< 诗篇 100 >

1 称谢诗。 普天下当向耶和华欢呼!
நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள்.
2 你们当乐意事奉耶和华, 当来向他歌唱!
மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள்.
3 你们当晓得耶和华是 神! 我们是他造的,也是属他的; 我们是他的民,也是他草场的羊。
யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.
4 当称谢进入他的门; 当赞美进入他的院。 当感谢他,称颂他的名!
அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
5 因为耶和华本为善。 他的慈爱存到永远; 他的信实直到万代。
யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

< 诗篇 100 >