< ارمیا 9 >

چشمه اشک. تا روز و شب برای کشتگان دختر قوم خود گریه می‌کردم. ۱ 1
ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் மக்களாகிய மகள் கொலைசெய்யப்பட கொடுத்தவர்களுக்காக நான் இரவும்பகலும் அழுவேன்.
کاش که در بیابان منزل مسافران می‌داشتم تا قوم خود را ترک کرده، از نزد ایشان می‌رفتم چونکه همگی ایشان زناکارو جماعت خیانت کارند. ۲ 2
ஆ, வனாந்திரத்தில் வழிப்போக்கரின் தங்குமிடம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் மக்களைவிட்டு, அவர்களிடத்தில் இருக்காமல் போய்விடுவேன்; அவர்களெல்லோரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.
زبان خویش را مثل کمان خود به دروغ می‌کشند. در زمین قوی شده‌اند اما نه برای راستی زیرا خداوند می‌گوید: «از شرارت به شرارت ترقی می‌کنند و مرانمی شناسند.» ۳ 3
அவர்கள் பொய்யைப் பயன்படுத்தத்தக்க தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்தில் பலப்படுவது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு முன்னேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
هر یک از همسایه خویش باحذر باشید و به هیچ برادر اعتماد منمایید زیراهر برادر از پا درمی آورد و هر همسایه به نمامی گردش می‌کند. ۴ 4
நீங்கள் அவனவன் தன்தன் நண்பனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்த சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்த சகோதரனும் மோசம்செய்கிறான், எந்த சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
و هر کس همسایه خود را فریب می‌دهد و ایشان براستی تکلم نمی نمایند و زبان خود را به دروغگویی آموخته‌اند و از کج رفتاری خسته شده‌اند. ۵ 5
அவர்கள் உண்மையைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை திட்டுகிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமம் செய்ய உழைக்கிறார்கள்.
خداوند می‌گوید که «مسکن تودر میان فریب است و از مکر خویش نمی خواهندکه مرا بشناسند.» ۶ 6
வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
بنابراین یهوه صبایوت چنین می‌گوید: «اینک من ایشان را قال گذاشته، امتحان خواهم نمود. زیرا به‌خاطر دختر قوم خود چه توانم کرد؟ ۷ 7
ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; என் மக்களாகிய மகளை வேறெந்தமுறையாக நடத்துவேன்?
زبان ایشان تیر مهلک است که به فریب سخن می‌راند. به زبان خود با همسایه خویش سخنان صلح‌آمیز می‌گویند، اما در دل خودبرای او کمین می‌گذارند.» ۸ 8
அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது பொய் பேசுகிறது; அவனவன் தன்தன் அருகிலுள்ளவனிடம் தன்தன் வாயினால் சமாதானமாகப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்தில் அவனைக் கொல்ல சதி செய்கிறான்.
پس خداوندمی گوید: «آیا به‌سبب این چیزها ایشان راعقوبت نرسانم و آیا جانم از چنین قومی انتقام نکشد؟» ۹ 9
இதற்காக அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.
برای کوهها گریه و نوحه گری و برای مرتعهای بیابان ماتم برپا می‌کنم زیرا که سوخته شده است و احدی از آنها گذر نمی کند و صدای مواشی شنیده نمی شود. هم مرغان هوا و هم بهایم فرار کرده و رفته‌اند. ۱۰ 10
௧0மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்திரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாமலிருக்க அவைகள் அழிக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; வானத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போனது.
و اورشلیم را به توده‌ها و ماوای شغالها مبدل می‌کنم و شهرهای یهودا را ویران و غیرمسکون خواهم ساخت. ۱۱ 11
௧௧நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாமல் அழித்துப்போடுவேன்.
کیست مرد حکیم که این را بفهمد و کیست که دهان خداوند به وی سخن گفته باشد تا از این چیزها اخبار نماید که چرا زمین خراب و مثل بیابان سوخته شده است که احدی از آن گذرنمی کند. ۱۲ 12
௧௨இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று யெகோவாவுடைய வாய் தன்னுடன் சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?
پس خداوند می‌گوید: «چونکه شریعت مرا که پیش روی ایشان گذاشته بودم ترک کردند وآواز مرا نشنیدند و در آن سلوک ننمودند، ۱۳ 13
௧௩நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும்,
بلکه پیروی سرکشی دل خود را نمودند، و از عقب بعلیم که پدران ایشان آنها را به ایشان آموختندرفتند.» ۱۴ 14
௧௪தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் முற்பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று யெகோவா சொல்லுகிறார்.
از این جهت یهوه صبایوت خدای اسرائیل چنین می‌گوید: «اینک من افسنتین راخوراک این قوم خواهم ساخت و آب تلخ به ایشان خواهم نوشانید. ۱۵ 15
௧௫ஆதலால், இதோ, நான் இந்த மக்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுத்து,
و ایشان را در میان امت هایی که ایشان و پدران ایشان آنها رانشناختند پراکنده خواهم ساخت و شمشیر را درعقب ایشان خواهم فرستاد تا ایشان را هلاک نمایم.» ۱۶ 16
௧௬அவர்களும், அவர்கள் முற்பிதாக்களும் அறியாத மக்களுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை அழிக்கும்வரை அதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
یهوه صبایوت چنین می‌گوید: «تفکر کنیدو زنان نوحه گر را بخوانید تا بیایند و در‌پی زنان حکیم بفرستید تا بیایند.» ۱۷ 17
௧௭நீங்கள் யோசனைசெய்து, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதில் பழகின பெண்களைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
و ایشان تعجیل نموده، برای ما ماتم برپا کنند تا چشمان ما اشکهابریزد و مژگان ما آبها جاری سازد. ۱۸ 18
௧௮அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்களில் கண்ணீர் வடியவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடுமளவும், ஒப்பாரி சொல்வார்களாக.
زیرا که آواز نوحه گری از صهیون شنیده می‌شود که چگونه غارت شدیم و چه بسیار خجل گردیدیم چونکه زمین را ترک کردیم و مسکن های ما ما رابیرون انداخته‌اند. ۱۹ 19
௧௯எவ்வளவாக அழிக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் இருப்பிடங்களை அவர்கள் இடித்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து ஏற்படுகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.
پس‌ای زنان، کلام خداوند را بشنوید و گوشهای شما کلام دهان اورا بپذیرد و شما به دختران خود نوحه گری راتعلیم دهید و هر زن به همسایه خویش ماتم را. ۲۰ 20
௨0ஆதலால் பெண்களே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் காது அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் மகள்களுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
زیرا موت به پنجره های ما برآمده، به قصرهای ما داخل شده است تا اطفال را از بیرون و جوانان را از چهارسوها منقطع سازد. ۲۱ 21
௨௧வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற வாலிபரையும் அழிக்கும் மரணம், நம்முடைய ஜன்னல்களிலேறி, நம்முடைய அரண்மனைகளில் நுழைந்தது.
خداوند چنین می‌گوید: «بگو که لاشهای مردمان مثل سرگین بر روی صحرا و مانند بافه درعقب دروگر افتاده است و کسی نیست که آن رابرچیند.» ۲۲ 22
௨௨மனிதரின் சடலங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னால் ஒருவனும் எடுக்காதிருக்கிற அரிக்கட்டைப்போலவும் கிடக்கும் என்று யெகோவா சொன்னாரென்று சொல்.
خداوند چنین می‌گوید: «حکیم، ازحکمت خود فخر ننماید و جبار، از تنومندی خویش مفتخر نشود و دولتمند از دولت خودافتخار نکند. ۲۳ 23
௨௩ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
بلکه هر‌که فخر نماید از این فخربکند که فهم دارد و مرا می‌شناسد که من یهوه هستم که رحمت و انصاف و عدالت را در زمین بجا می‌آورم زیرا خداوند می‌گوید در این چیزهامسرور می‌باشم.» ۲۴ 24
௨௪மேன்மைபாராட்டுகிறவன் பூமியில் கிருபையையும், நியாயத்தையும் நீதியையும் செய்கிற யெகோவா நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக் குறித்தே மேன்மைபாராட்டுவானாக என்று யெகோவா சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
خداوند می‌گوید: «اینک ایامی می‌آید که نامختونان را با مختونان عقوبت خواهم رسانید. ۲۵ 25
௨௫இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களுடன் விருத்தசேதனமுள்ள அனைவரையும்,
یعنی مصر و یهودا و ادوم و بنی عمون وموآب و آنانی را که گوشه های موی خود رامی تراشند و در صحرا ساکنند. زیرا که جمیع این امت‌ها نامختونند و تمامی خاندان اسرائیل در دل نامختونند.» ۲۶ 26
௨௬எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் மக்களையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்திரக்குடிகளான அனைவரையும் தண்டிப்பேன்; அந்நியமக்கள் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்தில் மாற்றமி ல்லாதவர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

< ارمیا 9 >