< مزامیر 108 >

سرود و مزمور داود ای خدا دل من مستحکم است. من خواهم سرایید و ترنم خواهم نمودو جلال من نیز. ۱ 1
தாவீது பாடிய பாடல். தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும்.
‌ای عود و بربط بیدار شوید! من نیز در سحرگاه بیدار خواهم شد. ۲ 2
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.
‌ای خداوند، تو را در میان قوم‌ها حمد خواهم گفت و در میان طایفه‌ها تو را خواهم سرایید. ۳ 3
யெகோவாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
زیرا که رحمت توعظیم است، فوق آسمانها! و راستی تو تا افلاک می‌رسد! ۴ 4
உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.
‌ای خدا، بر فوق آسمانها متعال باش وجلال تو بر تمامی زمین! ۵ 5
தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
تا محبوبان تو خلاصی یابند. به‌دست راست خود نجات ده و مرا اجابت فرما. ۶ 6
உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.
خدا در قدوسیت خود سخن گفته است، پس وجد خواهم نمود. شکیم را تقسیم می‌کنم و وادی سکوت را خواهم پیمود. ۷ 7
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
جلعاد از آن من است و منسی از آن من. و افرایم خود سر من. ویهودا عصای سلطنت من. ۸ 8
கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.
موآب ظرف شست وشوی من است، و بر ادوم نعلین خود را خواهم‌انداخت و بر فلسطین فخر خواهم نمود. ۹ 9
மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.
کیست که مرا به شهر حصین درآورد؟ کیست که مرا به ادوم رهبری نماید؟ ۱۰ 10
௧0வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
آیا نه تو‌ای خداکه ما را ترک کرده‌ای؟ و تو‌ای خدا که بالشکرهای ما بیرون نمی آیی؟ ۱۱ 11
௧௧எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?
ما را بر دشمن امداد فرما، زیرا که مدد انسان باطل است. ۱۲ 12
௧௨இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.
درخدا با شجاعت کار خواهیم کرد و او دشمنان مارا پایمال خواهد نمود. ۱۳ 13
௧௩தேவனாலே வெற்றி பெறுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.

< مزامیر 108 >