< 2 நாளாகமம் 17 >

1 ஆசாவின் இடத்தில் அவன் மகனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாக பெலனடைந்தான்.
А замість нього зацарював син його Йосафа́т, та зміцни́вся над Ізраїлем.
2 அவன் யூதாவின் பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் படைவீரர்களையும் ஏற்படுத்தினான்.
І поставив він ві́йсько по всіх укрі́плених Юдиних містах, і дав зало́ги в Юдиному кра́ї та в Єфремових міста́х, які був здобув його батько Аса.
3 யெகோவா யோசபாத்துடன் இருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து,
І був Господь з Йосафа́том, бо він ходив першими дорогами батька свого Давида, і не шукав Ваалів.
4 தன் முற்பிதாக்களுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான்.
Бо він звертався до Бога свого батька, і ходив за Його заповідями, а не за чином Ізраїля.
5 ஆகையால் யெகோவா அவன் கையில் அரசாட்சியை உறுதிப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லோரும் யோசபாத்திற்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் அதிகமாயிருந்தது.
І Господь зміцнив його царство в руці його, і вся Юдея давала дару́нка Йосафатові, і було в нього багато багатства та слави.
6 யெகோவாவுடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகம்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவிலிருந்து அகற்றினான்.
І пови́щилось серце його на Господніх дорогах, і він іще повсовував па́гірки та Астарти з Юди.
7 அவன் அரசாண்ட மூன்றாம் வருடத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்செய்ய, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும் நெதனெயேலையும், மிகாயாவையும்,
А третього року свого царюва́ння послав він до своїх зверхників, до Бен-Хаїла, і до Овадії, і до Захарія, і до Натанаїла, і до Міхаї, щоб вони навчали в Юдиних міста́х.
8 இவர்களோடுகூட செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியர்களையும், இவர்களோடுகூட ஆசாரியரான எலிஷாமாவையும், யோராமையும் அனுப்பினான்.
А з ними були Левити: Шемая, і Натанія, і Зевадія, і Асаїл, і Шемірамот, і Єгонатан, і Адонійя, і Товійя, і Тов-Адонійя, Левити, а з ними Елішама та Єгорам, священики.
9 இவர்கள் யூதாவிலே உபதேசித்து, யெகோவாவுடைய வேதபுத்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் சென்று மக்களுக்குப் போதித்தார்கள்.
І навчали вони в Юдеї, а з ними була книга Зако́ну Господнього. І ходили вони довко́ла по всіх Юдиних містах, і навчали серед наро́ду.
10 ௧0 யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்ஜியங்களின் மீது கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததால், யோசபாத்தோடு போர்செய்யாதிருந்தார்கள்.
І був страх Господній на всіх царствах кра́ю, що навко́ло Юди, і вони не воювали з Йосафатом.
11 ௧௧ பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்திற்கு வெகுமதிகளோடுகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள்.
А від филисти́млян прино́сили Йосафатові да́ри та срібло данини; також араби приво́дили йому дрібну́ худобу: сім тисяч і сім сотень баранів та сім тисяч і сім сотень козлів.
12 ௧௨ இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், பொருட்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான்.
І Йосафат усе зростав уго́ру. І побудував він в Юді тверди́ні та міста на запа́си.
13 ௧௩ யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளைச் செய்தான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.
І мав він багато добра по Юдиних містах, і мужів військо́вих, хоробрих воякі́в в Єрусалимі.
14 ௧௪ தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய எண்ணிக்கையாவது: யூதாவிலே ஆயிரத்திற்கு அதிபதிகளில் அதனா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்று லட்சம்பேர் இருந்தார்கள்.
А оце їхній пере́гляд, за домами їхніх батьків. Від Юди тисячники: зверхник Адна, а з ним три сотні тисяч хоробрих воякі́в.
15 ௧௫ அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதி இருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
А при ньому зверхник Єгоханан, а з ним — двісті й вісімдесят тисяч.
16 ௧௬ அவனுக்கு உதவியாக யெகோவாவுக்குத் தன்னை உற்சாகமாக ஒப்புக்கொடுத்த சிக்ரியின் மகனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டு லட்சம்பேர் இருந்தார்கள்.
А при ньому Амасія, син Зіхрі, що присвятив себе Господе́ві, а з ним двісті тисяч хоробрих воякі́в.
17 ௧௭ பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
А від Веніямина: хоробрий воя́к Ел'яда, а з ним двісті тисяч узбро́єних луком та щито́м.
18 ௧௮ அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே வேலைசெய்வதற்கு ஆயுதமணிந்த ஒருலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
А при ньому Єгозавад, а з ним сто й вісімдеся́т тисяч узбро́єного ві́йська.
19 ௧௯ ராஜா யூதா எங்குமுள்ள பாதுகாப்பான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவுக்கு வேலைசெய்தவர்கள்.
Оці служили цареві, опріч тих, яких цар умістив по тверди́нних містах по всьо́му Юді.

< 2 நாளாகமம் 17 >