< 1 நாளாகமம் 24 >

1 ஆரோன் சந்ததிகளின் பிரிவுகளாவன: ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
Makundi vya kazi kulingana na uzao wa Aroni yalikuwa haya: Nadabu, Abihu, Eleazari na Ithamari.
2 நாதாபும், அபியூவும் மகன்கள் இல்லாமல் தங்களுடைய தகப்பனுக்கு முன்னே இறந்ததால் எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள்.
Nadabu na Abihu walikufa kabla ya baba yao kufa. Walikuwa hawana watoto, kwahiyo Eleazari na Ithamari walitumika kama makuhani.
3 தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் சந்ததிகளையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் சந்ததிகளையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்திற்கு முறைப்படி அவர்களைப் பிரித்தான்.
Daudi pamoja na Zadoki, uzao wa Eleazari, na Ahimeleki, uzao wa Ithamari, waliwagawanya katika makundi yao ya kazi kama makuhani.
4 அவர்களைப் பிரிக்கிறபோது, இத்தாமாரின் சந்ததிகளைவிட எலெயாசாரின் சந்ததிகளுக்குள்ளே தலைவர்கள் அதிகமானபேர் இருந்ததால், எலெயாசாரின் மகன்களில் பதினாறுபேர் தங்களுடைய பிதாக்களுடைய குடும்பத்திற்கும், இத்தாமாரின் மகன்களில் எட்டுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்திற்கும் தலைவர்களாக வைக்கப்பட்டார்கள்.
Kulikuwa na wanaume viongozi zaidi kati ya uzao wa Eleazari kuliko kati ya uzao wa Ithamari, kwahiyo waligawanya uzao wa Eleazari katika makundi kumi na sita. Walifanya hivyo na viongozi wa ukoo na uzao wa Ithamari. Magawanyo haya yalikuwa nane kwa idadi, sambamba na koo zao.
5 எலெயாசாரின் சந்ததியாரிலும் இத்தாமாரின் சந்ததியாரிலும், பரிசுத்த இடத்திற்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாக இருக்கும்படி, இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்செய்யாமல் சீட்டுப்போட்டு அவர்களைப் பிரித்தார்கள்.
Waliwagawanya bila upendeleo kwa kura, kwa kuwa walikuwa waamuzi watakatifu na waamuzi wa Mungu, kutoka pande zote uzao wa Eleazari na uzao wa Ithamari.
6 லேவியர்களில் எழுத்தாளனாகிய செமாயா என்னும் நெதனெயேலின் மகன், ராஜாவுக்கும், பிரபுக்களுக்கும், ஆசாரியனாகிய சாதோக்குக்கும், அபியத்தாரின் மகனாகிய அகிமெலேக்குக்கும், ஆசாரியர்களும் லேவியர்களுமான குடும்பத்தார்களின் தலைவர்களுக்கு முன்பாக அவர்கள் பெயர்களை எழுதினான்; ஒரு குடும்பத்தின் சீட்டு எலெயாசாரின் சந்ததிக்கு விழுந்தது; பின்பு அப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது.
Shemaia mwana wa Nethaneli mwandishi, Mlawi, aliandika majina yao mbele ya mfalme, muamuzi, kuhani Zadoki, Ahimeleki mwana wa Abiathari, na viongozi wa makuhani na familia za Walawi. Ukoo mmoja ulichaguliwa kwa kura kutoka uzao wa Eleazari, na kisha uliofata utachaguliwa kutoka uzao wa Ithhamari.
7 முதலாவது சீட்டு யோயாரீபிற்கும், இரண்டாவது யெதாயாவிற்கும்,
Kura ya kwanza ilienda kwa Yehoiaribu, ya pili kwa Yedaia,
8 மூன்றாவது ஆரிமிற்கும், நான்காவது செயோரீமிற்கும்,
ya tatu kwa Harimu, ya nne kwa Seorimu,
9 ஐந்தாவது மல்கியாவிற்கும், ஆறாவது மியாமீனிற்கும்,
ya tano kwa Malikija, ya sita kwa Mijamini,
10 ௧0 ஏழாவது அக்கோத்சிற்கும், எட்டாவது அபியாவிற்கும்,
ya saba kwa Hakozi, ya nane kwa Abija,
11 ௧௧ ஒன்பதாவது யெசுவாவிற்கும், பத்தாவது செக்கனியாவிற்கும்,
ya tisa kwa Yeshua, ya kumi kwa Shekania,
12 ௧௨ பதினோராவது எலியாசிபிற்கும், பன்னிரெண்டாவது யாக்கீமிற்கும்,
ya kumi na moja kwa Eliashibu, ya kumi na mbili kwa Yakimu,
13 ௧௩ பதின்மூன்றாவது உப்பாவிற்கும், பதினான்காவது எசெபெயாபிற்கும்,
ya kumi na tatu kwa Hupa, ya kumi na nne kwa Yesheheabu,
14 ௧௪ பதினைந்தாவது பில்காவிற்கும், பதினாறாவது இம்மேரிற்கும்,
ya kumi na tano kwa Biliga, ya kumi na sita kwa Imma,
15 ௧௫ பதினேழாவது ஏசீரிற்கும், பதினெட்டாவது அப்சேசிற்கும்,
ya kumi na saba kwa Heziri, ya kumi na nane kwa Hapizezi,
16 ௧௬ பத்தொன்பதாவது பெத்தகியாவிற்கும், இருபதாவது எகெசெக்கியேலிற்கும்,
ya kumi na tisa kwa Pethaia, ya ishirini kwa Yehezikeli,
17 ௧௭ இருபத்தோராவது யாகினிற்கும், இருபத்திரண்டாவது காமுவேலிற்கும்,
ya ishirini na moja kwa Yakini, ya ishirini na mbili kwa Gamuli,
18 ௧௮ இருபத்துமூன்றாவது தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தது.
ya ishirini na tatu kwa Delaia, na ya ishirini na nne kwa Maazia.
19 ௧௯ இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுடைய தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்படி, தங்கள் செயல்முறை வரிசைகளில் யெகோவாவுடைய ஆலயத்திற்குள் நுழையும் அவர்களுடைய ஊழியத்திற்காகச் செய்யப்பட்ட வகுப்புகள் இவைகளே.
Hii ilikuwa taratibu ya utumishi wao, walipo kuja kwenye nyumba ya Yahweh, wakifuata utaratibu waliopewa na Aruni babu yao, kama Yahweh, Mungu wa Israeli, alivyo waagiza.
20 ௨0 லேவியின் மற்ற சந்ததிகளுக்குள்ளே இருக்கிற அம்ராமின் சந்ததியில் சூபவேலும், சூபவேலின் சந்ததியில் எகேதியாவும்,
Hawa walikuwa Walawi waliobakia: Wana wa Amiramu, Shebueli; wana wa Shebaeli, Yedeia.
21 ௨௧ ரெகபியாவின் சந்ததியில் மூத்தவனாகிய இஷியாவும்,
Wana wa Rehabia: wana wa Rehabia, Ishia kiongozi.
22 ௨௨ இத்சாரியர்களில் செலெமோத்தும், செலெமோத்தின் சந்ததியில் யாகாத்தும்,
Wa Waizari, Shelomothi; mwana wa Shelomothi, Yahathi.
23 ௨௩ எப்ரோனின் சந்ததியில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் மகனாகிய அமரியாவும், மூன்றாம் மகனாகிய யாகாசியேலும், நான்காம் மகனாகிய எக்காமியாமும்,
Wana wa Hebroni: Yeria kiongozi, Amaria wapili, Yahazieli watatu, na Yekameamu wanne.
24 ௨௪ ஊசியேலின் சந்ததியில் மீகாவும், மீகாவின் சந்ததியில் சாமீரும்,
Wana wa uzao wa Uzieli ulimjumuisha Mika. Uzao wa Mika ulimjumuisha Shamiri.
25 ௨௫ மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் மகன்களில் சகரியாவும்,
Kaka wa Mika alikuwa Ishia. Wana wa Ishia akijumuishwa Zakaria.
26 ௨௬ மெராரியின் சந்ததியில் மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் சந்ததியில் பேனோவும்,
Wana na Merari: Mahli na Mushi. Mwana wa Yaazia, Beno.
27 ௨௭ மெராரியின் சந்ததியில் யாசியாவின் சந்ததியில் பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும்,
Wana wa Merari: Yaazia, Beno, Shohamu, Zakuri, na Ibrri.
28 ௨௮ மகேலியின் சந்ததியில் மகன்களில்லாத எலெயாசாரும்,
Wana wa Mahili: eleazari, ambaye alikuwa hana wana.
29 ௨௯ கீசின் சந்ததியில் யெராமியேலும்,
Wana wa Kishi: Yerameli
30 ௩0 மூசியின் சந்ததியில் மகலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் தகப்பன்மார்களுடைய குடும்பங்களின்படியே வரிசைப்படுத்தப்பட்ட லேவியர்கள் இவர்களே.
wana wa Mushi: Mahli, Eda, na yerimothi. Walikuwa walawi, walio orodheshwa na familia zao.
31 ௩௧ இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் குடும்பத் தலைவர்களாக இருக்கிற தலைவர்களுக்கும் முன்பாக, தங்கள் சகோதரர்களாகிய ஆரோனின் சந்ததி செய்ததுபோல, தங்களில் இருக்கிற குடும்பத் தலைவர்களான தலைவர்களுக்கும், அவர்களுடைய சிறிய சகோதரர்களுக்கும் சரிசமமாக சீட்டு போட்டுக்கொண்டார்கள்.
Wanaume hawa ambao walikuwa vichwa katika nyumba za baba zao na kila wadogo zao, walipiga kura katika uwepo wa Mfalme Daudi, na Zadoki na Ahimeleki, pamoja na viongozi wa familia wa makuhani na Walawi. Walirusha kura kama uzao wa Aroni walivyofanya.

< 1 நாளாகமம் 24 >