< Luo Corinth 5 >

1 Tuh kut etu lah ke manosr fin faclu ac fah musalla, su oana sie lohm nuknuk, oasr lohm sesr inkusrao su tia musa ke poun mwet a musaiyukla sin God, ac lohm se inge fah oan ma pahtpat. (aiōnios g166)
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். (aiōnios g166)
2 Ac inge kut sasao ke sripen kut arulana ke utyak nu in lohm sesr inkusrao.
ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்;
3 Na ke kut ac muta loac, oana kut in nuknukyang kac ac kut tila koflufol.
அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம்.
4 Ke kut muta in lohm nuknuk sesr faclu, kut sasao ke ma upa su toankuti; tia mweyen kut lungse sisla mano lasr fin faclu, a mweyen kut kena tari eis mano lasr inkusrao, tuh ma su moul in kutangla misa.
இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் சுமை சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டும் என்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக போர்வை தரித்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம்.
5 God pa akoekutla nu ke ekla se inge, ac El ase nu sesr Ngun lal in mwe akpwayei ke ma nukewa su El akoela nu sesr.
இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவி என்னும் உத்திரவாதத்தை நமக்குத் தந்தவரும் அவரே.
6 Ouinge kut arulana pulaik in pacl nukewa. Kut etu lah lusen na pacl kut oasr in mano lasr fin faclu, kut srakna loesla nu ke lohm sin Leum.
நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம்.
7 Tuh kut moul ke ma kut lulalfongi, tia ke ma kut liye.
இந்த சரீரத்தில் குடியிருக்கும்போது கர்த்தரிடம் குடியில்லாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிந்தும், எப்பொழுதும் தைரியமாக இருக்கிறோம்.
8 Nga sifilpa fahk, kut arulana pulaik ac kena yohk in fahsr liki mano lasr faclu ac som nu yen sesr yurin Leum.
நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம்.
9 Tusruktu ma se ma yohk sripa oemeet uh pa kut kena akinsewowoyal, finne in acn sesr inge, ku in kusrao.
அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம்.
10 Tuh kut nukewa fah tu ye mutun Christ in nununkeyuk sel. Kais sie sesr fah eis molin orekma lal ke el moul in mano, fal nu ke ma nukewa el oru, finne wo ku koluk.
௧0ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும்.
11 Kut etu lah mea kalmen sangeng sin Leum, ouinge kut srike in pwanma mwet ngia. God El etu ma nukewa kacsr, ac nga finsrak mu nunak na pwaye lowos in arulana eteyu pac.
௧௧எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன்.
12 Kut tia srike in sifil yukin kut sifacna nu suwos; a kut srike in asot sie sripa wo ma kowos ac ku in konkin kacsr, tuh kowos fah ku in topkolos su konkin ke lumah lun mwet se, ac tia ke elahl.
௧௨இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மீண்டும் பெருமைப்படுத்திக்கொள்ளாமல், இருதயத்தில் இல்லை, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே, எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படி வாய்ப்பை உண்டாக்குகிறோம்.
13 Ya pwaye mwet uh fahk mu kut wel? Fin pwaye, kut wel nu sin God. A kut fin etekut na, ma ke sripowos.
௧௩நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம்.
14 Inge, lungse lun Christ pa leum facsr, ke kut akilen lah sie mwet el misa ke mwet nukewa, su kalmac pa mwet nukewa wi ipeis ke misa lal.
௧௪கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்;
15 El misa ke mwet nukewa, tuh elos su moul fah tia moul nu selos sifacna, a nu sel su misa ac akmoulyeyukyak kaclos.
௧௫வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று வாழாமல், தங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தவருக்கென்று வாழ்வதற்காக, அவர் எல்லோருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம்.
16 Ke ma inge, kut tia sifilpa nunku ke kutena mwet fal nu ke liye lun mwet uh. Meet, kut tuh nunku kacl Christ fal nu ke liye lun mwet uh, a inge kut tia sifilpa oru.
௧௬எனவே, இனிமேல், நாங்கள் ஒருவனையும் சரீரத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் சரீரத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை சரீரத்தின்படி அறியோம்.
17 Ke sie mwet el kupasryang nu sin Christ, el sie mwet sasu; ma matu wanginla, ac ma sasu tuku.
௧௭இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது.
18 Ma inge nukewa oakwuk sin God, su, ke Christ, ikilkutla liki mwet lokoalok nu ke mwet kawuk lal, ac El ase nu sesr kunokon se inge, in oru tuh mwet ngia in mwet kawuk pac lal.
௧௮இவைகளெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
19 Pweng ma kut sulkakin uh pa inge: God El oru tuh mwet nukewa in mwet kawuk lal ke Christ. God El tia oakla ma koluk lalos, ac El akkalemye nu sesr ouiya se ma El oru tuh elos in mwet kawuk lal.
௧௯அது என்னவென்றால், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவிற்குள் அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடம் ஒப்புவித்தார்.
20 Ke ma inge, kut mwet in tafwema kas lun Christ, oana in God pa sifacna sensenkakin kowos ke mwe luti lasr. Kut kwafe suwos ke inen Christ: lela God Elan ikilkowosla liki mwet lokoalok nu ke mwet kawuk lal!
௨0ஆகவே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து, தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம்.
21 Wangin ma koluk lun Christ, a ke sripasr God El oru tuh elan ipeis ke ma koluk lasr, tuh ke kut kupasryang nu sel kut ku in ipeis ke suwoswos lun God.
௨௧நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதற்காக, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

< Luo Corinth 5 >