< 1 இராஜாக்கள் 15 >

1 நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் 18 ஆம் வருடத்திலே அபியாம் யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
Nebat capa Jeroboam siangpahrang ah ohhaih saning hatlaitazetto naah, Abijam loe siangpahrang ah oh.
2 மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
Anih loe Jerusalem ah saning thumto thung siangpahrang ah oh; anih ih amno loe Abishalom canu Maakah.
3 தன்னுடைய தகப்பன் தன் காலத்திற்குமுன்பு செய்த எல்லாப் பாவங்களிலும் தானும் நடந்தான்; அவனுடைய இருதயம் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்கு முன்பாக உத்தமமாக இருக்கவில்லை.
Anih doeh ampa mah Angraeng hmaa ah sak ih zaehaih baktih toengah sak toeng; anih ih palungthin loe, ampa David baktiah angmacae Angraeng Sithaw hmaa ah akoep thai ai.
4 ஆனாலும் தாவீதுக்காக அவனுடைய தேவனாகிய யெகோவா, அவனுக்குப் பிறகு அவனுடைய மகனை எழும்பச்செய்வதாலும், எருசலேமை நிலைநிறுத்துவதாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.
Toe David rang hoiah angmah ih Angraeng Sithaw mah, angmah pacoengah siangpahrang ah suek hanah, Jerusalem ah hmai-im maeto a paek.
5 தாவீது ஏத்தியனான உரியாவின் காரியம் ஒன்றுதவிர யெகோவா தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடு இருந்த நாட்களெல்லாம் ஒன்றையும் விட்டுவிலகாமல், அவருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.
David loe Hit kami Uriah kawng thui ai ah loe, a hing thung Angraeng hmaa ah katoeng hmuen to sak, Angraeng mah paek ih lok to pazui ai ah om ai.
6 ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
Anih hing thung Rehoboam hoi Jeroboam loe misa angtuk hoi.
7 அபியாமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்தவைகளெல்லாம் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
Abijam siangpahrang ah oh nathung kaom hmuennawk hoi a sak ih hmuennawk loe, Judah siangpahrangnawk ahmin pakuemhaih cabu thungah pakuem o na ai maw? Abijam hoi Jeroboam salakah misatukhaih to oh.
8 அபியாம் இறந்தபின்பு அவனுடைய முன்னோர்களோடு, அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; அவனுடைய மகனாகிய ஆசா அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Abijam loe ampanawk khaeah anghak moe, David vangpui ah aphum o; anih zuengah a capa Asa to siangpahrang ah oh.
9 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் 20 ஆம் வருடத்திலே ஆசா யூதா தேசத்திற்கு ராஜாவாகி,
Israel siangpahrang Jeroboam siangpahrang ah ohhaih saning pumphaeto naah, Asa loe Judah siangpahrang ah oh.
10 ௧0 41 வருடங்கள் எருசலேமில் அரசாட்சி செய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
Anih loe Jerusalem ah saning quipalito thung siangpahrang ah oh. Anih ih amno hmin loe Maakah.
11 ௧௧ ஆசா தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
Asa loe ampa David baktiah, Angraeng mikhnuk ah kahoih hmuen to sak.
12 ௧௨ அவன் ஆண் விபசாரக்காரர்களை தேசத்திலிருந்து அகற்றி, தன்னுடைய முன்னோர்கள் ஏற்படுத்தின அருவருப்பான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,
Nongpata baktiah kangsah kaminawk to prae thung hoiah haek boih moe, ampa mah sak ih krangnawk to paro boih.
13 ௧௩ தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை ஏற்படுத்தின தன்னுடைய தாயாகிய மாகாளையும் ராணியாக இல்லாதபடி விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா அழித்து, கீதரோன் ஆற்றின் அருகில் சுட்டெரித்துப்போட்டான்.
Amno mah Asherah thing tlim ah krang to sak pongah, siangpahrang amno ah ohhaih ahmuen hoiah tacawtsak; Asa mah to ih Asherah krang soi ih thing to pakhruk moe, Kidron vacong ah hmai hoiah thlaek.
14 ௧௪ மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடு இருந்த நாட்களெல்லாம் அவனுடைய இருதயம் யெகோவாவோடு இணைந்திருந்தது.
Hmuensangnawk to takhoe king ai, toe a hing thung Asa ih palungthin loe Angraeng hmaa ah akoephaih tawnh.
15 ௧௫ தன்னுடைய தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிப்பொருட்களையும் அவன் யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்தான்.
Angmah hoi ampa mah paek ih, sui, phoisa hoi laom sabaenawk to Angraeng tempul thungah a suek.
16 ௧௬ ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
Asa hoi Israel siangpahrang Baasha loe hing thung misa ah oh hoi poe.
17 ௧௭ ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடம் போக்குவரத்தாக இல்லாதபடி, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.
Israel siangpahrang Baasha loe Judah tuk hanah caeh tahang moe, Judah siangpahrang Asa ih prae thungah mi kawbaktih doeh caeh han ai, tacawt han ai ah, Ramah vangpui to sipae hoi ka caakah a thungh.
18 ௧௮ அப்பொழுது ஆசா யெகோவாவுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன்னுடைய வேலைக்காரர்கள் மூலம் தமஸ்குவில் வாழ்ந்த எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் மகன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவிற்குக் கொடுத்தனுப்பி:
To naah Asa mah Angraeng tempul thung hoi siangpahrang imthung ih, sui hoi phoisanawk to lak boih moe, a tamnanawk khaeah paek pacoengah, Damaska ukkung, Syria siangpahrang Hezion capa Tabrimon capa Ben-Hadad khaeah a pat pae.
19 ௧௯ எனக்கும் உமக்கும் என்னுடைய தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாக வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படி, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான்.
Kampa hoi nampa mah angdaehhaih sak hoi baktih toengah, nang hoi kai salakah doeh angdaehhaih sah si; khenah, nang hanah sui hoi phoisa tangqum ah kang pat; anih kai khae hoi tacawt thai hanah, Israel siangpahrang Baasha hoi na sak ih angdaehhaih to phrae ah, tiah a naa.
20 ௨0 பெனாதாத், ராஜாவாகிய ஆசாவின் சொல்லைக்கேட்டு, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு எதிராக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரேத் அனைத்தையும் நப்தலியின் முழு தேசத்தையும் தோற்கடித்தான்.
Asa siangpahrang ih lok to Ben-Hadad mah tahngaih moe, Israel vangpuinawk tuk hanah angmah ih misatuh angraengnawk to patoeh; anih mah Ijon, Dan, Abel-Beth-Maakah hoi Naphtali prae pacoengah, Kinneroth prae boih to pazawk.
21 ௨௧ பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான்.
Baasha mah to tamthanglok to thaih naah, a sak li ih Ramah vangpui to toengh sut moe, Tirzah ah oh.
22 ௨௨ அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லோரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர அறிவிப்புகொடுத்து; அவைகளால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
To naah Asa siangpahrang mah Judah prae thung boih ah lok to taphong; mi kawbaktih doeh tahmaat ai; Baasha mah im sak naah patoh ih thlungnawk, thingnawk to a lak pae boih; Asa siangpahrang loe nihcae abomhaih hoiah Benjamin prae ih Geba hoi Mizpah vangpui to sak.
23 ௨௩ ஆசாவின் மற்ற எல்லா செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவைகளும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி வந்திருந்தது.
Asa siangpahrang ah oh nathung kaom hmuennawk hoiah a sak ih hmuennawk boih, a sak ih vangpuinawk boih loe, Judah siangpahrangnawk ih ahmin pakuemhaih cabu thungah tarik o na ai maw? Toe mitong naah loe, a khok ah nathaih to oh pae.
24 ௨௪ ஆசா இறந்தபின்பு தன்னுடைய முன்னோர்களோடு, தன்னுடைய தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய யோசபாத் அவனுடைய இடத்திலே ராஜாவானான்.
To pacoengah Asa loe ampanawk khaeah anghak moe, ampanawk hoi nawnto David vangpui ah aphum o; anih zuengah a capa Jehosaphat to siangpahrang ah oh.
25 ௨௫ யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருடத்திலே யெரொபெயாமின் மகனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருடம் இஸ்ரவேலின்மேல் அரசாட்சிசெய்தான்.
Judah siangpahrang Asa siangpahrang ah ohhaih saning hnetto haih naah, Jeroboam capa Nadab loe Israel siangpahrang ah oh; Israel kaminawk nuiah saning hnetto thung siangpahrang ah oh.
26 ௨௬ அவன் யெகோவாவுடைய பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, தன்னுடைய தகப்பனுடைய வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
Anih loe Angraeng mikhnuk ah kahoih ai hmuen to sak; ampa ih loklam ah caeh moe, Israel kaminawk zaehaih sahsak kami mah sak ih zaehaih to a sak toeng.
27 ௨௭ இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் மகனான பாஷா, அவனுக்கு எதிராகக் சதிசெய்து, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தர்களுக்கு இருந்த கிபெத்தோனை முற்றுகை இட்டிருக்கும்போது, பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.
Issakar imthung takoh, Ahijah capa Baasha mah anih to tuk han pacaeng pongah, Nadab hoi Israel kaminawk boih mah, Philistinnawk ih vangpui Gebbethon to takui o khoep moe, anih to hum o.
28 ௨௮ பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் அரசாட்சியின் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Judah siangpahrang Asa siangpahrang ah ohhaih saning thumto naah, Baasha mah Nadab to hum moe, angmah to siangpahrang ah oh.
29 ௨௯ அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யச்செய்ததுமான பாவங்களினாலும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு உண்டாக்கின கோபத்தினாலும், யெகோவா சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,
Anih siangpahrang ah oh naah, Jeroboam imthung takohnawk to hum boih; Angraeng Sithaw mah a tamna Shiloh ih kami Ahijah rang hoiah thuih ih lok baktih toengah, Jeroboam imthung takoh tamit boih ai karoek to, anghahhaih takhi tawn kami maeto doeh tahmaat ai;
30 ௩0 அவன் ராஜாவானபின்பு அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.
Jeroboam loe zaehaih to sak moe, Israel kaminawk doeh a zaesak pongah, Israel Angraeng Sithaw to palungphuisak.
31 ௩௧ நாதாபின் மற்ற செயல்பாடுகளும் அவன் செய்தவைகளும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
Nadab siangpahrang ah oh nathung kaom hmuennawk hoi a sak ih hmuennawk boih loe, Israel siangpahrangnawk ahmin pakuemhaih cabu thungah tarik o na ai maw?
32 ௩௨ ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
Asa hoi Israel siangpahrang Baasha loe hing thung misa angtuk hoi.
33 ௩௩ யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருட அரசாட்சியிலே அகியாவின் மகனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி 24 வருடங்கள் ஆண்டு,
Judah siangpahrang Asa siangpahrang ah ohhaih saning thumto naah, Ahijah capa Baashato Tirzah ah Israel siangpahrang ah oh; anih loe saning pumphaeto thung siangpahrang ah oh.
34 ௩௪ யெகோவாவின் பார்வைக்குத் தீங்கானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யச்செய்த அவனுடைய பாவத்திலும் நடந்தான்.
Anih doeh Angraeng mikhnuk ah kahoih ai hmuen to sak moe, Israel kaminawk zaehaih sahsak kami, Jeroboam zaehaih loklam ah a caeh.

< 1 இராஜாக்கள் 15 >