< 1 சாமுவேல் 29 >

1 பெலிஸ்தர்கள் தங்கள் இராணுவங்ளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர்கள் யெஸ்ரயேலிலிருக்கிற நீரூற்றின் அருகே முகாமிட்டார்கள்.
А Филистеји скупише сву војску своју код Афека, а Израиљ стаде у логор код извора у Језраелу.
2 அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள் நூறும் ஆயிரமுமான படைகளோடு போனார்கள்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் ஆகீசோடே பின் சென்றார்கள்.
И кнезови филистејски иђаху са стотинама и хиљадама; а Давид и његови људи иђаху најпосле с Ахисом.
3 அப்பொழுது பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: இந்த எபிரெயர்கள் எதற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருடங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.
И рекоше кнезови филистејски: Шта ће ти Јевреји? А Ахис рече кнезовима филистејским: Није ли ово Давид слуга цара израиљског Саула, који је код мене толико времена, толико година, и не нађох на њему ништа откако је добегао до овог дана?
4 அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனிதன் நீர் குறித்த தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போகும்படி, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்கு எதிரியாய் மாறாதபடி, இவன் நம்மோடு யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனிதர்களுடைய தலைகளினால் அல்லவா?
Али се расрдише на њ кнезови филистејски, и рекоше му кнезови филистејски: Пошљи натраг тог човека, нека се врати у своје место, где си га поставио, и нека не иде с нама у бој, да се не окрене на нас у боју; јер чим би се опет умилио господару свом ако не главама ових људи?
5 சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று இந்த தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
Није ли то Давид о коме се певало играјући и говорило: Згуби Саул своју хиљаду, али Давид својих десет хиљада?
6 அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ முகாமில் என்னோடே போக்கும் வரத்துமாக இருக்கிறது என்னுடைய பார்வைக்கு நல்லது என்றும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரை நான் உன்னில் ஒரு தீங்கும் காணவில்லை; ஆனாலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.
Тада Ахис дозва Давида, и рече му: Тако био жив Господ, ти си поштен, и мило ми је да ходиш са мном у бој; јер не нађох никаквог зла на теби откако си дошао до овог дана; али ниси по вољи кнезовима.
7 ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான்.
Него врати се и иди с миром да не учиниш шта што не би било мило кнезовима филистејским.
8 தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய எதிரிகளோடு யுத்தம்செய்யாதபடி, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதல் இன்றுவரை உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.
А Давид рече Ахису: Али шта сам учинио? Шта ли си нашао на слузи свом откако сам код тебе до овог дана, да не идем да се бијем с непријатељима господара свог цара?
9 ஆகீஸ் தாவீதுக்குப் பதிலாக: நான் அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என்னுடைய பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடு யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தர்களின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
А Ахис одговарајући рече Давиду: Знам; доиста си ми мио као анђео Божји; али кнезови филистејски рекоше: Нека не иде с нама у бој.
10 ௧0 இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடு வந்த உன்னுடைய ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலை வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.
Него устани сутра рано са слугама господара свог које су дошле с тобом; устаните рано чим сване, па идите.
11 ௧௧ அப்படியே தாவீது அதிகாலையில் தன்னுடைய மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தர்களின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.
И урани Давид и људи његови, и отиде рано, и врати се у земљу филистејску; а Филистеји отидоше у Језраел.

< 1 சாமுவேல் 29 >