< 2 இராஜாக்கள் 2 >

1 யெகோவா எலியாவை சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.
So it came about, when Yahweh was going to take up Elijah by a whirlwind into heaven, that Elijah left with Elisha from Gilgal.
2 எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னைப் பெத்தேல்வரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.
Elijah said to Elisha, “Stay here, please, because Yahweh has sent me to Bethel.” Elisha replied, “As Yahweh lives, and as you live, I will not leave you.” So they went down to Bethel.
3 அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
The sons of the prophets who were at Bethel came to Elisha and said to him, “Do you know that Yahweh will take away your master from you today?” Elisha replied, “Yes, I know it, but do not talk about it.”
4 பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; யெகோவா என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
Elijah said to him, “Elisha, wait here, please, for Yahweh has sent me to Jericho.” Then Elisha replied, “As Yahweh lives, and as you live, I will not leave you.” So they went to Jericho.
5 எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் எலிசாவிடம் வந்து: இன்றைக்குக் யெகோவா உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.
Then the sons of the prophets who were at Jericho came to Elisha and said to him, “Do you know that Yahweh will take away your master from you today?” Elisha answered, “Yes, I know it, but do not talk about it.”
6 பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; யெகோவா என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.
Then Elijah said to him, “Stay here, please, for Yahweh has sent me to the Jordan.” Elisha replied, “As Yahweh lives, and as you live, I will not leave you.” So the two went on.
7 தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர் தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.
Later, fifty of the sons of the prophets stood opposite them at a distance while the two stood by the Jordan.
8 அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இரண்டாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாக மறுகரைக்குப் போனார்கள்.
Elijah took his cloak, rolled it up, and struck the water with it. The river divided on both sides so that the two of them walked over on dry ground.
9 அவர்கள் மறுகரைக்குப் போனபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின்வரம் எனக்கு இரண்டு மடங்காகக் கிடைக்க வேண்டுகிறேன் என்றான்.
It came about, after they had crossed over, that Elijah said to Elisha, “Ask me what I should do for you before I am taken from you.” Elisha replied, “Please let a double portion of your spirit come on me.”
10 ௧0 அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படும்போது என்னை நீ பார்த்தால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடைக்காது என்றான்.
Elijah answered, “You have asked for a difficult thing. Nevertheless, if you see me when I am taken from you, this will happen for you, but if not, it will not happen.”
11 ௧௧ அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.
As they still went on and talked, behold, a chariot of fire and horses of fire appeared, which separated the two men from each other, and Elijah went up by a whirlwind into heaven.
12 ௧௨ அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாக இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அதற்குப் பிறகு காணாமல், தன் உடையைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான்.
Elisha saw it and cried out, “My father, my father, the chariots of Israel and their horsemen!” He saw Elijah no more, and he took hold of his own clothes and tore them into two pieces.
13 ௧௩ பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று,
He picked up Elijah's cloak that had fallen off him, and went back to stand by the bank of the Jordan.
14 ௧௪ எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய யெகோவா எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இரண்டாகப் பிரிந்ததால் எலிசா இக்கரைக்கு வந்தான்.
He struck the water with Elijah's cloak that had fallen and said, “Where is Yahweh, the God of Elijah?” When he had struck the waters, they divided on both sides and Elisha crossed over.
15 ௧௫ எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தார் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி:
When the sons of the prophets who were from Jericho saw him across from them, they said, “The spirit of Elijah does rest on Elisha!” So they came to meet him, and bowed themselves to the ground before him.
16 ௧௬ இதோ, உமது அடியாரோடு ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்திரவு கொடும்; ஒருவேளை யெகோவாவுடைய ஆவியானவர் அவரை எடுத்து, மலைகளில் ஒன்றின் மேலாகிலும் பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு எலிசா: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான்.
They said to him, “See now, among your servants there are fifty strong men. Let them go, we ask, and look for your master, in case the Spirit of Yahweh has taken him up and thrown him onto some mountain or into some valley.” Elisha answered, “No, do not send them.”
17 ௧௭ அவன் சோர்ந்துபோகும்வரை அவர்கள் அவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்ததால், அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாட்கள் அவனைத் தேடியும் காணாமல்,
But when they urged Elisha until he was ashamed, he said, “Send them.” Then they sent fifty men, and they looked for three days, but did not find him.
18 ௧௮ எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான்.
They came back to Elisha, while he stayed at Jericho, and he said to them, “Did I not say to you, 'Do not go'?”
19 ௧௯ பின்பு அந்தப் பட்டணத்தின் மனிதர்கள் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்பதற்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.
The men of the city said to Elisha, “See, we beg of you, the situation of this city is pleasant, as my master can see, but the water is bad and the land is not fruitful.”
20 ௨0 அப்பொழுது அவன்: ஒரு புதிய பாத்திரத்தை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,
Elisha replied, “Bring me a new bowl and put salt in it,” so they brought it to him.
21 ௨௧ அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.
Elisha went out to the spring of water and threw salt in it; then he said, “Yahweh says this, 'I have healed these waters. From this time on, there will be no more death or unfruitful land.'”
22 ௨௨ எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்தநாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமானது.
So the waters were healed to this day, by the word which Elisha spoke.
23 ௨௩ அவன் அந்த இடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழியிலே நடந்துபோகும்போது வாலிபர்கள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி கேலி செய்தார்கள்.
Then Elisha went up from there to Bethel. As he was going up the road, young boys came out of the city and mocked him; they said to him, “Go up, you baldhead! Go up, you baldhead!”
24 ௨௪ அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: யெகோவாவின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது.
Elisha looked behind him and saw them; he called on Yahweh to curse them. Then two female bears came out of the woods and injured forty-two of the boys.
25 ௨௫ அவன் அந்த இடத்தைவிட்டுக் கர்மேல் மலைக்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.
Then Elisha went from there to Mount Carmel, and from there he returned to Samaria.

< 2 இராஜாக்கள் 2 >