< ಲೂಕಃ 22 >

1 ಅಪರಞ್ಚ ಕಿಣ್ವಶೂನ್ಯಪೂಪೋತ್ಸವಸ್ಯ ಕಾಲ ಉಪಸ್ಥಿತೇ
பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நெருங்கிற்று.
2 ಪ್ರಧಾನಯಾಜಕಾ ಅಧ್ಯಾಯಕಾಶ್ಚ ಯಥಾ ತಂ ಹನ್ತುಂ ಶಕ್ನುವನ್ತಿ ತಥೋಪಾಯಾಮ್ ಅಚೇಷ್ಟನ್ತ ಕಿನ್ತು ಲೋಕೇಭ್ಯೋ ಬಿಭ್ಯುಃ|
அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, மக்களுக்குப் பயந்தபடியினால், எவ்விதமாக இதைச்செய்யலாமென்று வகைதேடினார்கள்.
3 ಏತಸ್ತಿನ್ ಸಮಯೇ ದ್ವಾದಶಶಿಷ್ಯೇಷು ಗಣಿತ ಈಷ್ಕರಿಯೋತೀಯರೂಢಿಮಾನ್ ಯೋ ಯಿಹೂದಾಸ್ತಸ್ಯಾನ್ತಃಕರಣಂ ಶೈತಾನಾಶ್ರಿತತ್ವಾತ್
அப்பொழுது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபெயர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
4 ಸ ಗತ್ವಾ ಯಥಾ ಯೀಶುಂ ತೇಷಾಂ ಕರೇಷು ಸಮರ್ಪಯಿತುಂ ಶಕ್ನೋತಿ ತಥಾ ಮನ್ತ್ರಣಾಂ ಪ್ರಧಾನಯಾಜಕೈಃ ಸೇನಾಪತಿಭಿಶ್ಚ ಸಹ ಚಕಾರ|
அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் படைத்தலைவர்களிடத்திலும்போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் விதத்தைக்குறித்து அவர்களோடு ஆலோசனை செய்தான்.
5 ತೇನ ತೇ ತುಷ್ಟಾಸ್ತಸ್ಮೈ ಮುದ್ರಾಂ ದಾತುಂ ಪಣಂ ಚಕ್ರುಃ|
அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள்.
6 ತತಃ ಸೋಙ್ಗೀಕೃತ್ಯ ಯಥಾ ಲೋಕಾನಾಮಗೋಚರೇ ತಂ ಪರಕರೇಷು ಸಮರ್ಪಯಿತುಂ ಶಕ್ನೋತಿ ತಥಾವಕಾಶಂ ಚೇಷ್ಟಿತುಮಾರೇಭೇ|
அதற்கு அவன் சம்மதித்து, மக்கள்கூட்டமில்லாத நேரத்தில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான்.
7 ಅಥ ಕಿಣ್ವಶೂನ್ಯಪೂಪೋತ್ಮವದಿನೇ, ಅರ್ಥಾತ್ ಯಸ್ಮಿನ್ ದಿನೇ ನಿಸ್ತಾರೋತ್ಸವಸ್ಯ ಮೇಷೋ ಹನ್ತವ್ಯಸ್ತಸ್ಮಿನ್ ದಿನೇ
பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.
8 ಯೀಶುಃ ಪಿತರಂ ಯೋಹನಞ್ಚಾಹೂಯ ಜಗಾದ, ಯುವಾಂ ಗತ್ವಾಸ್ಮಾಕಂ ಭೋಜನಾರ್ಥಂ ನಿಸ್ತಾರೋತ್ಸವಸ್ಯ ದ್ರವ್ಯಾಣ್ಯಾಸಾದಯತಂ|
அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிப்பதற்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் செய்யுங்கள் என்றார்.
9 ತದಾ ತೌ ಪಪ್ರಚ್ಛತುಃ ಕುಚಾಸಾದಯಾವೋ ಭವತಃ ಕೇಚ್ಛಾ?
அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்செய்ய விருப்பமாக இருக்கிறீர் என்று கேட்டார்கள்.
10 ತದಾ ಸೋವಾದೀತ್, ನಗರೇ ಪ್ರವಿಷ್ಟೇ ಕಶ್ಚಿಜ್ಜಲಕುಮ್ಭಮಾದಾಯ ಯುವಾಂ ಸಾಕ್ಷಾತ್ ಕರಿಷ್ಯತಿ ಸ ಯನ್ನಿವೇಶನಂ ಪ್ರವಿಶತಿ ಯುವಾಮಪಿ ತನ್ನಿವೇಶನಂ ತತ್ಪಶ್ಚಾದಿತ್ವಾ ನಿವೇಶನಪತಿಮ್ ಇತಿ ವಾಕ್ಯಂ ವದತಂ,
௧0அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் நுழையும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனிதன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்னேசென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும்போய்,
11 ಯತ್ರಾಹಂ ನಿಸ್ತಾರೋತ್ಸವಸ್ಯ ಭೋಜ್ಯಂ ಶಿಷ್ಯೈಃ ಸಾರ್ದ್ಧಂ ಭೋಕ್ತುಂ ಶಕ್ನೋಮಿ ಸಾತಿಥಿಶಾಲಾ ಕುತ್ರ? ಕಥಾಮಿಮಾಂ ಪ್ರಭುಸ್ತ್ವಾಂ ಪೃಚ್ಛತಿ|
௧௧அந்த வீட்டெஜமானைப் பார்த்து: நான் என் சீடர்களோடு பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச்சொன்னார் என்று சொல்லுங்கள்.
12 ತತಃ ಸ ಜನೋ ದ್ವಿತೀಯಪ್ರಕೋಷ್ಠೀಯಮ್ ಏಕಂ ಶಸ್ತಂ ಕೋಷ್ಠಂ ದರ್ಶಯಿಷ್ಯತಿ ತತ್ರ ಭೋಜ್ಯಮಾಸಾದಯತಂ|
௧௨அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம் செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
13 ತತಸ್ತೌ ಗತ್ವಾ ತದ್ವಾಕ್ಯಾನುಸಾರೇಣ ಸರ್ವ್ವಂ ದೃಷ್ದ್ವಾ ತತ್ರ ನಿಸ್ತಾರೋತ್ಸವೀಯಂ ಭೋಜ್ಯಮಾಸಾದಯಾಮಾಸತುಃ|
௧௩அவர்கள்போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம் செய்தார்கள்.
14 ಅಥ ಕಾಲ ಉಪಸ್ಥಿತೇ ಯೀಶು ರ್ದ್ವಾದಶಭಿಃ ಪ್ರೇರಿತೈಃ ಸಹ ಭೋಕ್ತುಮುಪವಿಶ್ಯ ಕಥಿತವಾನ್
௧௪நேரம் வந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களும் பந்தியிருந்தார்கள்.
15 ಮಮ ದುಃಖಭೋಗಾತ್ ಪೂರ್ವ್ವಂ ಯುಭಾಭಿಃ ಸಹ ನಿಸ್ತಾರೋತ್ಸವಸ್ಯೈತಸ್ಯ ಭೋಜ್ಯಂ ಭೋಕ್ತುಂ ಮಯಾತಿವಾಞ್ಛಾ ಕೃತಾ|
௧௫அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாக இருந்தேன்.
16 ಯುಷ್ಮಾನ್ ವದಾಮಿ, ಯಾವತ್ಕಾಲಮ್ ಈಶ್ವರರಾಜ್ಯೇ ಭೋಜನಂ ನ ಕರಿಷ್ಯೇ ತಾವತ್ಕಾಲಮ್ ಇದಂ ನ ಭೋಕ್ಷ್ಯೇ|
௧௬தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறும்வரைக்கும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
17 ತದಾ ಸ ಪಾನಪಾತ್ರಮಾದಾಯ ಈಶ್ವರಸ್ಯ ಗುಣಾನ್ ಕೀರ್ತ್ತಯಿತ್ವಾ ತೇಭ್ಯೋ ದತ್ವಾವದತ್, ಇದಂ ಗೃಹ್ಲೀತ ಯೂಯಂ ವಿಭಜ್ಯ ಪಿವತ|
௧௭அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்;
18 ಯುಷ್ಮಾನ್ ವದಾಮಿ ಯಾವತ್ಕಾಲಮ್ ಈಶ್ವರರಾಜತ್ವಸ್ಯ ಸಂಸ್ಥಾಪನಂ ನ ಭವತಿ ತಾವದ್ ದ್ರಾಕ್ಷಾಫಲರಸಂ ನ ಪಾಸ್ಯಾಮಿ|
௧௮தேவனுடைய ராஜ்யம் வரும்வரைக்கும் நான் திராட்சைரசத்தைப் பருகுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19 ತತಃ ಪೂಪಂ ಗೃಹೀತ್ವಾ ಈಶ್ವರಗುಣಾನ್ ಕೀರ್ತ್ತಯಿತ್ವಾ ಭಙ್ಕ್ತಾ ತೇಭ್ಯೋ ದತ್ವಾವದತ್, ಯುಷ್ಮದರ್ಥಂ ಸಮರ್ಪಿತಂ ಯನ್ಮಮ ವಪುಸ್ತದಿದಂ, ಏತತ್ ಕರ್ಮ್ಮ ಮಮ ಸ್ಮರಣಾರ್ಥಂ ಕುರುಧ್ವಂ|
௧௯பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்செய்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாக இருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச்செய்யுங்கள் என்றார்.
20 ಅಥ ಭೋಜನಾನ್ತೇ ತಾದೃಶಂ ಪಾತ್ರಂ ಗೃಹೀತ್ವಾವದತ್, ಯುಷ್ಮತ್ಕೃತೇ ಪಾತಿತಂ ಯನ್ಮಮ ರಕ್ತಂ ತೇನ ನಿರ್ಣೀತನವನಿಯಮರೂಪಂ ಪಾನಪಾತ್ರಮಿದಂ|
௨0போஜனம்செய்தபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய ஒப்பந்தமாக இருக்கிறது என்றார்.
21 ಪಶ್ಯತ ಯೋ ಮಾಂ ಪರಕರೇಷು ಸಮರ್ಪಯಿಷ್ಯತಿ ಸ ಮಯಾ ಸಹ ಭೋಜನಾಸನ ಉಪವಿಶತಿ|
௨௧பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது.
22 ಯಥಾ ನಿರೂಪಿತಮಾಸ್ತೇ ತದನುಸಾರೇಣಾ ಮನುಷ್ಯಪುತ್ರಸ್ಯ ಗತಿ ರ್ಭವಿಷ್ಯತಿ ಕಿನ್ತು ಯಸ್ತಂ ಪರಕರೇಷು ಸಮರ್ಪಯಿಷ್ಯತಿ ತಸ್ಯ ಸನ್ತಾಪೋ ಭವಿಷ್ಯತಿ|
௨௨தீர்மானிக்கப்பட்டபடியே மனிதகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனிதனுக்கு ஐயோ என்றார்.
23 ತದಾ ತೇಷಾಂ ಕೋ ಜನ ಏತತ್ ಕರ್ಮ್ಮ ಕರಿಷ್ಯತಿ ತತ್ ತೇ ಪರಸ್ಪರಂ ಪ್ರಷ್ಟುಮಾರೇಭಿರೇ|
௨௩அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள்.
24 ಅಪರಂ ತೇಷಾಂ ಕೋ ಜನಃ ಶ್ರೇಷ್ಠತ್ವೇನ ಗಣಯಿಷ್ಯತೇ, ಅತ್ರಾರ್ಥೇ ತೇಷಾಂ ವಿವಾದೋಭವತ್|
௨௪அன்றியும் தங்களில் எவன் பெரியவனாக இருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டானது.
25 ಅಸ್ಮಾತ್ ಕಾರಣಾತ್ ಸೋವದತ್, ಅನ್ಯದೇಶೀಯಾನಾಂ ರಾಜಾನಃ ಪ್ರಜಾನಾಮುಪರಿ ಪ್ರಭುತ್ವಂ ಕುರ್ವ್ವನ್ತಿ ದಾರುಣಶಾಸನಂ ಕೃತ್ವಾಪಿ ತೇ ಭೂಪತಿತ್ವೇನ ವಿಖ್ಯಾತಾ ಭವನ್ತಿ ಚ|
௨௫அவர் அவர்களைப் பார்த்து: யூதரல்லாத இனத்தாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் நற்பணியாளர்கள் என்று எண்ணப்படுகிறார்கள்.
26 ಕಿನ್ತು ಯುಷ್ಮಾಕಂ ತಥಾ ನ ಭವಿಷ್ಯತಿ, ಯೋ ಯುಷ್ಮಾಕಂ ಶ್ರೇಷ್ಠೋ ಭವಿಷ್ಯತಿ ಸ ಕನಿಷ್ಠವದ್ ಭವತು, ಯಶ್ಚ ಮುಖ್ಯೋ ಭವಿಷ್ಯತಿ ಸ ಸೇವಕವದ್ಭವತು|
௨௬உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் சேவைசெய்கிறவனைப்போலவும் இருக்கவேண்டும்.
27 ಭೋಜನೋಪವಿಷ್ಟಪರಿಚಾರಕಯೋಃ ಕಃ ಶ್ರೇಷ್ಠಃ? ಯೋ ಭೋಜನಾಯೋಪವಿಶತಿ ಸ ಕಿಂ ಶ್ರೇಷ್ಠೋ ನ ಭವತಿ? ಕಿನ್ತು ಯುಷ್ಮಾಕಂ ಮಧ್ಯೇಽಹಂ ಪರಿಚಾರಕಇವಾಸ್ಮಿ|
௨௭பந்தியில் உட்கார்ந்திருக்கிறவனோ, சேவைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்களுடைய நடுவிலே சேவைசெய்கிறவனைப்போல இருக்கிறேன்.
28 ಅಪರಞ್ಚ ಯುಯಂ ಮಮ ಪರೀಕ್ಷಾಕಾಲೇ ಪ್ರಥಮಮಾರಭ್ಯ ಮಯಾ ಸಹ ಸ್ಥಿತಾ
௨௮மேலும் எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே.
29 ಏತತ್ಕಾರಣಾತ್ ಪಿತ್ರಾ ಯಥಾ ಮದರ್ಥಂ ರಾಜ್ಯಮೇಕಂ ನಿರೂಪಿತಂ ತಥಾಹಮಪಿ ಯುಷ್ಮದರ್ಥಂ ರಾಜ್ಯಂ ನಿರೂಪಯಾಮಿ|
௨௯ஆகவே, என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.
30 ತಸ್ಮಾನ್ ಮಮ ರಾಜ್ಯೇ ಭೋಜನಾಸನೇ ಚ ಭೋಜನಪಾನೇ ಕರಿಷ್ಯಧ್ವೇ ಸಿಂಹಾಸನೇಷೂಪವಿಶ್ಯ ಚೇಸ್ರಾಯೇಲೀಯಾನಾಂ ದ್ವಾದಶವಂಶಾನಾಂ ವಿಚಾರಂ ಕರಿಷ್ಯಧ್ವೇ|
௩0நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் சாப்பிட்டுக் குடித்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகச் சிங்காசனங்களின்மேல் அமருவீர்கள் என்றார்.
31 ಅಪರಂ ಪ್ರಭುರುವಾಚ, ಹೇ ಶಿಮೋನ್ ಪಶ್ಯ ತಿತಉನಾ ಧಾನ್ಯಾನೀವ ಯುಷ್ಮಾನ್ ಶೈತಾನ್ ಚಾಲಯಿತುಮ್ ಐಚ್ಛತ್,
௩௧பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையை முறத்தினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு அனுமதி கேட்டுக்கொண்டான்.
32 ಕಿನ್ತು ತವ ವಿಶ್ವಾಸಸ್ಯ ಲೋಪೋ ಯಥಾ ನ ಭವತಿ ಏತತ್ ತ್ವದರ್ಥಂ ಪ್ರಾರ್ಥಿತಂ ಮಯಾ, ತ್ವನ್ಮನಸಿ ಪರಿವರ್ತ್ತಿತೇ ಚ ಭ್ರಾತೃಣಾಂ ಮನಾಂಸಿ ಸ್ಥಿರೀಕುರು|
௩௨நானோ உன் நம்பிக்கை இழந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரர்களைத் திடப்படுத்து என்றார்.
33 ತದಾ ಸೋವದತ್, ಹೇ ಪ್ರಭೋಹಂ ತ್ವಯಾ ಸಾರ್ದ್ಧಂ ಕಾರಾಂ ಮೃತಿಞ್ಚ ಯಾತುಂ ಮಜ್ಜಿತೋಸ್ಮಿ|
௩௩அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாக இருக்கிறேன் என்றான்.
34 ತತಃ ಸ ಉವಾಚ, ಹೇ ಪಿತರ ತ್ವಾಂ ವದಾಮಿ, ಅದ್ಯ ಕುಕ್ಕುಟರವಾತ್ ಪೂರ್ವ್ವಂ ತ್ವಂ ಮತ್ಪರಿಚಯಂ ವಾರತ್ರಯಮ್ ಅಪಹ್ವೋಷ್ಯಸೇ|
௩௪அவர் அவனைப் பார்த்து: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
35 ಅಪರಂ ಸ ಪಪ್ರಚ್ಛ, ಯದಾ ಮುದ್ರಾಸಮ್ಪುಟಂ ಖಾದ್ಯಪಾತ್ರಂ ಪಾದುಕಾಞ್ಚ ವಿನಾ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರಾಹಿಣವಂ ತದಾ ಯುಷ್ಮಾಕಂ ಕಸ್ಯಾಪಿ ನ್ಯೂನತಾಸೀತ್? ತೇ ಪ್ರೋಚುಃ ಕಸ್ಯಾಪಿ ನ|
௩௫பின்னும் அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களைப் பணப்பையும் சாமான் பையும் காலணிகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாவது உங்களுக்குக் குறைவாக இருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாக இருந்ததில்லை என்றார்கள்.
36 ತದಾ ಸೋವದತ್ ಕಿನ್ತ್ವಿದಾನೀಂ ಮುದ್ರಾಸಮ್ಪುಟಂ ಖಾದ್ಯಪಾತ್ರಂ ವಾ ಯಸ್ಯಾಸ್ತಿ ತೇನ ತದ್ಗ್ರಹೀತವ್ಯಂ, ಯಸ್ಯ ಚ ಕೃಪಾಣೋ ನಾಸ್ತಿ ತೇನ ಸ್ವವಸ್ತ್ರಂ ವಿಕ್ರೀಯ ಸ ಕ್ರೇತವ್ಯಃ|
௩௬அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான் பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்; பட்டயம் இல்லாதவன் தன் ஆடையை விற்று ஒரு பட்டயத்தை வாங்கவேண்டும்.
37 ಯತೋ ಯುಷ್ಮಾನಹಂ ವದಾಮಿ, ಅಪರಾಧಿಜನೈಃ ಸಾರ್ದ್ಧಂ ಗಣಿತಃ ಸ ಭವಿಷ್ಯತಿ| ಇದಂ ಯಚ್ಛಾಸ್ತ್ರೀಯಂ ವಚನಂ ಲಿಖಿತಮಸ್ತಿ ತನ್ಮಯಿ ಫಲಿಷ್ಯತಿ ಯತೋ ಮಮ ಸಮ್ಬನ್ಧೀಯಂ ಸರ್ವ್ವಂ ಸೇತ್ಸ್ಯತಿ|
௩௭அக்கிரமக்காரர்களில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் நிறைவேறும் காலம் வந்திருக்கிறது என்றார்.
38 ತದಾ ತೇ ಪ್ರೋಚುಃ ಪ್ರಭೋ ಪಶ್ಯ ಇಮೌ ಕೃಪಾಣೌ| ತತಃ ಸೋವದದ್ ಏತೌ ಯಥೇಷ್ಟೌ|
௩௮அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.
39 ಅಥ ಸ ತಸ್ಮಾದ್ವಹಿ ರ್ಗತ್ವಾ ಸ್ವಾಚಾರಾನುಸಾರೇಣ ಜೈತುನನಾಮಾದ್ರಿಂ ಜಗಾಮ ಶಿಷ್ಯಾಶ್ಚ ತತ್ಪಶ್ಚಾದ್ ಯಯುಃ|
௩௯பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீடர்களும் அவரோடுகூடப்போனார்கள்.
40 ತತ್ರೋಪಸ್ಥಾಯ ಸ ತಾನುವಾಚ, ಯಥಾ ಪರೀಕ್ಷಾಯಾಂ ನ ಪತಥ ತದರ್ಥಂ ಪ್ರಾರ್ಥಯಧ್ವಂ|
௪0அந்த இடத்தை அடைந்தபொழுது அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்செய்யுங்கள் என்று சொல்லி,
41 ಪಶ್ಚಾತ್ ಸ ತಸ್ಮಾದ್ ಏಕಶರಕ್ಷೇಪಾದ್ ಬಹಿ ರ್ಗತ್ವಾ ಜಾನುನೀ ಪಾತಯಿತ್ವಾ ಏತತ್ ಪ್ರಾರ್ಥಯಾಞ್ಚಕ್ರೇ,
௪௧அவர்களைவிட்டுக் கல்லெறி தூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு:
42 ಹೇ ಪಿತ ರ್ಯದಿ ಭವಾನ್ ಸಮ್ಮನ್ಯತೇ ತರ್ಹಿ ಕಂಸಮೇನಂ ಮಮಾನ್ತಿಕಾದ್ ದೂರಯ ಕಿನ್ತು ಮದಿಚ್ಛಾನುರೂಪಂ ನ ತ್ವದಿಚ್ಛಾನುರೂಪಂ ಭವತು|
௪௨பிதாவே, உமக்கு விருப்பமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆனாலும் என்னுடைய விருப்பத்தின்படியல்ல, உம்முடைய விருப்பத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.
43 ತದಾ ತಸ್ಮೈ ಶಕ್ತಿಂ ದಾತುಂ ಸ್ವರ್ಗೀಯದೂತೋ ದರ್ಶನಂ ದದೌ|
௪௩அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரை திடப்படுத்தினான்.
44 ಪಶ್ಚಾತ್ ಸೋತ್ಯನ್ತಂ ಯಾತನಯಾ ವ್ಯಾಕುಲೋ ಭೂತ್ವಾ ಪುನರ್ದೃಢಂ ಪ್ರಾರ್ಥಯಾಞ್ಚಕ್ರೇ, ತಸ್ಮಾದ್ ಬೃಹಚ್ಛೋಣಿತಬಿನ್ದವ ಇವ ತಸ್ಯ ಸ್ವೇದಬಿನ್ದವಃ ಪೃಥಿವ್ಯಾಂ ಪತಿತುಮಾರೇಭಿರೇ|
௪௪அவர் மிகவும் வேதனைப்பட்டு, அதிக ஊக்கத்தோடு ஜெபம்செய்தார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாகத் தரையிலே விழுந்தது.
45 ಅಥ ಪ್ರಾರ್ಥನಾತ ಉತ್ಥಾಯ ಶಿಷ್ಯಾಣಾಂ ಸಮೀಪಮೇತ್ಯ ತಾನ್ ಮನೋದುಃಖಿನೋ ನಿದ್ರಿತಾನ್ ದೃಷ್ಟ್ವಾವದತ್
௪௫அவர் ஜெபம்செய்து முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே தூங்குகிறதைக் கண்டு:
46 ಕುತೋ ನಿದ್ರಾಥ? ಪರೀಕ್ಷಾಯಾಮ್ ಅಪತನಾರ್ಥಂ ಪ್ರರ್ಥಯಧ್ವಂ|
௪௬நீங்கள் தூங்குகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்செய்யுங்கள் என்றார்.
47 ಏತತ್ಕಥಾಯಾಃ ಕಥನಕಾಲೇ ದ್ವಾದಶಶಿಷ್ಯಾಣಾಂ ಮಧ್ಯೇ ಗಣಿತೋ ಯಿಹೂದಾನಾಮಾ ಜನತಾಸಹಿತಸ್ತೇಷಾಮ್ ಅಗ್ರೇ ಚಲಿತ್ವಾ ಯೀಶೋಶ್ಚುಮ್ಬನಾರ್ಥಂ ತದನ್ತಿಕಮ್ ಆಯಯೌ|
௪௭அவர் அப்படிப் பேசும்போது மக்கள் கூட்டமாக வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தம் செய்வதற்காக அவரிடத்தில் நெருங்கினான்.
48 ತದಾ ಯೀಶುರುವಾಚ, ಹೇ ಯಿಹೂದಾ ಕಿಂ ಚುಮ್ಬನೇನ ಮನುಷ್ಯಪುತ್ರಂ ಪರಕರೇಷು ಸಮರ್ಪಯಸಿ?
௪௮இயேசு அவனைப் பார்த்து: யூதாசே, முத்தத்தினாலேயா மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார்.
49 ತದಾ ಯದ್ಯದ್ ಘಟಿಷ್ಯತೇ ತದನುಮಾಯ ಸಙ್ಗಿಭಿರುಕ್ತಂ, ಹೇ ಪ್ರಭೋ ವಯಂ ಕಿ ಖಙ್ಗೇನ ಘಾತಯಿಷ್ಯಾಮಃ?
௪௯அவரைச் சுற்றி நின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள்.
50 ತತ ಏಕಃ ಕರವಾಲೇನಾಹತ್ಯ ಪ್ರಧಾನಯಾಜಕಸ್ಯ ದಾಸಸ್ಯ ದಕ್ಷಿಣಂ ಕರ್ಣಂ ಚಿಚ್ಛೇದ|
௫0அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலது காது அறுந்து விழும்படி வெட்டினான்.
51 ಅಧೂನಾ ನಿವರ್ತ್ತಸ್ವ ಇತ್ಯುಕ್ತ್ವಾ ಯೀಶುಸ್ತಸ್ಯ ಶ್ರುತಿಂ ಸ್ಪೃಷ್ಟ್ವಾ ಸ್ವಸ್ಯಂ ಚಕಾರ|
௫௧அப்பொழுது இயேசு: போதும் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனை சுகப்படுத்தினார்.
52 ಪಶ್ಚಾದ್ ಯೀಶುಃ ಸಮೀಪಸ್ಥಾನ್ ಪ್ರಧಾನಯಾಜಕಾನ್ ಮನ್ದಿರಸ್ಯ ಸೇನಾಪತೀನ್ ಪ್ರಾಚೀನಾಂಶ್ಚ ಜಗಾದ, ಯೂಯಂ ಕೃಪಾಣಾನ್ ಯಷ್ಟೀಂಶ್ಚ ಗೃಹೀತ್ವಾ ಮಾಂ ಕಿಂ ಚೋರಂ ಧರ್ತ್ತುಮಾಯಾತಾಃ?
௫௨பின்பு இயேசு தமக்கு விரோதமாக வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்து படைத்தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து: ஒரு திருடனைப்பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே.
53 ಯದಾಹಂ ಯುಷ್ಮಾಭಿಃ ಸಹ ಪ್ರತಿದಿನಂ ಮನ್ದಿರೇಽತಿಷ್ಠಂ ತದಾ ಮಾಂ ಧರ್ತ್ತಂ ನ ಪ್ರವೃತ್ತಾಃ, ಕಿನ್ತ್ವಿದಾನೀಂ ಯುಷ್ಮಾಕಂ ಸಮಯೋನ್ಧಕಾರಸ್ಯ ಚಾಧಿಪತ್ಯಮಸ್ತಿ|
௫௩நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களோடுகூட இருக்கும்போது நீங்கள் என்னைப் பிடிக்கக் முற்படவில்லை; இதுதான் உங்களுடைய நேரமும் இருளின் அதிகாரமுமாக இருக்கிறது என்றார்.
54 ಅಥ ತೇ ತಂ ಧೃತ್ವಾ ಮಹಾಯಾಜಕಸ್ಯ ನಿವೇಶನಂ ನಿನ್ಯುಃ| ತತಃ ಪಿತರೋ ದೂರೇ ದೂರೇ ಪಶ್ಚಾದಿತ್ವಾ
௫௪அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய்விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்னேசென்றான்.
55 ಬೃಹತ್ಕೋಷ್ಠಸ್ಯ ಮಧ್ಯೇ ಯತ್ರಾಗ್ನಿಂ ಜ್ವಾಲಯಿತ್ವಾ ಲೋಕಾಃ ಸಮೇತ್ಯೋಪವಿಷ್ಟಾಸ್ತತ್ರ ತೈಃ ಸಾರ್ದ್ಧಮ್ ಉಪವಿವೇಶ|
௫௫அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான்.
56 ಅಥ ವಹ್ನಿಸನ್ನಿಧೌ ಸಮುಪವೇಶಕಾಲೇ ಕಾಚಿದ್ದಾಸೀ ಮನೋ ನಿವಿಶ್ಯ ತಂ ನಿರೀಕ್ಷ್ಯಾವದತ್ ಪುಮಾನಯಂ ತಸ್ಯ ಸಙ್ಗೇಽಸ್ಥಾತ್|
௫௬அப்பொழுது ஒரு வேலைக்காரி அவன் நெருப்பின் அருகிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடு இருந்தான் என்றாள்.
57 ಕಿನ್ತು ಸ ತದ್ ಅಪಹ್ನುತ್ಯಾವಾದೀತ್ ಹೇ ನಾರಿ ತಮಹಂ ನ ಪರಿಚಿನೋಮಿ|
௫௭அதற்கு அவன்: பெண்ணே, அவனை எனக்குத் தெரியாது என்று மறுதலித்தான்.
58 ಕ್ಷಣಾನ್ತರೇಽನ್ಯಜನಸ್ತಂ ದೃಷ್ಟ್ವಾಬ್ರವೀತ್ ತ್ವಮಪಿ ತೇಷಾಂ ನಿಕರಸ್ಯೈಕಜನೋಸಿ| ಪಿತರಃ ಪ್ರತ್ಯುವಾಚ ಹೇ ನರ ನಾಹಮಸ್ಮಿ|
௫௮சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான்.
59 ತತಃ ಸಾರ್ದ್ಧದಣ್ಡದ್ವಯಾತ್ ಪರಂ ಪುನರನ್ಯೋ ಜನೋ ನಿಶ್ಚಿತ್ಯ ಬಭಾಷೇ, ಏಷ ತಸ್ಯ ಸಙ್ಗೀತಿ ಸತ್ಯಂ ಯತೋಯಂ ಗಾಲೀಲೀಯೋ ಲೋಕಃ|
௫௯ஏறக்குறைய ஒருமணி நேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: உண்மையாகவே இவனும் அவனோடு இருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.
60 ತದಾ ಪಿತರ ಉವಾಚ ಹೇ ನರ ತ್ವಂ ಯದ್ ವದಮಿ ತದಹಂ ಬೋದ್ಧುಂ ನ ಶಕ್ನೋಮಿ, ಇತಿ ವಾಕ್ಯೇ ಕಥಿತಮಾತ್ರೇ ಕುಕ್ಕುಟೋ ರುರಾವ|
௬0அதற்குப் பேதுரு: மனிதனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவியது.
61 ತದಾ ಪ್ರಭುಣಾ ವ್ಯಾಧುಟ್ಯ ಪಿತರೇ ನಿರೀಕ್ಷಿತೇ ಕೃಕವಾಕುರವಾತ್ ಪೂರ್ವ್ವಂ ಮಾಂ ತ್ರಿರಪಹ್ನೋಷ್ಯಸೇ ಇತಿ ಪೂರ್ವ್ವೋಕ್ತಂ ತಸ್ಯ ವಾಕ್ಯಂ ಪಿತರಃ ಸ್ಮೃತ್ವಾ
௬௧அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப்பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வார்த்தையை உடனே பேதுரு நினைத்து,
62 ಬಹಿರ್ಗತ್ವಾ ಮಹಾಖೇದೇನ ಚಕ್ರನ್ದ|
௬௨வெளியேபோய், மனங்கசந்து அழுதான்.
63 ತದಾ ಯೈ ರ್ಯೀಶುರ್ಧೃತಸ್ತೇ ತಮುಪಹಸ್ಯ ಪ್ರಹರ್ತ್ತುಮಾರೇಭಿರೇ|
௬௩இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனிதர்கள் அவரைக் கேலிசெய்து, அடித்து,
64 ವಸ್ತ್ರೇಣ ತಸ್ಯ ದೃಶೌ ಬದ್ಧ್ವಾ ಕಪೋಲೇ ಚಪೇಟಾಘಾತಂ ಕೃತ್ವಾ ಪಪ್ರಚ್ಛುಃ, ಕಸ್ತೇ ಕಪೋಲೇ ಚಪೇಟಾಘಾತಂ ಕೃತವಾನ? ಗಣಯಿತ್ವಾ ತದ್ ವದ|
௬௪அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை தீர்க்கதரிசனத்தினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி,
65 ತದನ್ಯತ್ ತದ್ವಿರುದ್ಧಂ ಬಹುನಿನ್ದಾವಾಕ್ಯಂ ವಕ್ತುಮಾರೇಭಿರೇ|
௬௫மற்றும் அநேக அவதூறான வார்த்தைகளையும் அவருக்கு எதிராகப் பேசினார்கள்.
66 ಅಥ ಪ್ರಭಾತೇ ಸತಿ ಲೋಕಪ್ರಾಞ್ಚಃ ಪ್ರಧಾನಯಾಜಕಾ ಅಧ್ಯಾಪಕಾಶ್ಚ ಸಭಾಂ ಕೃತ್ವಾ ಮಧ್ಯೇಸಭಂ ಯೀಶುಮಾನೀಯ ಪಪ್ರಚ್ಛುಃ, ತ್ವಮ್ ಅಭಿಷಿಕತೋಸಿ ನ ವಾಸ್ಮಾನ್ ವದ|
௬௬விடியற்காலமானபோது மக்களின் மூப்பர்களும் பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் கூடிவந்து, தங்களுடைய ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி:
67 ಸ ಪ್ರತ್ಯುವಾಚ, ಮಯಾ ತಸ್ಮಿನ್ನುಕ್ತೇಽಪಿ ಯೂಯಂ ನ ವಿಶ್ವಸಿಷ್ಯಥ|
௬௭நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
68 ಕಸ್ಮಿಂಶ್ಚಿದ್ವಾಕ್ಯೇ ಯುಷ್ಮಾನ್ ಪೃಷ್ಟೇಽಪಿ ಮಾಂ ನ ತದುತ್ತರಂ ವಕ್ಷ್ಯಥ ನ ಮಾಂ ತ್ಯಕ್ಷ್ಯಥ ಚ|
௬௮நான் உங்களிடம் கேள்வி கேட்டாலும் எனக்கு பதில் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலையும் செய்யமாட்டீர்கள்.
69 ಕಿನ್ತ್ವಿತಃ ಪರಂ ಮನುಜಸುತಃ ಸರ್ವ್ವಶಕ್ತಿಮತ ಈಶ್ವರಸ್ಯ ದಕ್ಷಿಣೇ ಪಾರ್ಶ್ವೇ ಸಮುಪವೇಕ್ಷ್ಯತಿ|
௬௯இதுமுதல் மனிதகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபக்கத்தில் வீற்றிருப்பார் என்றார்.
70 ತತಸ್ತೇ ಪಪ್ರಚ್ಛುಃ, ರ್ತಿಹ ತ್ವಮೀಶ್ವರಸ್ಯ ಪುತ್ರಃ? ಸ ಕಥಯಾಮಾಸ, ಯೂಯಂ ಯಥಾರ್ಥಂ ವದಥ ಸ ಏವಾಹಂ|
௭0அதற்கு அவர்களெல்லோரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார்.
71 ತದಾ ತೇ ಸರ್ವ್ವೇ ಕಥಯಾಮಾಸುಃ, ರ್ತಿಹ ಸಾಕ್ಷ್ಯೇಽನ್ಸಸ್ಮಿನ್ ಅಸ್ಮಾಕಂ ಕಿಂ ಪ್ರಯೋಜನಂ? ಅಸ್ಯ ಸ್ವಮುಖಾದೇವ ಸಾಕ್ಷ್ಯಂ ಪ್ರಾಪ್ತಮ್|
௭௧அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

< ಲೂಕಃ 22 >