< நீதிமொழிகள் 5 >

1 என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள், எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள்.
ای پسر من، به حکمت من توجه نما، و گوش خود را به فطانت من فراگیر،۱
2 அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்; உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும்.
تاتدابیر را محافظت نمایی، و لبهایت معرفت رانگاه دارد.۲
3 ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
زیرا که لبهای زن اجنبی عسل رامی چکاند، و دهان او از روغن ملایم تر است.۳
4 ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
لیکن آخر او مثل افسنتین تلخ است و برنده مثل شمشیر دودم.۴
5 அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன. (Sheol h7585)
پایهایش به موت فرو می‌رود، وقدمهایش به هاویه متمسک می‌باشد. (Sheol h7585)۵
6 அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
به طریق حیات هرگز سالک نخواهد شد. قدمهایش آواره شده است و او نمی داند.۶
7 ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
و الان‌ای پسرانم مرابشنوید، و از سخنان دهانم انحراف مورزید.۷
8 அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள், அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
طریق خود را از او دور ساز، و به در خانه اونزدیک مشو.۸
9 இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும் உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;
مبادا عنفوان جوانی خود را به دیگران بدهی، و سالهای خویش را به ستم کیشان.۹
10 வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.
و غریبان از اموال تو سیر شوند، و ثمره محنت تو به خانه بیگانه رود.۱۰
11 உங்களுடைய வாழ்க்கையின் முடிவில், உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள்.
که در عاقبت خودنوحه گری نمایی، هنگامی که گوشت و بدنت فانی شده باشد،۱۱
12 அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே, திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே!
و گویی چرا ادب را مکروه داشتم، و دل من تنبیه را خوار شمرد،۱۲
13 நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே, எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே.
و آواز مرشدان خود را نشنیدم، و به معلمان خود گوش ندادم.۱۳
14 நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில் தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே” என்று சொல்வீர்கள்.
نزدیک بود که هر گونه بدی را مرتکب شوم، در میان قوم و جماعت.۱۴
15 நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி, நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு.
آب را از منبع خود بنوش، و نهرهای جاری را از چشمه خویش.۱۵
16 உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ? உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ?
جویهای تو بیرون خواهد ریخت، و نهرهای آب در شوارع عام،۱۶
17 அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும், அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
و از آن خودت به تنهایی خواهد بود، و نه از آن غریبان با تو.۱۷
18 உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.
چشمه تو مبارک باشد، و از زن جوانی خویش مسرور باش،۱۸
19 அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக, அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்; அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
مثل غزال محبوب و آهوی جمیل. پستانهایش تو را همیشه خرم سازد، و از محبت او دائم محفوظ باش.۱۹
20 என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?
لیکن‌ای پسر من، چرا از زن بیگانه فریفته شوی؟ و سینه زن غریب را در بر‌گیری؟۲۰
21 மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன, அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார்.
زیراکه راههای انسان در مدنظر خداوند است، وتمامی طریقهای وی را می‌سنجد.۲۱
22 கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன.
تقصیرهای شریر او را گرفتار می‌سازد، و به بندهای گناهان خود بسته می‌شود.۲۲
23 அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள்.
او بدون ادب خواهد مرد، و به کثرت حماقت خویش تلف خواهد گردید.۲۳

< நீதிமொழிகள் 5 >