< 2 நாளாகமம் 27 >

1 யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.
[約堂為王]約堂登極時年二十五歲,在耶路撒冷作王凡十六年;他的母親名叫耶魯沙,是匝克多的女兒。
2 அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போல யெகோவாவின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; மக்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
約堂行了上主視為正義的事,完成像他父親所作的一樣,只是沒有進入上主的聖所;但百姓仍然敗壞。
3 அவன் யெகோவாவுடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டிடங்களையும் கட்டினான்.
他建築了上主殿宇的上門,在敖斐耳城牆上,也作了許多工程,
4 யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
在猶大山地建築了一些城池,在叢林中也建了一些營寨和堡壘。
5 அவன் அம்மோனியருடைய ராஜாவோடு போர்செய்து அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோனியர்கள் அவனுக்கு அந்த வருடத்திலே நூறு தாலந்து வெள்ளியையும், பத்தாயிரம் கலம் கோதுமையையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருடத்திலும் அம்மோனியர்கள் அப்படியே அவனுக்கு செலுத்தினார்கள்.
約堂與阿孟子民的君王交戰,戰勝了他們,因此阿孟子民那一年給他進貢:銀子一百「塔冷通,」小麥一萬「苛爾,」大麥一萬「苛爾。」以後第二第三年,阿孟子民仍進了這些貢物。
6 யோதாம் தன்னுடைய வழிகளைத் தன் தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக ஒழுங்குபடுத்தியதால் பலப்பட்டான்.
約堂因為在上主他的天主前,時常履行正道,所以日漸強盛。
7 யோதாமின் மற்ற காரியங்களும், அவனுடைய அனைத்து போர்களும், அவனுடைய செயல்களும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
約堂其餘的事蹟,以及他的戰績和作為,都記載在以色列和猶大列王實錄上。
8 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்.
他即位時年二十五歲,在耶路撒冷作王十六年。
9 யோதாம் இறந்தபின்பு, அவனை தாவீதின் நகரத்திலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
約堂與祖先同眠,葬在達味城;他的兒子阿哈次繼位為王。

< 2 நாளாகமம் 27 >