< 1 கொரிந்தியர் 2 >

1 சகோதரர்களே, நான் உங்களிடம் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த பேச்சுத் திறமையோடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை.
ഹേ ഭ്രാതരോ യുഷ്മത്സമീപേ മമാഗമനകാലേഽഹം വക്തൃതായാ വിദ്യായാ വാ നൈപുണ്യേനേശ്വരസ്യ സാക്ഷ്യം പ്രചാരിതവാൻ തന്നഹി;
2 நான் உங்களோடு இருக்கும்போது சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைத்தவிர, வேறொன்றையும் அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.
യതോ യീശുഖ്രീഷ്ടം തസ്യ ക്രുശേ ഹതത്വഞ്ച വിനാ നാന്യത് കിമപി യുഷ്മന്മധ്യേ ജ്ഞാപയിതും വിഹിതം ബുദ്ധവാൻ|
3 அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடம் இருந்தேன்.
അപരഞ്ചാതീവ ദൗർബ്ബല്യഭീതികമ്പയുക്തോ യുഷ്മാഭിഃ സാർദ്ധമാസം|
4 உங்களுடைய விசுவாசம் மனிதர்களுடைய ஞானத்தில் அல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு,
അപരം യുഷ്മാകം വിശ്വാസോ യത് മാനുഷികജ്ഞാനസ്യ ഫലം ന ഭവേത് കിന്ത്വീശ്വരീയശക്തേഃ ഫലം ഭവേത്,
5 என் பேச்சும் என் பிரசங்கமும் மனித ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாக இல்லாமல், பரிசுத்த ஆவியானவராலும், பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாக இருந்தது.
തദർഥം മമ വക്തൃതാ മദീയപ്രചാരശ്ച മാനുഷികജ്ഞാനസ്യ മധുരവാക്യസമ്ബലിതൗ നാസ്താം കിന്ത്വാത്മനഃ ശക്തേശ്ച പ്രമാണയുക്താവാസ്താം|
6 அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இந்த உலகத்தின் ஞானத்தையல்ல, அழிந்து போகிறவர்களாகிய இந்த உலகத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, (aiōn g165)
വയം ജ്ഞാനം ഭാഷാമഹേ തച്ച സിദ്ധലോകൈ ർജ്ഞാനമിവ മന്യതേ, തദിഹലോകസ്യ ജ്ഞാനം നഹി, ഇഹലോകസ്യ നശ്വരാണാമ് അധിപതീനാം വാ ജ്ഞാനം നഹി; (aiōn g165)
7 உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாக இருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். (aiōn g165)
കിന്തു കാലാവസ്ഥായാഃ പൂർവ്വസ്മാദ് യത് ജ്ഞാനമ് അസ്മാകം വിഭവാർഥമ് ഈശ്വരേണ നിശ്ചിത്യ പ്രച്ഛന്നം തന്നിഗൂഢമ് ഈശ്വരീയജ്ഞാനം പ്രഭാഷാമഹേ| (aiōn g165)
8 அதை இந்த உலகத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (aiōn g165)
ഇഹലോകസ്യാധിപതീനാം കേനാപി തത് ജ്ഞാനം ന ലബ്ധം, ലബ്ധേ സതി തേ പ്രഭാവവിശിഷ്ടം പ്രഭും ക്രുശേ നാഹനിഷ്യൻ| (aiōn g165)
9 எழுதியிருக்கிறபடி: “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;
തദ്വല്ലിഖിതമാസ്തേ, നേത്രേണ ക്കാപി നോ ദൃഷ്ടം കർണേനാപി ച ന ശ്രുതം| മനോമധ്യേ തു കസ്യാപി ന പ്രവിഷ്ടം കദാപി യത്| ഈശ്വരേ പ്രീയമാണാനാം കൃതേ തത് തേന സഞ്ചിതം|
10 ௧0 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியானவராலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழமான காரியங்களையும் ஆராய்ந்திருக்கிறார்.
അപരമീശ്വരഃ സ്വാത്മനാ തദസ്മാകം സാക്ഷാത് പ്രാകാശയത്; യത ആത്മാ സർവ്വമേവാനുസന്ധത്തേ തേന ചേശ്വരസ്യ മർമ്മതത്ത്വമപി ബുധ്യതേ|
11 ௧௧ மனிதனிலுள்ள ஆவியேதவிர மனிதர்களில் எவன் மனிதனுக்குரியவைகளை அறிவான்? அதைப்போல, தேவ ஆவியானவரைத்தவிர, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.
മനുജസ്യാന്തഃസ്ഥമാത്മാനം വിനാ കേന മനുജേന തസ്യ മനുജസ്യ തത്ത്വം ബുധ്യതേ? തദ്വദീശ്വരസ്യാത്മാനം വിനാ കേനാപീശ്വരസ്യ തത്ത്വം ന ബുധ്യതേ|
12 ௧௨ நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிடத்திலிருந்து புறப்படுகிற ஆவியானவரையே பெற்றோம்.
വയഞ്ചേഹലോകസ്യാത്മാനം ലബ്ധവന്തസ്തന്നഹി കിന്ത്വീശ്വരസ്യൈവാത്മാനം ലബ്ധവന്തഃ, തതോ ഹേതോരീശ്വരേണ സ്വപ്രസാദാദ് അസ്മഭ്യം യദ് യദ് ദത്തം തത്സർവ്വമ് അസ്മാഭി ർജ്ഞാതും ശക്യതേ|
13 ௧௩ அவைகளை நாங்கள் மனிதஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவியானவர் போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவியானவருக்குரியவைகளை ஆவியானவருக்குரியவைகளோடு சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம்.
തച്ചാസ്മാഭി ർമാനുഷികജ്ഞാനസ്യ വാക്യാനി ശിക്ഷിത്വാ കഥ്യത ഇതി നഹി കിന്ത്വാത്മതോ വാക്യാനി ശിക്ഷിത്വാത്മികൈ ർവാക്യൈരാത്മികം ഭാവം പ്രകാശയദ്ഭിഃ കഥ്യതേ|
14 ௧௪ ஜென்ம சுபாவமான மனிதனோ தேவ ஆவியானவருக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபடி ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவும் மாட்டான்.
പ്രാണീ മനുഷ്യ ഈശ്വരീയാത്മനഃ ശിക്ഷാം ന ഗൃഹ്ലാതി യത ആത്മികവിചാരേണ സാ വിചാര്യ്യേതി ഹേതോഃ സ താം പ്രലാപമിവ മന്യതേ ബോദ്ധുഞ്ച ന ശക്നോതി|
15 ௧௫ ஆவியானவருக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.
ആത്മികോ മാനവഃ സർവ്വാണി വിചാരയതി കിന്തു സ്വയം കേനാപി ന വിചാര്യ്യതേ|
16 ௧௬ “கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.
യത ഈശ്വരസ്യ മനോ ജ്ഞാത്വാ തമുപദേഷ്ടും കഃ ശക്നോതി? കിന്തു ഖ്രീഷ്ടസ്യ മനോഽസ്മാഭി ർലബ്ധം|

< 1 கொரிந்தியர் 2 >