< 1 கொரிந்தியர் 9 >

1 நான் அப்போஸ்தலன் அல்லவா? நான் சுதந்திரவாளி அல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் செயல்களாக இருக்கிறீர்களல்லவா?
我不自由吗?我不是使徒吗?我没有见过主耶稣吗?你们不是与主同在的结果吗?
2 நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாக இல்லாமற்போனாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாக இருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு அடையாளமாக இருக்கிறீர்களே.
对别人来说我或许不是使徒,但对你们来说,我至少是使徒的一份子,你们就是我作为主使徒的证据。
3 என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மறுமொழி என்னவென்றால்:
如果有人质疑我这一点,我会这样回答。
4 புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு உரிமை இல்லையா?
难道我们没有权力吃喝吗?
5 மற்ற அப்போஸ்தலர்களும், கர்த்தருடைய சகோதரர்களும், கேபாவும் செய்கிறதுபோல, விசுவாசியாகிய ஒரு மனைவியை கூட்டிக்கொண்டுபோக எங்களுக்கு உரிமை இல்லையா?
难道我们没有权利像其他使徒、主的兄弟和彼得一样,与基督徒的妻子相伴吗?
6 அல்லது, கைத்தொழில் செய்யாமலிருக்க எனக்கும் பர்னபாவிற்கும்மட்டும்தானா உரிமை இல்லை?
难道只有我和巴拿巴必须靠工作养活自己吗?
7 எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, இராணுவத்திலே சேவை செய்வான்? எவன் திராட்சைத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியை சாப்பிடாமல் இருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைக் குடிக்காமல் இருப்பான்?
哪个士兵必须支付其薪水?哪个葡萄园主不允许吃自己园子里的葡萄?哪个牧羊人不允许喝自己羊群的羊奶呢?
8 இவைகளை மனிதர்கள் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா?
我这样说难道是人类的观点吗?律法不也是这样说?
9 போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாக இருக்கிறாரோ?
摩西的律法这样写道:“牛在踩踏去谷壳的时候,不可套住它的嘴。”难道上帝说的只是牛吗?
10 ௧0 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடு உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடு போரடிக்கவும் வேண்டும். ஆகவே, அது நமக்காகவே எழுதியிருக்கிறது.
他难道不是在指引我们吗?当然这就是说给我们听的,因为耕种之人应心存希望去耕种,收割之人应心存希望去分享收获。
11 ௧௧ நாங்கள் உங்களுக்கு ஆவியானவருக்குரிய நன்மைகளை விதைத்திருக்க, உங்களுடைய சரீர நன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா?
我们在你们中间播撒灵性的种子,如果我们想要从中收获一些物质好处,这算过分吗?
12 ௧௨ மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களைவிட நாங்கள் அதிகமாகச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எந்தவொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடுகளும் படுகிறோம்.
如果别人对你们享有这种权利,我们不是更有权享有吗?尽管如此,我们从未使用过这种权利。相反,我们凡事忍耐,避免妨碍基督福音的传播。
13 ௧௩ ஆசாரிய ஊழியம் செய்கிறவர்கள் தேவாலயத்தில் இருக்கிறவைகளிலிருந்து சாப்பிடுகிறார்கள் என்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்கு பலிபீடத்தில் உள்ளவைகளில் பங்கு உண்டென்றும் உங்களுக்குத் தெரியாதா?
难道你们不知道吗?在圣殿供职之人会吃殿中的供物。侍候祭坛之人会领取他们应得的那份祭物。
14 ௧௪ அந்தப்படியே நற்செய்தியை அறிவிக்கிறவர்களுக்கு நற்செய்தியினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
主也曾这样祝福传递福音之人,应该靠福音的支持者为生。
15 ௧௫ அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அனுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டுதலை ஒருவன் மனவேதனையாக்குகிறதைவிட நான் சாகிறது எனக்கு நலமாக இருக்கும்.
但我从未使用过这种权利。我这样说并非希望别人应该如此待我,因为不去寻求这样的好处是我的荣耀,我宁愿舍弃性命也不愿丢了这荣耀。
16 ௧௬ நற்செய்தியை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைப்பாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாக இருக்கிறது; நற்செய்தியை நான் பிரசங்கிக்காமல் இருந்தால், எனக்கு ஐயோ.
传播福音并没有任何可以夸耀支出,因为我无法不去这么做。如果不传播福音,对我将是一场灾难。
17 ௧௭ நான் உற்சாகமாக அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகம் இல்லாதவனாகச் செய்தாலும், மேற்பார்வையாளர் பதவி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே.
如果我自己选择这样做,就会获得赏赐。即使不是我本意选择,这职责就是对我的托付。
18 ௧௮ ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் நற்செய்தியை பிரசங்கிக்கும்போது அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்தியைச் செலவில்லாமல் பிரசங்கிப்பதே எனக்குப் பலன்.
那么,我的赏赐是什么?那就是当我传播福音时,让大家免费获得福音,而不是要求享有传递福音应有的权力。
19 ௧௯ நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாக இருந்தும், நான் அதிக மக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லோருக்கும் அடிமையாக்கினேன்.
我虽然自由,不服务于任何人,但我自愿成为众人的奴仆,只为让更多人听到福音。
20 ௨0 யூதர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, யூதர்களுக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவனைப்போலவும் ஆனேன்.
面对犹太人,我就像犹太人一样行事,以便可以说服犹太人。面对律法制约之人,虽然律法并不会管辖我,但我还是像受律法制约的人一样行事,以便说服他们。
21 ௨௧ நியாயப்பிரமாணம் இல்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவும் ஆனேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணம் இல்லாதவனாக இல்லாமல், கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு உட்பட்டவனாக இருக்கிறேன்.
如果一个人没有根据律法行事,我就像不受律法制约之人一样(这样做并非不遵守上帝律法,而是遵守基督的律法),从而说服未受律法制约之人。
22 ௨௨ பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாவது சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லோருக்கும் எல்லாமானேன்.
对软弱的人,我就像他们一样软弱,以便说服软弱之人。最终我面对的人如何,我就成为怎样的人,想方设法说服一些人!
23 ௨௩ நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச்செய்கிறேன்.
我所作的一切都是为了福音,为了与他人同享福音的福报。
24 ௨௪ பந்தயப் பாதையில் ஓடுகிறவர்களெல்லோரும் ஓடுவார்கள்; ஆனாலும், ஒருவனே வெற்றியை பெறுவானென்று உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
难道你们不知道吗?赛跑比赛中有很多选手,虽然大家都跑,但却只有一人能获奖吗?你们应当尽全力奔跑,以便可以获奖。
25 ௨௫ பந்தயத்திற்குப் போராடுகிற அனைவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாக இருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம்.
参加比赛的选手,需要严格遵循训练方法。他们这样做,不过是为了赢得最终会坏掉的冠冕,我们要的却是不朽的冠冕。
26 ௨௬ ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடமாட்டேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம் பண்ணமாட்டேன்.
所以我要向正确的方向奔跑,我要准确地击打,而不是击打空气。
27 ௨௭ மற்றவர்களுக்குப் பிரசங்கம் செய்கிற நான்தானே ஆகாதவனாகப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கி அடக்குகிறேன்.
我严格对待自己的身体,让它听我的控制,因为我不想在与所有人分享福音后,自己却没有了传递福音的资格。

< 1 கொரிந்தியர் 9 >