< مزامیر 146 >

هللویاه! ای جان من خداوند راتسبیح بخوان! ۱ 1
அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, யெகோவாவை துதி.
تا زنده هستم، خداوند را حمد خواهم گفت. مادامی که وجوددارم، خدای خود را خواهم سرایید. ۲ 2
நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
بر روساتوکل مکنید و نه بر ابن آدم که نزد او اعانتی نیست. ۳ 3
பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
روح او بیرون می‌رود و او به خاک خودبرمی گردد و در همان روز فکرهایش نابودمی شود. ۴ 4
அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
خوشابحال آنکه خدای یعقوب مددکار اوست، که امید او بر یهوه خدای وی می‌باشد، ۵ 5
யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
که آسمان و زمین را آفرید و دریا و آنچه را که در آنهاست؛ که راستی را نگاه دارد تا ابدالاباد؛ ۶ 6
அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
که مظلومان را دادرسی می‌کند؛ و گرسنگان رانان می‌بخشد. خداوند اسیران را آزاد می‌سازد. ۷ 7
அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
خداوند چشمان کوران را باز می‌کند. خداوندخم شدگان را برمی افرازد. خداوند عادلان رادوست می‌دارد. ۸ 8
குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
خداوند غریبان را محافظت می‌کند و یتیمان و بیوه‌زنان را پایدار می‌نماید. لیکن طریق شریران را کج می‌سازد. ۹ 9
அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
خداوندسلطنت خواهد کرد تا ابدالاباد و خدای تو‌ای صهیون، نسلا بعد نسل. هللویاه! ۱۰ 10
௧0யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். அல்லேலூயா.

< مزامیر 146 >