< லூக்கா 5 >

1 ஒரு நாள் இயேசு கெனேசரேத் ஏரியருகே நின்றுகொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் கூடிவந்தார்கள்.
அநந்தரம்’ யீஸு²ரேகதா³ கி³நேஷரத்²த³ஸ்ய தீர உத்திஷ்ட²தி, ததா³ லோகா ஈஸ்²வரீயகதா²ம்’ ஸ்²ரோதும்’ தது³பரி ப்ரபதிதா​: |
2 அவர் கரையோரம் இரண்டு படகுகளைக் கண்டார், மீனவர் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள்.
ததா³நீம்’ ஸ ஹ்த³ஸ்ய தீரஸமீபே நௌத்³வயம்’ த³த³ர்ஸ² கிஞ்ச மத்ஸ்யோபஜீவிநோ நாவம்’ விஹாய ஜாலம்’ ப்ரக்ஷாலயந்தி|
3 அவர் சீமோனுக்குச் சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து கொஞ்சம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டுக்கொண்டு, படகில் உட்கார்ந்து மக்களுக்கு போதனை செய்தார்.
ததஸ்தயோர்த்³வயோ ர்மத்⁴யே ஸி²மோநோ நாவமாருஹ்ய தீராத் கிஞ்சித்³தூ³ரம்’ யாதும்’ தஸ்மிந் விநயம்’ க்ரு’த்வா நௌகாயாமுபவிஸ்²ய லோகாந் ப்ரோபதி³ஷ்டவாந்|
4 அவர் பேசி முடித்தபின்பு, சீமோனை நோக்கி, “படகை ஆழமான தண்ணீர் பகுதிக்குக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.
பஸ்²சாத் தம்’ ப்ரஸ்தாவம்’ ஸமாப்ய ஸ ஸி²மோநம்’ வ்யாஜஹார, க³பீ⁴ரம்’ ஜலம்’ க³த்வா மத்ஸ்யாந் த⁴ர்த்தும்’ ஜாலம்’ நிக்ஷிப|
5 அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான்.
தத​: ஸி²மோந ப³பா⁴ஷே, ஹே கு³ரோ யத்³யபி வயம்’ க்ரு’த்ஸ்நாம்’ யாமிநீம்’ பரிஸ்²ரம்ய மத்ஸ்யைகமபி ந ப்ராப்தாஸ்ததா²பி ப⁴வதோ நிதே³ஸ²தோ ஜாலம்’ க்ஷிபாம​: |
6 அவர்கள் அப்படிச் செய்தபோது, திரளான மீன்களைப் பிடித்தார்கள். அவர்களுடைய வலைகள் பாரத்தால் கிழியத்தொடங்கின.
அத² ஜாலே க்ஷிப்தே ப³ஹுமத்ஸ்யபதநாத்³ ஆநாய​: ப்ரச்சி²ந்ந​: |
7 அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின.
தஸ்மாத்³ உபகர்த்தும் அந்யநௌஸ்தா²ந் ஸங்கி³ந ஆயாதும் இங்கி³தேந ஸமாஹ்வயந் ததஸ்த ஆக³த்ய மத்ஸ்யை ர்நௌத்³வயம்’ ப்ரபூரயாமாஸு ர்யை ர்நௌத்³வயம்’ ப்ரமக்³நம்|
8 சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடும்; நான் பாவியான மனிதன்!” என்றான்.
ததா³ ஸி²மோந்பிதரஸ்தத்³ விலோக்ய யீஸோ²ஸ்²சரணயோ​: பதித்வா, ஹே ப்ரபோ⁴ஹம்’ பாபீ நரோ மம நிகடாத்³ ப⁴வாந் யாது, இதி கதி²தவாந்|
9 அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த மீன்களைக் கண்டு வியப்படைந்தார்கள்.
யதோ ஜாலே பதிதாநாம்’ மத்ஸ்யாநாம்’ யூதா²த் ஸி²மோந் தத்ஸங்கி³நஸ்²ச சமத்க்ரு’தவந்த​: ; ஸி²மோந​: ஸஹகாரிணௌ ஸிவதே³​: புத்ரௌ யாகூப்³ யோஹந் சேமௌ தாத்³ரு’ஸௌ² ப³பூ⁴வது​: |
10 சீமோனின் பங்காளிகளான செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியப்படைந்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ இறைவனுக்காக மனிதரைப் பிடிப்பவனாவாய்” என்றார்.
ததா³ யீஸு²​: ஸி²மோநம்’ ஜகா³த³ மா பை⁴ஷீரத்³யாரப்⁴ய த்வம்’ மநுஷ்யத⁴ரோ ப⁴விஷ்யஸி|
11 எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
அநந்தரம்’ ஸர்வ்வாஸு நௌஸு தீரம் ஆநீதாஸு தே ஸர்வ்வாந் பரித்யஜ்ய தஸ்ய பஸ்²சாத்³கா³மிநோ ப³பூ⁴வு​: |
12 இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான்.
தத​: பரம்’ யீஸௌ² கஸ்மிம்’ஸ்²சித் புரே திஷ்ட²தி ஜந ஏக​: ஸர்வ்வாங்க³குஷ்ட²ஸ்தம்’ விலோக்ய தஸ்ய ஸமீபே ந்யுப்³ஜ​: பதித்வா ஸவிநயம்’ வக்துமாரேபே⁴, ஹே ப்ரபோ⁴ யதி³ ப⁴வாநிச்ச²தி தர்ஹி மாம்’ பரிஷ்கர்த்தும்’ ஸ²க்நோதி|
13 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கிற்று.
ததா³நீம்’ ஸ பாணிம்’ ப்ரஸார்ய்ய தத³ங்க³ம்’ ஸ்ப்ரு’ஸ²ந் ப³பா⁴ஷே த்வம்’ பரிஷ்க்ரியஸ்வேதி மமேச்சா²ஸ்தி ததஸ்தத்க்ஷணம்’ ஸ குஷ்டா²த் முக்த​: |
14 அப்பொழுது இயேசு அவனிடம், “இதைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம்; ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும்” என்று கட்டளையிட்டார்.
பஸ்²சாத் ஸ தமாஜ்ஞாபயாமாஸ கதா²மிமாம்’ கஸ்மைசித்³ அகத²யித்வா யாஜகஸ்ய ஸமீபஞ்ச க³த்வா ஸ்வம்’ த³ர்ஸ²ய, லோகேப்⁴யோ நிஜபரிஷ்க்ரு’தத்வஸ்ய ப்ரமாணதா³நாய மூஸாஜ்ஞாநுஸாரேண த்³ரவ்யமுத்ம்ரு’ஜஸ்வ ச|
15 ஆனால் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று, இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் தங்கள் நோய்களிலிருந்து சுகமடைவதற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வந்தார்கள்.
ததா²பி யீஸோ²​: ஸுக்²யாதி ர்ப³ஹு வ்யாப்துமாரேபே⁴ கிஞ்ச தஸ்ய கதா²ம்’ ஸ்²ரோதும்’ ஸ்வீயரோகே³ப்⁴யோ மோக்துஞ்ச லோகா ஆஜக்³மு​: |
16 ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார்.
அத² ஸ ப்ராந்தரம்’ க³த்வா ப்ரார்த²யாஞ்சக்ரே|
17 ஒரு நாள் இயேசு போதித்துக் கொண்டிருந்தார், கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் யூதேயாவிலும் எருசலேமிலுமிருந்து வந்த பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளை குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது.
அபரஞ்ச ஏகதா³ யீஸு²ருபதி³ஸ²தி, ஏதர்ஹி கா³லீல்யிஹூதா³ப்ரதே³ஸ²யோ​: ஸர்வ்வநக³ரேப்⁴யோ யிரூஸா²லமஸ்²ச கியந்த​: பி²ரூஸி²லோகா வ்யவஸ்தா²பகாஸ்²ச ஸமாக³த்ய தத³ந்திகே ஸமுபவிவிஸு²​: , தஸ்மிந் காலே லோகாநாமாரோக்³யகாரணாத் ப்ரபோ⁴​: ப்ரபா⁴வ​: ப்ரசகாஸே²|
18 அப்பொழுது படுக்கையில் இருந்த முடக்குவாதக்காரன் ஒருவனை சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை வீட்டிற்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு அவர்கள் முயற்சிசெய்தார்கள்.
பஸ்²சாத் கியந்தோ லோகா ஏகம்’ பக்ஷாகா⁴திநம்’ க²ட்வாயாம்’ நிதா⁴ய யீஸோ²​: ஸமீபமாநேதும்’ ஸம்முகே² ஸ்தா²பயிதுஞ்ச வ்யாப்ரியந்த|
19 மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால் அப்படிச் செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின்மேல் ஏறி கூரையின் ஓடுகளைப் பிரித்து, அதன் வழியாக படுக்கையில் கிடந்த அவனைக் கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்குமுன் இறக்கினார்கள்.
கிந்து ப³ஹுஜநநிவஹஸம்வாதா⁴த் ந ஸ²க்நுவந்தோ க்³ரு’ஹோபரி க³த்வா க்³ரு’ஹப்ரு’ஷ்ட²ம்’ க²நித்வா தம்’ பக்ஷாகா⁴திநம்’ ஸக²ட்வம்’ க்³ரு’ஹமத்⁴யே யீஸோ²​: ஸம்முகே² (அ)வரோஹயாமாஸு​: |
20 இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
ததா³ யீஸு²ஸ்தேஷாம் ஈத்³ரு’ஸ²ம்’ விஸ்²வாஸம்’ விலோக்ய தம்’ பக்ஷாகா⁴திநம்’ வ்யாஜஹார, ஹே மாநவ தவ பாபமக்ஷம்யத|
21 பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகிற இவன் யார்? இறைவனாலன்றி யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
தஸ்மாத்³ அத்⁴யாபகா​: பி²ரூஸி²நஸ்²ச சித்தைரித்த²ம்’ ப்ரசிந்திதவந்த​: , ஏஷ ஜந ஈஸ்²வரம்’ நிந்த³தி கோயம்’? கேவலமீஸ்²வரம்’ விநா பாபம்’ க்ஷந்தும்’ க​: ஸ²க்நோதி?
22 அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் மனதில் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?
ததா³ யீஸு²ஸ்தேஷாம் இத்த²ம்’ சிந்தநம்’ விதி³த்வா தேப்⁴யோகத²யத்³ யூயம்’ மநோபி⁴​: குதோ விதர்கயத²?
23 ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது?
தவ பாபக்ஷமா ஜாதா யத்³வா த்வமுத்தா²ய வ்ரஜ ஏதயோ ர்மத்⁴யே கா கதா² ஸுகத்²யா?
24 ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
கிந்து ப்ரு’தி²வ்யாம்’ பாபம்’ க்ஷந்தும்’ மாநவஸுதஸ்ய ஸாமர்த்²யமஸ்தீதி யதா² யூயம்’ ஜ்ஞாதும்’ ஸ²க்நுத² தத³ர்த²ம்’ (ஸ தம்’ பக்ஷாகா⁴திநம்’ ஜகா³த³) உத்திஷ்ட² ஸ்வஸ²ய்யாம்’ க்³ரு’ஹீத்வா க்³ரு’ஹம்’ யாஹீதி த்வாமாதி³ஸா²மி|
25 உடனே அவர்களுக்கு முன்பாக அவன் எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குப் போனான்.
தஸ்மாத் ஸ தத்க்ஷணம் உத்தா²ய ஸர்வ்வேஷாம்’ ஸாக்ஷாத் நிஜஸ²யநீயம்’ க்³ரு’ஹீத்வா ஈஸ்²வரம்’ த⁴ந்யம்’ வத³ந் நிஜநிவேஸ²நம்’ யயௌ|
26 எல்லோரும் வியப்படைந்து இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “நாங்கள் இன்று ஆச்சரியமானவற்றைக் கண்டோம்” என்றார்கள்.
தஸ்மாத் ஸர்வ்வே விஸ்மய ப்ராப்தா மந​: ஸு பீ⁴தாஸ்²ச வயமத்³யாஸம்ப⁴வகார்ய்யாண்யத³ர்ஸா²ம இத்யுக்த்வா பரமேஸ்²வரம்’ த⁴ந்யம்’ ப்ரோதி³தா​: |
27 இதற்குப் பின்பு, இயேசு வெளியே சென்று வரி வசூலிக்கும் அலுவலகத்தில் வரி வசூலிக்கிறவனான லேவி என்பவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார்.
தத​: பரம்’ ப³ஹிர்க³ச்ச²ந் கரஸஞ்சயஸ்தா²நே லேவிநாமாநம்’ கரஸஞ்சாயகம்’ த்³ரு’ஷ்ட்வா யீஸு²ஸ்தமபி⁴த³தே⁴ மம பஸ்²சாதே³ஹி|
28 லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
தஸ்மாத் ஸ தத்க்ஷணாத் ஸர்வ்வம்’ பரித்யஜ்ய தஸ்ய பஸ்²சாதி³யாய|
29 பின்பு லேவி தன்னுடைய வீட்டிலே இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான்; வரி வசூலிக்கிறவர்களும் வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து, அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அநந்தரம்’ லேவி ர்நிஜக்³ரு’ஹே தத³ர்த²ம்’ மஹாபோ⁴ஜ்யம்’ சகார, ததா³ தை​: ஸஹாநேகே கரஸஞ்சாயிநஸ்தத³ந்யலோகாஸ்²ச போ⁴க்துமுபவிவிஸு²​: |
30 ஆனால் பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறது ஏன்?” என்று கேட்டார்கள்.
தஸ்மாத் காரணாத் சண்டா³லாநாம்’ பாபிலோகாநாஞ்ச ஸங்கே³ யூயம்’ குதோ ப⁴ம்’க்³த்⁴வே பிவத² சேதி கதா²ம்’ கத²யித்வா பி²ரூஸி²நோ(அ)த்⁴யாபகாஸ்²ச தஸ்ய ஸி²ஷ்யை​: ஸஹ வாக்³யுத்³த⁴ம்’ கர்த்துமாரேபி⁴ரே|
31 அதற்கு இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை.
தஸ்மாத்³ யீஸு²ஸ்தாந் ப்ரத்யவோசத்³ அரோக³லோகாநாம்’ சிகித்ஸகேந ப்ரயோஜநம்’ நாஸ்தி கிந்து ஸரோகா³ணாமேவ|
32 நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே மனந்திரும்பும்படி அழைக்கவந்தேன்” என்றார்.
அஹம்’ தா⁴ர்ம்மிகாந் ஆஹ்வாதும்’ நாக³தோஸ்மி கிந்து மந​: பராவர்த்தயிதும்’ பாபிந ஏவ|
33 சிலர் இயேசுவிடம், “யோவானின் சீடர்கள் அடிக்கடி உபவாசித்து மன்றாடுகிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள்; ஆனால் உம்முடைய சீடரோ சாப்பிடுவதும் குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள்.
ததஸ்தே ப்ரோசு​: , யோஹந​: பி²ரூஸி²நாஞ்ச ஸி²ஷ்யா வாரம்’வாரம் உபவஸந்தி ப்ரார்த²யந்தே ச கிந்து தவ ஸி²ஷ்யா​: குதோ பு⁴ஞ்ஜதே பிவந்தி ச?
34 அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது அவனுடைய நண்பர்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
ததா³ ஸ தாநாசக்²யௌ வரே ஸங்கே³ திஷ்ட²தி வரஸ்ய ஸகி²க³ணம்’ கிமுபவாஸயிதும்’ ஸ²க்நுத²?
35 ஆனால் மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்றார்.
கிந்து யதா³ தேஷாம்’ நிகடாத்³ வரோ நேஷ்யதே ததா³ தே ஸமுபவத்ஸ்யந்தி|
36 பின்பு இயேசு அவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறினார்: “ஒருவனும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும். புதிய துண்டும் பழைய ஆடைக்குப் பொருந்தாது.
ஸோபரமபி த்³ரு’ஷ்டாந்தம்’ கத²யாம்ப³பூ⁴வ புராதநவஸ்த்ரே கோபி நுதநவஸ்த்ரம்’ ந ஸீவ்யதி யதஸ்தேந ஸேவநேந ஜீர்ணவஸ்த்ரம்’ சி²த்³யதே, நூதநபுராதநவஸ்த்ரயோ ர்மேலஞ்ச ந ப⁴வதி|
37 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படிச் செய்தால், புதிய திராட்சை இரசம் அந்த தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும்.
புராதந்யாம்’ குத்வாம்’ கோபி நுதநம்’ த்³ராக்ஷாரஸம்’ ந நித³தா⁴தி, யதோ நவீநத்³ராக்ஷாரஸஸ்ய தேஜஸா புராதநீ குதூ ர்விதீ³ர்ய்யதே ததோ த்³ராக்ஷாரஸ​: பததி குதூஸ்²ச நஸ்²யதி|
38 புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்றி வைக்கவேண்டும்.
ததோ ஹேதோ ர்நூதந்யாம்’ குத்வாம்’ நவீநத்³ராக்ஷாரஸ​: நிதா⁴தவ்யஸ்தேநோப⁴யஸ்ய ரக்ஷா ப⁴வதி|
39 யாரும் பழைய திராட்சை இரசத்தைக் குடித்த பின்பு புதியதை விரும்பமாட்டார்கள். ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பார்கள்.”
அபரஞ்ச புராதநம்’ த்³ராக்ஷாரஸம்’ பீத்வா கோபி நூதநம்’ ந வாஞ்ச²தி, யத​: ஸ வக்தி நூதநாத் புராதநம் ப்ரஸ²ஸ்தம்|

< லூக்கா 5 >