< ⲖⲞⲨⲔⲞⲚ 4 >

1 ⲁ̅ ⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲉϥϫⲏⲕ ⲉⲃⲟⲗ ⲙⲡⲛ̅ⲁ ⲉϥⲟⲩⲁⲁⲃ ⲁϥⲕⲟⲧϥ ⲉⲃⲟⲗ ϩⲙⲡⲓⲟⲣⲇⲁⲛⲏⲥ ⲉϥⲙⲟⲟϣⲉ ϩⲙ̅ⲡⲉⲡⲛ̅ⲁ ϩⲓⲧⲉⲣⲏⲙⲟⲥ.
இயேசு பரிசுத்த ஆவியானவரால் நிறைந்தவராக, யோர்தான் நதியிலிருந்து திரும்பிவந்து ஆவியானவரால் பாலைவனத்திற்கு வழிநடத்தப்பட்டார்.
2 ⲃ̅ ⲛ̅ϩⲙⲉ ⲛ̅ϩⲟⲟⲩ ⲉⲩⲡⲓⲣⲁⲍⲉ ⲙ̅ⲙⲟϥ ϩⲓⲧⲛ̅ⲡⲇⲓⲁⲃⲟⲗⲟⲥ ⲁⲩⲱ ⲙ̅ⲡϥ̅ⲟⲩⲉⲙⲗⲁⲁⲩ ϩⲛ̅ⲛⲉϩⲟⲟⲩ ⲉⲧⲙ̅ⲙⲁⲩ. ⲛ̅ⲧⲉⲣⲟⲩϫⲱⲕ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲁϥϩⲕⲟ.
அங்கே அவர் பிசாசினால் நாற்பது நாட்களாக சோதிக்கப்பட்டார். அந்நாட்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை; அந்த நாட்கள் முடிந்தவுடன் அவர் பசியாயிருந்தார்.
3 ⲅ̅ ⲡⲉϫⲉⲡⲇⲓⲁⲃⲟⲗⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲉϣϫⲉⲛ̅ⲧⲟⲕ ⲡⲉ ⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲁϫⲓⲥ ⲙ̅ⲡⲉⲓ̈ⲱⲛⲉ ϫⲉ ⲉϥⲉⲣⲟⲉⲓⲕ.
சாத்தான் அவரிடம், “நீர் இறைவனின் மகனானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
4 ⲇ̅ ⲁϥⲟⲩⲱϣⲃ̅ ⲛⲁϥ ⲛ̅ϭⲓⲓⲥ̅. ϫⲉ ϥⲥⲏϩ ϫⲉ ⲛⲉⲣⲉⲡⲣⲱⲙⲉ ⲛⲁⲱⲛϩ̅ ⲁⲛ ⲉⲡⲟⲉⲓⲕ ⲙⲙⲁⲧⲉ.
அதற்கு இயேசு, “‘மனிதன் அப்பத்தினால் மட்டும் உயிர் பிழைப்பதில்லை’ என்று எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.
5 ⲉ̅ ⲁϥϫⲓⲧϥ̅ ⲇⲉ ⲉϩⲣⲁⲉⲓ ⲁϥⲧⲟⲩⲟϥ ⲉⲙⲙⲛ̅ⲧⲉⲣⲱⲟⲩ ⲧⲏⲣⲟⲩ ⲛ̅ⲧⲟⲓⲕⲟⲩⲙⲉⲛⲏ ϩⲛⲟⲩⲥⲧⲓⲅⲙⲏ ⲛⲟⲩⲟⲉⲓϣ.
சாத்தான் இயேசுவை உயரமான ஒரு இடத்திற்குக் கூட்டிச்சென்று, ஒரு வினாடியில் உலகத்தின் எல்லா அரசுகளையும் அவருக்குக் காண்பித்தான்.
6 ⲋ̅ ⲡⲉϫⲉⲡⲇⲓⲁⲃⲟⲗⲟⲥ ⲇⲉ ⲛⲁϥ ϫⲉ. ϯϯ ⲛⲁⲕ ⲛ̅ⲧⲉⲓ̈ⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲧⲏⲣⲥ ⲛⲙ̅ⲡⲉⲩⲉⲟⲟⲩ ϫⲉ ⲛ̅ⲧⲁⲩⲧⲁⲁⲥ ⲛⲁⲉⲓ ⲁⲩⲱ ϣⲁⲓ̈ⲧⲁⲁⲥ ⲙ̅ⲡⲉϯⲟⲩⲁϣϥ̅.
பிறகு சாத்தான் அவரிடம், “இந்த அரசுகள் எல்லாவற்றின் அதிகாரத்தையும் மாட்சிமையையும் நான் உமக்குத் தருவேன்; ஏனெனில் அது எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது, நான் விரும்பினால் அதை எவருக்கும் கொடுக்க என்னால் முடியும்.
7 ⲍ̅ ⲛ̅ⲧⲟⲕ ϭⲉ ⲉⲕϣⲁⲛⲟⲩⲱϣⲧ̅ʾ ⲙ̅ⲡⲁⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲥⲛⲁϣⲱⲡⲉ ⲛⲁⲕ ⲧⲏⲣⲥ̅.
நீர் என்னை வணங்கினால், இவையெல்லாம் உம்முடையவையாகும்” என்றான்.
8 ⲏ̅ ⲁⲓ̅ⲥ̅ ⲟⲩⲱϣⲃ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲥ̅ⲥⲏϩ ϫⲉ ⲉⲕⲛⲁⲟⲩⲱϣⲧ̅ʾ ⲙⲡϫⲟⲉⲓⲥ ⲡⲉⲕⲛⲟⲩⲧⲉ. ⲁⲩⲱ ⲉⲕⲛⲁϣⲙϣⲉ ⲛⲁϥ ⲟⲩⲁⲁϥ.
அதற்கு இயேசு, “‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ என்று எழுதியிருக்கிறதே” என்று பதிலளித்தார்.
9 ⲑ̅ ⲁϥⲛ̅ⲧϥ̅ ⲇⲉ ⲉⲑⲓⲉⲣⲟⲩⲥⲁⲗⲏⲙ ⲁϥⲧⲁϩⲟϥ ⲉⲣⲁⲧϥ ⲉϫⲛ̅ⲡⲧⲛϩ̅ ⲙ̅ⲡⲉⲣⲡⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ. ⲉϣϫⲉⲛ̅ⲧⲟⲕ ⲡⲉ ⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϥⲟϭⲕ̅ ⲉⲡⲉⲥⲏⲧʾ ϩⲓϫⲛ̅ⲡⲉⲓ̈ⲙⲁ.
பின்பு சாத்தான், அவரை எருசலேமுக்குக் கொண்டுசென்று, ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி சொன்னதாவது, “நீர் இறைவனுடைய மகனானால் இங்கிருந்து கீழே குதியும்.
10 ⲓ̅ ϥⲥⲏϩ ⲅⲁⲣ ϫⲉ ϥⲛⲁϩⲱⲛ ⲉⲧⲟⲟⲧⲟⲩ ⲛⲛⲉϥⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲉⲧⲃⲏⲏⲧⲕ̅ ⲉⲧⲣⲉⲩϩⲁⲣⲉϩ ⲉⲣⲟⲕ
ஏனெனில், “‘உம்மைக் காக்கும்படிக்கு, இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார் என்றும்;
11 ⲓ̅ⲁ̅ ⲁⲩⲱ ⲛⲥⲉϥⲓⲧⲕ ⲉϫⲛ̅ⲛⲉⲩϭⲓϫ ⲙⲏⲡⲟⲧⲉ ⲛⲅ̅ϫⲱⲣⲡ̅ ⲉⲩⲱⲛⲉ ⲛⲧⲉⲕⲟⲩⲉⲣⲏⲧⲉ.
உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்கள் கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்றும் எழுதியிருக்கிறதே.’”
12 ⲓ̅ⲃ̅ ⲁⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲟⲩⲱϣⲃ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲁⲩϫⲟⲟⲥ ϫⲉ ⲛ̅ⲛⲉⲕⲡⲉⲓⲣⲁⲍⲉ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ⲡⲉⲕⲛⲟⲩⲧⲉ.
அதற்கு இயேசு, “‘உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
13 ⲓ̅ⲅ̅ ⲛ̅ⲧⲉⲣⲉϥϫⲉⲕⲡⲓⲣⲁⲥⲙⲟⲥ ⲇⲉ ⲛⲓⲙ ⲉⲃⲟⲗ. ⲁⲡⲇⲓⲁⲃⲟⲗⲟⲥ ⲥⲁϩⲱⲱϥ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲙⲟϥ ϣⲁⲟⲩⲟⲓ̈ϣ·
இவ்விதமாக சாத்தான் சோதனைகள் எல்லாவற்றையும் முடித்தபின்பு, ஏற்ற காலம் வரும்வரை இயேசுவைவிட்டுப் போய்விட்டான்.
14 ⲓ̅ⲇ̅ ⲁⲩⲱ ⲁϥⲕⲟⲧϥ̅ ⲛ̅ϭⲓⲓⲥ̅ ϩⲛ̅ⲧϭⲟⲙ ⲙ̅ⲡⲉⲡⲛ̅ⲁ ⲉⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲁⲡⲥⲟⲓ̈ⲧ ⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲡⲉⲣⲓⲭⲱⲣⲟⲥ ⲧⲏⲣⲥ̅ ⲉⲧⲃⲏⲏⲧϥ̅.
இயேசு பரிசுத்த ஆவியானவரின் வல்லமையுடன் கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்; அவரைப் பற்றியச் செய்தி நாட்டுப்புறம் முழுவதிலும் பரவியது.
15 ⲓ̅ⲉ̅ ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲛⲉϥϯⲥⲃⲱ ⲡⲉ ϩⲛ̅ⲛⲉⲩⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲉⲣⲉⲣⲱⲙⲉ ⲛⲓⲙ ϯⲉⲟⲟⲩ ⲛⲁϥ.
இயேசு யூதர்களுடைய ஜெப ஆலயங்களில் போதித்தார், எல்லோரும் அவரைப் புகழ்ந்தார்கள்.
16 ⲓ̅ⲋ̅ ⲁϥⲉ͡ⲓ ⲇⲉ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲛⲁⲍⲁⲣⲉⲧʾ ⲡⲙⲁ ⲉⲛⲧⲁⲩⲥⲁⲛⲟⲩϣϥ̅ ⲛϩⲏⲧϥ̅. ⲁⲩⲱ ⲁϥⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲕⲁⲧⲁⲡⲉϥⲥⲱⲛⲧ̅ʾ ϩⲛ̅ⲛⲉϩⲟⲟⲩ ⲛⲛ̅ⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⲉⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ. ⲁϥⲧⲱⲟⲩⲛ ⲇⲉ ⲉⲱϣ
இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்து, ஓய்வுநாளிலே தமது வழக்கத்தின்படி அவர் ஜெப ஆலயத்திற்குப்போய், அங்கே வேதவசனத்தை வாசிக்கும்படி எழுந்து நின்றார்.
17 ⲓ̅ⲍ̅ ⲁⲩⲱ ⲁⲩϯ ⲛⲁϥ ⲙ̅ⲡϫⲱⲱⲙⲉ ⲛ̅ⲏⲥⲁⲓ̈ⲁⲥ ⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ. ⲁϥⲟⲩⲱⲛ ⲇⲉ ⲙ̅ⲡϫⲱⲱⲙⲉ ⲁϥϩⲉ ⲉⲡⲙⲁ ⲉⲧⲥⲏϩ.
அங்கே இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகச்சுருள் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் விரித்து, இவ்வாறு எழுதியிருந்த இடத்தைக் கண்டு வாசித்தார்:
18 ⲓ̅ⲏ̅ ϫⲉ ⲡⲉⲡⲛ̅ⲁ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲱⲓ̈ ⲉⲧⲃⲉⲡⲁⲓ̈ ⲁϥⲧⲁϩⲥⲧ̅ ⲁϥⲧⲛⲛⲟⲟⲩⲧʾ ⲉⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲍⲉ ⲛⲛ̅ϩⲏⲕⲉ ⲉⲧⲁϣⲉⲟⲓ̈ϣ ⲛ̅ⲟⲩⲕⲱ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲁⲓⲭⲙⲁⲗⲱⲧⲟⲥ ⲛⲙ̅ⲟⲩⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲛⲃ̅ⲃⲗ̅ⲗⲉ. ⲉϫⲟⲟⲩ ⲛ̅ⲛⲉⲧⲟⲩⲟϣϥ̅ ⲛ̅ⲟⲩⲕⲱ ⲉⲃⲟⲗ.
“கர்த்தருடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார், ஏனெனில் ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி, அவர் என்னை அபிஷேகம் பண்ணினார். அவர் என்னை சிறைப்பட்டவர்களுக்கு விடுதலை அறிவிக்கவும், குருடருக்கு பார்வையை அளிக்கவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
19 ⲓ̅ⲑ̅ ⲉⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲇⲉ ⲛ̅ⲧⲉⲣⲟⲙⲡⲉ ⲙ̅ⲡϫⲟⲉⲓⲥ ⲉⲧʾϣⲏⲡ.
கர்த்தருடைய தயவின் வருடத்தைப் பிரசித்தப்படுத்தம் என்னை அனுப்பியிருக்கிறார்.”
20 ⲕ̅ ⲁϥⲕⲃ̅ⲡϫⲱⲱⲙⲉ ⲇⲉ ⲁϥⲧⲁⲁϥ ⲙ̅ⲡϩⲩⲡⲏⲣⲉⲧⲏⲥ ⲁϥϩⲙⲟⲟⲥ. ⲁⲩⲱ ⲛⲉⲣⲉⲃ̅ⲃⲁⲗ ⲛ̅ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧϩⲛ̅ⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ϭⲱϣⲧ̅ ⲉⲣⲟϥ.
பின்பு இயேசு அந்தப் புத்தகச்சுருளைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலிருந்த எல்லோருடைய கண்களும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன.
21 ⲕ̅ⲁ̅ ⲁϥⲁⲣⲭⲓ ⲇⲉ ⲛϫⲟⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ ⲙ̅ⲡⲟⲟⲩ ⲁⲧⲉⲓ̈ⲅⲣⲁⲫⲏ ϫⲱⲕ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲛ̅ⲙⲁⲁϫⲉ.
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறிற்று” என்றார்.
22 ⲕ̅ⲃ̅ ⲁⲩⲱ ⲛⲉⲣⲉⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲣⲙⲛ̅ⲧⲣⲉ ⲛⲙ̅ⲙⲁϥ ⲉⲩⲣ̅ϣⲡⲏⲣⲉ ⲛⲛ̅ϣⲁϫⲉ ⲛ̅ⲧⲉⲭⲁⲣⲓⲥ ⲛⲁⲓ̈ ⲉⲧⲛⲏⲩ ⲉⲃⲟⲗ ϩⲛⲣⲱϥ. ⲁⲩⲱ ⲛⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲙ̅ⲏ ⲙ̅ⲡϣⲏⲣⲉ ⲛ̅ⲓ̈ⲱⲥⲏⲫ ⲁⲛ ⲡⲉ ⲡⲁⲓ̈
எல்லோரும் அவரைக்குறித்து நன்றாகப் பேசினார்கள்; அவருடைய உதடுகளிலிருந்து வந்த கிருபையுள்ள வார்த்தைகளைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்கள், “இவன் யோசேப்பின் மகன் அல்லவா?” என்றார்கள்.
23 ⲕ̅ⲅ̅ ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ϫⲉ ⲡⲁⲛⲧⲱⲥ ⲧⲉⲧⲛⲁϫⲱ ⲛⲁⲓ̈ ⲛ̅ⲧⲉⲓ̈ⲡⲁⲣⲁⲃⲟⲗⲏ ϫⲉ ⲡⲥⲁⲉⲓⲛ ⲁⲣⲓⲡⲁϩⲣⲉ ⲉⲣⲟⲕ. ⲛⲉⲛⲧⲁⲛⲥⲱⲧⲙ̅ ⲉⲣⲟⲟⲩ ϫⲉ ⲁⲩϣⲱⲡⲉ ϩⲛ̅ⲕⲁⲫⲁⲣⲛⲁⲟⲩⲙ. ⲁⲣⲓⲥⲟⲩ ϩⲱⲟⲩ ϩⲙ̅ⲡⲉⲓ̈ⲙⲁ ϩⲙ̅ⲡⲉⲕϯⲙⲉ.
இயேசு அவர்களைப் பார்த்து, “‘வைத்தியனே, உன்னையே சுகப்படுத்திக்கொள்!’ என்ற பழமொழியை நிச்சயமாகவே நீங்கள் எனக்குச் சொல்வீர்கள். ‘கப்பர்நகூமில் நீ செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதை உனது சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்’” என்றும் சொல்வீர்கள்.
24 ⲕ̅ⲇ̅ ⲡⲉϫⲁϥ ⲇⲉ. ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ ⲙ̅ⲙⲛ̅ⲗⲁⲁⲩ ⲙⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϣⲏⲡ ϩⲙ̅ⲡⲉϥϯⲙⲉ ⲙ̅ⲙⲓⲛ ⲙ̅ⲙⲟϥ.
ஆனால், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்; எந்த இறைவாக்கினனும் தனது சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
25 ⲕ̅ⲉ̅ ϩⲛ̅ⲟⲩⲙⲉ ⲇⲉ ϯϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲛⲏⲧⲛ̅ ϫⲉ ⲛⲉⲩⲛϩⲁϩ ⲛⲭⲏⲣⲁ ⲡⲉ ϩⲙⲡⲓⲥⲣⲁⲏⲗ ϩⲛⲛⲉϩⲟⲟⲩ ⲛϩⲏⲗⲉⲓⲁⲥ ⲛⲧⲉⲣⲉⲧⲡⲉ ϣⲧⲁⲙ ⲛ̅ϣⲟⲙⲧⲉ ⲣⲣⲟⲙⲡⲉ ⲛⲙ̅ⲥⲟⲟⲩ ⲛⲉⲃⲟⲧʾ ⲛⲧⲉⲣⲉⲟⲩⲛⲟϭ ⲛ̅ϩⲉⲃⲱⲱⲛ ϣⲱⲡⲉ ϩⲓϫⲙ̅ⲡⲕⲁϩ ⲧⲏⲣϥ̅.
நான் நிச்சயமாகச் சொல்கிறேன், எலியாவின் காலத்தில் மூன்றரை வருடங்களாக வானம் அடைபட்டு, இஸ்ரயேல் எங்கும் கடுமையான பஞ்சம் நிலவியபோது, அங்கே அநேக விதவைகள் இருந்தார்கள்.
26 ⲕ̅ⲋ̅ ⲁⲩⲱ ⲙ̅ⲡⲟⲩϫⲉⲩϩⲏⲗⲉⲓⲁⲥ ϣⲁⲗⲁⲁⲩ ⲙ̅ⲙⲟⲟⲩ. ⲉⲓⲙⲏⲧⲓ ⲉⲥⲁⲣⲉⲡⲧⲁ ⲛⲧⲉⲧⲥⲓⲇⲱⲛⲓⲁ ϣⲁⲟⲩⲥϩⲓⲙⲉ ⲛⲭⲏⲣⲁ.
ஆனால், இஸ்ரயேலில் உள்ள விதவைகளில் எவரிடத்திலும் எலியா அனுப்பப்படவில்லை. ஆனால் சீதோன் நாட்டிலுள்ள சாறிபாத் ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கே அனுப்பப்பட்டான்.
27 ⲕ̅ⲍ̅ ⲁⲩⲱ ⲛⲉⲩⲛϩⲁϩ ⲉⲩⲥⲟⲃⲁϩ ϩⲙ̅ⲡⲓⲥⲣⲁⲏⲗ. ϩⲓⲉⲗⲓⲥⲥⲁⲓⲟⲥ ⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲁⲩⲱ ⲙ̅ⲡⲉⲗⲁⲁⲩ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲧⲃ̅ⲃⲟ ⲛ̅ⲥⲁⲛⲁⲓⲙⲁⲛ ⲡⲥⲩⲣⲟⲥ·
இறைவாக்கினன் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலில் பல குஷ்டவியாதி உடையவர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்களில் ஒருவனும் அதிலிருந்து சுகப்படுத்தப்படவில்லை. சீரியாவைச் சேர்ந்த நாகமான் மட்டுமே சுகப்படுத்தப்பட்டான்” என்றார்.
28 ⲕ̅ⲏ̅ ⲁⲩⲙⲟⲩϩ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲛϭⲱⲛⲧ̅ʾ ϩⲛ̅ⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲉⲩⲥⲱⲧⲙ̅ ⲉⲛⲁⲉⲓ
இதைக் கேட்டபோது ஜெப ஆலயத்திலிருந்த எல்லோரும் கடுங்கோபமடைந்தார்கள்.
29 ⲕ̅ⲑ̅ ⲁⲩⲱ ⲁⲩⲧⲱⲟⲩⲛⲟⲩ ⲁⲩⲛⲟϫϥ ⲡⲃⲟⲗ ⲛⲧⲡⲟⲗⲉⲓⲥ ⲁⲩⲛⲧϥ ϣⲁⲡⲕⲟⲟϩ ⲙⲡⲧⲟⲟⲩ ⲉⲧⲉⲣⲉⲧⲉⲩⲡⲟⲗⲉⲓⲥ ⲕⲏⲧʾ ϩⲓϫⲱϥ ϩⲱⲥⲧⲉ ⲉⲧⲣⲉⲩⲛⲟϫϥ̅ ⲉⲃⲟⲗ ⲛ̅ϫⲟϥⲧⲛ̅.
அவர்கள் எழுந்து, பட்டணத்தைவிட்டு அவரைத் துரத்தினார்கள். அந்தப் பட்டணம் கட்டப்பட்டிருந்த மலையிலிருந்து அவரைக் கீழே தள்ளிவிடும்படி, மலையுச்சியின் ஓரத்திற்கு அவரைக் கொண்டுபோனார்கள்.
30 ⲗ̅ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ϩⲛⲧⲉⲩⲙⲏⲧⲉ ⲁϥⲃⲱⲕ.
அவரோ மக்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.
31 ⲗ̅ⲁ̅ ⲁϥⲉ͡ⲓ ⲇⲉ ⲉⲡⲉⲥⲏⲧ ⲉⲕⲁⲫⲁⲣⲛⲁⲟⲩⲙ ⲧⲡⲟⲗⲉⲓⲥ ⲛⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ. ⲁⲩⲱ ⲛⲉϥϯⲥⲃⲱ ⲡⲉ ϩⲛ̅ⲛⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ.
பின்பு இயேசு கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் என்னும் பட்டணத்திற்கு போய், ஓய்வுநாளிலே அங்குள்ள மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
32 ⲗ̅ⲃ̅ ⲁⲩⲣ̅ϣⲡⲏⲣⲉ ⲇⲉ ⲧⲏⲣⲟⲩ ⲉϩⲣⲁⲓ̈ ⲉϫⲛ̅ⲧⲉϥⲥⲃⲱ ϫⲉ ⲛⲉⲣⲉⲡⲉϥϣⲁϫⲉ ϣⲟⲟⲡ ⲡⲉ ϩⲛ̅ⲟⲩⲉⲝⲟⲩⲥⲓⲁ.
அவர்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில் அவருடைய வார்த்தைகள் அதிகாரமுடையதாயிருந்தது.
33 ⲗ̅ⲅ̅ ⲁⲩⲱ ⲛⲉⲟⲩⲛⲟⲩⲣⲱⲙⲉ ⲡⲉ ϩⲛ̅ⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲉⲣⲉⲟⲩⲡⲛ̅ⲁ ⲛⲇⲁⲓⲙⲟⲛⲓⲟⲛ ⲛⲁⲕⲁⲑⲁⲣⲧⲟⲛ ⲛ̅ϩⲏⲧϥ̅. ⲁⲩⲱ ⲁϥϫⲓϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ⲥⲙⲏ
ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒருவன் இருந்தான். அவன் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு,
34 ⲗ̅ⲇ̅ ϫⲉ ⲁϩⲣⲟⲕ ⲛⲙ̅ⲙⲁⲛ ⲓ̅ⲥ̅ ⲡⲣⲙ̅ⲛⲁⲍⲁⲣⲉⲧʾ ⲁⲕⲓ ⲉⲧⲁⲕⲟⲛ. ϯⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲛⲧⲕ̅ⲛⲓⲙ ⲛ̅ⲧⲕ̅ⲡⲉⲧⲟⲩⲁⲁⲃ ⲙⲡⲛⲟⲩⲧⲉ.
“நசரேயனாகிய இயேசுவே போய்விடும்! எங்களிடம் உமக்கு என்ன வேண்டும்? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்று எனக்குத் தெரியும்; நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
35 ⲗ̅ⲉ̅ ⲁⲓ̅ⲥ̅ ⲇⲉ ⲉⲡⲓⲧⲓⲙⲁ ⲛⲁϥ ⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲧⲱⲙ ⲣ̅ⲣⲱⲕ ⲛⲅ̅ⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧϥ̅. ⲁϥⲛⲟⲩϫⲉ ⲇⲉ ⲙ̅ⲙⲟϥ ⲛ̅ϭⲓⲡⲇⲁⲓⲙⲟⲛⲓⲟⲛ ⲉⲧⲙⲏⲧⲉ ⲁϥⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ⲛ̅ϩⲏⲧϥ̅ ⲉⲙⲡϥ̅ⲃ̅ⲃⲗⲁⲡⲧⲉ ⲙ̅ⲙⲟϥ ⲗⲁⲁⲩ.
“அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார். அப்பொழுது அந்த தீய ஆவி அவர்கள் எல்லோருக்கும் முன்பாக அவனை விழத்தள்ளி விட்டு, அவனுக்கு காயம் ஏதும் உண்டாக்காமல் வெளியேறியது.
36 ⲗ̅ⲋ̅ ⲁⲩϣⲧⲟⲣⲧⲣ̅ ⲇⲉ ϣⲱⲡⲉ ⲉϫⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲁⲩϣⲁϫⲉ ⲛⲙ̅ⲛⲉⲩⲉⲣⲏⲟⲩ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲟⲩ ⲡⲉ ⲡⲉⲓ̈ϣⲁϫⲉ ϫⲉ ϩⲛⲟⲩⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲛⲙ̅ⲟⲩϭⲟⲙ ⲉϥⲟⲩⲉϩⲥⲁϩⲛⲉ ⲛ̅ⲛⲉⲡⲛ̅ⲁ ⲛ̅ⲁⲕⲁⲑⲁⲣⲧⲟⲛ ⲥⲉⲛⲏⲟⲩ ⲉⲃⲟⲗ.
எல்லா மக்களும் வியப்படைந்து, “இவை என்ன வார்த்தைகள்! அவர் அதிகாரத்தோடும் வல்லமையோடும் தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார், அவைகளும் வெளியேறுகின்றன!” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37 ⲗ̅ⲍ̅ ⲁⲡⲥⲟⲉⲓⲧʾ ⲇⲉ ⲙⲟⲟϣⲉ ⲉⲧⲃⲏⲏⲧϥ̅ ϩⲙⲙⲁ ⲛⲓⲙ ⲛ̅ⲧⲡⲉⲣⲓⲭⲱⲣⲟⲥ.
இயேசுவைப்பற்றிய இச்செய்தி, சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
38 ⲗ̅ⲏ̅ ⲁϥⲧⲱⲟⲩⲛ ⲇⲉ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲧⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲁϥⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲏⲓ̈ ⲛⲥⲓⲙⲱⲛ. ⲧϣⲱⲙⲉ ⲇⲉ ⲛⲥⲓⲙⲱⲛ ⲛⲉⲩⲛ̅ⲟⲩⲛⲟϭ ⲛ̅ϩⲙⲟⲙ ϩⲓⲱⲱⲥ ⲡⲉ. ⲁⲩⲥⲉⲡⲥⲱⲡϥ̅ ⲇⲉ ⲉⲧⲃⲏⲧⲥ̅
இயேசு ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, சீமோனுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே சீமோனின் மாமியார் கடும் காய்ச்சலினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள்; எனவே சிலர் அவளுக்காக இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
39 ⲗ̅ⲑ̅ ⲁϥⲁϩⲉⲣⲁⲧϥ̅ ϩⲓϫⲱⲥ ⲁϥⲉⲡⲓⲧⲓⲙⲁ ⲙⲡⲉϩⲙⲟⲙ ⲁϥⲕⲁⲁⲥ. ⲛ̅ⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲁⲥⲧⲱⲟⲩⲛⲥ̅ ⲁⲥⲇⲓⲁⲕⲟⲛⲓ ⲛⲁⲩ.
இயேசுவோ அவள் அருகில் குனிந்து, அந்தக் காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவளைவிட்டுப் போயிற்று. உடனே அவள் சுகமடைந்து எழுந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
40 ⲙ̅ ⲉⲣⲉⲡⲣⲏ ⲇⲉ ⲛⲁϩⲱⲧⲡ. ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲧⲉⲩⲛⲧⲟⲩⲣⲱⲙⲉ ⲉϥϣⲱⲛⲉ ϩⲛϩⲉⲛϣⲱⲛⲉ ⲉⲩϣⲟⲃⲉ ⲁⲩⲛ̅ⲧⲟⲩ ⲛⲁϥ. ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲧⲁⲗⲉⲧⲟⲟⲧϥ̅ ⲉϫⲙⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲙⲙⲟⲟⲩ ⲁϥⲧⲁⲗϭⲟⲟⲩ.
சூரியன் மறையும்போது மக்கள் தங்கள் மத்தியிலிருந்த பல்வேறு வியாதியுடையவர்களை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் தமது கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார்.
41 ⲙ̅ⲁ̅ ⲛⲉⲣⲉⲛⲇⲁⲓⲙⲟⲛⲓⲟⲛ ⲇⲉ ⲛⲏⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲛϩⲁϩ ⲡⲉ ⲉⲩⲁϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉⲩϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡϣⲏⲣⲉ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ. ⲁⲩⲱ ⲛⲉϥⲁⲓⲡⲓⲧⲓⲙⲁ ⲛⲁⲩ ⲉⲛϥ̅ⲕⲱ ⲙ̅ⲙⲟⲟⲩ ⲁⲛ ⲉϣⲁϫⲉ ϫⲉ ⲛⲉⲩⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲛⲧⲟϥ ⲡⲉ ⲡⲉⲭ̅ⲥ̅.
அத்துடன் பலரில் இருந்த பிசாசுகளும், “நீர் இறைவனின் மகன்!” என்று சத்தமிட்டுக்கொண்டு, அவர்களிலிருந்து வெளியேறின. அந்தப் பிசாசுகள் அவரே கிறிஸ்து என்று அறிந்திருந்தபடியால், அவர் அவைகளைப் பேசுவதற்கு இடங்கொடாமல் அதட்டினார்.
42 ⲙ̅ⲃ̅ ⲛ̅ⲧⲉⲣⲉϩⲧⲟⲟⲩⲉ ⲇⲉ ϣⲱⲡⲉ ⲁϥⲉ͡ⲓ ⲉⲃⲟⲗ ⲁϥⲃⲱⲕ ⲉⲩⲙⲁ ⲛ̅ϫⲁⲓ̈ⲉ. ⲛⲉⲣⲉⲙⲙⲏⲏϣⲉ ⲇⲉ ϣⲓⲛⲉ ⲛ̅ⲥⲱϥ ⲡⲉ ⲁⲩⲉ͡ⲓ ϣⲁⲣⲟϥ ⲁⲩⲁⲙⲁϩⲧⲉ ⲙ̅ⲙⲟϥ ⲉⲧⲙ̅ⲃⲱⲕ ⲉⲕⲁⲁⲩ.
அதிகாலை வேளையிலே இயேசு புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போனார். மக்களோ அவரைத் தேடிக்கொண்டு அவர் இருந்த இடத்திற்கு வந்தபோது, அவர் தங்களைவிட்டு வேறெங்கும் போகாமல் தங்களுடன் இருக்கும்படி முயற்சிசெய்தார்கள்.
43 ⲙ̅ⲅ̅ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ϩⲁⲡⲥ̅ ⲉⲧⲣⲁⲉⲩⲁⲅⲅⲉⲗⲓⲍⲉ ⲛⲛ̅ⲕⲉⲡⲟⲗⲉⲓⲥ ⲛ̅ⲧⲙⲛ̅ⲧⲉⲣⲟ ⲙ̅ⲡⲛⲟⲩⲧⲉ ϫⲉ ⲛⲧⲁⲩⲧⲛⲛⲟⲟⲩⲧʾ ⲅⲁⲣ ⲉⲡⲉⲓ̈ϩⲱⲃ.
ஆனால் அவரோ அவர்களைப் பார்த்து, “நான் மற்ற பட்டணங்களில் உள்ளவர்களுக்கும் இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். இதற்காகவே நான் அனுப்பப்பட்டேன்” என்றார்.
44 ⲙ̅ⲇ̅ ⲛⲉϥⲕⲏⲣⲩⲥⲥⲉ ⲇⲉ ⲡⲉ ϩⲛⲛ̅ⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲛϯⲟⲩⲇⲁⲓⲁ.
பிறகு அவர் யூதேயாவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குச் சென்று, தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்.

< ⲖⲞⲨⲔⲞⲚ 4 >