< یوشع 12 >

و اینانند ملوک آن زمین که بنی‌اسرائیل کشتند، و زمین ایشان را به آن طرف اردن به سوی مطلع آفتاب از وادی ارنون تا کوه حرمون، و تمامی عربه شرقی را متصرف شدند. ۱ 1
யோர்தான் நதிக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
سیهون ملک اموریان که در حشبون ساکن بود، واز عروعیر که به کناره وادی ارنون است، و ازوسط وادی و نصف جلعاد تا وادی یبوق که سرحد بنی عمون است، حکمرانی می‌کرد. ۲ 2
அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாப்போக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும்,
و ازعربه تا دریای کنروت به طرف مشرق و تا دریای عربه، یعنی بحرالملح به طرف مشرق به راه بیت یشیموت و به طرف جنوب زیر دامن فسجه. ۳ 3
சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரேத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் ஆட்சிசெய்தான்.
و سر حد عوج، ملک باشان، که از بقیه رفائیان بود و در عشتاروت و ادرعی سکونت داشت. ۴ 4
இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து,
ودر کوه حرمون و سلخه و تمامی باشان تا سر حدجشوریان و معکیان و بر نصف جلعاد تا سرحدسیهون، ملک حشبون حکمرانی می‌کرد. ۵ 5
எர்மோன் மலையையும் சல்காயிவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆட்சிசெய்தான்.
اینهارا موسی بنده خداوند و بنی‌اسرائیل زدند، وموسی بنده خداوند آن را به روبینیان و جادیان ونصف سبط منسی به ملکیت داد. ۶ 6
அவர்களைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான்.
و اینانند ملوک آن زمین که یوشع وبنی‌اسرائیل ایشان را در آن طرف اردن به سمت مغرب کشت، از بعل جاد در وادی لبنان، تا کوه حالق که به سعیر بالا می‌رود، و یوشع آن را به اسباط اسرائیل برحسب فرقه های ایشان به ملکیت داد. ۷ 7
யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
در کوهستان و هامون و عربه ودشتها و صحرا و در جنوب از حتیان و اموریان وکنعانیان و فرزیان و حویان و یبوسیان. ۸ 8
யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்:
یکی ملک اریحا و یکی ملک عای که در پهلوی بیت ئیل است. ۹ 9
எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயீயின் ராஜா ஒன்று,
و یکی ملک اورشلیم و یکی ملک حبرون. ۱۰ 10
௧0எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
و یکی ملک یرموت و یکی ملک لاخیش. ۱۱ 11
௧௧யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
و یکی ملک عجلون و یکی ملک جازر. ۱۲ 12
௧௨எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
و یکی ملک دبیر و یکی ملک جادر. ۱۳ 13
௧௩தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
و یکی ملک حرما و یکی ملک عراد. ۱۴ 14
௧௪ஓர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
و یکی ملک لبنه و یکی ملک عدلام. ۱۵ 15
௧௫லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
و یکی ملک مقیده و یکی ملک بیت ئیل. ۱۶ 16
௧௬மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
و یکی ملک تفوح و یکی ملک حافر. ۱۷ 17
௧௭தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
و یکی ملک عفیق و یکی ملک لشارون. ۱۸ 18
௧௮ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
و یکی ملک مادون و یکی ملک حاصور. ۱۹ 19
௧௯மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
و یکی ملک شمرون مرون و یکی ملک اکشاف. ۲۰ 20
௨0சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
و یکی ملک تعناک و یکی ملک مجدو ۲۱ 21
௨௧தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
و یکی ملک قادش و یکی ملک یقنعام در کرمل. ۲۲ 22
௨௨கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலைச் சார்ந்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
و یکی ملک دور در نافت دور و یکی ملک امتها در جلجال. ۲۳ 23
௨௩தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலைச்சேர்ந்த கோயிமின் ராஜா ஒன்று,
پس یکی ملک ترصه وجمیع ملوک سی و یک نفر بودند. ۲۴ 24
௨௪திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

< یوشع 12 >