< 1 நாளாகமம் 13 >

1 தாவீது ஆயிரம்பேர்களுக்குத் தலைவர்களோடும் நூறுபேர்களுக்குத் தலைவர்களோடும் எல்லா அதிபதிகளோடும் ஆலோசனைசெய்து,
Đa-vít hội ý với các quan viên, bao gồm các tướng và các thủ lĩnh.
2 இஸ்ரவேல் சபைகளையெல்லாம் நோக்கி: உங்களுக்கு விருப்பமாகவும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கு சித்தமாகவும் இருந்தால், இஸ்ரவேலின் தேசங்களில் எல்லாம் இருக்கிற நம்முடைய மற்ற சகோதரர்களும், அவர்களோடு தங்களுடைய ஊரில் இருக்கிற ஆசாரியர்களும் லேவியர்களும் நம்மோடு சேரும்படி நாம் சீக்கிரமாக அவர்களிடம் ஆள் அனுப்பி,
Rồi ông truyền bảo đoàn dân Ít-ra-ên đang tập họp: “Nếu anh chị em muốn tôi lên ngôi, và nếu đó là ý Chúa, Đức Chúa Trời chúng ta, hãy cử sứ giả đi triệu tập dân khắp đất nước Ít-ra-ên, kể cả các thầy tế lễ và người Lê-vi, để mời họ đến hiệp với chúng ta.
3 நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்திற்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாமற்போனோம் என்றான்.
Đó là lúc rước Hòm Giao Ước của Đức Chúa Trời về đây với chúng ta, vì chúng ta đã bỏ bê Hòm ấy dưới triều Vua Sau-lơ.”
4 இந்தக் காரியம் எல்லா மக்களின் பார்வைக்கும் சரியாக இருந்ததால், சபையார்கள் எல்லோரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.
Toàn dân đồng thanh tán thành đề nghị ấy, vì ai cũng thấy là việc nên làm.
5 அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவங்கி ஆமாத்தின் எல்லைவரையுள்ள இஸ்ரவேலையெல்லாம் சேர்த்து,
Vậy, Đa-vít triệu tập người Ít-ra-ên khắp đất nước cùng đi lên Ba-a-la, tức là Ki-ri-át Giê-a-rim thuộc Ai Cập về dự lễ rước Hòm Giao Ước của Đức Chúa Trời.
6 கேருபீன்களின் நடுவே வாசம்செய்கிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமிலுள்ள பாலாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் இஸ்ரவேலர்கள் அனைவரும் அந்த இடத்திற்குப் போனார்கள்.
Đa-vít và toàn dân kéo đến Ba-la (tức Ki-ri-át Giê-a-rim) trong xứ Giu-đa để rước Hòm Giao Ước của Đức Chúa Trời, là Đấng đang ngự trên các thiên thần.
7 அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை வழிநடத்தினார்கள்.
Người ta đem Hòm Giao Ước của Đức Chúa Trời ra khỏi nhà A-bi-na-đáp trên một chiếc xe đẩy mới. U-xa và A-hi-ô hướng dẫn kéo xe.
8 தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள்.
Đa-vít và dân chúng nhảy múa trước mặt Chúa vô cùng hân hoan, ca hát, và chơi tất cả loại nhạc cụ—đàn lia, đàn hạc, trống nhỏ, chập chõa, và kèn.
9 அவர்கள் கீதோனின் களம்வரை வந்தபோது, மாடுகள் தடுமாறியதால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன்னுடைய கையை நீட்டினான்.
Khi họ đến sân đạp lúa của Ki-đôn, U-xa đưa tay nắm giữ Hòm Giao Ước vì bò trượt bước.
10 ௧0 அப்பொழுது யெகோவா ஊசாவின்மேல் கோபம்மூண்டவராக, அவன் தன்னுடைய கையைப் பெட்டியின் அருகில் நீட்டியதால் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.
Cơn thịnh nộ của Chúa Hằng Hữu nổi phừng cùng U-xa và đánh ông chết tại chỗ vì ông đã chạm đến Hòm. Vì vậy, U-xa chết trước mặt Đức Chúa Trời.
11 ௧௧ அப்பொழுது யெகோவா ஊசாவை அடித்ததால் தாவீது கவலைப்பட்டு, அந்த இடத்திற்கு இந்த நாள்வரை சொல்லப்பட்டவருகிற பேரேஸ் ஊசா என்னும் பெயரிட்டு,
Đa-vít buồn phiền vì Chúa Hằng Hữu nổi giận với U-xa nên gọi nơi ấy là Phê-rết U-xa (nghĩa là “Chúa nổi thịnh nộ trên U-xa”), tên này đến nay vẫn còn.
12 ௧௨ அன்றையதினம் தேவனுக்கு பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடம் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,
Bấy giờ, Đa-vít sợ Đức Chúa Trời và tự hỏi: “Làm sao ta rước Hòm của Đức Chúa Trời về nhà ta được?”
13 ௧௩ பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான்.
Vậy, Đa-vít quyết định rước Hòm về nhà của Ô-bết Ê-đôm, người Gát, thay vì đem về Thành Đa-vít.
14 ௧௪ தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடம் மூன்று மாதங்கள் இருக்கும்போது, யெகோவா ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.
Hòm của Đức Chúa Trời ở lại với gia đình Ô-bết Ê-đôm ba tháng và Chúa Hằng Hữu ban phước cho nhà Ô-bết Ê-đôm và mọi thứ đều thuộc về ông.

< 1 நாளாகமம் 13 >