< 1 சாமுவேல் 20 >

1 தாவீது ராமாவிலிருந்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என்னுடைய ஜீவனை வாங்கத் தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என்னுடைய அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான்.
達味由辣瑪納逃走,去見約納堂說:「我作了什麼,有什麼過錯,哪裏得了你父親,他竟要害我的性命﹖」
2 அதற்கு அவன்: அப்படி ஒருபோதும் வராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என்னுடைய தகப்பன் பெரிய காரியமானாலும், சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்வதில்லை; இந்தக் காரியத்தை என்னுடைய தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்காது என்றான்.
約納堂回答他說:「決沒有這回事,你決死不了。看,我父親無論作什麼大事小事,沒有不告訴我的;為什麼我父親偏要對我隱瞞這事呢﹖決不會的! 」
3 அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாக அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனவருத்தம் உண்டாகாதபடி அவன் இதை அறியக்கூடாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரம் இருக்கிறது என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று பதில் சொல்லி ஆணையிட்டான்.
達味卻對他說:「你父親明知我在你眼裏得寵,所以他想:不要要約納堂知道這事,免得他悲傷。總之,我指著永生的上主敢在你面前發誓:我與死之間只差一步! 」
4 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் என்ன என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான்.
約納堂對達味說:「你願意我為你作什麼﹖」
5 தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசை, நான் ராஜாவோடு பந்தியில் சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலம் வரை வெளியிலே ஒளிந்திருக்கும்படி எனக்கு உத்திரவு கொடும்.
達味回答約納堂說:「看,明天是月朔,我原該和君王同席吃飯,但你讓我走,藏在田野間,直到第三丌晚上。
6 உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன்னுடைய ஊராகிய பெத்லெகேமிலே தன்னுடைய குடும்பத்தினர் எல்லோரும் வருடத்திற்கு ஒருமுறை பலியிட வருகிறபடியால் தாவீது அந்த இடத்திற்குப் போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும்.
如果你父親發覺我不在,你應說:達味懇求我,讓他逃回白冷本城,因為在那裏全族舉行年祭。
7 அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே தீமை உறுதிப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர்கள்.
他若說:好! 你的僕人就平安無事;他若勃然大怒,你就該知道:他已決意行惡。
8 ஆகவே, உம்முடைய அடியானுக்குத் தயை செய்யவேண்டும்; யெகோவாவுக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை செய்திருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்தால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்திற்குக் கொண்டு போகவேண்டியது என்ன என்றான்.
望你仁慈對待你僕人! 因你使你因上主的名與你訂了盟約;假若我有罪惡,你可殺我,為何偏要將我交給你父親呢﹖」
9 அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்கு தீமை செய்ய என் தகப்பனாலே உறுதிப்பட்டிருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான்.
約納堂答說:「千萬別這樣想! 如果我確實知道,我父親決意要加害你,豈有不告訴你的嗎﹖」
10 ௧0 தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான பதில் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.
達味就問約納堂說:「若你父親嚴厲答覆你,誰來通知我﹖」
11 ௧௧ அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
約納堂對達味說:「來,我們往田間去」。二人就往田間去了。
12 ௧௨ அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை முன்னிட்டு தாவீதைப் பார்த்து: நான் நாளையோ மறுநாளிலோ என்னுடைய தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாக இருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படி, உமக்குச் சொல்லியனுப்பாமலிருந்தால்,
約納堂對達味說:「上主,以色列的天主作證:明天或天這時候,我探得了我父親的意思,對達味有或否,我必派人來告訴你。
13 ௧௩ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யட்டும்; ஆனாலும் உமக்குத் தீங்குசெய்ய என்னுடைய தகப்பனுக்குப் பிரியமாக இருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடு போகும்படி உம்மை அனுப்பிவிடுவேன்; யெகோவா என்னுடைய தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.
倘若我父親願意加害你,我若不通知你,不放你走,使你平安離去,願上主這樣這樣加倍罰我約納堂! 願上主與你同在,有如曾與我父親同在一樣!
14 ௧௪ மேலும், நான் உயிரோடிருக்கும்போது, நான் சாகாதபடி நீர் யெகோவாவின் நிமித்தமாக எனக்குத் தயை செய்யவேண்டியதும் அன்றி,
若我那時尚在人世,願你對我表示上主的仁慈;設若我死了,
15 ௧௫ யெகோவா தாவீதின் எதிரிகள் ஒருவரையும் பூமியின்மேல் இல்லாதபடி, வேர் அறுக்கும்போதும், நீர் என்றென்றைக்கும் உமது தயவை என்னுடைய வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.
願你不要由我家永遠撤消你的仁慈! 連當上主由地面上一一剷除達味的敵人時;
16 ௧௬ இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடு உடன்படிக்கைசெய்து, தாவீதுடைய எதிரிகளின் கையிலே யெகோவா கணக்குக் கேட்பாராக என்று சொல்லி,
若約納堂的名字被達味家族消滅了,願上主藉達味的仇人的手追究此案! 」
17 ௧௭ யோனத்தான் தாவீதை மிகவும் நேசித்தபடியால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன்னுடைய உயிரை நேசித்ததுபோல அவனை நேசித்தான்.
約納堂由於愛達味,再向他起了誓,因為他愛達味如愛自己的性命。
18 ௧௮ பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசை, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாக இருப்பதால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும்.
約納堂又對他說:「明日是月朔,因為占座位空著,人必注意你不在,
19 ௧௯ காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளிந்திருக்கும் இடத்திற்கு விரைவாக வந்து, ஏசேல் என்னும் கல்லின் அருகில் உட்கார்ந்திரும்.
到第三天,人必更注意你不在;那麼,你要到你曾出事那日藏身的地方去,坐在那石堆旁邊。
20 ௨0 அப்பொழுது நான் குறிப்பு வைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து:
到第三天,我要向石堆射箭,仿佛射靶。
21 ௨௧ நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு சிறுவனை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று சிறுவனிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
看,我必打發一童僕去找箭,假如我我對童說:看,箭在你後面,拾回來吧! 你就可以出來,我指著永生的上主起誓:你必平安無事。
22 ௨௨ இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்த சிறுவனிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது யெகோவா உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறிந்துகொள்.
倘若我對童僕自己說:看,箭在你前面。你就走吧! 因為上主打發你走。
23 ௨௩ நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, யெகோவா எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.
至於我和你現今所說的這話,有上主在我和你中間,永遠作證」。
24 ௨௪ அப்படியே தாவீது வெளியிலே ஒளிந்துகொண்டிருந்தான்; அமாவாசையானபோது ராஜா சாப்பிட உட்கார்ந்தான்.
於是達味就去藏在田野間;到了月朔,君王入席吃飯。
25 ௨௫ ராஜா சுவரின் அருகிலிருக்கிற தன்னுடைய இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது.
君王照例靠著牆坐在自己的位上,約納堂坐在他對面,阿貝乃爾坐在撒烏耳旁邊,達味的地方空著。
26 ௨௬ ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானா, அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை.
撒烏耳那天沒有說什麼,因為他想事情出於偶然,或許他染了不潔,還沒有自潔。
27 ௨௭ அமாவாசைக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாக இருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் சாப்பாட்டிற்கு வராமல்போனது என்ன என்று தன்னுடைய மகனான யோனத்தானைக் கேட்டான்.
日,即初二日,達味的座位仍空著,撒烏耳就對兒子約納堂說:「為什麼葉瑟的兒子昨日沒有來赴宴,今日又沒有來﹖」
28 ௨௮ யோனத்தான் சவுலுக்குப் பதிலாக: பெத்லெகேம்வரை போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு,
約納堂答覆撒烏耳說:「達味懇求我許他往白冷去。
29 ௨௯ அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என்னுடைய சகோதரர்களில் ஒருவன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்ததானால், நான் என் சகோதரர்களைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்திரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான்.
他說:求你讓我去,因為在城裏我們要舉行族祭,我的兄弟定要我去;所以,假若我在你眼中獲寵,求你讓我去,容我得見我的兄弟;為此,他沒有來赴君王的筳席」。
30 ௩0 அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபப்பட்டு, அவனைப் பார்த்து: கலகமும் முரட்டாட்டமும் உள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்து கொண்டிருக்கிறதை நான் அறியேனோ?
撒烏耳對約納堂勃然大怒,對他說:「娼婦的兒子! 豈能我不知道你同葉瑟的兒子一夥,甚至羞辱你自己,又我羞辱你母親的私處嗎﹖
31 ௩௧ ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் அரசாட்சியானாலும் நிலைப்பதில்லை; இப்போதே அவனை அழைத்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.
你要知道,葉瑟的兒子活在世上一天,你連你的王位都不得穩當! 如今你差人去,把他給我抓來,因為他是該死的人」。
32 ௩௨ யோனத்தான் தன்னுடைய தகப்பனாகிய சவுலுக்குப் பதிலாக; அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான்.
約納堂回答他父親撒烏耳說:「為什麼他該死﹖他作了什麼事﹖」
33 ௩௩ அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன்னுடைய தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு,
撒烏耳就舉起槍來要刺死他,約納堂便明白他父親已決意要殺達味。
34 ௩௪ கோபத்தோடு பந்தியைவிட்டு எழுந்துபோய், அமாவாசையின் மறுநாளாகிய அன்றையதினம் சாப்பிடாமல் இருந்தான்; தன்னுடைய தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனவருத்தமாக இருந்தது.
約納堂就起來,氣憤憤地離開了筳席;初二那天,也沒有吃飯,因為他為達味擔憂,又因為他父親辱罵了自己。
35 ௩௫ மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்த நேரத்திலே ஒரு சிறுவனைகூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்:
次日清晨,約納堂按照他與達味的約會,往田間去了;有個童僕跟隨著他。
36 ௩௬ சிறுவனை பார்த்து: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் சிறுவன் ஓடும்போது, அவனுக்கு அப்பால் போகும்படி ஒரு அம்பை எய்தான்.
他對那童僕說:「跑去,找所放的箭! 」童僕往前跑時,他又向前放了一箭。
37 ௩௭ யோனத்தான் எய்த அம்பு இருக்கும் இடம்வரை சிறுவன் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் சிறுவனுக்கு பின்னால் இருந்து கூப்பிட்டான்.
當僮僕來到約納堂所射到的地方,約納堂就在僮後面喊說:「箭不是在你前面嗎﹖」
38 ௩௮ நீ நிற்காமல் விரைவாக சீக்கிரமாகப் போ என்றும் யோனத்தான் சிறுவனுக்குப் பின்னால் இருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் சிறுவன் அம்புகளைப் பொறுக்கி, தன்னுடைய எஜமானிடத்தில் கொண்டு வந்தான்.
約納堂又在僮僕後面喊說:「趕快跑去,不要站住! 」約納堂的僮僕就拾了箭,給主人拿來。
39 ௩௯ அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்த சிறுவனுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது.
那僮僕卻不知道是意思,只有約納堂和達味知道。
40 ௪0 அப்பொழுது யோனத்தான்: தன்னுடைய ஆயுதங்களை சிறுவனிடத்தில் கொடுத்து, இவைகளைப் கிபியா பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான்.
然後約納堂把自己的武器交給他的僕僮,向他說:「帶回城去吧! 」
41 ௪௧ சிறுவன் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்து வந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்று முறை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தம்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.
僮僕走後,達味就為不堆旁起來,俯伏在地,拜了三拜;以後他們彼此相吻,二人相抱對泣,達味哭得更甚。
42 ௪௨ அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், யெகோவா என்றைக்கும் எனக்கும் உமக்கும், என்னுடைய சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக்கொண்டதை நினைத்துக்கொள்ளும் என்றான். பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப் போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.
最後,約納堂對達味說:「你平安去吧! 照我們兩人以上主的名所起的誓:願上主永遠在我和你之間,在我的後代與你的後代之間! 」 達味就動身走了,約納堂也回到城裏﹖

< 1 சாமுவேல் 20 >