்தான்.
ⲕ̅ⲑ̅ⲛ̅ⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲁⲩⲥⲁϩⲱⲟⲩ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲙⲟϥ ⲛ̅ϭⲓⲛⲉⲧⲛⲁϩⲉⲇⲁⲍⲉ ⲙ̅ⲙⲟϥ. ⲁⲩⲱ ⲡⲭⲓⲗⲓⲁⲣⲭⲟⲥ ⲁϥⲣ̅ϩⲟⲧⲉ ⲛ̅ⲧⲉⲣⲉϥⲉⲓⲙⲉ ϫⲉ ⲟⲩϩⲣⲱⲙⲁⲓⲟⲥ ⲡⲉ. ⲉⲃⲟⲗ ϫⲉ ⲛⲉⲁϥⲙⲟⲣϥ̅ ⲡⲉ. ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲩⲛⲟⲩ ⲁϥⲃⲟⲗϥ̅ ⲉⲃⲟⲗ.
30 ௩0 பவுலின்மேல் யூதர்களாலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாக அறியவிரும்பி, அவன் அடுத்தநாளிலே அவனை விடுவித்து, பிரதான ஆசாரியர்களையும் ஆலோசனைச் சங்கத்தினர்கள் அனைவரையும் கூடிவரும்படி ஆணையிட்டு, அவனை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
ⲗ̅ⲙ̅ⲡⲉϥⲣⲁⲥⲧⲉ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣ ⲉⲉⲓⲙⲉ ⲉⲡⲱⲣϫ̅. ϫⲉ ⲉⲧⲃⲉⲟⲩ ⲥⲉⲕⲁⲧⲏⲅⲟⲣⲓ ⲙ̅ⲙⲟϥ ⲛ̅ϭⲓⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈. ⲁϥⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲉⲧⲣⲉⲩⲥⲱⲟⲩϩ ⲛ̅ϭⲓⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ. ⲁⲩⲱ ⲡⲥⲩⲛϩⲉⲇⲣⲓⲟⲛ ⲧⲏⲣϥ̅. ⲁϥϫⲓⲡⲁⲩⲗⲟⲥ ⲉⲡⲉⲥⲏⲧ ⲁϥⲧⲁϩⲟϥ ⲉⲣⲁⲧϥ̅ ϩⲛ̅ⲧⲉⲩⲙⲏⲧⲉ.

< அப்போஸ்தலர் 22 >