< Luka 13 >

1 Bi nub yab n den ye li kan den mad yesu, li yogunu gog yal n den cua galileb yaab ki pilat den kpab ki tan ye sagl.
அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
2 O ŋiab: Edaan ki lan galile nub n tie bid danb ki cie yaa galile n sien nni, kelma wan kpab yeni?
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3 kai, n maad e, e yaa lebd e yeyienu, e kul ba kpe nan ban yene.
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.
4 lan yaã ka, a piga n nuniida yab ki silo diegu baa kpaab yen, e daan ki ban n tien ti bid ki cie galile yaabaa?
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
5 Kai n yed yi, ki yi moko yaa lebd yi yam yi kul baa bod yene.
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.
6 Lan, yesu den pua n naa kpanjam ki yed: O jaa den ŋuu o kankanbu o dumontiibu kuan nni. O den cua ki ling a kankana waa laa.
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.
7 Lan wan o den yed o kuanguulo: diid bina taa kin cuon ki ling o kankanb ne po a kankana, mii laad. Ped o be yaa po k o kub n fanfanm fanm fanm?
அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
8 O kuan guulo den ñian o k yed: canbaa ced wan bind dun gog. n baa gbiidk lind o k tien o t yan biind.
அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்,
9 daal ba ya bin n ŋua oba lo yaalan ŋan ped o.
கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
10 Dan yenl n fuodm daal, yesu den tund b nub li daal maam bangm diel nni.
௧0ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
11 o pua den ye lienni k pia t tag bid, yal n den ced k o yia hal piig n bena niin, k o tiib. k gunb k kan fid k yaal k sed.
௧௧அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள்.
12 Yesu den laao, k maad an yed: o pua ne, a paag a yianun po.
௧௨இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
13 O den maam o po o nugi. lanyogunu leg, o pua yen den yaab k sed, k kpiagd o tienu.
௧௩அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
14 Ama li bal maam bangm tiel camba pal b den biid yesu n paag o nulo m fuodm daal.
௧௪இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
15 Yom daan den guan k yed o: yinb palalie danb, li naan m fuodm daal yi siign yua kul k yi lod o nua, lan yaa ka o ŋunbo ki ñan o li yandiel nni k banñun o?
௧௫கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
16 O pua yua n tie abalaham yabl k staan lol o hal piig n bena niin, laa pund min faab o n fuodm daalii?
௧௬இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
17 Wan den maad yaa yogunu, efe den cuo o nanda kul. ama onuwunlgu pal den mang yen wan tund yaa banm kel pia t kpiagd kul.
௧௭அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.
18 Yesu go den yed: o tienu diem naan yen be? n ba nangm yen be?
௧௮அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
19 O tie nan ya tub ya bobim n wa k cie e tiid kul, k o nulo bulo o kuanu nni, k o pud k kped k tua tub. A bonyugda den ted t ted di o bena po.
௧௯அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
20 O go den yed: Nba mang o tienu diem yen be?
௨0மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
21 O naan yen ya dabinl k o pua taa tien bignm taan, k sien hal k li kul ga.
௨௧அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.
22 Yesu den suag liig, ki muand e dog ciam yen a dogibla nni, ban ca jelusalem.
௨௨அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.
23 O nulo den yed o: ti yomdano lan wan ya nulb n ba ciad kaa yab? Yesu den guan ki yed yab n ye li kan.
௨௩அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
24 Moand man ki kua yaa buluñoabu n miab kan, kelma n tuod ki wan yi ki bi nub boncianl ba te moa ban kua li kan ki nan kan fid.
௨௪இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25 O diedaano ya fi ki luon o duñuabu, ki bi tua: canba luod ti po. O ba guan ki yed yi: Mii ban yin ñan naan.
௨௫வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26 lan wan yi ba guan ki yed o: tiTi den din ki ba ñun a go den ban g ti e dog san nni moko.
௨௬அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27 O go ba guan ki yed yi: N yed yi, mii ban yi ñan naan, fuad nan n kan, yinb yab n tiend ti biad.
௨௭ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28 Lan yogunu yi ya la abalaham, isaak jakob yen bi sawalpuab kulki bi ye otien diem nni, ki yinb wan ba ya ye niinpo, yi ba ya buud ki cegn yi ñina.
௨௮நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
29 bi nub ba ti ña nintual, yen puol po, nuganu yen nujienu po ki taan ki kal o tienu diem o sa dikanu kan.
௨௯கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
30 diid, bi tianb yab n tie puol yab moala, ba tua liig yab mo ba tua puol yab.
௩0அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
31 lan yogunu fadisieninba bi tab den cua o kan ki yed o: ña ne kelma hedod bua ki kpaŋg
௩௧அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள்.
32 Oden guan ki yed ba yed ban, yed man li ŋaago, ki n diel ki nand ti tag biad bi nub niinni, ki go paabd bi nub din ne yen saala, li dataal daal n ba soan ki juod
௩௨அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
33 li tie doole min suag liig din yen ya daal n ŋua, kelma laa dagd sawalpualo n kpe ki laa tie jedusalem.
௩௩இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
34 jedusalem, jedusalem, fini yua kpa bi sawalpuab, ki luud o tienu n soan a kan yab a tana, tualmi ŋa ke n den bua ki gogd taani a nuba n kan nani o kokolo n li wuug o koobila o fiabi nni maam, ama yii den tuo.
௩௪எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது.
35 Lan yaa ka, yi diegu baatua dingbengu. N maad yi, yi kan go lan hal yin ba yed ya yogunu: O tieŋanm nu n ba yad o yed yab, n cuon wan ti yomdan yel nni.
௩௫இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

< Luka 13 >