< نحمیا 7 >

و چون حصار بنا شد و درهایش را برپانمودم و دربانان و مغنیان و لاویان ترتیب داده شدند، ۱ 1
மதில் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளர்களையும், பாடகர்களையும், லேவியர்களையும் ஏற்படுத்தினபின்பு,
آنگاه برادر خود حنانی و حننیارئیس قصر را، زیرا که او مردی امین و بیشتر ازاکثر مردمان خداترس بود، بر اورشلیم فرمان دادم. ۲ 2
நான் என்னுடைய சகோதரனாகிய அனானியையும், அநேகரைவிட உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்த அரண்மனைத் தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
و ایشان را گفتم دروازه های اورشلیم را تاآفتاب گرم نشود باز نکنند و مادامی که حاضرباشند، درها را ببندند و قفل کنند و از ساکنان اورشلیم پاسبانان قرار دهید که هر کس به پاسبانی خود و هر کدام به مقابل خانه خویش حاضرباشند. ۳ 3
அவர்களை நோக்கி: வெயில் ஏறும்வரை எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளை அடைத்து தாழ்ப்பாள் போட்டு, எருசலேமில் குடியிருக்கிற காவலாளர்கள் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
و شهر وسیع و عظیم بود و قوم در اندرونش کم و هنوز خانه‌ها بنا نشده بود. ۴ 4
பட்டணம் விசாலமும் பெரிதுமாக இருந்தது; அதற்குள்ளே மக்கள் குறைவாக இருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
و خدای من دردلم نهاد که بزرگان و سروران و قوم را جمع نمایم تا برحسب نسب نامه‌ها ثبت کردند و نسب نامه آنانی را که مرتبه اول برآمده بودند یافتم و در آن بدین مضمون نوشته دیدم: ۵ 5
அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்ப்பதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்ய, என்னுடைய தேவன் என்னுடைய மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முதலில் வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புத்தகம் அப்பொழுது எனக்கு கிடைத்தது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்:
اینانند اهل ولایتها که از اسیری آن اشخاصی که نبوکدنصر پادشاه بابل به اسیری برده بود، برآمده بودند و هر کدام از ایشان به اورشلیم و یهودا به شهر خود برگشته بودند. ۶ 6
பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
اما آنانی که همراه زربابل آمده بودند: یسوع و نحمیا و عزریا و رعمیا و نحمانی و مردخای و بلشان و مسفارت و بغوای و نحوم و بعنه. و شماره مردان قوم اسرائیل: ۷ 7
எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியேறினவர்களுமான இந்த தேசத்தின் ஆண்களாகிய இஸ்ரவேல் மக்களான மனிதர்களின் எண்ணிக்கையாவது:
بنی فرعوش، دوهزار و یک صد وهفتاد و دو. ۸ 8
பாரோஷின் வம்சத்தினர்கள் 2,172 பேர்.
بنی شفطیا، سیصد و هفتاد و دو. ۹ 9
செபத்தியாவின் வம்சத்தினர்கள் 372 பேர்.
بنی آرح، ششصد و پنجاه و دو. ۱۰ 10
௧0ஆராகின் வம்சத்தினர்கள் 652 பேர்.
بنی فحت موآب از بنی یشوع و یوآب، دو هزار و هشتصد وهجده. ۱۱ 11
௧௧யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
بنی عیلام، هزار و دویست و پنجاه وچهار. ۱۲ 12
௧௨ஏலாமின் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
بنی زتو، هشتصد و چهل و پنج. ۱۳ 13
௧௩சத்தூவின் வம்சத்தினர்கள் 845 பேர்.
بنی زکای، هفتصد و شصت. ۱۴ 14
௧௪சக்காயின் வம்சத்தினர்கள் 760 பேர்.
بنی بنوی، ششصد و چهل و هشت. ۱۵ 15
௧௫பின்னூயியின் வம்சத்தினர்கள் 648 பேர்.
بنی بابای، ششصد وبیست و هشت. ۱۶ 16
௧௬பெபாயின் வம்சத்தினர்கள் 628 பேர்.
بنی عزجد، دو هزار و سیصد وبیست و دو. ۱۷ 17
௧௭அஸ்காதின் வம்சத்தினர்கள் 2,322 பேர்.
بنی ادونیقام، ششصد و شصت وهفت. ۱۸ 18
௧௮அதோனிகாமின் வம்சத்தினர்கள் 667 பேர்.
بنی بغوای، دو هزار و شصت و هفت. ۱۹ 19
௧௯பிக்வாயின் வம்சத்தினர்கள் 2,067 பேர்.
بنی عادین، ششصد و پنجاه و پنج. ۲۰ 20
௨0ஆதீனின் வம்சத்தினர்கள் 655 பேர்.
بنی آطیراز (خاندان ) حزقیا، نود و هشت. ۲۱ 21
௨௧எசேக்கியாவின் சந்ததியான அதேரின் வம்சத்தினர்கள் 98 பேர்.
بنی حاشوم، سیصد و بیست و هشت. ۲۲ 22
௨௨ஆசூமின் வம்சத்தினர்கள் 328 பேர்.
بنی بیصای، سیصد وبیست و چهار. ۲۳ 23
௨௩பேசாயின் வம்சத்தினர்கள் 324 பேர்.
بنی حاریف، صد و دوازده. ۲۴ 24
௨௪ஆரீப்பின் வம்சத்தினர்கள் 112 பேர்.
بنی جبعون، نود و پنج. ۲۵ 25
௨௫கிபியோனின் வம்சத்தினர்கள் 95 பேர்.
مردمان بیت لحم ونطوفه، صد و هشتاد و هشت. ۲۶ 26
௨௬பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
مردمان عناتوت، صد و بیست و هشت. ۲۷ 27
௨௭ஆனதோத்தூர் மனிதர்கள் 128 பேர்.
مردمان بیت عزموت، چهل و دو. ۲۸ 28
௨௮பெத் அஸ்மாவேத் ஊரைச்சேர்ந்தவர்கள் 42 பேர்.
مردمان قریه یعاریم و کفیره و بئیروت، هفتصد و چهل و سه. ۲۹ 29
௨௯கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர்கள் 743 பேர்.
مردمان رامه و جبع، ششصد و بیست و یک. ۳۰ 30
௩0ராமா, கேபா ஊர்களின் மனிதர்கள் 621 பேர்.
مردمان مکماس، صد و بیست و دو. ۳۱ 31
௩௧மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் 122 பேர்.
مردمان بیت ایل و عای، صد و بیست و سه. ۳۲ 32
௩௨பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் 123 பேர்.
مردمان نبوی دیگر، پنجاه و دو. ۳۳ 33
௩௩வேறொரு நேபோ ஊரைச்சேர்ந்தவர்கள் 52 பேர்.
بنی عیلام دیگر، هزارو دویست و پنجاه و چهار. ۳۴ 34
௩௪மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
بنی حاریم، سیصدو بیست. ۳۵ 35
௩௫ஆரிம் வம்சத்தினர்கள் 320 பேர்.
بنی اریحا، سیصد و چهل و پنج. ۳۶ 36
௩௬எரிகோ வம்சத்தினர்கள் 345 பேர்.
بنی لود و حادید و اونو، هفتصد و بیست و یک. ۳۷ 37
௩௭லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
بنی سنائه، سه هزار و نه صد و سی. ۳۸ 38
௩௮செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
و اماکاهنان: بنی یدعیا از خاندان یشوع، نه صد و هفتادو سه. ۳۹ 39
௩௯ஆசாரியர்களானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் வம்சத்தினர்கள் 973 பேர்.
بنی امیر، هزار و پنجاه و دو. ۴۰ 40
௪0இம்மேரின் வம்சத்தினர்கள் 1,052 பேர்.
بنی فشحور، هزار و دویست و چهل و هفت. ۴۱ 41
௪௧பஸ்கூரின் வம்சத்தினர்கள் 1,247 பேர்.
بنی حاریم، هزار و هفده. ۴۲ 42
௪௨ஆரீமின் வம்சத்தினர்கள் 1,017 பேர்.
و اما لاویان: بنی یشوع از (خاندان ) قدمیئیل و از بنی هودویا، هفتاد و چهار. ۴۳ 43
௪௩லேவியர்களானவர்கள்: ஒதியாவின் சந்ததிக்குள்ளே கத்மியேலின் மகனாகிய யெசுவாவின் வம்சத்தினர்கள் 74 பேர்.
و مغنیان: بنی آساف، صد وچهل و هشت. ۴۴ 44
௪௪பாடகர்கள்: ஆசாபின் வம்சத்தினர்கள் 148 பேர்.
و دربانان: بنی شلوم و بنی آطیرو بنی طلمون و بنی عقوب و بنی حطیطه وبنی سوبای، صد و سی و هشت. ۴۵ 45
௪௫வாசல் காவலாளர்கள்: சல்லூமின் வம்சத்தினர்கள், அதேரின் வம்சத்தினர்கள், தல்மோனின் வம்சத்தினர்கள், அக்கூபின் வம்சத்தினர்கள், அதிதாவின் வம்சத்தினர்கள், சோபாயின் வம்சத்தினர்கள், ஆக 138 பேர்.
و اما نتینیم: بنی صیحه، بنی حسوفا، بنی طبایوت. ۴۶ 46
௪௬ஆலயப் பணியாளர்கள்: சீகாவின் வம்சத்தினர்கள், அசுபாவின் வம்சத்தினர்கள், தபாகோத்தின் வம்சத்தினர்கள்,
بنی فیروس، بنی سیعا، بنی فادون. ۴۷ 47
௪௭கேரோசின் வம்சத்தினர்கள், சீயாவின் வம்சத்தினர்கள், பாதோனின் வம்சத்தினர்கள்,
بنی لبانه، بنی حجابه، بنی سلمای. ۴۸ 48
௪௮லெபானாவின் வம்சத்தினர்கள், அகாபாவின் வம்சத்தினர்கள், சல்மாயின் வம்சத்தினர்கள்,
بنی حانان، بنی جدیل، بنی جاحر. ۴۹ 49
௪௯ஆனானின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள், காகாரின் வம்சத்தினர்கள்,
بنی رآیا، بنی رصین، بنی نقودا. ۵۰ 50
௫0ராயாகின் வம்சத்தினர்கள், ரேத்சீனின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள்,
بنی جزام، بنی عزا، بنی فاسیح. ۵۱ 51
௫௧காசாமின் வம்சத்தினர்கள், ஊசாவின் வம்சத்தினர்கள், பாசெயாகின் வம்சத்தினர்கள்,
بنی بیسای، بنی معونیم، بنی نفیشسیم. ۵۲ 52
௫௨பேசாயின் வம்சத்தினர்கள், மெயுநீமின் வம்சத்தினர்கள், நெபுசீமின் வம்சத்தினர்கள்,
بنی بقبوق، بنی حقوفا، بنی حرحور. ۵۳ 53
௫௩பக்பூக்கின் வம்சத்தினர்கள், அகுபாவின் வம்சத்தினர்கள், அர்கூரின் வம்சத்தினர்கள்,
بنی بصلیت، بنی محیده، بنی حرشا. ۵۴ 54
௫௪பஸ்லூதின் வம்சத்தினர்கள், மெகிதாவின் வம்சத்தினர்கள், அர்ஷாவின் வம்சத்தினர்கள்,
بنی برقوس، بنی سیسرا، بنی تامح. ۵۵ 55
௫௫பர்கோசின் வம்சத்தினர்கள், சிசெராவின் வம்சத்தினர்கள், தாமாவின் வம்சத்தினர்கள்,
بنی نصیح، بنی حطیفا. ۵۶ 56
௫௬நெத்சியாகின் வம்சத்தினர்கள், அதிபாவின் வம்சத்தினர்கள்,
و پسران خادمان سلیمان: بنی سوطای، بنی سوفرت، بنی فریدا. ۵۷ 57
௫௭சாலொமோனுடைய வேலைக்காரர்களின் வம்சத்தினர்கள்: சோதாயின் வம்சத்தினர்கள், சொபெரேத்தின் வம்சத்தினர்கள், பெரிதாவின் வம்சத்தினர்கள்,
بنی یعلا، بنی درقون، بنی جدیل. ۵۸ 58
௫௮யாலாவின் வம்சத்தினர்கள், தர்கோனின் வம்சத்தினர்கள், கித்தேலின் வம்சத்தினர்கள்,
بنی شفطیا، بنی حطیل، بنی فوخره حظبائیم، بنی آمون. ۵۹ 59
௫௯செபத்தியாவின் வம்சத்தினர்கள், அத்தீலின் வம்சத்தினர்கள், பொகெரேத் செபாயிமிலுள்ள வம்சத்தினர்கள், ஆமோனின் வம்சத்தினர்கள்.
جمیع نتینیم و پسران خادمان سلیمان، سیصدو نود و دو. ۶۰ 60
௬0ஆலய பணியாளர்களும், சாலொமோனுடைய வேலையாட்களின் வம்சத்தினர்களும் சேர்ந்து முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
و اینانند آنانی که از تل ملح و تل حرشاکروب و ادون و امیر برآمده بودند، اماخاندان پدران و عشیره خود را نشان نتوانستندداد که آیا از اسرائیلیان بودند یا نه. ۶۱ 61
௬௧தெல்மெலாகிலும், தெல் அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர்கள் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வத்தையும் சொல்லமுடியாமல் இருந்தவர்கள்:
بنی دلایا، بنی طوبیا، بنی نقوده، ششصد و چهل و دو. ۶۲ 62
௬௨தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
و ازکاهنان: بنی حبایا، بنی هقوص، بنی برزلای که یکی از دختران برزلایی جلعادی را به زنی گرفته بود، پس به نام ایشان مسمی شدند. ۶۳ 63
௬௩ஆசாரியர்களில் அபாயாவின் வம்சத்தினர்கள், கோசின் வம்சத்தினர்கள், கீலேயாத்தியனான பர்சிலாயின் மகள்களில் ஒருத்தியை திருமணம்செய்து, அவர்களுடைய வம்சத்தின் பெயரிடப்பட்ட பர்சிலாயியின் வம்சத்தினர்கள்.
اینان انساب خود را در میان آنانی که در نسب نامه هاثبت شده بودند طلبیدند، اما نیافتند، پس ازکهانت اخراج شدند. ۶۴ 64
௬௪இவர்கள் தங்களுடைய வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
پس ترشاتا به ایشان امر فرمود که تا کاهنی با اوریم و تمیم برقرار نشود، از قدس اقداس نخورند. ۶۵ 65
௬௫ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
تمامی جماعت با هم چهل و دو هزارو سیصد و شصت نفر بودند. ۶۶ 66
௬௬சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
سوای غلامان وکنیزان ایشان که هفت هزار و سیصد و سی و هفت نفر بودند و مغنیان و مغنیات ایشان دویست وچهل و پنج نفر بودند. ۶۷ 67
௬௭அவர்களைத்தவிர 7,337 பேர்களான அவர்களுடைய வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், 245 பாடகர்களும், பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
و اسبان ایشان، هفتصدو سی و شش و قاطران ایشان، دویست و چهل وپنج. ۶۸ 68
௬௮அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
و شتران، چهار صد و سی و پنج وحماران، ششهزار و هفتصد و بیست بود. ۶۹ 69
௬௯ஒட்டகங்கள் 435 கழுதைகள் 6,720.
و بعضی از روسای آبا هدایا به جهت کاردادند. اما ترشاتا هزار درم طلا و پنجاه قاب وپانصد و سی دست لباس کهانت به خزانه داد. ۷۰ 70
௭0வம்சத்தலைவர்களில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா 1,000 தங்கக்காசையும், 50 கலங்களையும், 530 ஆசாரிய உடைகளையும் பொக்கிஷத்திற்குக் கொடுத்தான்.
وبعضی از روسای آبا، بیست هزار درم طلا و دوهزار و دویست منای نقره به خزینه به جهت کاردادند. ۷۱ 71
௭௧வம்சத்தலைவர்களில் சிலர் வேலையின் பொக்கிஷத்திற்கு 20,000 தங்கக்காசுகளையும், 2,200 ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
و آنچه سایر قوم دادند این بود: بیست هزار درم طلا و دو هزار منای نقره و شصت وهفت دست لباس کهانت. ۷۲ 72
௭௨மற்ற மக்கள் 20,000 தங்கக்காசையும், 2,000 ராத்தல் வெள்ளியையும், 67 ஆசாரிய உடைகளையும் கொடுத்தார்கள்.
پس کاهنان و لاویان و دربانان و مغنیان و بعضی از قوم و نتینیم و جمیع اسرائیل، در شهرهای خود ساکن شدند و چون ماه هفتم رسید، بنی‌اسرائیل در شهرهای خودمقیم بودند. ۷۳ 73
௭௩ஆசாரியர்களும், லேவியர்களும், வாசல் காவலாளர்களும், பாடகர்களும், மக்களில் சிலரும், ஆலய பணியாளர்களும், இஸ்ரவேலர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் வம்சத்தினர்கள் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

< نحمیا 7 >