< Псалтирь 14 >

1 Начальнику хора. Сказал безумец в сердце своем: “нет Бога”. Они развратились, совершили гнусные дела; нет делающего добро.
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2 Господь с небес призрел на сынов человеческих, чтобы видеть, есть ли разумеющий, ищущий Бога.
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார்.
3 Все уклонились, сделались равно непотребными; нет делающего добро, нет ни одного.
எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை.
4 Неужели не вразумятся все, делающие беззаконие, съедающие народ мой, как едят хлеб, и не призывающие Господа?
அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை.
5 Там убоятся они страха, ибо Бог в роде праведных.
அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே.
6 Вы посмеялись над мыслью нищего, что Господь упование его.
ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.
7 “Кто даст с Сиона спасение Израилю!” Когда Господь возвратит пленение народа Своего, тогда возрадуется Иаков и возвеселится Израиль.
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

< Псалтирь 14 >