< תהילים 143 >

מזמור לדוד יהוה שמע תפלתי-- האזינה אל-תחנוני באמנתך ענני בצדקתך 1
தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.
ואל-תבוא במשפט את-עבדך כי לא-יצדק לפניך כל-חי 2
உயிருள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமானாக இல்லாததினாலே, அடியேனை நியாயத்தீர்ப்புச் செய்யாமல் இரும்.
כי רדף אויב נפשי-- דכא לארץ חיתי הושבני במחשכים כמתי עולם 3
எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.
ותתעטף עלי רוחי בתוכי ישתומם לבי 4
என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
זכרתי ימים מקדם-- הגיתי בכל-פעלך במעשה ידיך אשוחח 5
ஆரம்பநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் செயல்களை யோசிக்கிறேன்.
פרשתי ידי אליך נפשי כארץ-עיפה לך סלה 6
என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)
מהר ענני יהוה-- כלתה רוחי אל-תסתר פניך ממני ונמשלתי עם-ירדי בור 7
யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்.
השמיעני בבקר חסדך-- כי-בך בטחתי הודיעני דרך-זו אלך-- כי-אליך נשאתי נפשי 8
அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கச்செய்யும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
הצילני מאיבי יהוה-- אליך כסתי 9
யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன்.
למדני לעשות רצונך-- כי-אתה אלוהי רוחך טובה תנחני בארץ מישור 10
௧0உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்தட்டும்.
למען-שמך יהוה תחיני בצדקתך תוציא מצרה נפשי 11
௧௧யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.
ובחסדך תצמית איבי והאבדת כל-צררי נפשי--כי אני עבדך 12
௧௨உம்முடைய கிருபையின்படி என்னுடைய எதிரிகளை அழித்து, என்னுடைய ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் அழியும்; நான் உமது அடியேன்.

< תהילים 143 >