< 2 நாளாகமம் 1 >

1 தாவீதின் மகனாகிய சாலொமோன் தன் ராஜ்ஜியத்தில் பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய யெகோவா அவனோடு இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
И укрепися Соломон сын Давидов на царстве своем, и Господь Бог его (бе) с ним и возвеличи его в высоту.
2 சாலொமோன், இஸ்ரவேலில் உள்ள ஆயிரம்பேருக்கு அதிபதிகளோடும், நூறுபேருக்கு அதிபதிகளோடும், நியாயாதிபதிகளோடும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவர்களாகிய அனைத்துப் பிரபுக்களோடும் பேசி,
И рече Соломон ко всему Израилю, тысящником и сотником, и судиям и всем началником пред Израилем.
3 அவனும் அவனோடுகூட சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.
И иде Соломон и все множество в вышний Гаваон, идеже бе скиния свидения Божия, юже сотвори Моисей раб Божий в пустыни.
4 தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்செய்த இடத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; யெகோவாவின் தாசனாகிய மோசே வனாந்திரத்திலே செய்த தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது.
Кивот же Господень принесе Давид от Града Кариафиарима на место, еже уготова ему Давид, яко водрузи ему скинию во Иерусалиме.
5 ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் உண்டாக்கிய வெண்கலப் பலிபீடமும் அங்கே யெகோவாவின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.
И олтарь медян, егоже содела Веселеил сын Урии сына Орова, ту бе пред скиниею Господнею и взыска его Соломон и вся церковь.
6 அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் யெகோவாவின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி பலியிட்டான்.
Вознесе же ту Соломон на олтари медянем пред Господем, иже в скинии свидения, и принесе на нем тысящу всесожжений.
7 அன்று இரவிலே தேவன் சாலொமோனுக்குக் காட்சியளித்து: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.
В ту нощь явися Господь Соломону и рече ему: проси (что хощеши) да дам тебе.
8 சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர்.
Рече же Соломон к Богу: Ты сотворил еси с Давидом отцем моим милосердие велико и поставил мя еси царя вместо его:
9 இப்போதும் தேவனாகிய யெகோவாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்குக் கொடுத்த உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளைப்போன்ற ஏராளமான மக்களின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.
и ныне, Господи Боже, да исполнится слово Твое к Давиду отцу моему, Ты бо мене сотворил царя над людьми многими, якоже прах земный:
10 ௧0 இப்போதும் நான் இந்த மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய மக்களை நியாயம் விசாரிக்கத் தகுதியுள்ளவன் யார் என்றான்.
ныне даждь мне премудрость и разум, да вниду и изыду пред людьми твоими сими, кто бо может судити сих людий Твоих многих?
11 ௧௧ அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்ததாலும், நீ ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும், உன் எதிரிகளின் உயிரையும், நீடித்த ஆயுளையும் கேட்காமல், நான் உன்னை அரசாளச்செய்த என் மக்களை நியாயம் விசாரிப்பதற்கேற்ற ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டதாலும்,
И рече Бог к Соломону: понеже бысть сие в сердцы твоем, и не попросил еси богатства имений, ниже славы, ниже душ противящихся тебе, и дний многих не просил еси, но просил еси себе премудрости и разума, да судити можеши люди Моя, над нимиже поставих тя царя,
12 ௧௨ ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்கு முன்னும் பின்னும் இருந்த ராஜாக்களுக்கு இல்லாத ஐசுவரியத்தையும் சொத்துக்களையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
премудрость и разум даю тебе, богатство же и имения и славу дам тебе, яко не бысть в царех преждебывших тебе подобен тебе, и по тебе такожде не будет.
13 ௧௩ இப்படி சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை ஆட்சிசெய்தான்.
Прииде же Соломон от вышняго Гаваона во Иерусалим пред скинию свидения и царствова над Израилем.
14 ௧௪ சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரர்களையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பனிரெண்டாயிரம் குதிரைவீரர்களும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
И собра Соломон колесницы и конники, и быша ему тысяща и четыреста колесниц и дванадесять тысящ конник: и остави их во градех колесничных, людие же с царем во Иерусалиме.
15 ௧௫ ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
И положи царь сребро и злато во Иерусалиме яко камение, кедры же во Иудеи яко черничие, еже на поли во множестве.
16 ௧௬ சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும், புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வியாபாரிகள் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
Исхождение же коней Соломоновых из Египта ценою купцов царских, иже хождаху и куповаху.
17 ௧௭ அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுகளுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுகளுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியர்களின் அனைத்து ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டன.
И восхождаху и привождаху из Египта колесницу едину за шесть сот сребреник, и коня за сто и пятьдесят сребреник: такожде и от всех царств Хеттейских и от царей Сирийских рукама их приводима бываху.

< 2 நாளாகமம் 1 >