< லூக்கா 19 >

1 இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப்போய்க் கொண்டிருந்தார்.
ಯದಾ ಯೀಶು ರ್ಯಿರೀಹೋಪುರಂ ಪ್ರವಿಶ್ಯ ತನ್ಮಧ್ಯೇನ ಗಚ್ಛಂಸ್ತದಾ
2 அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான்.
ಸಕ್ಕೇಯನಾಮಾ ಕರಸಞ್ಚಾಯಿನಾಂ ಪ್ರಧಾನೋ ಧನವಾನೇಕೋ
3 அவன் இயேசு யார் என்று பார்க்க விரும்பினான். ஆனால், அவன் குள்ளனானபடியால், மக்கள் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை.
ಯೀಶುಃ ಕೀದೃಗಿತಿ ದ್ರಷ್ಟುಂ ಚೇಷ್ಟಿತವಾನ್ ಕಿನ್ತು ಖರ್ವ್ವತ್ವಾಲ್ಲೋಕಸಂಘಮಧ್ಯೇ ತದ್ದರ್ಶನಮಪ್ರಾಪ್ಯ
4 எனவே, சகேயு அவரைப் பார்க்கும்படி முன்னே ஓடிப்போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், இயேசு அந்த வழியாகவே வந்துகொண்டிருந்தார்.
ಯೇನ ಪಥಾ ಸ ಯಾಸ್ಯತಿ ತತ್ಪಥೇಽಗ್ರೇ ಧಾವಿತ್ವಾ ತಂ ದ್ರಷ್ಟುಮ್ ಉಡುಮ್ಬರತರುಮಾರುರೋಹ|
5 இயேசு அவ்விடத்திற்கு வந்தபொழுது, அவர் மேலே அண்ணார்ந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்” என்று, அவனுக்குச் சொன்னார்.
ಪಶ್ಚಾದ್ ಯೀಶುಸ್ತತ್ಸ್ಥಾನಮ್ ಇತ್ವಾ ಊರ್ದ್ಧ್ವಂ ವಿಲೋಕ್ಯ ತಂ ದೃಷ್ಟ್ವಾವಾದೀತ್, ಹೇ ಸಕ್ಕೇಯ ತ್ವಂ ಶೀಘ್ರಮವರೋಹ ಮಯಾದ್ಯ ತ್ವದ್ಗೇಹೇ ವಸ್ತವ್ಯಂ|
6 அவன் உடனே இறங்கிவந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.
ತತಃ ಸ ಶೀಘ್ರಮವರುಹ್ಯ ಸಾಹ್ಲಾದಂ ತಂ ಜಗ್ರಾಹ|
7 இதைக் கண்ட யாவரும், “ஒரு ‘பாவியினுடைய’ வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று, முறுமுறுக்கத் தொடங்கினார்கள்.
ತದ್ ದೃಷ್ಟ್ವಾ ಸರ್ವ್ವೇ ವಿವದಮಾನಾ ವಕ್ತುಮಾರೇಭಿರೇ, ಸೋತಿಥಿತ್ವೇನ ದುಷ್ಟಲೋಕಗೃಹಂ ಗಚ್ಛತಿ|
8 ஆனால் சகேயுவோ, எழுந்து நின்று கர்த்தரிடம், “ஆண்டவரே, இதோ நான் என்னுடைய சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். யாருக்காவது எதிலாவது மோசடி செய்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பேன்” என்றான்.
ಕಿನ್ತು ಸಕ್ಕೇಯೋ ದಣ್ಡಾಯಮಾನೋ ವಕ್ತುಮಾರೇಭೇ, ಹೇ ಪ್ರಭೋ ಪಶ್ಯ ಮಮ ಯಾ ಸಮ್ಪತ್ತಿರಸ್ತಿ ತದರ್ದ್ಧಂ ದರಿದ್ರೇಭ್ಯೋ ದದೇ, ಅಪರಮ್ ಅನ್ಯಾಯಂ ಕೃತ್ವಾ ಕಸ್ಮಾದಪಿ ಯದಿ ಕದಾಪಿ ಕಿಞ್ಚಿತ್ ಮಯಾ ಗೃಹೀತಂ ತರ್ಹಿ ತಚ್ಚತುರ್ಗುಣಂ ದದಾಮಿ|
9 அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து, “இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. ஏனெனில், இவனும் ஆபிரகாமிற்கு மகனாயிருக்கிறானே.
ತದಾ ಯೀಶುಸ್ತಮುಕ್ತವಾನ್ ಅಯಮಪಿ ಇಬ್ರಾಹೀಮಃ ಸನ್ತಾನೋಽತಃ ಕಾರಣಾದ್ ಅದ್ಯಾಸ್ಯ ಗೃಹೇ ತ್ರಾಣಮುಪಸ್ಥಿತಂ|
10 வழிதவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மானிடமகனாகிய நான் வந்திருக்கிறேன்” என்றார்.
ಯದ್ ಹಾರಿತಂ ತತ್ ಮೃಗಯಿತುಂ ರಕ್ಷಿತುಞ್ಚ ಮನುಷ್ಯಪುತ್ರ ಆಗತವಾನ್|
11 அவர் எருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், இறைவனுடைய அரசு சீக்கிரமாகவே வரப்போகிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததாலும், இதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இயேசு ஒரு உவமையைச் சொன்னார்:
ಅಥ ಸ ಯಿರೂಶಾಲಮಃ ಸಮೀಪ ಉಪಾತಿಷ್ಠದ್ ಈಶ್ವರರಾಜತ್ವಸ್ಯಾನುಷ್ಠಾನಂ ತದೈವ ಭವಿಷ್ಯತೀತಿ ಲೋಕೈರನ್ವಭೂಯತ, ತಸ್ಮಾತ್ ಸ ಶ್ರೋತೃಭ್ಯಃ ಪುನರ್ದೃಷ್ಟಾನ್ತಕಥಾಮ್ ಉತ್ಥಾಪ್ಯ ಕಥಯಾಮಾಸ|
12 “எஜமானனாகிய ஒருவன், தான் ஒரு அரசை பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி, தூரத்திலுள்ள நாட்டிற்குப் புறப்பட்டான்.
ಕೋಪಿ ಮಹಾಲ್ಲೋಕೋ ನಿಜಾರ್ಥಂ ರಾಜತ್ವಪದಂ ಗೃಹೀತ್ವಾ ಪುನರಾಗನ್ತುಂ ದೂರದೇಶಂ ಜಗಾಮ|
13 புறப்படும்போது, அவன் தன் வேலையாட்களில் பத்துப்பேரைக் கூப்பிட்டு, அவர்களிடம் பத்து பொற்காசுகளைக் கொடுத்து, ‘நான் வரும்வரை இந்தப் பணத்தைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள்’ என்றான்.
ಯಾತ್ರಾಕಾಲೇ ನಿಜಾನ್ ದಶದಾಸಾನ್ ಆಹೂಯ ದಶಸ್ವರ್ಣಮುದ್ರಾ ದತ್ತ್ವಾ ಮಮಾಗಮನಪರ್ಯ್ಯನ್ತಂ ವಾಣಿಜ್ಯಂ ಕುರುತೇತ್ಯಾದಿದೇಶ|
14 “ஆனால், அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்து, ‘இவன் எங்கள்மேல் அரசனாவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லும்படி, அவனுக்குப் பின்னாலே பிரதிநிதிகளை அனுப்பினார்கள்.
ಕಿನ್ತು ತಸ್ಯ ಪ್ರಜಾಸ್ತಮವಜ್ಞಾಯ ಮನುಷ್ಯಮೇನಮ್ ಅಸ್ಮಾಕಮುಪರಿ ರಾಜತ್ವಂ ನ ಕಾರಯಿವ್ಯಾಮ ಇಮಾಂ ವಾರ್ತ್ತಾಂ ತನ್ನಿಕಟೇ ಪ್ರೇರಯಾಮಾಸುಃ|
15 “ஆனால், அவன் அரசனாக அதிகாரம் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தான். பின்பு அவன், தான் சம்பளத்தைக் கொடுத்த வேலையாட்கள் இன்னும் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறியும்படி, அவர்களை அழைத்தான்.
ಅಥ ಸ ರಾಜತ್ವಪದಂ ಪ್ರಾಪ್ಯಾಗತವಾನ್ ಏಕೈಕೋ ಜನೋ ಬಾಣಿಜ್ಯೇನ ಕಿಂ ಲಬ್ಧವಾನ್ ಇತಿ ಜ್ಞಾತುಂ ಯೇಷು ದಾಸೇಷು ಮುದ್ರಾ ಅರ್ಪಯತ್ ತಾನ್ ಆಹೂಯಾನೇತುಮ್ ಆದಿದೇಶ|
16 “முதலாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் பத்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான்.
ತದಾ ಪ್ರಥಮ ಆಗತ್ಯ ಕಥಿತವಾನ್, ಹೇ ಪ್ರಭೋ ತವ ತಯೈಕಯಾ ಮುದ್ರಯಾ ದಶಮುದ್ರಾ ಲಬ್ಧಾಃ|
17 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், நல்ல வேலைக்காரனே, நீ மிகவும் சிறிய காரியத்தில் உண்மை உள்ளவனாய் இருந்தபடியால், பத்துப் பட்டணங்களுக்கு நீ பொறுப்பாயிரு’ என்றான்.
ತತಃ ಸ ಉವಾಚ ತ್ವಮುತ್ತಮೋ ದಾಸಃ ಸ್ವಲ್ಪೇನ ವಿಶ್ವಾಸ್ಯೋ ಜಾತ ಇತಃ ಕಾರಣಾತ್ ತ್ವಂ ದಶನಗರಾಣಾಮ್ ಅಧಿಪೋ ಭವ|
18 “இரண்டாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் ஐந்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான்.
ದ್ವಿತೀಯ ಆಗತ್ಯ ಕಥಿತವಾನ್, ಹೇ ಪ್ರಭೋ ತವೈಕಯಾ ಮುದ್ರಯಾ ಪಞ್ಚಮುದ್ರಾ ಲಬ್ಧಾಃ|
19 “அதற்கு அவனுடைய எஜமான், ‘நீ ஐந்து பட்டணங்களுக்குப் பொறுப்பாயிரு’ என்றான்.
ತತಃ ಸ ಉವಾಚ, ತ್ವಂ ಪಞ್ಚಾನಾಂ ನಗರಾಣಾಮಧಿಪತಿ ರ್ಭವ|
20 “பின்பு இன்னொரு வேலையாள் வந்து, ‘ஐயா, இதோ, உம்முடைய ஒரு பொற்காசு. இதை ஒரு கைக்குட்டையில் வைத்திருந்தேன்.
ತತೋನ್ಯ ಆಗತ್ಯ ಕಥಯಾಮಾಸ, ಹೇ ಪ್ರಭೋ ಪಶ್ಯ ತವ ಯಾ ಮುದ್ರಾ ಅಹಂ ವಸ್ತ್ರೇ ಬದ್ಧ್ವಾಸ್ಥಾಪಯಂ ಸೇಯಂ|
21 நீர் கடினமான மனிதர். ஆனபடியால், நான் பயந்திருந்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவர் என்றும் எனக்குத் தெரியும்’ என்றான்.
ತ್ವಂ ಕೃಪಣೋ ಯನ್ನಾಸ್ಥಾಪಯಸ್ತದಪಿ ಗೃಹ್ಲಾಸಿ, ಯನ್ನಾವಪಸ್ತದೇವ ಚ ಛಿನತ್ಸಿ ತತೋಹಂ ತ್ವತ್ತೋ ಭೀತಃ|
22 “அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, உன்னுடைய சொந்த வார்த்தைகளின்படியே, நான் உனக்குத் தீர்ப்புக் கொடுக்கிறேன்; நான் ஒரு கடினமான மனிதன், வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவன் என்றும் உனக்குத் தெரியும் அல்லவா?
ತದಾ ಸ ಜಗಾದ, ರೇ ದುಷ್ಟದಾಸ ತವ ವಾಕ್ಯೇನ ತ್ವಾಂ ದೋಷಿಣಂ ಕರಿಷ್ಯಾಮಿ, ಯದಹಂ ನಾಸ್ಥಾಪಯಂ ತದೇವ ಗೃಹ್ಲಾಮಿ, ಯದಹಂ ನಾವಪಞ್ಚ ತದೇವ ಛಿನದ್ಮಿ, ಏತಾದೃಶಃ ಕೃಪಣೋಹಮಿತಿ ಯದಿ ತ್ವಂ ಜಾನಾಸಿ,
23 அப்படியானால், நீ ஏன் எனது பணத்தை வட்டிக்கடையில் போடவில்லை? நான் திரும்பி வரும்போது அந்தப் பணத்தை வட்டியோடு வாங்கிக்கொள்ளக் கூடியதாய் இருந்திருக்குமே’ என்றான்.
ತರ್ಹಿ ಮಮ ಮುದ್ರಾ ಬಣಿಜಾಂ ನಿಕಟೇ ಕುತೋ ನಾಸ್ಥಾಪಯಃ? ತಯಾ ಕೃತೇಽಹಮ್ ಆಗತ್ಯ ಕುಸೀದೇನ ಸಾರ್ದ್ಧಂ ನಿಜಮುದ್ರಾ ಅಪ್ರಾಪ್ಸ್ಯಮ್|
24 “பின்பு அந்த எஜமான், அருகே நின்றவர்களைப் பார்த்து, ‘அந்த ஒரு பொற்காசை அவனிடமிருந்து எடுத்து, பத்து பொற்காசுகளை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
ಪಶ್ಚಾತ್ ಸ ಸಮೀಪಸ್ಥಾನ್ ಜನಾನ್ ಆಜ್ಞಾಪಯತ್ ಅಸ್ಮಾತ್ ಮುದ್ರಾ ಆನೀಯ ಯಸ್ಯ ದಶಮುದ್ರಾಃ ಸನ್ತಿ ತಸ್ಮೈ ದತ್ತ|
25 “அதற்கு அவர்கள், ‘ஐயா, அவனிடம் பத்து பொற்காசுகள் இருக்கிறதே’ என்றார்கள்.
ತೇ ಪ್ರೋಚುಃ ಪ್ರಭೋಽಸ್ಯ ದಶಮುದ್ರಾಃ ಸನ್ತಿ|
26 “அவன் அதற்குப் பதிலாக, ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன், இருக்கிற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். இல்லாதவனிடத்திலிருந்தோ, உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
ಯುಷ್ಮಾನಹಂ ವದಾಮಿ ಯಸ್ಯಾಶ್ರಯೇ ವದ್ಧತೇ ಽಧಿಕಂ ತಸ್ಮೈ ದಾಯಿಷ್ಯತೇ, ಕಿನ್ತು ಯಸ್ಯಾಶ್ರಯೇ ನ ವರ್ದ್ಧತೇ ತಸ್ಯ ಯದ್ಯದಸ್ತಿ ತದಪಿ ತಸ್ಮಾನ್ ನಾಯಿಷ್ಯತೇ|
27 நான் தங்கள்மேல் அரசனாயிருப்பதை விரும்பாத என்னுடைய பகைவர்களான அவர்களை, இங்கே கொண்டுவாருங்கள். அவர்களை என் கண் முன்பாகவே கொன்றுபோடுங்கள்’ என்றான்.”
ಕಿನ್ತು ಮಮಾಧಿಪತಿತ್ವಸ್ಯ ವಶತ್ವೇ ಸ್ಥಾತುಮ್ ಅಸಮ್ಮನ್ಯಮಾನಾ ಯೇ ಮಮ ರಿಪವಸ್ತಾನಾನೀಯ ಮಮ ಸಮಕ್ಷಂ ಸಂಹರತ|
28 இவைகளை இயேசு சொன்னபின்பு, அவர் தொடர்ந்து எருசலேமை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்.
ಇತ್ಯುಪದೇಶಕಥಾಂ ಕಥಯಿತ್ವಾ ಸೋಗ್ರಗಃ ಸನ್ ಯಿರೂಶಾಲಮಪುರಂ ಯಯೌ|
29 அவர் ஒலிவமலை என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயிருந்த பெத்பகே, பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது அவர், தம்முடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு,
ತತೋ ಬೈತ್ಫಗೀಬೈಥನೀಯಾಗ್ರಾಮಯೋಃ ಸಮೀಪೇ ಜೈತುನಾದ್ರೇರನ್ತಿಕಮ್ ಇತ್ವಾ ಶಿಷ್ಯದ್ವಯಮ್ ಇತ್ಯುಕ್ತ್ವಾ ಪ್ರೇಷಯಾಮಾಸ,
30 “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகும்போது, அங்கே ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள். அதில் ஒருவருமே இதுவரை ஏறிச்சென்றதில்லை. அதை அவிழ்த்து, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்.
ಯುವಾಮಮುಂ ಸಮ್ಮುಖಸ್ಥಗ್ರಾಮಂ ಪ್ರವಿಶ್ಯೈವ ಯಂ ಕೋಪಿ ಮಾನುಷಃ ಕದಾಪಿ ನಾರೋಹತ್ ತಂ ಗರ್ದ್ದಭಶಾವಕಂ ಬದ್ಧಂ ದ್ರಕ್ಷ್ಯಥಸ್ತಂ ಮೋಚಯಿತ್ವಾನಯತಂ|
31 யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது கர்த்தருக்குத் தேவைப்படுகிறது’ என்று சொல்லுங்கள்” என்றார்.
ತತ್ರ ಕುತೋ ಮೋಚಯಥಃ? ಇತಿ ಚೇತ್ ಕೋಪಿ ವಕ್ಷ್ಯತಿ ತರ್ಹಿ ವಕ್ಷ್ಯಥಃ ಪ್ರಭೇರತ್ರ ಪ್ರಯೋಜನಮ್ ಆಸ್ತೇ|
32 இப்படியாக, அனுப்பப்பட்டவர்கள் போய் இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே இருக்கக் கண்டார்கள்.
ತದಾ ತೌ ಪ್ರರಿತೌ ಗತ್ವಾ ತತ್ಕಥಾನುಸಾರೇಣ ಸರ್ವ್ವಂ ಪ್ರಾಪ್ತೌ|
33 அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறபொழுது, அதன் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் அந்தக் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
ಗರ್ದಭಶಾವಕಮೋಚನಕಾಲೇ ತತ್ವಾಮಿನ ಊಚುಃ, ಗರ್ದಭಶಾವಕಂ ಕುತೋ ಮೋಚಯಥಃ?
34 அதற்கு அவர்கள், “கர்த்தருக்கு இது தேவைப்படுகிறது” என்றார்கள்.
ತಾವೂಚತುಃ ಪ್ರಭೋರತ್ರ ಪ್ರಯೋಜನಮ್ ಆಸ್ತೇ|
35 சீடர்கள் அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் மேலுடைகளை அந்தக் கழுதைக் குட்டியின்மேல் போட்டு, அதன்மேல் இயேசுவை உட்கார வைத்தார்கள்.
ಪಶ್ಚಾತ್ ತೌ ತಂ ಗರ್ದಭಶಾವಕಂ ಯೀಶೋರನ್ತಿಕಮಾನೀಯ ತತ್ಪೃಷ್ಠೇ ನಿಜವಸನಾನಿ ಪಾತಯಿತ್ವಾ ತದುಪರಿ ಯೀಶುಮಾರೋಹಯಾಮಾಸತುಃ|
36 அவர் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் தங்களுடைய மேலுடைகளை வீதியிலே விரித்தார்கள்.
ಅಥ ಯಾತ್ರಾಕಾಲೇ ಲೋಕಾಃ ಪಥಿ ಸ್ವವಸ್ತ್ರಾಣಿ ಪಾತಯಿತುಮ್ ಆರೇಭಿರೇ|
37 ஒலிவமலையிலிருந்து கீழ்நோக்கிப் போகிற பாதை இருக்கிற இடத்துக்கு இயேசு வந்தபொழுது, திரளாய்க் கூடியிருந்த சீடர்கள் எல்லோரும் தாங்கள் கண்ட எல்லா அற்புதங்களுக்காகவும் மகிழ்ச்சியுடன், உரத்த குரலில் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள்:
ಅಪರಂ ಜೈತುನಾದ್ರೇರುಪತ್ಯಕಾಮ್ ಇತ್ವಾ ಶಿಷ್ಯಸಂಘಃ ಪೂರ್ವ್ವದೃಷ್ಟಾನಿ ಮಹಾಕರ್ಮ್ಮಾಣಿ ಸ್ಮೃತ್ವಾ,
38 “கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” “பரலோகத்தில் சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!”
ಯೋ ರಾಜಾ ಪ್ರಭೋ ರ್ನಾಮ್ನಾಯಾತಿ ಸ ಧನ್ಯಃ ಸ್ವರ್ಗೇ ಕುಶಲಂ ಸರ್ವ್ವೋಚ್ಚೇ ಜಯಧ್ವನಿ ರ್ಭವತು, ಕಥಾಮೇತಾಂ ಕಥಯಿತ್ವಾ ಸಾನನ್ದಮ್ ಉಚೈರೀಶ್ವರಂ ಧನ್ಯಂ ವಕ್ತುಮಾರೇಭೇ|
39 மக்கள் கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, உமது சீடரைக் கண்டியும்” என்றார்கள்.
ತದಾ ಲೋಕಾರಣ್ಯಮಧ್ಯಸ್ಥಾಃ ಕಿಯನ್ತಃ ಫಿರೂಶಿನಸ್ತತ್ ಶ್ರುತ್ವಾ ಯೀಶುಂ ಪ್ರೋಚುಃ, ಹೇ ಉಪದೇಶಕ ಸ್ವಶಿಷ್ಯಾನ್ ತರ್ಜಯ|
40 அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் பேசாமல் மவுனமாய் இருந்தால், இந்தக் கல்லுகளே சத்தமிடும்” என்றார்.
ಸ ಉವಾಚ, ಯುಷ್ಮಾನಹಂ ವದಾಮಿ ಯದ್ಯಮೀ ನೀರವಾಸ್ತಿಷ್ಠನ್ತಿ ತರ್ಹಿ ಪಾಷಾಣಾ ಉಚೈಃ ಕಥಾಃ ಕಥಯಿಷ್ಯನ್ತಿ|
41 அவர் எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழுது,
ಪಶ್ಚಾತ್ ತತ್ಪುರಾನ್ತಿಕಮೇತ್ಯ ತದವಲೋಕ್ಯ ಸಾಶ್ರುಪಾತಂ ಜಗಾದ,
42 “உங்களுக்குச் சமாதானத்தைத் தரக்கூடியதை, இன்றைக்காவது நீங்கள் அறிந்திருக்கக் கூடாதபடி அது இப்பொழுதும், உங்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டதாகவே இருக்கிறது.
ಹಾ ಹಾ ಚೇತ್ ತ್ವಮಗ್ರೇಽಜ್ಞಾಸ್ಯಥಾಃ, ತವಾಸ್ಮಿನ್ನೇವ ದಿನೇ ವಾ ಯದಿ ಸ್ವಮಙ್ಗಲಮ್ ಉಪಾಲಪ್ಸ್ಯಥಾಃ, ತರ್ಹ್ಯುತ್ತಮಮ್ ಅಭವಿಷ್ಯತ್, ಕಿನ್ತು ಕ್ಷಣೇಸ್ಮಿನ್ ತತ್ತವ ದೃಷ್ಟೇರಗೋಚರಮ್ ಭವತಿ|
43 உங்கள் பகைவர் பட்டணத்தைச்சுற்றி அரண்களை அமைத்து, உங்களை முற்றுகையிட்டு, எல்லாப் பக்கங்களிலும் இருந்து உங்களை நெருக்கும் நாட்கள் உங்கள்மேல் வரும்.
ತ್ವಂ ಸ್ವತ್ರಾಣಕಾಲೇ ನ ಮನೋ ನ್ಯಧತ್ಥಾ ಇತಿ ಹೇತೋ ರ್ಯತ್ಕಾಲೇ ತವ ರಿಪವಸ್ತ್ವಾಂ ಚತುರ್ದಿಕ್ಷು ಪ್ರಾಚೀರೇಣ ವೇಷ್ಟಯಿತ್ವಾ ರೋತ್ಸ್ಯನ್ತಿ
44 அவர்கள் உங்களையும், மதிலுக்குள்ளே உங்களோடிருக்கிற உங்கள் பிள்ளைகளையும், தரையில் மோதியடிப்பார்கள். அவர்களோ, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி கட்டடங்களை இடித்துப் போடுவார்கள். ஏனெனில், இறைவன் உங்களிடம் வரும் காலத்தை நீங்கள் அறிந்துகொள்ளவில்லை” என்றார்.
ಬಾಲಕೈಃ ಸಾರ್ದ್ಧಂ ಭೂಮಿಸಾತ್ ಕರಿಷ್ಯನ್ತಿ ಚ ತ್ವನ್ಮಧ್ಯೇ ಪಾಷಾಣೈಕೋಪಿ ಪಾಷಾಣೋಪರಿ ನ ಸ್ಥಾಸ್ಯತಿ ಚ, ಕಾಲ ಈದೃಶ ಉಪಸ್ಥಾಸ್ಯತಿ|
45 பின்பு இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கினார்.
ಅಥ ಮಧ್ಯೇಮನ್ದಿರಂ ಪ್ರವಿಶ್ಯ ತತ್ರತ್ಯಾನ್ ಕ್ರಯಿವಿಕ್ರಯಿಣೋ ಬಹಿಷ್ಕುರ್ವ್ವನ್
46 இயேசு அவர்களிடம், “எனது வீடு ஒரு ஜெபவீடாயிருக்கும் என்று எழுதியிருக்கிறதே; ஆனால், நீங்கள் அதைக் கள்வரின் குகையாக்கியிருக்கிறீர்கள்” என்றார்.
ಅವದತ್ ಮದ್ಗೃಹಂ ಪ್ರಾರ್ಥನಾಗೃಹಮಿತಿ ಲಿಪಿರಾಸ್ತೇ ಕಿನ್ತು ಯೂಯಂ ತದೇವ ಚೈರಾಣಾಂ ಗಹ್ವರಂ ಕುರುಥ|
47 அவர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திலே போதித்துக் கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், மக்கள் தலைவர்களும், அவரைக் கொலைசெய்வதற்கு முயற்சிசெய்தார்கள்.
ಪಶ್ಚಾತ್ ಸ ಪ್ರತ್ಯಹಂ ಮಧ್ಯೇಮನ್ದಿರಮ್ ಉಪದಿದೇಶ; ತತಃ ಪ್ರಧಾನಯಾಜಕಾ ಅಧ್ಯಾಪಕಾಃ ಪ್ರಾಚೀನಾಶ್ಚ ತಂ ನಾಶಯಿತುಂ ಚಿಚೇಷ್ಟಿರೇ;
48 இருந்தும், எல்லா மக்களும் அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தபடியால், அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
ಕಿನ್ತು ತದುಪದೇಶೇ ಸರ್ವ್ವೇ ಲೋಕಾ ನಿವಿಷ್ಟಚಿತ್ತಾಃ ಸ್ಥಿತಾಸ್ತಸ್ಮಾತ್ ತೇ ತತ್ಕರ್ತ್ತುಂ ನಾವಕಾಶಂ ಪ್ರಾಪುಃ|

< லூக்கா 19 >