< Salmos 122 >

1 Yo me alegré con los que me decían: A la casa de Jehová iremos.
தாவீதின் ஆரோகண பாடல். யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன்.
2 Nuestros pies estuvieron en tus puertas, o! Jerusalem.
எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது.
3 Jerusalem, la que es edificada como una ciudad que está unida consigo a una.
எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது.
4 Porque allá subieron las tribus, las tribus de Jehová, el testimonio a Israel, para alabar el nombre de Jehová.
அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும்.
5 Porque allá están las sillas del juicio: las sillas de la casa de David.
அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
6 Demandád la paz de Jerusalem: sean pacificados los que te aman.
எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும்.
7 Haya paz en tu antemuro, descanso en tus palacios.
உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும்.
8 A causa de mis hermanos y mis compañeros hablaré ahora paz de ti.
என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன்.
9 A causa de la casa de Jehová nuestro Dios buscaré bien para ti.
எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

< Salmos 122 >