< 2 இராஜாக்கள் 20 >

1 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், இறந்துபோவீர் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான்.
V těch dnech roznemohl se Ezechiáš až k smrti. I přišel k němu Izaiáš syn Amosův prorok, a řekl jemu: Toto praví Hospodin: Zřeď dům svůj, nebo umřeš, a nebudeš živ.
2 அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, யெகோவவை நோக்கி:
I obrátil tvář svou k stěně, a modlil se Hospodinu, řka:
3 ஆ யெகோவவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான்.
Prosím, ó Hospodine, rozpomeň se nyní, že jsem stále chodil před tebou v pravdě a v srdci upřímém, a že jsem to činil, což dobrého jest před očima tvýma. I plakal Ezechiáš pláčem velikým.
4 ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, யெகோவவுடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
Ještě pak Izaiáš nebyl vyšel do půl síně, když se k němu stalo slovo Hospodinovo, řkoucí:
5 நீ திரும்பிப்போய், என் மக்களின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற யெகோவ சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவாய்.
Navrať se a rci Ezechiášovi vůdci lidu mého: Toto praví Hospodin Bůh Davida otce tvého: Slyšelť jsem modlitbu tvou, a viděl jsem slzy tvé; aj, já uzdravím tě, třetího dne vstoupíš do domu Hospodinova.
6 உன் நாட்களோடே பதினைந்து வருடங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதின்நிமித்தமும் இந்த நகரத்திற்கு ஆதரவாக இருப்பேன் என்று சொல் என்றார்.
A přidám ke dnům tvým patnácte let, a z ruky krále Assyrského vysvobodím tě, i město toto, a chrániti budu města tohoto, pro sebe a pro Davida služebníka svého.
7 பின்பு ஏசாயா: அத்திப்பழ அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்.
I řekl Izaiáš: Vezměte hrudu suchých fíků. Kterouž vzavše, přiložili na vřed, i uzdraven jest.
8 எசேக்கியா ஏசாயாவை நோக்கி: யெகோவ என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான்.
Řekl pak Ezechiáš Izaiášovi: Jaké bude znamení toho, že mne uzdraví Hospodin, a že půjdu třetího dne do domu Hospodinova?
9 அதற்கு ஏசாயா: யெகோவ தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு, யெகோவாவால் உனக்கு உண்டாகும் அடையாளமாக நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப் போகவேண்டுமோ, பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான்.
Odpověděl Izaiáš: Toto bude tobě znamení od Hospodina, že Hospodin učiní věc tuto, kterouž mluvil: Chceš-li, aby postoupil dále stín o deset stupňů, aneb navrátil se zpátkem o deset stupňů?
10 ௧0 அதற்கு எசேக்கியா: நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப்போவது எளிதான காரியம்; அப்படி வேண்டாம்; நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பவேண்டும் என்றான்.
Odpověděl Ezechiáš: Snázeť může stín postoupiti dolů o deset stupňů. Nechci, ale nechť zase postoupí stín zpátkem o deset stupňů.
11 ௧௧ அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில் கோட்டுக்கு கோடு முன்னோக்கிச் சென்ற நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பும்படி செய்தார்.
Volal tedy Izaiáš prorok k Hospodinu, a navrátil stín po stupních, po nichž sešel na hodinách slunečných Achasových, zpátkem o deset stupňů.
12 ௧௨ அக்காலத்திலே பலாதானின் மகனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
Toho času poslal Berodach Baladan syn Baladanův, král Babylonský, list a dary Ezechiášovi; nebo slyšel, že nemocen byl Ezechiáš.
13 ௧௩ எசேக்கியா அவர்களை அங்கீகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரண்மனையிலும் தன் ராஜ்ஜியத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை.
I vyslyšel je Ezechiáš a ukázal jim všecky schrany klénotů svých, stříbra a zlata i vonných věcí, a olej nejvýbornější, tolikéž dům zbroje své, a cožkoli mohlo nalezeno býti v pokladích jeho. Ničeho nebylo, čehož by jim neukázal Ezechiáš v domě svém i ve všem panství svém.
14 ௧௪ அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.
Protož přišel prorok Izaiáš k králi Ezechiášovi, a řekl jemu: Co pravili ti muži? A odkud přišli k tobě? Odpověděl Ezechiáš: Z země daleké přišli, z Babylona.
15 ௧௫ அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
I řekl: Co viděli v domě tvém? Odpověděl Ezechiáš: Všecko, což jest v domě mém, viděli. Ničeho není v pokladích mých, čehož bych jim neukázal.
16 ௧௬ அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும்.
Ale Izaiáš řekl Ezechiášovi: Slyšiž slovo Hospodinovo.
17 ௧௭ இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
Aj, dnové přijdou, v nichž odneseno bude do Babylona, cožkoli jest v domě tvém, a cožkoli nachovali otcové tvoji až do tohoto dne; nezůstaneť ničeho, praví Hospodin.
18 ௧௮ நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான்.
Syny také tvé, kteříž pojdou z tebe, kteréž ty zplodíš, poberou a budou komorníci při dvoru krále Babylonského.
19 ௧௯ அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன யெகோவவுடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
Tedy řekl Ezechiáš Izaiášovi: Dobréť jest slovo Hospodinovo, kteréž jsi mluvil. Řekl ještě: Ovšem, žeť jest dobré, jestliže pokoj a pravda bude za dnů mých.
20 ௨0 எசேக்கியாவின் மற்ற செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் வாய்க்காலையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரச்செய்ததும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
O jiných pak činech Ezechiášových, i vší síle jeho, a kterak udělal rybník, a vodu po trubách uvedl do města, zapsáno jest v knize o králích Judských.
21 ௨௧ எசேக்கியா இறந்தபின், அவனுடைய மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
I usnul Ezechiáš s otci svými, a kraloval Manasses syn jeho místo něho.

< 2 இராஜாக்கள் 20 >