< II Królewska 9 >

1 A prorok Elizeusz zawołał jednego z synów proroków i powiedział mu: Przepasz swoje biodra, weź do ręki ten dzban z oliwą i idź do Ramot-Gilead.
அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஒருவனை அழைத்து: நீ பயணத்திற்கான உடையணிந்துகொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.
2 A gdy tam przybędziesz, zobaczysz tam Jehu, syna Jehoszafata, syna Nimsziego. Wejdź [tam], spraw, by powstał spośród swych braci i wprowadź go do najskrytszej komnaty.
நீ அங்கே சென்றபின்பு, நிம்சியின் மகனான யோசபாத்தின் மகன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே சென்று, அவனைத் தன் சகோதரர்களின் நடுவிலிருந்து எழுந்திருக்கச்செய்து, அவனை ஒரு உள் அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,
3 Następnie weź dzban oliwy, wylej na jego głowę i powiedz: Tak mówi PAN: Namaściłem cię na króla nad Izraelem. Potem otwórz drzwi i uciekaj, nie zwlekaj.
தைலக்குப்பியை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதிக்காமல் ஓடிப்போ என்றான்.
4 Poszedł więc ten młodzieniec – młody prorok – do Ramot-Gilead.
அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான்.
5 A gdy przybył, oto dowódcy wojska siedzieli. A on powiedział: Wodzu! Mam do ciebie słowo. Jehu zapytał: Do którego z nas wszystkich? I odpowiedział: Do ciebie, wodzu!
அவன் அங்கே சென்றபோது, சேனாதிபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாதிபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களில் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாதிபதியாகிய உமக்குத்தான் என்றான்.
6 Wtedy wstał i wszedł do domu, a tamten wylał oliwę na jego głowę i powiedział mu: Tak mówi PAN, Bóg Izraela: Namaściłem cię na króla nad ludem PANA, nad Izraelem.
அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் ஊற்றி: , அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் யெகோவாவுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன்.
7 Wytracisz dom Achaba, swego pana, ja bowiem pomszczę krew swoich sług, proroków i krew wszystkich sług PANA z ręki Jezabel.
நான் என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், யெகோவாவுடைய சகல ஊழியக்காரர்களின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படி நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடவேண்டும்.
8 I tak zginie cały dom Achaba. Wytępię [z domu] Achaba każdego, aż do najmniejszego szczenięcia, każdego więźnia i opuszczonego w Izraelu.
ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படி, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர்விடும் ஒரு நாய்முதலாக இருக்காதபடி, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடிமைபட்டவனையும் மற்றவனையும் கருவறுத்து,
9 I uczynię z domem Achaba jak z domem Jeroboama, syna Nebata, i jak z domem Baszy, syna Achiasza.
ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் குடும்பத்திற்கும், அகியாவின் மகனாகிய பாஷாவின் குடும்பத்திற்கும் சரியாக்குவேன்.
10 Psy zjedzą Jezabel na polu Jizreel i nie będzie nikogo, kto ją pogrzebie. Potem otworzył drzwi i uciekł.
௧0யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்செய்கிறவன் இல்லையென்று சொல்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.
11 A gdy Jehu wyszedł do sług swego pana, jeden z nich zapytał go: Czy wszystko dobrze? Po co ten szaleniec przyszedł do ciebie? Odpowiedział im: Wy znacie tego człowieka i jego słowa.
௧௧யெகூ தன் எஜமானுடைய ஊழியக்காரர்களிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்திற்கு எதற்காக வந்தான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனிதனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.
12 Oni powiedzieli: To nieprawda. Powiedz, proszę. A on powiedział: Tak a tak przemówił do mnie: Tak mówi PAN: Namaściłem cię na króla nad Izraelem.
௧௨அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்செய்தேன் என்று யெகோவா உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.
13 Wtedy wszyscy pospiesznie wzięli swoje szaty, podłożyli je pod niego na najwyższym stopniu, zadęli w trąbę i zawołali: Jehu jest królem!
௧௩அப்பொழுது அவர்கள் துரிதமாக அவரவர் தங்கள் ஆடைகளைப் படிகளின் உயரத்தில் அவனுக்கு கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.
14 Wtedy Jehu, syn Jehoszafata, syna Nimsziego, uknuł spisek przeciw Joramowi. (A w tym czasie Joram wraz z całym Izraelem strzegł Ramot-Gilead przed Chazaelem, królem Syrii.
௧௪அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் மகன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டினான்; யோராமோ இஸ்ரவேலர்கள் எல்லோரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்துவைத்தான்.
15 Lecz król Joram wrócił, by leczyć się w Jizreel z ran, które mu zadali Syryjczycy, gdy walczył z Chazaelem, królem Syrii). Jehu powiedział: Jeśli się na to zgadzacie, niech nikt nie wychodzi z miasta, aby pójść i oznajmić to w Jizreel.
௧௫ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே செய்த போரிலே, சீரியர்கள் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்வதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்; இது உங்களுக்குச் சம்மதமாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிச்செல்ல விடாதிருங்கள் என்றான்.
16 Następnie Jehu wsiadł na rydwan i pojechał do Jizreel, bo tam leżał Joram. Także Achazjasz, król Judy, przyjechał, aby odwiedzić Jorama.
௧௬அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாகக் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.
17 A gdy strażnik, który stał na wieży w Jizreel, zobaczył nadjeżdżający oddział Jehu, powiedział: Widzę oddział. Joram rzekł: Weź jeźdźca i wyślij [go] naprzeciw [nich], niech zapyta: Czy jest pokój?
௧௭யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பி சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.
18 Jeździec więc wyruszył mu naprzeciw i zapytał: Tak mówi król: Czy jest pokój? Jehu odpowiedział: Co tobie do pokoju? Zawróć i [jedź] za mną. Strażnik oznajmił: Posłaniec dotarł do nich, ale nie wraca.
௧௮அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்.
19 Wysłał więc drugiego jeźdźca, który przybył do nich i powiedział: Tak mówi król: Czy jest pokój? Jehu odpowiedział: Co tobie do pokoju? Zawróć i jedź za mną.
௧௯ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பின்னே திரும்பிவா என்றான்.
20 Strażnik znowu oznajmił: Dotarł do nich, ale nie wraca. A jego jazda jest jak jazda Jehu, syna Nimsziego, bo jedzie jak szalony.
௨0அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடம்வரை போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் மகனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாக ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.
21 Wtedy Joram powiedział: Zaprzęgaj. Zaprzężono więc jego rydwan. I Joram, król Izraela, i Achazjasz, król Judy, wyjechali, każdy na swoim rydwanie. Wyjechali naprzeciw Jehu i spotkali go na polu Nabota Jizreelity.
௨௧அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.
22 A gdy Joram zobaczył Jehu, zapytał: Czy jest pokój, Jehu? Odpowiedział: Co to za pokój, dopóki [trwają] cudzołóstwa Jezabel, twojej matki, i jej liczne czary.
௨௨யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கும்போது சமாதானம் ஏது என்றான்.
23 Wtedy Joram zawrócił i uciekł, mówiąc do Achazjasza: Zdrada, Achazjaszu!
௨௩அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.
24 A Jehu wziął do rąk łuk i trafił Jorama między ramiona tak, że strzała przeszyła jego serce, a on padł na swój rydwan.
௨௪யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் ஊடுருவிப் போகத்தக்கதாக, அவனை அவனுடைய புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.
25 Potem [Jehu] odezwał się do Bidkara, swego dowódcy: Weź go i porzuć na polu Nabota Jizreelity. Pamiętasz bowiem: gdy ja i ty jechaliśmy razem za Achabem, jego ojcem, PAN wydał przeciwko niemu ten wyrok:
௨௫அப்பொழுது யெகூ, தன் சேனாதிபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலயனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒன்றுசேர்ந்து அவனுடைய தகப்பனாகிய ஆகாபின் பின்னே குதிரையில் ஏறிவருகிறபோது, யெகோவா இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.
26 Z pewnością widziałem wczoraj krew Nabota i krew jego synów – mówi PAN. I zemszczę się na tobie na tym polu – mówi PAN. Teraz więc weź go i porzuć na polu według słowa PANA.
௨௬நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவனுடைய மகன்களின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது யெகோவா சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, யெகோவாவுடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.
27 Gdy zobaczył to Achazjasz, król Judy, zaczął uciekać drogą do domu ogrodowego. Lecz Jehu ścigał go i polecił: Tego także zabijcie na jego rydwanie. I [zranili go] na wzniesieniu Gur, które jest przy Jibleam. Uciekł do Megiddo i tam umarł.
௨௭இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாக ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் அருகில் இருக்கிற கூர் என்னும் மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே இறந்துபோனான்.
28 Jego słudzy przewieźli go do Jerozolimy i pogrzebali w jego grobie z jego ojcami w mieście Dawida.
௨௮அவனுடைய வேலைக்காரர்கள் அவனை இரதத்தில் ஏற்றி எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்செய்தார்கள்.
29 W jedenastym roku Jorama, syna Achaba, Achazjasz zaczął królować nad Judą.
௨௯இந்த அகசியா, ஆகாபுடைய மகனாகிய யோராமின் பதினோராம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
30 Potem Jehu przybył do Jizreel. Gdy Jezabel usłyszała o tym, pomalowała swoją twarz, upiększyła włosy i wyglądała przez okno.
௩0யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையை அலங்கரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து,
31 A gdy Jehu wjeżdżał przez bramę, zapytała: Czy miał pokój Zimri, który zabił swego pana?
௩௧யெகூ பட்டணத்து நுழைவாயிலுக்கு வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி பாதுகாக்கப்பட்டானா என்றாள்.
32 On zaś podniósł twarz ku oknu i zawołał: Kto [jest] ze mną? Kto? Wtedy wyjrzeli ku niemu dwaj [albo] trzej eunuchowie.
௩௨அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என்னுடன் இருக்கிறது யார் யார் என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று அதிகாரிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.
33 Powiedział im: Zrzućcie ją. Wtedy zrzucili ją. Jej krew obryzgała mur i konie, a on podeptał ją.
௩௩அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,
34 A gdy [tam] wszedł, najadł się i napił, potem powiedział: Zajmijcie się teraz tą przeklętą i pogrzebcie ją. Jest bowiem córką króla.
௩௪உள்ளேபோய், சாப்பிட்டுக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த பெண்ணைப் பார்த்து, அவளை அடக்கம் செய்யுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.
35 Poszli, aby ją pogrzebać, lecz nie znaleźli z niej nic poza czaszką, stopami i dłońmi.
௩௫அவர்கள் அவளை அடக்கம்செய்யப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையும் தவிர வேறொன்றையும் காணவில்லை.
36 Wrócili więc i oznajmili mu to. On zaś powiedział: [Wypełniło się] słowo PANA, które wypowiedział przez swego sługę Eliasza Tiszbitę: Na polu Jizreel psy zjedzą ciało Jezabel.
௩௬ஆகையால் அவர்கள் திரும்பிவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது யெகோவா திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,
37 A trup Jezabel będzie jak gnój leżący na powierzchni roli, na polu Jizreel, tak że nikt nie powie: To jest Jezabel.
௩௭இதுதான் யேசபேலென்று சொல்லமுடியாத அளவிற்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.

< II Królewska 9 >