< 4 Mosebog 29 >

1 På den første Dag i den syvende Måned skal I holde Højtidsstævne, intet som helst Arbejde må I udføre; I skal fejre den som en Hornblæsningsdag.
“‘ஏழாம் மாதம் முதலாம்தேதி பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு எக்காளங்களை ஊதும் நாளாயிருக்கிறது.
2 Da skal I som Brændoffer til en liflig Duft for HERREN ofre en ung Tyr, en Væder og syv årgamle Lam, lydefri Dyr;
அன்றைய நாளில் ஒரு இளங்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
3 som Afgrødeoffer dertil fint Hvedemel, rørt i Olie, tre Tiendedele Efa for Tyren, to Tiendedele for Væderen
காளையுடன், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவுடன் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையைச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதம் செலுத்தவேண்டும்.
4 og en Tiendedel for hvert af de syv Lam;
அவ்விதமே ஏழு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான சிறந்த மாவைச் செலுத்தவேண்டும்.
5 desuden en Gedebuk som Syndoffer for at skaffe eder Soning;
உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
6 alt foruden Nymånebrændofferet med tilhørende Afgrødeoffer og det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikofre efter de derom gældende forskrifter, til en liflig Duft, et Ildoffer for HERREN.
இவை குறிப்பிடப்பட்ட மாதாந்திர தகன காணிக்கையுடனும், அன்றாட தகன காணிக்கையுடனும், அவற்றிற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் இவைகளையும் செலுத்தப்பட வேண்டும். இவை மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளாகும்.
7 På den tiende dag i samme syvende Måned skal I holde Højtidsstævne, I skal faste og må intet som helst Arbejde udføre.
“‘இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் நீங்கள் உங்களை தாழ்மைப்படுத்தி உபவாசிக்கவேண்டும். எந்த வேலையையும் செய்யவேண்டாம்.
8 Da skal I som Brændoffer til en liflig duft for HERREN ofre en ung Tyr, en Væder og syv årgamle Lam, lydefri Dyr skal I tage,
ஒரு இளம்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
9 og som Afgrødeoffer dertil fint Hvedemel, rørt i Olie, tre Tiendedele Efa for Tyren, to Tiendedele for Væderen
காளையுடன் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து, அதைத் தானிய காணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே கொண்டுவர வேண்டும்.
10 og en Tiendedel for hvert af de syv Lam;
ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும்.
11 desuden en Gedebuk som Syndoffer; alt foruden Soningssyndoffe, det og det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikofre.
பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதைப் பாவநிவிர்த்திக்கான பாவநிவாரண காணிக்கையுடனும், வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவைகளுக்குரிய பானகாணிக்கைகளோடும் இவைகளையும் செலுத்தவேண்டும்.
12 På den femtende Dag i den syvende Måned skal I holde Højtidsstævne, I må intet som helst Atbejde udføre, og I skal holde Højtid for HERREN i syv Dage.
“‘ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியும் ஒரு பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்நாளில் வழக்கமான வேலை எதையுமே செய்யக்கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும்.
13 Da skal I som Brændoffer, som Ildoffer til en liflig Duft for HERREN ofre tretten unge Tyre, to Vædre og fjorten årgamle Lam, lydefri Dyr skal det være,
அந்நாளில் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும். பதின்மூன்று இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் தகன காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
14 og som Afgrødeoffer dertil fint Hvedemel, rørt i Olie, tre Tiendedele Efa for hver af de tretten Tyre, to Tiendedele for hver af de to Vædre
அந்த பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுடனும், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களில் ஒவ்வொன்றுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும்.
15 og en Tiendedel for hvert af de fjorten Lam;
பதினான்கு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்தில் ஒரு எப்பா அளவான மாவை அவ்விதமே செலுத்தவேண்டும்.
16 desuden en Gedebuk som Syndoffer; alt foruden det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikoffer.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் கூடுதலாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
17 På den anden Dag skal I ofre tolv unge Tyre, to Vædre og fjorten årgamle Lam, lydefri Dyr,
“‘இரண்டாம் நாளில் பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.
18 med tilhørende Afgrødeoffer og Drikofre for Tyrene, Vædrene og Lammene efter deres Tal på den foreskrevne Måde;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
19 desuden en Gedebuk som Syndoffer; alt foruden det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikoffer.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவற்றின் பானகாணிக்கைகளுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 På den tredje Dag skal I ofre elleve unge Tyre, to Vædre og fjorten årgamle Lam, lydefri Dyr,
“‘மூன்றாம் நாளில் பதினோரு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
21 med tilhørende Afgrødeoffer og Drikofre for Tyrene, Vædrene og Lammene efter deres Tal på den foreskrevne Måde;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
22 desuden en Gedebuk som Syndoffer; alt foruden det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikoffer.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
23 På den fjerde Dag skal I ofre ti Tyre, to Vædre og fjorten årgamle Lam, lydefri Dyr,
“‘நான்காம் நாளில் பத்து காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
24 med tilhørende Afgrødeoffer og Drikofre for Tyrene, Vædrene og Lammene efter deres Tal på den foreskrevne Måde;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
25 desuden en Gedebuk som Syndoffer; alt foruden det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikoffer.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
26 På den femte Dag skal I ofre ni Tyre, to Vædre og fjorten årgamle Lam, lydefri Dyr,
“‘ஐந்தாம் நாளில் ஒன்பது காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.
27 med tilhørende Afgrødeoffer og Drikofre for Tyrene, Vædrene og Lammene efter deres Tal på den foreskrevne Måde;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
28 desuden en Gedebuk som Syndoffer; alt foruden det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikoffer.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
29 På den sjette Dag skal I ofre otte Tyre, to Vædre og fjorten årgamle Lam, lydefri Dyr,
“‘ஆறாம்நாளில் எட்டுக் காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
30 med tilhørende Afgrødeoffer og Drikofre for Tyrene, Vædrene og Lammene efter deres Tal på den foreskrevne Måde;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
31 desuden en Gedebuk til Syndoffer; alt foruden det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikoffer.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
32 På den syvende dag skal I ofre syv Tyre, to Vædre og fjorten årgamle Lam, lydefri Dyr,
“‘ஏழாம்நாளில் ஏழு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
33 med tilhørende Afgrødeoffer og Drikofre for Tyrene, Vædrene og Lammene efter deres Tal på den foreskrevne Måde;
காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
34 desuden en Gedebuk som Syndoffer; alt foruden det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikoffer.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
35 På den ottende Dag skal I holde festlig Samling, I må intet som helst Arbejde udføre.
“‘எட்டாம் நாளில் சபையைக் கூட்டுங்கள். அதில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம்.
36 Da skal I som Brændoffer, som Ildoffer til en liflig Duft for HERREN ofre en Tyr, en Væder og syv årgamle Lam, lydefri Dyr,
யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையைக் கொண்டுவாருங்கள். ஒரு காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவற்றை தகன காணிக்கையாக கொண்டுவாருங்கள். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
37 med tilhørende Afgrødeoffer og Drikofre for Tyren, Væderen og Lammene efter deres Tal på den foreskrevne Måde;
காளையுடனும், செம்மறியாட்டுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
38 desuden en Gedebuk som Syndoffer; alt foruden det daglige Brændoffer med tilhørende Afgrødeoffer og Drikoffer.
வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
39 Disse Ofre skal I bringe HERREN på eders Højtider, bortset fra eders Løfte og Frivilligofre, hvad enten det nu er Brændofre, Afgrødeofre, Drikofre eller Takofre.
“‘அத்துடன், நீங்கள் நேர்ந்துகொண்டவைகளுடனும், உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளோடும் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளில் இவைகளையும் யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தவேண்டிய காணிக்கைகளாவன: தகன காணிக்கைகள், தானிய காணிக்கைகள், பானகாணிக்கைகள், சமாதான காணிக்கைகள் ஆகிய இவையே’” என்றார்.
40 Og Moses talte til Israeliterne, ganske som HERREN havde pålagt Moses.
யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே இஸ்ரயேலருக்குச் சொன்னான்.

< 4 Mosebog 29 >