< Job 17 >

1 MI ALIENTO está corrompido, acórtanse mis días, y me está aparejado el sepulcro.
என் ஆவி உடைகிறது, என் ஆயுசு நாட்கள் முடிகிறது; கல்லறை எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
2 No hay conmigo sino escarnecedores, en cuya acrimonia se detienen mis ojos.
கேலி செய்கிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
3 Pon ahora, dame fianza para [litigar] contigo: ¿quién tocará ahora mi mano?
தேவரீர் என் காரியத்தை உம்மேல் போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைக்கப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
4 Porque [á éstos] has tú escondido su corazón de inteligencia: por tanto, no [los] ensalzarás.
நீர் அவர்கள் இருதயத்திற்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
5 El que denuncia lisonjas á sus prójimos, los ojos de sus hijos desfallezcan.
எவன் தன் நண்பனுக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவனுடைய பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
6 El me ha puesto por parábola de pueblos, y delante [de ellos] he sido como tamboril.
மக்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்திற்குமுன் நான் விரும்பத்தகாதவனானேன்.
7 Y mis ojos se oscurecieron de desabrimiento, y mis pensamientos todos son como sombra.
இதற்காக என் கண்கள் வருத்தத்தினால் இருளடைந்தது; என் உறுப்புகளெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
8 Los rectos se maravillarán de esto, y el inocente se levantará contra el hipócrita.
சன்மார்க்கர் இதற்காக அதிர்ச்சியடைவார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
9 No obstante, proseguirá el justo su camino, y el limpio de manos aumentará la fuerza.
நீதிமான் தன் வழியை உறுதியாகப் பிடிப்பான்; சுத்தமான கைகள் உள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
10 Mas volved todos vosotros, y venid ahora, que no hallaré entre vosotros sabio.
௧0இப்போதும் நீங்கள் எல்லோரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணவில்லை.
11 Pasáronse mis días, fueron arrancados mis pensamientos, los designios de mi corazón.
௧௧என் நாட்கள் முடிந்தது; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் இல்லாமல் போனது.
12 Pusieron la noche por día, y la luz se acorta delante de las tinieblas.
௧௨அவைகள் இரவைப் பகலாக்கியது; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று நினைக்கத்தோன்றியது.
13 Si yo espero, el sepulcro es mi casa: haré mi cama en las tinieblas. (Sheol h7585)
௧௩அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். (Sheol h7585)
14 A la huesa tengo dicho: Mi padre eres tú; á los gusanos: Mi madre y mi hermana.
௧௪அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
15 ¿Dónde pues estará ahora mi esperanza? y mi esperanza ¿quién la verá?
௧௫என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
16 A los rincones de la huesa descenderán, y juntamente descansarán en el polvo. (Sheol h7585)
௧௬அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் எங்கும் இளைப்பாறுவோம்” என்றான். (Sheol h7585)

< Job 17 >