< அப்போஸ்தலர் 14 >

1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதர்களுடைய ஜெப ஆலயத்தின் உள்ளே பிரவேசித்து யூதர்களிலும் கிரேக்கர்களிலும் திரளான மக்கள் நம்பத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
தௌ த்³வௌ ஜநௌ யுக³பத்³ இகநியநக³ரஸ்த²யிஹூதீ³யாநாம்’ ப⁴ஜநப⁴வநம்’ க³த்வா யதா² ப³ஹவோ யிஹூதீ³யா அந்யதே³ஸீ²யலோகாஸ்²ச வ்யஸ்²வஸந் தாத்³ரு’ஸீ²ம்’ கதா²ம்’ கதி²தவந்தௌ|
2 விசுவாசிக்காத யூதர்கள் சகோதரர்களுக்கு விரோதமாக யூதரல்லாதவர்களுடைய மனதைத் தூண்டிவிட்டு, பகையுண்டாக்கினார்கள்.
கிந்து விஸ்²வாஸஹீநா யிஹூதீ³யா அந்யதே³ஸீ²யலோகாந் குப்ரவ்ரு’த்திம்’ க்³ராஹயித்வா ப்⁴ராத்ரு’க³ணம்’ ப்ரதி தேஷாம்’ வைரம்’ ஜநிதவந்த​: |
3 அவர்கள் அங்கே அநேகநாட்கள் வாழ்ந்து கர்த்த்தரை முன்னிட்டுத் தைரியம் உள்ளவர்களாகப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்கு சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி தயவுபண்ணினார்.
அத​: ஸ்வாநுக்³ரஹகதா²யா​: ப்ரமாணம்’ த³த்வா தயோ ர்ஹஸ்தை ர்ப³ஹுலக்ஷணம் அத்³பு⁴தகர்ம்ம ச ப்ராகாஸ²யத்³ ய​: ப்ரபு⁴ஸ்தஸ்ய கதா² அக்ஷோபே⁴ந ப்ரசார்ய்ய தௌ தத்ர ப³ஹுதி³நாநி ஸமவாதிஷ்டே²தாம்’|
4 பட்டணத்து மக்கள் பிரிந்து, சிலர் யூதர்களையும் சிலர் அப்போஸ்தலர்களையும் சேர்ந்துகொண்டார்கள்.
கிந்து கியந்தோ லோகா யிஹூதீ³யாநாம்’ ஸபக்ஷா​: கியந்தோ லோகா​: ப்ரேரிதாநாம்’ ஸபக்ஷா ஜாதா​: , அதோ நாக³ரிகஜநநிவஹமத்⁴யே பி⁴ந்நவாக்யத்வம் அப⁴வத்|
5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டும் என்று, யூதரல்லாதவர்களும், யூதர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் திட்டமிட்டபோது,
அந்யதே³ஸீ²யா யிஹூதீ³யாஸ்தேஷாம் அதி⁴பதயஸ்²ச தௌ³ராத்ம்யம்’ குத்வா தௌ ப்ரஸ்தரைராஹந்தும் உத்³யதா​: |
6 இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவிற்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப் புறங்களுக்கும் ஓடிப்போய்;
தௌ தத்³வார்த்தாம்’ ப்ராப்ய பலாயித்வா லுகாயநியாதே³ஸ²ஸ்யாந்தர்வ்வர்த்திலுஸ்த்ராத³ர்ப்³போ³
7 அங்கே நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினார்கள்.
தத்ஸமீபஸ்த²தே³ஸ²ஞ்ச க³த்வா தத்ர ஸுஸம்’வாத³ம்’ ப்ரசாரயதாம்’|
8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் முடவனாக இருந்து, ஒருபோதும் நடக்காமல், கால்கள் செயலற்றவனாக உட்கார்ந்து,
தத்ரோப⁴யபாத³யோஸ்²சலநஸ²க்திஹீநோ ஜந்மாரப்⁴ய க²ஞ்ஜ​: கதா³பி க³மநம்’ நாகரோத் ஏதாத்³ரு’ஸ² ஏகோ மாநுஷோ லுஸ்த்ராநக³ர உபவிஸ்²ய பௌலஸ்ய கதா²ம்’ ஸ்²ருதவாந்|
9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு,
ஏதஸ்மிந் ஸமயே பௌலஸ்தம்ப்ரதி த்³ரு’ஷ்டிம்’ க்ரு’த்வா தஸ்ய ஸ்வாஸ்த்²யே விஸ்²வாஸம்’ விதி³த்வா ப்ரோச்சை​: கதி²தவாந்
10 ௧0 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
பத்³ப்⁴யாமுத்திஷ்ட²ந் ரு’ஜு ர்ப⁴வ| தத​: ஸ உல்லம்ப²ம்’ க்ரு’த்வா க³மநாக³மநே குதவாந்|
11 ௧௧ பவுல் செய்ததை மக்கள் கண்டு, தேவர்கள் மனித உருவமெடுத்து நம்மிடத்தில் இறங்கி வந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா மொழியிலே சத்தமிட்டுச் சொல்லி,
ததா³ லோகா​: பௌலஸ்ய தத் கார்ய்யம்’ விலோக்ய லுகாயநீயபா⁴ஷயா ப்ரோச்சை​: கதா²மேதாம்’ கதி²தவந்த​: , தே³வா மநுஷ்யரூபம்’ த்⁴ரு’த்வாஸ்மாகம்’ ஸமீபம் அவாரோஹந்|
12 ௧௨ பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்குரி என்றும் சொன்னார்கள்.
தே ப³ர்ணப்³பா³ம்’ யூபிதரம் அவத³ந் பௌலஸ்²ச முக்²யோ வக்தா தஸ்மாத் தம்’ மர்குரியம் அவத³ந்|
13 ௧௩ அல்லாமலும் பட்டணத்திற்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய முக்கியமான கோவிலின் மதகுரு எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, மக்களோடுகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
தஸ்ய நக³ரஸ்ய ஸம்முகே² ஸ்தா²பிதஸ்ய யூபிதரவிக்³ரஹஸ்ய யாஜகோ வ்ரு’ஷாந் புஷ்பமாலாஸ்²ச த்³வாரஸமீபம் ஆநீய லோகை​: ஸர்த்³த⁴ம்’ தாவுத்³தி³ஸ்²ய ஸமுத்ஸ்ரு’ஜ்ய தா³தும் உத்³யத​: |
14 ௧௪ அப்போஸ்தலர்களாகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்களுடைய துணிகளைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்திற்குள்ளே ஓடி, உரத்த சத்தமாக:
தத்³வார்த்தாம்’ ஸ்²ருத்வா ப³ர்ணப்³பா³பௌலௌ ஸ்வீயவஸ்த்ராணி சி²த்வா லோகாநாம்’ மத்⁴யம்’ வேகே³ந ப்ரவிஸ்²ய ப்ரோச்சை​: கதி²தவந்தௌ,
15 ௧௫ மனிதர்களே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனிதர்கள் தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் கடலையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்கு திரும்பவேண்டும் என்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
ஹே மஹேச்சா²​: குத ஏதாத்³ரு’ஸ²ம்’ கர்ம்ம குருத²? ஆவாமபி யுஷ்மாத்³ரு’ஸௌ² ஸுக²து³​: க²போ⁴கி³நௌ மநுஷ்யௌ, யுயம் ஏதா​: ஸர்வ்வா வ்ரு’தா²கல்பநா​: பரித்யஜ்ய யதா² க³க³ணவஸுந்த⁴ராஜலநிதீ⁴நாம்’ தந்மத்⁴யஸ்தா²நாம்’ ஸர்வ்வேஷாஞ்ச ஸ்ரஷ்டாரமமரம் ஈஸ்²வரம்’ ப்ரதி பராவர்த்தத்⁴வே தத³ர்த²ம் ஆவாம்’ யுஷ்மாகம்’ ஸந்நிதௌ⁴ ஸுஸம்’வாத³ம்’ ப்ரசாரயாவ​: |
16 ௧௬ கடந்த காலங்களில் அவர் எல்லா மக்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும்,
ஸ ஈஸ்²வர​: பூர்வ்வகாலே ஸர்வ்வதே³ஸீ²யலோகாந் ஸ்வஸ்வமார்கே³ சலிதுமநுமதிம்’ த³த்தவாந்,
17 ௧௭ அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாக அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணியிருக்கிறார் என்றார்கள்.
ததா²பி ஆகாஸா²த் தோயவர்ஷணேந நாநாப்ரகாரஸ²ஸ்யோத்பத்யா ச யுஷ்மாகம்’ ஹிதைஷீ ஸந் ப⁴க்ஷ்யைராநநதே³ந ச யுஷ்மாகம் அந்த​: கரணாநி தர்பயந் தாநி தா³நாநி நிஜஸாக்ஷிஸ்வரூபாணி ஸ்த²பிதவாந்|
18 ௧௮ இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு மக்கள் பலியிடாதபடிக்கு அவர்களை தடுத்து நிறுத்துவது கடினமாக இருந்தது.
கிந்து தாத்³ரு’ஸா²யாம்’ கதா²யாம்’ கதி²தாயாமபி தயோ​: ஸமீப உத்ஸர்ஜநாத் லோகநிவஹம்’ ப்ராயேண நிவர்த்தயிதும்’ நாஸ²க்நுதாம்|
19 ௧௯ பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனான் என்று எண்ணி, அவனைப் பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.
ஆந்தியகி²யா-இகநியநக³ராப்⁴யாம்’ கதிபயயிஹூதீ³யலோகா ஆக³த்ய லோகாந் ப்ராவர்த்தயந்த தஸ்மாத் தை பௌலம்’ ப்ரஸ்தரைராக்⁴நந் தேந ஸ ம்ரு’த இதி விஜ்ஞாய நக³ரஸ்ய ப³ஹிஸ்தம் ஆக்ரு’ஷ்ய நீதவந்த​: |
20 ௨0 சீடர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கும்போது, அவன் எழுந்து, பட்டணத்திற்குள்ளே போனான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
கிந்து ஸி²ஷ்யக³ணே தஸ்ய சதுர்தி³ஸி² திஷ்ட²தி ஸதி ஸ ஸ்வயம் உத்தா²ய புநரபி நக³ரமத்⁴யம்’ ப்ராவிஸ²த் தத்பரே(அ)ஹநி ப³ர்ணப்³பா³ஸஹிதோ த³ர்ப்³பீ³நக³ரம்’ க³தவாந்|
21 ௨௧ தெர்பை பட்டணத்தில் அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கித்து, அநேகரைச் சீடர்களாக்கினபின்பு, லீஸ்திராவிற்கும் இக்கோனியாவிற்கும் அந்தியோகியாவிற்கும் திரும்பிவந்து,
தத்ர ஸுஸம்’வாத³ம்’ ப்ரசார்ய்ய ப³ஹுலோகாந் ஸி²ஷ்யாந் க்ரு’த்வா தௌ லுஸ்த்ராம் இகநியம் ஆந்தியகி²யாஞ்ச பராவ்ரு’த்ய க³தௌ|
22 ௨௨ சீடர்களுடைய மனதைத் தைரியப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின்வழியாக தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
ப³ஹுது³​: கா²நி பு⁴க்த்வாபீஸ்²வரராஜ்யம்’ ப்ரவேஷ்டவ்யம் இதி காரணாத்³ த⁴ர்ம்மமார்கே³ ஸ்தா²தும்’ விநயம்’ க்ரு’த்வா ஸி²ஷ்யக³ணஸ்ய மந​: ஸ்தை²ர்ய்யம் அகுருதாம்’|
23 ௨௩ அல்லாமலும் அந்தந்த சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
மண்ட³லீநாம்’ ப்ராசீநவர்கா³ந் நியுஜ்ய ப்ரார்த²நோபவாஸௌ க்ரு’த்வா யத்ப்ரபௌ⁴ தே வ்யஸ்²வஸந் தஸ்ய ஹஸ்தே தாந் ஸமர்ப்ய
24 ௨௪ பின்பு பிசீதியா நாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
பிஸிதி³யாமத்⁴யேந பாம்பு²லியாதே³ஸ²ம்’ க³தவந்தௌ|
25 ௨௫ பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
பஸ்²சாத் பர்கா³நக³ரம்’ க³த்வா ஸுஸம்’வாத³ம்’ ப்ரசார்ய்ய அத்தாலியாநக³ரம்’ ப்ரஸ்தி²தவந்தௌ|
26 ௨௬ அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின செயல்களுக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு அந்தியோகியாவிற்கு வந்தார்கள்.
தஸ்மாத் ஸமுத்³ரபதே²ந க³த்வா தாப்⁴யாம்’ யத் கர்ம்ம ஸம்பந்நம்’ தத்கர்ம்ம ஸாத⁴யிதும்’ யந்நக³ரே த³யாலோரீஸ்²வரஸ்ய ஹஸ்தே ஸமர்பிதௌ ஜாதௌ தத்³ ஆந்தியகி²யாநக³ரம்’ க³தவந்தா|
27 ௨௭ அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் யூதரல்லாதவர்க்கும் விசுவாசத்தின் கதவைத் திறந்ததையும் அறிவித்து,
தத்ரோபஸ்தா²ய தந்நக³ரஸ்த²மண்ட³லீம்’ ஸம்’க்³ரு’ஹ்ய ஸ்வாப்⁴யாம ஈஸ்²வரோ யத்³யத் கர்ம்மகரோத் ததா² யேந ப்ரகாரேண பி⁴ந்நதே³ஸீ²யலோகாந் ப்ரதி விஸ்²வாஸரூபத்³வாரம் அமோசயத்³ ஏதாந் ஸர்வ்வவ்ரு’த்தாந்தாந் தாந் ஜ்ஞாபிதவந்தௌ|
28 ௨௮ அங்கே சீடர்களோடுகூட அநேகநாட்கள் தங்கியிருந்தார்கள்.
ததஸ்தௌ ஸி²ர்ய்யை​: ஸார்த்³த⁴ம்’ தத்ர ப³ஹுதி³நாநி ந்யவஸதாம்|

< அப்போஸ்தலர் 14 >