< 詩篇 91 >

1 いと高き者のもとにある隠れ場に住む人、全能者の陰にやどる人は
மகா உன்னதமானவரின் அடைக்கலத்தில் வாழ்கிறவன், எல்லாம் வல்லவரின் நிழலில் இளைப்பாறுவான்.
2 主に言うであろう、「わが避け所、わが城、わが信頼しまつるわが神」と。
நான் யெகோவாவைக் குறித்து, “அவரே என் புகலிடம், என் கோட்டை, நான் நம்பியிருக்கிற என் இறைவன்” என்று சொல்வேன்.
3 主はあなたをかりゅうどのわなと、恐ろしい疫病から助け出されるからである。
நிச்சயமாகவே அவர் உன்னை வேடனுடைய கண்ணியிலிருந்தும், கொன்றழிக்கும் கொள்ளைநோயிலிருந்தும் தப்புவிப்பார்.
4 主はその羽をもって、あなたをおおわれる。あなたはその翼の下に避け所を得るであろう。そのまことは大盾、また小盾である。
யெகோவா தமது சிறகுகளால் உன்னை மூடுவார்; அவருடைய சிறகுகளின் கீழே நீ புகலிடம் காண்பாய்; அவருடைய சத்தியம் உனது கேடயமும் கவசமுமாயிருக்கும்.
5 あなたは夜の恐ろしい物をも、昼に飛んでくる矢をも恐れることはない。
நீ இரவின் பயங்கரத்திற்கும், பகலில் பறக்கும் அம்புக்கும் பயப்படாதிருப்பாய்.
6 また暗やみに歩きまわる疫病をも、真昼に荒す滅びをも恐れることはない。
இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.
7 たとい千人はあなたのかたわらに倒れ、万人はあなたの右に倒れても、その災はあなたに近づくことはない。
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபக்கத்தில் பத்தாயிரம்பேரும் வீழ்ந்தாலும், அது உன்னை நெருங்காது.
8 あなたはただ、その目をもって見、悪しき者の報いを見るだけである。
உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து, கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய்.
9 あなたは主を避け所とし、いと高き者をすまいとしたので、
“யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்,
10 災はあなたに臨まず、悩みはあなたの天幕に近づくことはない。
அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது; கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.
11 これは主があなたのために天使たちに命じて、あなたの歩むすべての道であなたを守らせられるからである。
அவர் உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உன்னைக்குறித்து தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவார்;
12 彼らはその手で、あなたをささえ、石に足を打ちつけることのないようにする。
உன் பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உன்னைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள்.
13 あなたはししと、まむしとを踏み、若いししと、へびとを足の下に踏みにじるであろう。
நீ சிங்கத்தின்மேலும் விரியன்பாம்பின்மேலும் நடப்பாய்; இளஞ்சிங்கத்தையும் பாம்பையும் மிதிப்பாய்.
14 彼はわたしを愛して離れないゆえに、わたしは彼を助けよう。彼はわが名を知るゆえに、わたしは彼を守る。
யெகோவா இப்படியாக சொல்கிறார்: “அவன் என்னை நேசிக்கிறபடியால், நான் அவனை விடுவிப்பேன்; அவன் என் பெயரை அறிந்திருக்கிறபடியால், நான் அவனைப் பாதுகாப்பேன்.
15 彼がわたしを呼ぶとき、わたしは彼に答える。わたしは彼の悩みのときに、共にいて、彼を救い、彼に光栄を与えよう。
அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்குப் பதில் கொடுப்பேன்; துன்பத்தில் நான் அவனோடிருந்து, அவனை விடுவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
16 わたしは長寿をもって彼を満ち足らせ、わが救を彼に示すであろう。
நீண்ட ஆயுளால் நான் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.”

< 詩篇 91 >