< 1 João 5 >

1 Todo aquelle que crê que Jesus é o Christo é nascido de Deus; e todo aquelle que ama ao que o gerou tambem ama ao que d'elle é nascido.
இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறக்கச்செய்தவரிடம் அன்பு செலுத்துகிற எவனும் அவரால் பிறந்தவனிடமும் அன்பு செலுத்துகிறான்.
2 N'isto conhecemos que amamos os filhos de Deus, quando amamos a Deus e guardamos os seus mandamentos.
நாம் தேவனிடத்தில் அன்புசெலுத்தி அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று அறிந்துகொள்ளுகிறோம்.
3 Porque esta é a caridade de Deus: que guardemos os seus mandamentos; e os seus mandamentos não são pesados.
தேவனிடத்தில் அன்‌புகூறுவது என்பது அவருடைய கட்டளைகளைக் கடைபிடிப்பதே ஆகும்; அவருடைய கட்டளைகள் பாரமானவைகளும் இல்லை.
4 Porque todo o que é nascido de Deus vence o mundo; e esta é a victoria que vence o mundo, a nossa fé.
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை மேற்கொள்ளும் ஜெயம்.
5 Quem é aquelle que vence o mundo, senão aquelle que crê que Jesus é o Filho de Deus?
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனைத்தவிர உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
6 Este é aquelle que veiu por agua e sangue, Jesus, o Christo: não só por agua, mas por agua e por sangue. E o Espirito é o que testifica, porque o Espirito é a verdade.
இயேசுகிறிஸ்துவாகிய இவரே தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; தண்ணீரினாலே மாத்திரமல்ல, தண்ணீரினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாக இருப்பதினால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.
7 Porque tres são os que testificam no céu: o Pae, a Palavra, e o Espirito Sancto; e estes tres são um
பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் என்பவர்களே, இந்த மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்;
8 E tres são os que testificam na terra: o Espirito, e a agua, e o sangue; e estes tres concordam n'um.
பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.
9 Se recebemos o testemunho dos homens, o testemunho de Deus é maior; porque é este o testemunho de Deus, que de seu Filho testificou.
நாம் மனிதனுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறோம். அதைவிட தேவனுடைய சாட்சி மேன்மையாக இருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே.
10 Quem crê no Filho de Deus, em si mesmo tem o testemunho: quem a Deus não crê mentiroso o fez: porquanto não creu no testemunho que Deus de seu Filho deu
௧0தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே பெற்றிருக்கிறான்; தேவனை விசுவாசிக்காதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசிக்காததினால், அவரைப் பொய்யராக்குகிறான்.
11 E o testemunho é este: que Deus nos deu a vida eterna; e esta vida está em seu Filho. (aiōnios g166)
௧௧தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். (aiōnios g166)
12 Quem tem o Filho tem a vida: quem não tem o Filho de Deus não tem a vida.
௧௨குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
13 Estas coisas vos escrevi, a vós que crêdes no nome do Filho de Deus, para que saibaes que tendes a vida eterna, e para que creiaes no nome do Filho de Deus. (aiōnios g166)
௧௩உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். (aiōnios g166)
14 E esta é a confiança que temos para com elle, que, se pedirmos alguma coisa, segundo a sua vontade, elle nos ouve.
௧௪நாம் எதையாவது அவருடைய விருப்பத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்பதே அவரைப்பற்றி நாம் அறிந்திருக்கிற நம்பிக்கை.
15 E, se sabemos que nos ouve em tudo o que pedimos, sabemos que alcançamos as petições que lhe pedimos.
௧௫நாம் எதைக்கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார் என்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
16 Se alguem vir peccar seu irmão peccado que não é para morte, orará, e Deus dará a vida áquelles que não peccarem para morte. Ha peccado para morte, pelo qual não digo que ore
௧௬மரணத்திற்குரியதாக இல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்வதை ஒருவன் பார்த்தால், அவன் ஜெபம் செய்யவேண்டும், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்திற்குரியதாக இல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்திற்குரியதான பாவமும் உண்டு, அதைக்குறித்து ஜெபம்செய்ய நான் சொல்வதில்லை.
17 Toda a iniquidade é peccado: e ha peccado que não é para morte.
௧௭அநீதி எல்லாம் பாவம்தான்; என்றாலும் மரணத்திற்குரியதாக இல்லாத பாவமும் உண்டு.
18 Sabemos que todo aquelle que é nascido de Deus não pecca; mas o que de Deus é gerado conserva-se a si mesmo, e o maligno não lhe toca.
௧௮தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்யமாட்டான் என்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவனை தேவன் தீமையிலிருந்து காக்கிறார், சாத்தான் அவனைத் தொடமாட்டான்.
19 Sabemos que somos de Deus, e que todo o mundo jaz no maligno.
௧௯நாம் தேவனால் உண்டாயிருக்கிறோம் என்றும், உலகம் முழுவதும் சாத்தானுக்குள் இருக்கிறது என்றும் அறிந்திருக்கிறோம்.
20 Porém sabemos que já o Filho de Deus é vindo, e nos deu entendimento para conhecermos o que é verdadeiro; e no que é verdadeiro estamos, em seu Filho Jesus Christo. Este é o verdadeiro Deus e a vida eterna. (aiōnios g166)
௨0அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார். (aiōnios g166)
21 Filhinhos, guardae-vos dos idolos. Amen.
௨௧பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.

< 1 João 5 >