< 1 நாளாகமம் 7 >

1 இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நான்கு பேர்.
А синови Исахарови беху: Толам и Фуја и Јасуф и Симрон, четворица.
2 தோலாவின் மகன்கள் ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்களுடைய பிதாக்கள் வம்சத்தலைவர்களும் தங்களுடைய சந்ததிகளிலே பெலசாலிகளுமாக இருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்து அறுநூறு பேர்களாக இருந்தது.
А синови Толини: Озије и Рефаја и Јерило и Јамај и Јефсам и Самуило, поглавари отачких домова својих од Толе, храбри људи у породицама својим; беше их за времена Давидовог на број двадесет и две хиљаде и шест стотина.
3 ஊசியின் மகன்களில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் மகன்கள் மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவர்களாக இருந்தார்கள்.
А синови Озијеви: Израја, и синови Израјини: Михаило и Овадија и Јоило и Јесија, скупа пет поглавара.
4 அவர்கள் முன்னோர்களின் வம்சத்தார்களான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனிதர்களான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடு இருந்தார்கள்; அவர்களுக்கு அநேக மனைவிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள்.
И с њима у породицама њиховим по домовима отаца њихових беше војника тридесет и шест хиљада, јер имаху много жена и синова.
5 இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்கு சகோதரர்களான பெலசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம் பேர்களாக இருந்தார்கள்.
И браће њихове по свим домовима Исахаровим, храбрих људи, беше осамдесет и седам хиљада, свега избројаних.
6 பென்யமீன் மகன்கள் பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர்.
Синови Венијаминови: Вела и Вехер и Једиаило, тројица.
7 பேலாவின் மகன்கள் எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தில் பெலசாலிகளான ஐந்து தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்திரெண்டாயிரத்து முப்பத்துநான்குபேர்.
А синови Велини: Есвон и Озије и Озило и Јеримот и Ирије, пет поглавара дома отачких, храбри људи; на број их беше двадесет и две хиљаде и тридесет и четири.
8 பெகேரின் மகன்கள் செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் பெகேரின் மகன்கள்.
А синови Вехерови: Земира и Јоас и Елијезер и Елиоинај и Амрије и Јеримот и Авијам и Анатот и Аламет, сви синови Вехерови.
9 தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவர்களாகிய அவர்களுடைய சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பெலசாலிகள் இருபதாயிரத்து இருநூறுபேர்.
И избројаних по породицама својим, по поглаварима отачког дома свог, беше их двадесет хиљада и двеста храбрих људи.
10 ௧0 யெதியாயேலின் மகன்களில் ஒருவன் பில்கான்; பில்கானின் மகன்கள் ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள்.
А синови Једиаилови: Валан, и синови Валанови: Јеус и Венијамин и Ехуд и Ханана и Зитан и Тарсис и Ахисар.
11 ௧௧ யெதியாயேலின் மகன்களாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தார்களில் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களான பெலசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர்.
Свих ових синова Једиаилових по поглаварима породица отачких, храбрих људи, беше седамдесет хиљада и двеста, који иђаху на војску.
12 ௧௨ சுப்பீமும், உப்பீமும் ஈரின் மகன்கள் ஊசிம் ஆகேரின் மகன்களில் ஒருவன்.
И Суфеји и Упеји беху синови Ирови, и Усеји синови Ахирови.
13 ௧௩ நப்தலியின் மகன்களான பில்காளின் பேரன்மார்கள், யாத்தியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள்.
Синови Нефталимови: Јасило и Гуније и Јесер и Салум, синови Валини.
14 ௧௪ மனாசேயின் மகன்களில் ஒருவன் அஸ்ரியேல்; அவனுடைய மறுமனையாட்டியாகிய அராமிய பெண்ணிடம் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.
Синови Манасијини: Азрило, ког му жена роди; иноча његова Сирка роди Махира, оца Галадовог;
15 ௧௫ மாகீர் மாகாள் என்னும் பெயருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியைத் திருமணம் செய்தான்; மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்; செலொப்பியாத்திற்கு மகள்கள் இருந்தார்கள்.
А Махир се ожени код Упеја и Суфеја, а име сестри њиховој беше Маха; а име другом беше Салпад; а Салпад имаше кћери.
16 ௧௬ மாகீரின் மனைவியாகிய மாக்காள் ஒரு மகனைப் பெற்று, அவனுக்கு பேரேஸ் என்று பெயரிட்டாள்; இவனுடைய சகோதரனின் பெயர் சேரேஸ்; இவனுடைய மகன்கள் ஊலாம், ரேகேம் என்பவர்கள்.
А Маха, жена Махирова роди сина, коме наде име Фарес, а брату му наде име Серес, а његови синови беху Улам и Ракем.
17 ௧௭ ஊலாமின் மகன்களில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் மகனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் மகன்கள்.
И синови Уламови: Ведан. То су синови Галада сина Махира сина Манасијиног.
18 ௧௮ இவனுடைய சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள்.
А сестра његова Амолекета роди Исуда и Авијезера и Малу.
19 ௧௯ செமீதாவின் மகன்கள் அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள்.
А синови Семидини беху Ахијан и Сихем и Лихија и Анијам.
20 ௨0 எப்பிராயீமின் மகன்களில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய மகன் பேரேத்; இவனுடைய மகன் தாகாத்; இவனுடைய மகன் எலாதா; இவனுடைய மகன் தாகாத்.
А синови Јефремови: Сутала, а његов син Ведер, а његов син Техат, а његов син Елеад, а његов син Тахат,
21 ௨௧ இவனுடைய மகன் சாபாத்; இவனுடைய மகன்கள் சுத்தெலாக், ஏசேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூரார்களுடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனதால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
А његов син Завад, а његов син Сутало и Есер и Елеад. А њих убише људи из Гата, рођени у земљи, јер сиђоше да им узму стоку.
22 ௨௨ அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேக நாட்கள் துக்கங்கொண்டாடும்போது, அவனுடைய சகோதரர்கள் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள்.
Зато тужаше Јефрем отац њихов дуго време, и дођоше браћа његова да га теше.
23 ௨௩ பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான்.
Потом леже са женом својом, а она затрудне и роди сина, и он му наде име Верија, јер несрећа задеси дом њихов.
24 ௨௪ இவனுடைய மகளாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தொரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள்.
И кћи му беше Сера, која сазида Вет-Орон доњи и горњи и Узен-Серу.
25 ௨௫ அவனுடைய மகன்கள் ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய மகன் தேலாக்; இவனுடைய மகன் தாகான்.
И син му беше Рефа и Ресеф, а његов син беше Тела, а његов син Тахан,
26 ௨௬ இவனுடைய மகன் லாதான்; இவனுடைய மகன் அம்மீயூத்; இவனுடைய மகன் எலிஷாமா.
А његов син Ладан, а његов син Амијуд, а његов син Елисама,
27 ௨௭ இவனுடைய மகன் நூன்; இவனுடைய மகன் யோசுவா.
А његов син Нон, а његов син Исус.
28 ௨௮ அவர்களுடைய சொந்த நிலங்களும், தங்குமிடங்களும், கிழக்கே இருக்கிற நாரானும், மேற்கே இருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாவரையுள்ள அதின் கிராமங்களும்,
А достојање њихово и насеље беше Ветиљ и села његова, и с истока Наран, а са запада Гезер и села његова, и Сихем и села његова до Газе и села њених.
29 ௨௯ மனாசே கோத்திரத்தின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இந்த இடங்களில் இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் சந்ததியர்கள் குடியிருந்தார்கள்.
И покрај синова Манасијиних Вет-Сан и села његова, Танах и села његова, Мегидон и села његова, Дор и села његова; ту наставаху синови Јосифа, сина Израиљевог.
30 ௩0 ஆசேரின் மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராள்.
Синови Асирови беху Јемна и Јесва и Јесвај и Верија, и Сера, сестра његова.
31 ௩௧ பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன்.
И синови Веријини: Евер и Малхило; овај је отац Вирзавитов.
32 ௩௨ ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஓதாமையும், இவர்களுடைய சகோதரியாகிய சூகாளையும் பெற்றான்.
А Евер роди Јаклита и Сомира и Хотама и Сију, сестру њихову.
33 ௩௩ யப்லேத்தின் மகன்கள் பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் மகன்கள்.
А синови Јафлитови беху: Фасах и Витал и Асват; то беху синови Јафлитови.
34 ௩௪ சோமேரின் மகன்கள் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள்.
А синови Сомирови: Ахије и Рога, Јехува и Арам.
35 ௩௫ அவனுடைய சகோதரனாகிய ஏலேமின் மகன்கள் சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள்.
А синови Елема, брата његовог: Софа и Јемна и Селис и Амал.
36 ௩௬ சோபாக்கின் மகன்கள் சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா,
Синови Софини: Суја и Арнефер и Согал и Верије и Јемра,
37 ௩௭ பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள்.
И Восор и Од и Сама и Силиса и Итран и Веира.
38 ௩௮ யெத்தேரின் மகன்கள் எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள்.
А синови Јетерови: Јефонија и Фиспа и Аратак.
39 ௩௯ உல்லாவின் மகன்கள் ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள்.
И синови Улини: Арах и Анило и Рисија.
40 ௪0 ஆசேரின் சந்ததிகளாகிய இவர்கள் எல்லோரும் தங்களுடைய பிதாக்களின் வம்சத்தலைவர்களும் தெரிந்துகொள்ளப்பட்ட பெலசாலிகளும், பிரபுக்களின் தலைவர்களுமாக இருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க வீரர்களின் எண்ணிக்கை இருபத்தாறாயிரம்பேர்.
Сви ови беху синови Асирови, поглавари домова отачких, изабрани, храбри људи, поглавари међу кнезовима. Беше их за војску на број двадесет и шест хиљада људи.

< 1 நாளாகமம் 7 >