< 詩篇 26 >

1 ダビデの歌 主よ、わたしをさばいてください。わたしは誠実に歩み、迷うことなく主に信頼しています。
தாவீதின் சங்கீதம். யெகோவாவே, என்னை நியாயப்படுத்திக் காட்டும், ஏனெனில் நான் உத்தமமாய் நடக்கிறேன்; நான் யெகோவாவை நம்பியிருக்கிறேன், நான் தடுமாறுவதில்லை.
2 主よ、わたしをためし、わたしを試み、わたしの心と思いとを練りきよめてください。
யெகோவாவே, என்னைச் சோதியும், என்னைப் பரிசோதித்துப் பாரும், என் இருதயத்தையும் என் மனதையும் ஆராய்ந்து பாரும்;
3 あなたのいつくしみはわたしの目の前にあり、わたしはあなたのまことによって歩みました。
ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு எப்பொழுதும் என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; நான் உமது சத்தியத்தின்படியே வாழ்கிறேன்.
4 わたしは偽る人々と共にすわらず、偽善者と交わらず、
ஏமாற்றுகிறவர்களோடு நான் உட்காருவதில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருகிறதுமில்லை;
5 悪を行う者のつどいを憎み、悪しき者と共にすわることをしません。
தீமை செய்கிறவர்களின் கூட்டத்தை நான் அருவருக்கிறேன், கொடியவர்களுடன் உட்காரவும் மறுக்கிறேன்.
6 主よ、わたしは手を洗って、罪のないことを示し、あなたの祭壇をめぐって、
யெகோவாவே, நான் குற்றமில்லாமை விளங்கும்படி என் கைகளைக் கழுவி, உமது துதியைப் பிரசித்தப்படுத்தி,
7 感謝の歌を声高くうたい、あなたのくすしきみわざをことごとくのべ伝えます。
உமது அதிசயமான செயல்களையெல்லாம் விவரித்துக்கொண்டு, உமது பீடத்தைச் சுற்றிவருகிறேன்.
8 主よ、わたしはあなたの住まわれる家と、あなたの栄光のとどまる所とを愛します。
யெகோவாவே, உமது மகிமை குடியிருக்கும் இடமாகிய, நீர் வாழும் ஆலயத்தை நான் நேசிக்கிறேன்.
9 どうか、わたしを罪びとと共に、わたしのいのちを、血を流す人々と共に、取り去らないでください。
பாவிகளோடு என் ஆத்துமாவையும், இரத்தப் பிரியரோடு என் உயிரையும் எடுத்துக் கொள்ளாதேயும்.
10 彼らの手には悪い企てがあり、彼らの右の手は、まいないで満ちています。
அவர்களுடைய கைகளில் கொடுமையான சதித்திட்டங்களிருக்கின்றன; அவர்களின் வலதுகைகள் இலஞ்சங்களால் நிறைந்திருக்கின்றன.
11 しかしわたしは誠実に歩みます。わたしをあがない、わたしをあわれんでください。
ஆனால் நான் என் உத்தமத்திலே வாழ்வேன்; என்னை மீட்டெடுத்து என்மீது இரக்கமாயிரும்.
12 わたしの足は平らかな所に立っています。わたしは会衆のなかで主をたたえましょう。
என் பாதங்கள் நேர்மையான இடத்தில் நிற்கின்றன; நான் யெகோவாவை மகா சபையில் துதிப்பேன்.

< 詩篇 26 >