< Atos 2 >

1 E, cumprindo-se o dia de Pentecostes, estavam todos concordemente reunidos.
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே கூடிவந்திருந்தார்கள்.
2 E de repente veiu do céu um som, como de um vento vehemente e impetuoso, e encheu toda a casa em que estavam assentados.
அப்பொழுது பலத்தக் காற்று அடிக்கிறதுபோல, வானத்திலிருந்து திடீரென ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3 E foram vistas por elles linguas repartidas, como que de fogo, e pousaram sobre cada um d'elles.
அல்லாமலும் நெருப்புமயமான நாக்குகள்போல பிரிந்திருக்கும் நாக்குகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
4 E todos foram cheios do Espirito Sancto, e começaram a fallar n'outras linguas, conforme o Espirito Sancto lhes concedia que fallassem.
அவர்களெல்லோரும் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு மொழிகளிலே பேசத்தொடங்கினார்கள்.
5 E em Jerusalem estavam habitando judeos, varões religiosos, de todas as nações que estão debaixo do céu
வானத்தின்கீழே இருக்கிற எல்லா தேசத்திலுமிருந்து வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே தங்கியிருந்தார்கள்.
6 E, correndo aquella voz, ajuntou-se a multidão, e estava confusa, porque cada um os ouvia fallar na sua propria lingua.
அந்த சத்தம் உண்டானபோது, அநேக மக்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் மொழியிலே அவர்கள் பேசுகிறதை கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
7 E todos pasmavam e se maravilhavam, dizendo uns aos outros: Pois que! não são galileos todos esses homens que estão fallando?
எல்லோரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லோரும் கலிலேயர்கள் அல்லவா?
8 Como pois os ouvimos, cada um, na nossa propria lingua em que somos nascidos?
அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய தாய் மொழிகளிலே இவர்கள் பேசக்கேட்கிறோமே, இது எப்படி?
9 Parthos e medas, elamitas e os que habitam na Mesopotamia, e Judea, e Cappadocia, Ponto e Asia,
பார்த்தரும், மேதரும், ஏலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா,
10 E Phrygia e Pamphylia, Egypto e partes da Lybia, junto a Cyrene, e forasteiros romanos, tanto judeos como proselytos.
௧0பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனே பட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே வருகைதரும் ரோமாபுரியாரும், யூதர்களும், யூதமார்க்கத்தை பின்பற்றுகிறவர்களும்,
11 Cretenses e arabes, ouvimos todos em nossas proprias linguas fallar das grandezas de Deus.
௧௧கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய மொழிகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
12 E todos se maravilhavam e estavam suspensos, dizendo uns para os outros: Que quer isto dizer?
௧௨எல்லோரும் பிரமித்து சந்தேகப்பட்டு, இது என்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
13 E outros, zombando, diziam: Estão cheios de mosto.
௧௩மற்றவர்களோ: இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கிறார்கள் என்று கேலிசெய்தார்கள்.
14 Porém Pedro, pondo-se em pé com os onze, levantou a sua voz, e disse-lhes: Varões judeos, e todos os que habitaes em Jerusalem, seja-vos isto conhecido, e escutae as minhas palavras;
௧௪அப்பொழுது பேதுரு பதினொரு சீடர்களோடு நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாக: யூதர்களே, எருசலேமில் வசிக்கின்ற மக்களே, நீங்களெல்லோரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளைக் கேளுங்கள்.
15 Estes homens não estão embriagados, como vós pensaes, sendo a terceira hora do dia.
௧௫நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் மது அருந்தியவர்கள் அல்ல, பொழுதுவிடிந்து ஒன்பது மணியாக இருக்கிறதே.
16 Mas isto é o que foi dito pelo propheta Joel:
௧௬தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நிறைவேறுகிறது.
17 E nos ultimos dias acontecerá, diz Deus, que do meu Espirito derramarei sobre toda a carne; e os vossos filhos e as vossas filhas prophetizarão, os vossos mancebos terão visões, e os vossos velhos sonharão sonhos;
௧௭கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது உங்களுடைய குமாரர்களும் உங்களுடைய குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்; உங்களுடைய வாலிபர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்; உங்களுடைய மூப்பர்கள் கனவுகளைக் காண்பார்கள்;
18 E tambem do meu Espirito derramarei sobre os meus servos e as minhas servas n'aquelles dias, e prophetizarão;
௧௮என்னுடைய ஊழியக்காரர்கள்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்த நாட்களிலே என் ஆவியைப் பொழிவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள்.
19 E farei apparecer prodigios nas alturas, no céu; e signaes em baixo na terra, sangue, fogo e vapor de fumo:
௧௯அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், கீழே பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
20 O sol se converterá em trevas, e a lua em sangue, antes de chegar o grande e illustre dia do Senhor;
௨0கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வரும்முன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
21 E acontecerá que todo aquelle que invocar o nome do Senhor será salvo.
௨௧அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்’ என்று தேவன் உரைத்திருக்கிறார்.
22 Varões israelitas, escutae estas palavras: A Jesus Nazareno, varão approvado por Deus entre vós com maravilhas, prodigios e signaes, que Deus por elle fez no meio de vós, como vós mesmos bem sabeis:
௨௨“இஸ்ரவேலர்களே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த கிரியைகளையும், அற்புதங்களையும், அதிசயங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.
23 A este, sendo entregue pelo determinado conselho e presciencia de Deus, tomando-o vós, o crucificastes e matastes pelas mãos de injustos:
௨௩அப்படியிருந்தும், தேவன் நியமித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரர்களுடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.
24 Ao qual Deus resuscitou, soltas as dôres da morte, pois não era possivel que fosse retido por ella;
௨௪தேவன் அவருடைய மரணவேதனைகளின் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாமலிருந்தது.
25 Porque d'elle disse David: Sempre via diante de mim ao Senhor, porque está á minha direita, para que eu não seja commovido:
௨௫அவரைக்குறித்து தாவீது: கர்த்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபக்கத்திலே இருக்கிறார்;
26 Por isso se alegrou o meu coração, e a minha lingua exultou; e ainda a minha carne ha de repousar em esperança;
௨௬அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாக்கு களிகூர்ந்தது, என் சரீரமும் நம்பிக்கையோடு தங்கியிருக்கும்;
27 Pois não deixarás a minha alma no inferno, nem permittirás que o teu Sancto veja a corrupção: (Hadēs g86)
௨௭என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடமாட்டீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்; (Hadēs g86)
28 Fizeste-me conhecidos os caminhos da vida; com a tua face me encherás de jubilo.
௨௮ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.
29 Varões irmãos, seja-me licito dizer-vos livremente ácerca do patriarcha David, que elle morreu e foi sepultado, e entre nós está até hoje a sua sepultura.
௨௯சகோதரர்களே, “கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களோடு தைரியமாகப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்தநாள்வரை நம்மிடத்திலிருக்கிறது.
30 Sendo pois elle propheta, e sabendo que Deus lhe havia promettido com juramento que do fructo de seus lombos, segundo a carne, levantaria o Christo, para o assentar sobre o seu throno,
௩0அவன் தீர்க்கதரிசியாக இருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க உன் வம்சத்திலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன்” என்று தேவன் தனக்கு சத்தியம்பண்ணினதைத் தெரிந்தபடியால்,
31 Prevendo isto, fallou da resurreição de Christo, dizendo que a sua alma não foi deixada no inferno, nem a sua carne viu a corrupção. (Hadēs g86)
௩௧அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய சரீரம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்பே அறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். (Hadēs g86)
32 Deus resuscitou a este Jesus, do que todos nós somos testemunhas.
௩௨இந்த இயேசுவை தேவன் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாக இருக்கிறோம்.
33 De sorte que, exaltado já pela dextra de Deus, e recebendo do Pae a promessa do Espirito Sancto, derramou isto que vós agora vêdes e ouvis.
௩௩அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார்.
34 Porque David não subiu aos céus, mas diz: Disse o Senhor ao meu Senhor: Assenta-te á minha direita,
௩௪தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும்,
35 Até que ponha os teus inimigos por escabello de teus pés.
௩௫நீர் என் வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான்.
36 Saiba pois com certeza toda a casa d'Israel que a esse Jesus, a quem vós crucificastes, Deus o fez Senhor e Christo.
௩௬ஆகவே, நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் என்றான்.
37 E, ouvindo elles estas coisas, compungiram-se em seu coração, e disseram a Pedro e aos demais apostolos: Que faremos, varões irmãos?
௩௭இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து: சகோதரர்களே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
38 E disse-lhes Pedro: Arrependei-vos, e cada um de vós seja baptizado em nome de Jesus Christo, para perdão dos peccados; e recebereis o dom do Espirito Sancto;
௩௮பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வரத்தைப் பெறுவீர்கள்.
39 Porque a promessa vos pertence, a vós, a vossos filhos, e a todos os que estão longe: a tantos quantos Deus nosso Senhor chamar.
௩௯வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்களுடைய பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள அனைவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
40 E com muitas outras palavras testificava e os exhortava, dizendo: Salvae-vos d'esta geração perversa.
௪0இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த வம்சத்தை விட்டுவிலகி உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
41 De sorte que foram baptizados os que de bom grado receberam a sua palavra; e n'aquelle dia ajuntaram-se á egreja quasi tres mil almas;
௪௧அவனுடைய வார்த்தைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையதினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விசுவாசிகளின் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
42 E perseveravam na doutrina dos apostolos, e na communhão, e no partir do pão e nas orações.
௪௨அவர்கள் அப்போஸ்தலர்களுடைய போதனைகளிலும், ஐக்கியத்திலும், அப்பம் புசித்தலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாகத் தரித்திருந்தார்கள்.
43 E em toda a alma havia temor, e muitas maravilhas e signaes se faziam pelos apostolos.
௪௩எல்லோருக்கும் பயமுண்டானது. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அதிசயங்களும் செய்யப்பட்டது.
44 E todos os que criam estavam juntos, e tinham tudo em commum.
௪௪விசுவாசிகள் எல்லோரும் ஒன்றாக இருந்து, எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்.
45 E vendiam suas propriedades e fazendas, e repartiam com todos, segundo cada um havia de mister.
௪௫நிலங்களையும் சொத்துக்களையும்விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவைக்குத்தக்கதாக அவைகளில் எல்லோருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.
46 E, perseverando unanimes todos os dias no templo, e repartindo o pão de casa em casa, comiam juntos com alegria e singeleza de coração,
௪௬அவர்கள் ஒருமனப்பட்டவர்களாக தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்புசித்து மகிழ்ச்சியோடும் கபடம் இல்லாத இருதயத்தோடும் சாப்பிட்டு,
47 Louvando a Deus, e tendo graça para com todo o povo. E todos os dias accrescentava o Senhor á egreja aquelles que se haviam de salvar.
௪௭தேவனைத் துதித்து, மக்களெல்லோரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். மீட்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.

< Atos 2 >