< நியாயாதிபதிகள் 20 >

1 அப்போது தாண் தொடங்கி பெயெர்செபா வரையுள்ள எல்லா இஸ்ரயேல் மக்களும், கீலேயாத் மக்களோடு ஒரே மனதுடனே, யெகோவா முன்பாக மிஸ்பாவிலே ஒன்றுகூடி நின்றனர்.
І повихо́дили всі Ізраїлеві сини, і була́ зібрана громада, як один чоловік, від Дану аж до Беер-Шеви, а ґілеадський край до Господа в Міцпу.
2 இஸ்ரயேல் கோத்திரத்தின் எல்லாத் தலைவர்களும் இறைவனுடைய மக்கள் சபையில் தங்கள் இடங்களில் நின்றனர். அங்கு நாலு இலட்சம் வால் ஏந்தும் போர்வீரர்களும் இருந்தனர்.
І стали проводирі́ всього того народу, усі Ізраїлеві племе́на, на зборах Божого народу, — чотириста тисяч пішого люду, хто витягує меча.
3 இஸ்ரயேலர் மிஸ்பாவிலே ஒன்றுகூடியிருக்கிறார்கள் என பென்யமீன் மக்கள் கேள்விப்பட்டனர். அப்பொழுது இஸ்ரயேலர், “இக்கொடிய செயல் நடந்தது எப்படி?” எனக் கேட்டனர்.
І почули Веніяминові сини, що Ізраїлеві сини ввійшли до Міцпи. І сказали Ізраїлеві сини: „Скажіть, я́к сталося таке́ зло?“
4 அதற்கு கொலைசெய்யப்பட்ட பெண்ணின் கணவனான அந்த லேவியன், “நானும் எனது வைப்பாட்டியும் இரவு தங்குவதற்காக பென்யமீனியர் இருக்கும் கிபியாத்திற்கு வந்தோம்.
І відповів той чоловік Левит, чоловік тієї замордо́ваної жінки, та й сказав: „До Ґів'и, що Веніяминова, увійшов я та наложниця моя, щоб ночувати.
5 அன்று இரவு கிபியாத்தின் மனிதர்கள் எனக்குப்பின் வந்து நான் இருந்த வீட்டைச் சுற்றிவளைத்து என்னைக் கொலைசெய்ய எத்தனித்தார்கள். அவர்கள் எனது வைப்பாட்டியை கற்பழித்ததால் அவள் இறந்தாள்.
І встали на мене госпо́дарі Ґів'и, і вночі оточили через мене той дім. Мене замишляли забити, а наложницю мою збезче́стили, — і померла вона.
6 இஸ்ரயேலில் இக்காமவெறி பிடித்த செய்யத்தகாத கொடுமையை இவர்கள் செய்ததினால், நான் எனது வைப்பாட்டியின் உடலைத் துண்டுகளாக வெட்டி, இஸ்ரயேலின் உரிமைச்சொத்தான எல்லா இடங்களுக்கும் அனுப்பினேன்.
І схопи́в я наложницю, і порізав її, та й послав її по всьому полі Ізраїлевого володі́ння, бо вони вчинили розпу́сту та гидо́ту серед Ізраїля.
7 இப்பொழுது இஸ்ரயேலராகிய நீங்கள் எல்லாரும் இதைப் பற்றிப்பேசி, உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள்” என்று சொன்னான்.
Ось ви всі Ізраїлеві сини, — дайте собі тут слово та раду!“
8 அப்பொழுது எல்லா மக்களும் ஒன்றுசேர்ந்து, “நாங்கள் யாரும் எங்கள் வீடுகளுக்குப் போகமாட்டோம். எங்களில் ஒருவனும் தன் வீடுகளுக்குத் திரும்புவதில்லை.
І встав увесь народ, як оди́н муж, говорячи: „Не пі́демо ніхто до намету свого, і не за́йдемо ніхто до дому свого!
9 இப்பொழுது நாங்கள் கிபியாவிற்கு செய்யப்போவது இதுவே. சீட்டுப்போட்டு அதன்படி அதற்கெதிராகப் போவோம்.
А тепер оце та річ, що зро́бимо Ґів'ї: підемо на неї за жеребко́м!
10 நாங்கள் இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலிருந்தும் ஒவ்வொரு நூறு பேரிலும் பத்துப்பேரையும், ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் நூறு பேரையும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரிலும் ஆயிரம்பேரையும் படைவீரருக்கு உணவு கொண்டுவருவதற்குத் தெரிந்தெடுப்போம். அதன்பின் படைவீரர் பென்யமீனிலுள்ள கிபியாவுக்கு வந்துசேர்ந்ததும், இஸ்ரயேலில் கிபியோனியர் செய்த இந்தக் கேவலமான செயலுக்காக அந்த படைவீரர் தண்டனை கொடுப்பார்கள்” என்றனர்.
І ві́зьмемо десятеро людей на сотню, щодо всіх Ізраїлевих племен, і сотню на тисячу, і тисячу на десять тисяч, щоб узяли поживи для народу, щоб вони прийшли зробити Ґів'ї Веніямина, згідно з усією гидо́тою, що він зробив Ізраїлеві“.
11 எனவே இஸ்ரயேலில் எல்லா மனிதர்களும் ஒரே மனதுடையவர்களாய் அப்பட்டணத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்தனர்.
І був зі́браний кожен ізра́їльтянин до того міста ра́зом, як один чоловік.
12 இஸ்ரயேல் கோத்திரத்தார் தங்கள் மனிதர் சிலரை பென்யமீன் கோத்திரத்திடம் அனுப்பி, “உங்கள் மத்தியில் நடந்த இந்தக் கொடுமையான குற்றத்தைப்பற்றி என்ன சொல்கிறீர்கள்?
І послали Ізраїлеві племе́на людей по всіх Веніями́нових ро́дах, говорячи: „Що́ це за зло, що сталось між вами?
13 கிபியாவிலிருக்கும் கொடுமையான இந்தச் செயலைச் செய்த எல்லா மனிதர்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவர்களைக் கொலைசெய்து இஸ்ரயேலிலிருந்து இந்தத் தீமையை நீக்குவோம்” எனச் சொல்லும்படி சொன்னார்கள். ஆனால் பென்யமீனியர் தங்கள் சகோதர இஸ்ரயேலருக்குச் செவிகொடுக்கவில்லை.
А тепер давайте тих людей, розпусних синів, що в Ґів'ї, — і ми повбиваємо їх, та й ви́губимо зло з Ізраїля“. Та не хотіли Веніяминові сини слухати голосу своїх братів, Ізраїлевих синів.
14 மாறாக அவர்கள் தங்கள் பட்டணத்திலிருந்து ஒன்றுசேர்ந்து இஸ்ரயேல் மக்களுடன் சண்டையிடுவதற்கு கிபியாவிற்கு வந்து கூடினர்.
І Веніяминові сини були зі́брані з міст до Ґів'ї, щоб піти на війну з Ізраїлевими синами.
15 உடனே பென்யமீனியர் தங்கள் எல்லாப் பட்டணங்களிலிருந்தும் யுத்தத்திற்கு ஆயத்தமாக இருபத்தாறாயிரம் வாள் வீரர்களைத் திரட்டினர். அத்துடன் கிபியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு வீரர்களையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள்.
І Веніяминові сини з міст були перелі́чені того дня, — двадцять і шість тисяч чоловіка, що витягують меча, окрім ме́шканців Ґів'и, — із них були перелічені сім сотень вибраного чоловіка.
16 கிபியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுநூறு வீரர்களும் இடதுகை பழக்க முடையவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் மயிரிழையும் தப்பாமல் கவண் கல் வீசக்கூடியவர்கள்.
З усього того наро́ду було сім сотень вибраного чоловіка, із нечинною рукою прави́ці своєї, лівші, — кожен той кидав каменем із пращі на волос, і не схи́бував.
17 அன்றையதினம் பென்யமீனியர் அல்லாத, மற்ற இஸ்ரயேலர், தங்களுக்குள் சண்டையிடக்கூடிய வாள் வீரர்கள் நானூறாயிரம் பேரைத் திரட்டினர்.
І були перелічені ізра́їльтяни, окрім Веніямина, — чотириста тисяч чоловіка, що витягують меча, кожен військо́вий.
18 அப்பொழுது இஸ்ரயேலர் பெத்தேலுக்குப் போய் இறைவனிடம் விசாரித்தனர். “பென்யமீன் மக்களுடன் போர்புரிய எங்களில் யார் முதலில் போகவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு யெகோவா, “யூதா முதலில் போகட்டும்” எனப் பதிலளித்தார்.
І встали вони, і ввійшли до Бет-Елу, і питалися Бога, та й сказали Ізраїлеві сини: „Хто пі́де нам спе́реду на бій з Веніяминовими синами?“І сказав Господь: „Юда спе́реду“.
19 மறுநாள் காலை இஸ்ரயேலர் எழுந்து கிபியாத்திற்கு அருகே முகாமிட்டார்கள்.
І встали Ізраїлеві сини рано вра́нці, і таборува́ли при Ґів'ї.
20 இஸ்ரயேலர் பென்யமீனியருடன் எதிர்த்துப் போரிடுவதற்கு கிபியாவிலே நிலைகொண்டார்கள்.
І вийшов Ізра́їльтянин на війну з Веніямином, і сточи́ли ізра́їльтяни з ними бій при Ґів'ї.
21 அன்று கிபியாவிலிருந்து வெளியேவந்த பென்யமீனியர், முனையில் நின்ற இருபத்து இரண்டாயிரம் இஸ்ரயேலரை வெட்டி வீழ்த்தினர்.
І вийшли Веніяминові сини з Ґів'и, та й повалили між Ізраїлем того дня двадцять і дві тисячі чоловіка на землю.
22 ஆனால் இஸ்ரயேல் மக்கள் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு முதல்நாள் போருக்கு நின்ற இடத்திலேயே திரும்பவும் நின்றனர்.
І зміцнився наро́д, Ізраїлеві мужі, і точили бій далі в тому місці, де точили бій першого дня.
23 அன்று இஸ்ரயேலர் யெகோவாவுக்கு முன்பாக சாயங்காலம்வரை அழுது, “எங்கள் சகோதரர்களான பென்யமீனியருக்கு எதிராக போருக்கு நாங்கள் போகலாமா?” எனக் கேட்டனர். அதற்கு யெகோவா, “அவர்களை எதிர்த்துப் போங்கள்” எனப் பதிலளித்தார்.
І ввійшли Ізраїлеві сини до Бет-Елу, та й плакали перед Господнім лицем аж до вечора. І питалися вони Господа, говорячи: „Чи далі піду́ я на бій з синами Веніямина, мого брата?“І сказав Господь: „Ідіть на нього!“
24 எனவே இரண்டாவது நாள் இஸ்ரயேலர் பென்யமீனியரை எதிர்த்து நெருங்கிச் சென்றனர்.
І прийшли Ізраїлеві сини до Веніяминових синів дня другого.
25 இம்முறையும் பென்யமீனியர் கிபியாத்திலிருந்து அவர்களை எதிர்த்து வந்து, பதினெட்டாயிரம் இஸ்ரயேல் வீரர்களை வெட்டி வீழ்த்தினார்கள். அவர்கள் எல்லோரும் வாள் ஏந்தியவர்கள்.
А Веніямин вийшов із Ґів'ї другого дня навпроти них, та й повалив між Ізраїлевими синами на землю ще вісімнадцять тисяч чоловіка, — усі ті, що витягають меча.
26 அப்பொழுது இஸ்ரயேல் மனிதரும் எல்லா மக்களும் பெத்தேலில் ஒன்றுகூடி யெகோவாவிடம் அழுது கொண்டேயிருந்தார்கள். அன்று சாயங்காலம்வரை அவர்கள் உபவாசித்து, தகனபலியையும், சமாதான பலியையும் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தினார்கள்.
І прийшли всі Ізраїлеві сини та ввесь народ, і ввійшли до Бет-Елу, та й плакали, і сиділи там перед Господнім лицем, і по́стили того дня аж до вечора. І прине́сли вони цілопа́лення та мирні жертви перед Господнім лицем.
27 பின்பு இஸ்ரயேலர் யெகோவாவிடம் ஆலோசனை கேட்டார்கள். அந்நாட்களில் இறைவனின் உடன்படிக்கைப்பெட்டி அங்கே இருந்தது.
І питалися Ізраїлеві сини Господа (а за тих днів ковче́г Божого заповіту був там.
28 ஆரோனின் பேரனும் எலெயாசாரின் மகனுமான பினெகாஸ் ஆசாரியனாக பணியாற்றி வந்தான். அப்பொழுது அவர்கள், “நாங்கள் எங்கள் சகோதரர் பென்யமீனியருடன் திரும்பவும் போருக்குப் போகலாமா, வேண்டாமா?” எனக் கேட்டார்கள். அதற்கு யெகோவா, “போங்கள்; நான் அவர்களை நாளைக்கு உங்கள் கையில் ஒப்படைப்பேன்” என உறுதியளித்தார்.
А Пінхас, син Елеазара, Ааронового сина, стояв тими днями перед Його лицем), говорячи: „Чи далі піду́ ще на бій з синами Веніямина, мого брата, чи спинюся?“А Господь сказав: „Ідіть, бо взавтра Я дам його в твою руку“.
29 அப்பொழுது இஸ்ரயேலர் கிபியாவைச் சுற்றிலும் பதுங்கியிருந்து தாக்கும், வீரர்களை அனுப்பினார்கள்.
І поставив Ізраїль за́сідку навколо Ґів'ї.
30 மூன்றாவது நாளும் இஸ்ரயேலர் பென்யமீனியரை எதிர்த்துப் போய், முன்பு செய்ததுபோல் கிபியாவுக்கெதிராகத் தங்கள் இடங்களில் நிலைகொண்டார்கள்.
І пішли Ізраїлеві сини на синив Веніяминових третього дня, і сточили бій проти Ґів'ї, як і раніш.
31 பென்யமீனியர் அவர்களை எதிர்கொள்ள தங்கள் பட்டணத்தைவிட்டு வெளியே வந்தனர். அவர்கள் பட்டணத்திற்கும் அப்பாலே போய் இஸ்ரயேலரைத் தாக்கி முன்புபோலவே அவர்களைக் கொன்றார்கள். இதனால் கிட்டத்தட்ட முப்பது மனிதர்கள் வயல்வெளிகளிலும், பெத்தேலுக்கும், கிபியாவுக்கும் போகும் பாதையிலும் விழுந்தனர்.
І вийшли Веніяминові сини навпроти народу, одірвалися від міста, і зачали класти трупи з народу, як раз-у-раз, на битих дорогах, що одна йде до Бет-Елу, а одна до Ґів'ї, у полі, — коло тридцяти чоловіка між Ізраїлем.
32 “நாம் முன்புபோலவே அவர்களைத் தோற்கடித்து ஓடச்செய்கிறோம்” என பென்யமீனியர் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது இஸ்ரயேலரோ, “அவர்களின் பட்டணத்தைவிட்டு வெளியே பாதைக்கு ஓடிவரப்பண்ண நாம் இன்னும் பின்வாங்கி ஓடுவோம்” என்றார்கள்.
І сказали Веніяминові сини: „Биті вони перед нами, як перше!“А Ізраїлеві сини сказали: „Утікаймо, — і віді́рвемо їх від міста на дороги“.
33 அவ்வாறு எல்லா இஸ்ரயேலரும் தங்களது இடங்களிலிருந்து போய், பாகால் தாமாரில் திரும்பவும் நிலைகொண்டார்கள். உடனே இஸ்ரயேலின் பதுங்கியிருந்து தாக்கும் வீரர்கள் கிபியாவின் மேற்கு பகுதியிலுள்ள இடத்திலிருந்து திடீரென வெளியேறி தாக்கினார்கள்.
І кожен муж Ізраїля повстав із свого місця, і сточили бій у Баал-Тамарі, а Ізраїлева за́сідка рушила з свого місця, з Мааре-Ґева.
34 இஸ்ரயேலின் மிகத் திறமையான பத்தாயிரம் வீரர்கள் கிபியாவின்மேல் நேரடித்தாக்குதல் செய்தனர். சண்டையோ மிகவும் கடுமையாக இருந்ததால் தங்களுக்குப் பேராபத்து நெருங்கியிருப்பதை பென்யமீனியர் அறியாதிருந்தார்கள்.
І прийшли перед Ґів'у десять тисяч чоловіка, ви́браного з усього Ізраїля, і бій став тяжки́й. А вони не знали, що суне на них те зло.
35 யெகோவா பென்யமீனியரை இஸ்ரயேலருக்கு முன்பாக முறிடியத்தார். அன்று இருபத்தையாயிரத்து நூறு வாள் ஏந்தும் பென்யமீன் போர்வீரர்களை இஸ்ரயேல் வீரர்கள் வெட்டி வீழ்த்தினார்கள்.
І вдарив Господь Веніямина перед Ізраїлем, і Ізраїлеві сини повалили того дня між Веніямином двадцять і п'ять тисяч і сто чоловіка, — усі ті, що витягають меча.
36 அப்பொழுது பென்யமீனியர் தாங்கள் போரில் தோற்கடிக்கப்பட்டதைக் கண்டார்கள். இஸ்ரயேலரோ கிபியாவுக்கு அருகில் பதுங்கியிருந்து தாக்குபவர்களில் நம்பிக்கை வைத்ததால், பென்யமீனியருக்கு முன்பாகச் சிதறுண்டு ஓடுவதுபோல் காண்பித்தார்கள்.
І побачили Веніяминові сини, що побиті вони, а ізра́їльтяни уступили місце Веніяминові, бо вірили за́сідці, яку поставили на Ґів'у.
37 அந்நேரத்தில் பதுங்கியிருந்து தாக்கும் வீரர்கள் மிக விரைவாக கிபியாவிற்குள் திடீரென போய், எங்கும் பரவி பட்டணம் முழுவதையும் வாளுக்கு இரையாக்கினார்கள்.
А за́сідка поспішилася, і напала на Ґів'у. І за́сідка вступилася, і побила все місто ві́стрям меча.
38 இஸ்ரயேலின் மனிதர்கள் பதுங்கியிருந்து தாக்குபவர்களிடம், பட்டணத்திலிருந்து பெரிய புகை மேகத்தை எழும்பப்பண்ணும்படியும்,
А Ізра́їльтянин мав із за́сідкою умовленого знака, — щоб із міста підняла великий дим.
39 தாங்கள் அதைக் கண்டதும் ஓடுவதைவிட்டு திரும்பவும் அச்சண்டையில் ஈடுபடுவதாகவும் சொல்லியிருந்தார்கள். பென்யமீனியர் இஸ்ரயேல் மனிதரைத் தாக்கத் தொடங்கி, “நாம் முந்தின யுத்தத்தில் நடந்ததுபோலவே அவர்களைத் தோற்கடிக்கிறோம்” என்று சொல்லி இஸ்ரயேலில் முப்பது பேரை வெட்டிப்போட்டனர்.
І відступили ізраїльтяни в бою, а Веніямин зачав класти трупи в Ізраїлі, близько тридцятеро люда, бо казали вони: „Дійсно, справді побитий він перед нами, як за першого бою!“
40 ஆனால் பட்டணத்திலிருந்து புகைத்திரள் மேலெழும்பியதை திரும்பிப் பார்த்த பென்யமீனியர் பட்டணம் முழுவதிலிருந்தும் புகை வானத்தை நோக்கிப் போவதைக் கண்டார்கள்.
А з міста став підійматися стовп диму. І обернувся Веніямин позад себе, — аж ось усе місто піднялося димом до неба!
41 அவ்வேளையில் இஸ்ரயேலின் மனிதர்கள் பென்யமீனியரைத் தாக்குவதற்குத் திரும்பினார்கள். ஆகவே தங்களுக்கு பேராபத்து நேரிட்டதை பென்யமீனியர் கண்டு திகிலடைந்தார்கள்.
І обернувся Ізра́їльтянин, а Веніями́нівець перестра́шився, бо побачив, що досягло його те зло.
42 எனவே அவர்கள் இஸ்ரயேலருக்கு முன்பாக பாலைவனத்திற்கு தப்பியோடினார்கள். ஆனால் அவர்களால் யுத்தத்திலிருந்து தப்பியோட முடியவில்லை. பட்டணத்திலிருந்து வெளியேவந்த இஸ்ரயேல் மனிதர்கள் அங்கே அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
І обернулися вони перед Ізра́їльтянином до дороги на пустиню, та бій досягав його, а ті, що з міст, валили його в сере́дині його́.
43 இஸ்ரயேலர் பென்யமீனியரைச் சுற்றிவளைத்து, அவர்களைத் துரத்தி கிழக்குப் பக்கத்திலுள்ள கிபியாவின் சுற்றுப்புறத்திலே அவர்களை இலகுவாக அழித்துப்போட்டனர்.
Вони оточили Веніямина, гнали його до Менухи, топтали його аж до Ґів'ї зо сходу сонця.
44 அவ்விடத்திலே பதினெட்டாயிரம் பென்யமீனியர் விழுந்து மடிந்தனர்; எல்லோரும் போர்வீரர்கள்.
Полягло тоді з Веніямина вісімнадцять тисяч чоловіка, — усе це люди хоробрі.
45 பென்யமீனியர் பாலைவனத்திலே ரிம்மோன் மலையை நோக்கித் தப்பியோட, வழியிலே இஸ்ரயேலர் ஐயாயிரம் பேரை வெட்டினர். மற்றவர்களை கீதோம்வரை பின்தொடர்ந்து போய், அவர்களிலும் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டனர்.
І поверну́лися вони, і втікли в пустиню до Села-Ріммону. А ті побили поодиноких утікачів по дорогах, як дозби́рюється останній виноград, п'ять тисяч люда. І гналися за ними аж до Ґід'ому, і побили з нього дві тисячі люда.
46 இவ்விதமாக அந்நாளில் இருபத்தையாயிரம் பென்யமீனிய வாள் ஏந்தும் வீரர்கள் மடிந்தனர். இவர்கள் எல்லோரும் திறமைமிக்க வீரர்கள்.
І було всіх, що впали того дня з Веніямина, двадцять і п'ять тисяч чоловіка, що витягають меча, — усе це люди хоробрі.
47 ஆனால் அறுநூறு மனிதர் ரிம்மோன் காடுகளிலுள்ள மலைக்கு ஓடிப்போய் அங்கே நான்கு மாதங்கள் தங்கியிருந்தனர்.
І обернулися вони, і повтікали в пустиню до Села-Ріммону, — шістсот чоловіка. І сиділи вони в Села-Ріммоні чотири місяці.
48 இஸ்ரயேல் மனிதர்கள் பென்யமீன் நாட்டிற்குத் திரும்பிச்சென்று, அங்கிருந்த மிருகங்கள் உட்பட தாங்கள் கண்ட எல்லாவற்றையும் வாளால் வெட்டினர். அவர்கள் வழியிலுள்ள பட்டணங்களுக்கெல்லாம் நெருப்பு வைத்தனர்.
А ізра́їльтяни вернулися до Веніяминових синів, та й повбивали їх ві́стрям меча, — мужчин із міста, і худобу, і все зна́йдене. А всі міста, що знаходились по дорозі, пустили з огнем.

< நியாயாதிபதிகள் 20 >