< زکریا 13 >

در آن روز برای خاندان داود و ساکنان اورشلیم چشمه‌ای به جهت گناه ونجاست مفتوح خواهد شد. ۱ 1
அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிமக்களுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.
و یهوه صبایوت می‌گوید در آن روز نامهای بتها را از روی زمین منقطع خواهم ساخت که بار دیگر آنها رابیادنخواهند‌آورد و انبیا و روح پلید را نیز از زمین دور خواهم کرد. ۲ 2
அந்நாளிலே நான் விக்கிரகங்களின் பெயரும் தேசத்தில் இல்லாதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் செய்வேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
و هر‌که بار دیگر نبوت نمایدپدر و مادرش که او را تولید نموده‌اند، وی راخواهند گفت که زنده نخواهی ماند زیرا که به اسم یهوه دروغ می‌گویی. و چون نبوت نماید پدر ومادرش که او را تولید نموده‌اند، وی را عرضه تیغ خواهند ساخت. ۳ 3
இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவனை நோக்கி: நீ யெகோவாவுடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறதினால் நீ உயிரோடிருக்கக்கூடாது என்று சொல்லி, அவனைப்பெற்ற அவன் தகப்பனும் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள்.
و در آن روز هر کدام از آن انبیاچون نبوت می‌کنند، از رویاهای خویش خجل خواهند شد و جامه پشمین به جهت فریب دادن نخواهند پوشید. ۴ 4
அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய் சொல்லும்படிக்கு இனி கம்பளியைப் போர்த்துக்கொள்ளாமல்,
و هر یک خواهد گفت: من نبی نیستم بلکه زرع کننده زمین می‌باشم زیرا که ازطفولیت خود به غلامی فروخته شده‌ام. ۵ 5
நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைவாங்கினான் என்பான்.
و او راخواهند گفت: این جراحات که در دستهای تومی باشد چیست؟ و او جواب خواهد داد آنهایی است که در خانه دوستان خویش به آنها مجروح شده‌ام. ۶ 6
அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த தழும்புகள் என்னவென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான்.
یهوه صبایوت می‌گوید: «ای شمشیر به ضدشبان من و به ضد آن مردی که همدوش من است برخیز! شبان را بزن و گوسفندان پراکنده خواهندشد و من دست خود را بر کوچکان خواهم برگردانید.» ۷ 7
பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய மனிதன்மேலும் எழும்பு என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்கள்மேல் திரும்பவைப்பேன்.
و خداوند می‌گوید که «در تمامی زمین دوحصه منقطع شده خواهند مرد و حصه سوم درآن باقی خواهد ماند. ۸ 8
தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனிதர்கள் அழிக்கப்பட்டு இறந்துபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.
و حصه سوم را از میان آتش خواهم گذرانید و ایشان را مثل قال گذاشتن نقره قال خواهم گذاشت و مثل مصفی ساختن طلا ایشان را مصفی خواهم نمود و اسم مراخواهند خواند و من ایشان را اجابت نموده، خواهم گفت که ایشان قوم من هستند و ایشان خواهند گفت که یهوه خدای ما می‌باشد.» ۹ 9
அந்த மூன்றாம் பங்கை நான் நெருப்புக்குட்படச்செய்து, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் மக்களென்று நான் சொல்லுவேன், யெகோவா என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

< زکریا 13 >