< Psaumes 96 >

1 Quand le temple fut rebâti après la captivité, cantique de David. Chantez au Seigneur un cantique nouveau; que toute la terre chante au Seigneur!
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லோரும் யெகோவாவைப் பாடுங்கள்.
2 Chantez au Seigneur; bénissez son nom; publiez avec joie son salut de jour en jour.
யெகோவாவைப் பாடி, அவருடைய பெயருக்கு நன்றி சொல்லி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாக அறிவியுங்கள்.
3 Publiez aux Gentils sa gloire, et ses merveilles à tous les peuples,
தேசங்களுக்குள் அவருடைய மகிமையையும், எல்லா மக்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
4 Car le Seigneur est grand et digne de louanges infinies; il est plus terrible que tous les dieux.
யெகோவா பெரியவரும், மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தெய்வங்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
5 Car tous les dieux des Gentils sont des démons; mais le Seigneur a créé les cieux.
எல்லா மக்களுடைய தெய்வங்களும் விக்கிரகங்கள்தானே; யெகோவாவோவானங்களை உண்டாக்கினவர்.
6 Louanges et beauté sont en sa présence; la sainteté et la majesté sont en son sanctuaire.
மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
7 Tribus des Gentils, rendez au Seigneur, rendez à Dieu gloire et honneur.
மக்களின் வம்சங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
8 Rendez gloire au Seigneur et à son nom; prenez des victimes et entrez dans ses parvis.
யெகோவாவுக்கு அவருடைய பெயருக்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய முற்றங்களில் நுழையுங்கள்.
9 Adorez le Seigneur en son temple saint, et que devant sa face tremble toute la terre.
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்; பூமியில் உள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
10 Dites aux Gentils: Le Seigneur règne, car il a affermi le globe de la terre, et il ne sera plus ébranlé; il jugera les peuples avec droiture.
௧0யெகோவா ராஜரிகம்செய்கிறார், ஆகையால் உலகம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும். அவர் மக்களை நிதானமாக நியாயந்தீர்ப்பார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லுங்கள்.
11 Que les cieux se réjouissent et que la terre tressaille d'allégresse; que la mer en sa plénitude soit émue.
௧௧வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, கடலும் அதின் நிறைவும் முழங்குவதாக.
12 Les champs et tout ce qu'ils renferment se réjouiront; alors tressailliront les arbres de la forêt
௧௨நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; அப்பொழுது யெகோவாவுக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
13 Devant la face du Seigneur; car il vient, car il vient juger la terre. Il jugera le monde selon sa justice, et les peuples selon sa vérité.
௧௩அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியோடும், மக்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

< Psaumes 96 >