< Salmos 121 >

1 Cántico gradual. ALZARÉ mis ojos á los montes, de donde vendrá mi socorro.
ஆரோகண பாடல். எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
2 Mi socorro [viene] de Jehová, que hizo los cielos y la tierra.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
3 No dará tu pie al resbaladero; ni se dormirá el que te guarda.
உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
4 He aquí, no se adormecerá ni dormirá el que guarda á Israel.
இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
5 Jehová es tu guardador: Jehová es tu sombra á tu mano derecha.
யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
6 El sol no te fatigará de día, ni la luna de noche.
பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
7 Jehová te guardará de todo mal: él guardará tu alma.
யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
8 Jehová guardará tu salida y tu entrada, desde ahora y para siempre.
யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.

< Salmos 121 >